தமிழ் மாதங்கள்
மாசி
பங்குனி ( பங்குநி )
பங்குனி என்பது, பங்கு + நீ. “பங்குநீ” என்பதுவே, கடை குறைந்து ‘பங்குனி’ என்று ஆயிற்று.
கடவுளிடத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள பங்கை குறிப்பதற்காக வைக்கப்பட்ட மாதத்தின் பெயர் பங்குனி ஆகும்.
பஸ்கா பண்டிகையும் இயேசு கிறிஸ்து சீசர்களின் கால்களைக் கழுவி பங்கு உண்டாக்கியது.
பஸ்கா பண்டிகையை ஆசரிக்க முடிவு செய்தார் இயேசு கற்பித்தபடி சீசர்கள் போய், பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள். சாயங்காலமான போது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அப்போது சீசர்களின் கால்களைக் கழுவினார். பேதுரு அவரை கால்களைக் கழுவுவதைத் தடை செய்தார். அப்போது இயேசு கிறிஸ்து நான் உன் கால்களை கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை எனக் கூறினார்.அதன் பிறகு பேதுரு தெய்வத்தை தன் கால்களைக் கழுவ அனுமதித்து தேவனுடய இராஜ்யத்திற்கு பங்குள்ளவர் ஆனார். அதைத் தான் நாம் பங்குனி என அழைக்கிறோம்.
அதே போல் இன்றும் பல அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றவர்களின் கால்களைக் கழுவி தங்கள் தாழ்மையை வெளிப்படுத்துகிறார்கள்.
கால்களை கழுவுதல்
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் 13:3-15
சித்திரை
சித்திரை என்பது சித்து + இரை ஆகும்
இரை என்பதை இறை என்றே எடுக்கவேண்டும், இறை என்பது மருவி இரை என ஆகியுள்ளது. ஏனென்றால் சித்திரை மாதத்திற்கும் தெய்வத்திற்கும் அதிகமான தொடர்பு உண்டு ஆகவே சித்து இறை என்பதே சரியாகும்.
சித்து என்பது எதைக் குறிக்கிறது எனப் பார்ப்போம்
சித்து என்பது வேள்வியைக் (Sacrifice; யாகம் ) குறிக்கும்,
சித்து இறை என்பது இறைவன் நமக்காகப் பலியானதைக் குறிக்கும். அதாவது இறைவன் நமக்காகப் பலியானார் என்பதை நினைவுபடுத்தும் மாதம் ஆகும்
சித்து
4. Sacrifice; யாகம் (பிங்.)5. Success; வெற்றி (சூடா.) 6. A masqueradedance; ஒருவகை வரிக்கூத்து (சிலப். 3, 13, உரை )
https://agarathi.com/word/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE
சித்திரை ( சித்து இறை )
தெய்வம் பலியானதைக் குறிக்கும் மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது.
சாம்பல் புதனில் இருந்து 43வது நாள் வெள்ளிக் கிழமை புனித வெள்ளியாகும். தெய்வம் மனிதக் குல மீட்பிற்காகவும், பாவத்திற்காகவும் மரித்த நாளாக உள்ளதால் புனித வெள்ளி என அழைக்கப்படுகிறது.
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில்நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. யோவான் 19 : 16-19
சித்தீஸ்வரன்
சித்து என்ற வார்த்தையை வைத்து தெய்வத்தை சித்தீஸ்வரன் என்று அழைக்கிறோம்,
மேலும் சித்தம்மாள், சித்துஅம்பலம் (சிற்றம்பலம்), சித்தராஜபுரம், (சித்துராஜபுரம் ) சித்தரசன் (சித்து அரசன்) என்ற வார்த்தைகள் உண்டு
சித்தம்மாள்
நமக்காக சிலுவையில் பலியான தெய்வத்தின் தாய் ஆகும்
சித்து அம்பலம் -- (சிற்றம்பலம்}
நமக்காக சிலுவையில் பலியான தெய்வம் உயிர்த்தெழுந்து அம்பலம் (பெரிய இடம்) அதாவது பரலோகம் சென்றவர் ஆகும்
சித்து ராஜ புரம்
நமக்காக சிலுவையில் பலியான ராஜாவாகிய தெய்வத்தின் ஊர் ஆகும்
சித்து அரசன் -- (சிற்றரசன்)
நமக்காக சிலுவையில் பலியான ராஜா ஆகும்.
