top of page

37. அவா அறுத்தல் - இச்சை அகற்றுதல் - Holyness

அவா என்பது ஆசை அல்லது இச்சை ஆகும். இந்த ஆசை என்பது ஒரு மனிதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும், அப்படி ஒருவன் இச்சையினால் நிரம்பி வாழ்ந்தால் அவனுடைய வாழ்க்கை அதற்கு அடிமையாகிவிடும் இது ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட சக்தியாகும். இது ஒரு பொருத்தமற்ற ஆசையாகும். இச்சை என்பது பாலியல், காதல், பணம், உணவின் மீதான இச்சை  போன்ற எந்த வடிவத்தையும் எடுக்க முடியும்.

 

அவா அறுத்தல் என்றால் பரிசுத்தமாய் வாழ்தல் ஆகும். ஒரு மனிதன் இந்தப் பூமியில் வாழ வேண்டும் என்றால் அவனுக்குத் தெய்வத்தின் துணை அவசியம். இச்சையாகிய பாவம் உள்ளத்திற்குள் வராதபடி அவன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும்.

இச்சை என்ற வார்த்தையைப் பற்றியும் பரிசுத்தம் என்ற வார்த்தையைப் பற்றியும் பரிசுத்த வேதாகமம் முழுமையாகச் செல்லப்பட்டுள்ளது.

 

பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்தரை  தரிசிக்க முடியாது என்பதைப் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

“யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே”.   எபிரெயர் 12:14

அதையே திருவள்ளுவர் தன்னுடைய  அவா அறுத்தல் என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார்.

 

குறள் 361: kural 361

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

 

அவா என்ப   = அவா என்பது ஆசையினால்

எல்லா உயிர்க்கும் =  எல்லா உயிர்களுக்கும் உண்டாகும் இச்சையாகும்

மெஞ்ஞான்றுந்  = அந்த இச்சை எல்லாக் காலத்திலும்

தவா   =  அழியாத ஒன்று ஆகும் 

அப்பிறப்பு ஈனும்  = அந்த இச்சை ஒருவன் பிறக்கும் போதே அவனது இரத்தத்தில் இருந்து உண்டாகும்

வித்து   = மரபு வழி இச்சையாகும்.

 

விளக்கம்

அவா என்பது ஆசையினால் எல்லா உயிர்களுக்கும் உண்டாகும் இச்சையாகும், அந்த இச்சை எல்லாக் காலத்திலும் அழியாத ஒன்று ஆகும். அந்த இச்சை ஒருவன் பிறக்கும் போதே அவனது இரத்தத்தில் இருந்து உண்டாகும் மரபு வழி இச்சையாகும்.

 

பரிசுத்த வேதாகமம்

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.  பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.  யாக்கோபு 1:14-15

 

ஞான்று : பொழுது காலம்

தவா :  கெடாத தவறாத அழியாத

வித்து :  விதை விந்து மரபுவழி வழித்தோன்றல்

குறள் 362: : kural 362

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

 

வேண்டும் கால்  =  ஒருவன் தெய்வத்தை வேண்டும் போது

வேண்டும்  பிறவாமை  = இச்சை உள்ளத்துக்குள் வராதிருக்கும் அல்லது பிறவாதிருக்கும் அதையே  வேண்டும் (இச்சை) பிறவாமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தையை நேரடியாகக் கூற வேண்டும் என்றால் வேண்டாம் இச்சையின் பிறப்பு என்பதாகும்.

மற்றது வேண்டாமை = இச்சையை ஒழித்து பரிசுத்தமாக வாழ்ந்து. மற்ற எந்தக் காரியத்தையையும் வேண்டாது இருந்தாலும்

வேண்ட வரும் = நம் உள்ளத்தில் விரும்பும் நல்ல காரியங்கள் நமக்கு வந்து கிடைக்கும்


விளக்கம்

ஒருவன் தெய்வத்தை வேண்டும் போது  இச்சை அவன் உள்ளத்துக்குள் வராதிருக்கும் அல்லது பிறவாதிருக்கும் அதையே வேண்டும் (இச்சை) பிறவாமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தையை நேரடியாகக் கூற வேண்டும் என்றால் வேண்டாம் இச்சையின் பிறப்பு என்பதாகும்.

இந்த இடத்தில் பிறவாமை என்பது இச்சை உள்ளத்திற்குள் பிறவாதிருத்தல் ஆகும். அதை நம்முடைய மறுபடி பிறத்தல் என்று அர்த்தம் எடுத்தால் அர்த்தம் முழுமையாக மாறிவிடும்.  மற்றபடி நம் உள்ளத்திற்குள் இச்சையை ஒழித்து பரிசுத்தமாக வாழும் போது மற்ற எந்தக் காரியத்தையையும் தெய்வத்திடம் வேண்டாமல்  இருந்தாலும் தெய்வம் உள்ளத்தில் நாம் விரும்பும் நல்ல காரியங்களை நமக்கு வந்து கிடைக்கச் செய்வார்.