வைகாசி
வைகாசி என்பது வை + காசி ஆகும்
வை என்றால் வைத்தல் அல்லது சேர்த்தல் ஆகும்
காசி என்றால் உலகம் ஆகும்
அதாவது தெய்வம் இந்த பூமியில் வந்து பிறந்து, இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பின்பு உயிர்த்து கடவுளுடைய உலகத்தில் (பரலோகத்தில்) சென்று பிதாவின் வலம்புரி அதாவது வலது பக்கத்தில் வைக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்டதை நினைவுபடுத்தும் மாதம் ஆகும்
காசி, உத்தர்காசி, சிவகாசி என்ற வார்த்தைகள் தெய்வத்தின் உறைவிடமான மேல் உலகத்தைக் குறிக்கிறது.
நாம் பங்குனி, சித்திரை, மற்றும் வைகாசி மாதங்களை நங்கு அறிந்து கொள்ள இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், அதற்கு முன்பு அவர் பட்ட பாடுகள் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் தான் மாதங்களை புரிந்து கொள்ள முடியும்.
வைகாசி ( வை + காசி )
தெய்வம் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து, தன்னை நாற்பது நாள் இந்த பூமியில் இருந்து பரலோகம் சென்றார். அவர் பரலோகம் சென்று பிதாவின் வலது பக்கம் (வலம்புரியில்) அமர்ந்தார். அதை நினைவு படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பெயர் தான் வைகாசி ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அப் 1:3
இவ்விதமாய் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16:19
சென்றாயப் பெருமாள்
சென்றாயப் பெருமாள் என்பது பரலோகம் சென்ற நல்ல மேய்ப்பன் ஆகிய தெய்வத்தை குறிக்கும்
சென்ற + ஆயன் ( மேய்ப்பன் ) + பெருமாள்
Good shepherd, நல்ல ஆயன் அல்லது நல்ல மேய்பன் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும்
முளைப்பாரி ( முளை + பாரி }
முளை என்பது முளைத்த என அர்த்தம்
பாரி என்றால் அரசன் ஆகும்
அதாவது பூமியில் புதைக்கப்பட்ட ( கல்லறையில் வைக்கப்பட்ட ) தெய்வம் செடி முளைத்து எழுவது போல் உயிர்த்ததை விளக்கும் ஒரு சொல் ஆகும்.
guru
ஆனி
ஆடி
ஆடி மாதம் என்பது ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது. இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம்.
ஜீவ ஆதார சக்தி என்றால் ஒரு மனிதன் இந்த உலகத்திலும் சுகமாகவும், பரலோகத்தில் நித்தியமாக வாழ்வதற்கும் ஆதாரமாக அமைந்த சக்தி நிறைந்த மாதமாகும்.
ஒரு மனிதனுக்கு நித்திய ஜீவ வாழ்க்கையை தருவது தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்படு மரித்த நிகழ்வும் அவர் அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்த நிகழ்வுகளுமே ஆகும்,
ஆடி என்ற வார்த்தை குகையை காண்பிக்கிறது,
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக்
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
இந்த பாடலில் வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை! என்ற வார்த்தைகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. அந்த வரியின் அர்த்தத்தை பார்ப்போம்.
உலக மக்களே அனைவரும், தெய்வத்தை நம் பாவம் தீர்ந்து பரிசுத்தமாய் வாழ்வதற்கு வெண்பொடி ஆடியைத் தொழுது வழி பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்முடைய பாவங்களுக்காகத் தெய்வம் முள்முடியை ஏற்று மரித்து, பரிசுத்தமான சிறிய குகையினால் ஆன கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு பிறகு உயிர்த்தெழுந்தார். (இயேசு கிறிஸ்துவின் காலத்தில் குகை கல்லறைகள் பயன் படுத்தப்பட்டன )
அதையே வெண் பொடி ஆடி என குறிப்பிடப்பட்டுள்ளது, வெண் என்பது வெண்மை அல்லது பரிசுத்தத்தைக் காண்பிக்கிறது, பொடி என்றால் சிறிய வாய் உள்ள குகையில் வெட்டப்பட்ட கல்லறையாகும், அதையே நாம் குகை கல்லறை என்ற குடவாசல் என அழைக்கிறோம். அந்த குடவாசல் இருக்கும் இடம் சென்று வழிபடுவோமாக. ( குடவாசல் என்பது குகை கல்லறை ஆகும் )
(தொழுமின், வெண்பொடி ஆடியை என எழுதப்பட்டு இருக்கிறது. ஆடியை என எழுதப்பட்டு உள்ளதால் ஆடி என்பது ஒரு பொருளாகும். உதாரனமாக அந்த கண்ணாடியை எடு என்றால் அது கண்ணாடி என்ற பொருளைக் குறிக்கும். பலர் இந்த வெண்பொடி ஆடியை என்பதை வெண்பொடியாகிய திருநீற்றுடன் ஆடி வந்து தொழுவாயாக என் எழுதியுள்ளனர். அது தவறு ஆடி என்பது ஒரு பொருள் ஆகும், அதன் அர்த்தத்தைப் பார்ப்போம். ஆடி என்பது அளைந்து எனப் பொருள் ஆகும், அளை என்பதற்கு குகை என அர்த்தம் ஆகும் )
ஆவணி
ஆவணி என்பது ஆ + அணி ஆகும்.
ஆ என்பது ஆன்மாவைக் குறிக்கிறது . அணி என்பது அணிதல், பொருந்துதல் அல்லது புனைதல் ஆகும்
அதாவது நமது ஆன்மா தெய்வத்தைச் சென்று மணக்கும் மாதம், அல்லது தெய்வத்தைச் சென்று சேரும் மாதாமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆத்துமா தெய்வத்தால் அருளப்பட்டுள்ளது, மனிதன் இந்த பூமியில் பிறந்தது முதல் அவன் சாகும் வரை அவனுடைய ஆத்துமாவைக் குற்றமற்றதாக பாதுகாத்து வாழவேண்டும்.
அப்படிப் பரிசுத்தமாக காப்பாற்றப்படும் ஆத்துமா ஒரு மனிதன் மறிக்கும் போது பரமாத்துவாகிய தெய்வத்திடம் சென்று சேரும். அப்படிப் பரிசுத்தமாக இல்லாத ஆத்துமாக்கள் நரகம் சென்று சேரும்.
திருவள்ளுவர் தனது 121 வது குறளில் அடக்கம் அமரருள் உய்க்கும் என்றும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் என்று கூறுகிறார். அதாவது ஒரு மனிதன் இந்த உலகத்தில் தனது அடங்கி வாழ்ந்து தனது ஆத்துமாவைப் பாதுகாத்துக் கொண்டால் அவன் மரிக்கும் போது அந்த அடக்கம் அவனது ஆத்துமாவைப் பரலோகம் சென்று சேர்க்கும் என்பது அர்த்தம் ஆகும்,
குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
விளக்கம்
ஒருவன் தான் இந்த உலகத்தில் உயிரோடு உள்ள நாட்கள் முழுவதும் தன்னைப் படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட்டு அதனால் உண்டாகும் அன்பு, இரக்கம், தாழ்மை மற்றும் கிருபையினால் தன் ஐம்புலங்களையும் அடக்கி வாழ்ந்தால், அந்த அடக்கம் அமரர்கள் வாழும் இடமாகிய மேல் உலகத்துக்கு அதாவது மோட்சத்திற்கு அவனைக் கொண்டு செல்லும்.