 

பரிசுத்த வேதாகமம்

 

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். நீதி 10:24

 

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.  உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.  சங்கீதம் 37:4-5

 

வேண்ட : விரும்ப

குறள் 363: : kural 363

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்

வேண்டாமை   = ஒருவன் இச்சையை வாஞ்சிக்காமல் பரிசுத்தமாக  இந்தப் பூமியில் வாழ்ந்தான் என்றால்

அன்ன = அவனுக்கு அத்தன்மை ஆகிய பரிசுத்தம்

விழுச்செல்வம்  = சிறந்த செல்வமாகக் கருதப்படும்

ஈண்டு இல்லை = அதற்கு நிகர் இந்த உலக வாழ்க்கையில் (இம்மையில்) இல்லை

யாண்டும்  = அது போல எவ்விடத்தும்

அஃது ஒப்பதில் = அதற்கு நிகரான ஒன்று இல்லை.

 

விளக்கம்

ஒருவன் இச்சையை வாஞ்சிக்காமல் பரிசுத்தமாக  இந்தப் பூமியில் வாழ்ந்தான் என்றால்

அவனுக்கு அத்தன்மை ஆகிய பரிசுத்தம் இந்த பூமியில் சிறந்த செல்வமாகக் கருதப்படும்.

அந்தப் பரிசுத்த வாழ்விற்கு நிகர் இந்த உலக வாழ்க்கையில் இல்லை. அது போலப்

பரிசுத்தத்திற்கு நிகரான வாழ்க்கை எவ்விடத்தும்  இல்லை.

 

ரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் (பரிசுத்தவான்கள் மேல்) நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.  தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண,கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.  சங்கீதம் 34:15-16

 

அன்ன : அத்தன்மையன

ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது

குறள் 364: : kural 364

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

தூய்மை யென்பது =  பரிசுத்தம் என்பது ஒரு மனிதனுக்கு

அவாவின்மை  = உள்ளத்தில் இச்சையில்லாமல் வாழ்வது ஆகும்.

மற்றது வாய்மை = மற்றபடி இந்தப் பரிசுத்தம் ஒரு மனிதனுக்குள் நானே உண்மை என்று சொன்ன மெய்ப்பொருளாகிய தெய்வத்தை

வேண்ட வரும் = விரும்பி கேட்க வரும்.

 

விளக்கம்

பரிசுத்தம் என்பது ஒரு மனிதனுக்கு  உள்ளத்தில் இச்சையில்லாமல் வாழ்வது ஆகும். மற்றபடி இந்தப் பரிசுத்தம் ஒரு மனிதனுக்குள் ( i am the Truth ) “நானே உண்மை” என்று சொன்ன மெய்ப்பொருளாகிய தெய்வத்தை விரும்பி கேட்க வரும்.

 

பரிசுத்த வேதாகமம்

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் (உண்மையும்)  ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.  யோவான் 14:6

குறள் 365: : kural 365

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்

அற்றவர் என்பார் = இந்த உலகத்தில் உள்ளவற்றின் மீது ஆசை இல்லை என்று வாழ்பவர்கள்

அவா அற்றார்  = இச்சை இல்லாதவர்கள் ஆவார்கள் அல்லது பரிசுத்தமாக வாழ்பவர்கள் ஆவார்கள்

மற்றையார்  = அப்படி இல்லாமல் உலக ஆசையுடன் வாழ்பவர்கள்

அற்று ஆக  = அத்தன்மையுள்ள  பரிசுத்தம் முழுவதும்

அற்ற திலர் = நீங்கி எதுவும் இல்லாதவர்கள் ஆவார்கள்

 

விளக்கம்

இந்த உலகத்தில் உள்ளவற்றின் மீது ஆசை இல்லை என்று வாழ்பவர்கள்  இச்சை இல்லாதவர்கள் ஆவார்கள் அல்லது பரிசுத்தமாக வாழ்பவர்கள் ஆவார்கள், அப்படி இல்லாமல் உலக ஆசையுடன் வாழ்பவர்கள்  அத்தன்மையுள்ள  பரிசுத்தம் முழுவதும்  நீங்கி எதுவும் இல்லாதவர்கள் ஆவார்கள் ( தங்கள் உள்ளத்தில் உள்ள கொஞ்சம் பரிசுத்தத்தையும் இழந்து மோசமான நிலையில் வாழ்வார்கள் )

 

பரிசுத்த வேதாகமம்

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.  1தீமோத் 6:10

 

அற்று :  அத்தன்மையது