அப்படி இல்லாமல் ஒருவன் இறைவனுக்குப் பயப்படாமல் இருந்து தன் ஐம்புலங்களையும் அடக்கி வாழாவிட்டால் அவன் ஆர் இருள் நிறைந்த நரக லோகத்திற்கு அந்த அடங்காமை அவனைக் கொண்டு சேர்க்கும்.
பரிசுத்த வேதாகமம்
பரிசுத்த வேதாகமம் முழுமையாக ஆத்துமா மீட்பைக் குறித்துத்தான் போதிக்கிறது என்பது அதை ஆராய்ந்து படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது ;கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக்கோபு 1:21-22
அணிதல் : சூடல் சாத்துதல் புனைதல் அழகாதல் அலங்கரித்தல் உடுத்தல் பூணுதல் பொருந்துதல் படைவகுத்தல் சூழ்தல்
புரட்டாசி
புரட்டு : கீழ்மேலாகத் திருப்புதல் +++ ஆசி : வாழ்த்து
ஐப்பசி
கார்த்திகை
கார்த்திகை என்பது கார் + தீ + கை ஆகும், கார் என்றால் மேகம் என்று அர்த்தம் ஆகும். அதாவது மேகம் மற்றும் தீ ஆகக் காட்சி தரக்கூடிய தெய்வத்தின் கரம் நம்முடன் இருக்கும் மாதம் ஆகும்.
அவர்களோடு மேகஸ்தம்பமாக்வும், அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும் கூடவே சென்றார். அந்த நிகழ்வுகளைப் பரிசுத்த வேதாகமத்தின் யாத்திராகமம் (book of Exodus ) என்ற அதிகாரம் முழுமையாகப்ஃப்ஃப் பார்க்க முடியும்.
கார்த்திகை மாதம்
கார்த்திகை மாதம் முருகனுக்கு விரதம் இருப்பது ஆகும், அதே போல் ஐயப்பன் அவர்களுக்கு கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டால் மக்கள் விரதம் இருப்பது வழக்கம்.
கார்த்திகை என்பது கார் + தீ + கை ஆகும், கார் என்றால் மேகம் என்று அர்த்தம் ஆகும். அதாவது மேகம் மற்றும் தீ ஆக காட்சி தரக்கூடிய தெய்வத்தின் கரம் நம்முடன் இருக்கும் மாதம் ஆகும்.
அதனால் தான் தெய்வத்தை கார்த்தீஸ்வரன் என்று அழைக்கிறோம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால்
கார்த்தீஸ்வரன் என்ற வார்த்தையை நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டும். கார்த்தீஸ்வரன் என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
கார்த்தீஸ்வரன் --- God of fire and Cloud
கார்த்தீஸ்வரன் என்பதற்கு நாம் சரியான ஆர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். கார்த்தீஸ்வரன் என்ற வார்த்தையை கீழ்க் கண்டவாறு பிரித்துப்பார்க்கவேண்டும்.
கார்த்தீஸ்வரன் = கார் + தீ + ஈஸ்வரன்
கார் = மேகம் , தீ = அக்கினி
மேகஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் காட்சி தரக்கூடிய இறைவன் ஆகும். (ஸ்தம்பம் = தூண் ). நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நம்முடன் கூடவே மேகமாகவும் அக்கினியாகவும் இருந்து கடைசி வரை நம்மை வழி நடத்தக் கூடிய தெய்வம் என அர்த்தம் ஆகும்.
மேகம் : மேகம் என்ற வார்த்தை தெய்வத்தைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது முகில் வண்ணன், மேக வண்ணன், திருமால், மேகஸ்தம்பம், pillar of gloud, எனத் தெய்வத்தை அழைக்கிறோம். எனவே நாம் கார் என்பதற்கு மேகம் என எடுக்க வேண்டும்..
பரிசுத்த வேதாகமம்
யாத் : 13 : 21,22 அவர்கள் இரவும் பகலும் வழி நடக்கக்கூடும் படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
தீ
தெய்வத்தை நாம் அக்கினி மயமான தெய்வம், சேரக்கூடாத ஒழியில் வாசம் பண்ணுகிறவர் என அழைக்கிறோம் எனவே தெய்வத்திற்க்குத் தழல் வண்ணன், செந்தழலோன், அக்கினி ஸ்தம்பம், pillar of fire, பட்சிக்கிற அக்கினி எனப்பெயர்கள் உண்டு
வேதாகமம் அக்கினி மயமான தெய்வத்தைப்பற்றிக்கூரும் வார்த்தைகள்
உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.
For the LORD thy God is a consuming fire, even a jealous God. உபாகமம் 4:24
கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத் 19:18
மார்கழி
மார்கழி என்றால் மார் + கழிதல் ஆகும், அதாவது இருள் அல்லது துன்பம் கழிதல் ஆகும். அல்லது மா = மாயை; கழி = கழிதல். அதாவது இருள். துன்பம் அல்லது மாயை கழிந்த மாதம் ஆகும்..
அறியாமையாகிய இருள் மற்றும் துன்பங்கள் நீங்கவும், நம்மை ஆட்கொள்ளும் மாயைகள் நீங்கவும்,. இம்மாதம் நமக்கு உதவுகிறது.
மார்கழி மாதம்
மார்கழி மாதம் பிள்ளையார் வணக்கம் தொடங்குகிறது. அதே போலக் கிறிஸ்தவர்கள் மார்கழி மாதம் மையப் பகுதியில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
மார்கழி என்றால் மார் + கழிதல் ஆகும், அதாவது இருள் அல்லது துன்பம் கழிதல் ஆகும். அல்லது மா = மாயை; கழி = கழிதல். அதாவது இருள். துன்பம் அல்லது மாயை கழிந்த மாதம் ஆகும்..
அறியாமையாகிய இருள் மற்றும் துன்பங்கள் நீங்கவும், நம்மை ஆட்கொள்ளும் மாயைகள் நீங்கவும்,. இம்மாதம் நமக்கு உதவுகிறது.
இருள் நீங்கும் மாதம்
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி உண்டான மாதம் ஆகும். இதைப் பரிசுத்த வேதாகமம் அழகாக கூறுகிறது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து பிறந்த மார்கழி மாதத்தில் இருளில் இருக்கும் மனிதர்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று கூறுகிறது.
பரிசுத்த வேதாகமம்
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். மத்தேயு 4: 15-17
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள். ஏசாயா 9:2-3
"யார்"
இயேசு கிறிஸ்து கடவுளின் பிள்ளையாக இந்த உலகத்தில் இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்க இந்த பூமிக்கு வந்தார். எனவே தான் அவரை பிள்ளை ( Son of GOD ) தெய்வம் என்று அழைக்கிறோம்.
யார் என்பது மரியாதைக்கு உரிய ஒரு சொல் ஆகும். உதாரணமாக வாத்தி என்பது தான் ஒரு வாத்தியாரை அழைக்கப் பயன்படும் தமிழ்ச் சொல் ஆகும்
ஆசிரியர் = வாத்தி
ஆசிரியை = வாத்திச்சி
இந்த வார்த்தைகள் கூப்பிடுவதற்குச் சற்று மரியாதைக் குறைவாக உள்ளதால் நாளடைவில் "யார்" என்ற வார்த்தை மரியாதைக்காகச் சேர்க்கப் பட்ட்து "வாத்தியார்" அதே போல பிள்ளை என்பது பிள்ளையார் ஆனது. பிள்ளை தெய்வம் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும்.
இதை பற்றி அறிந்து கொள்ளத் தெய்வம் பெற்ற ஆணை என்ன ? என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )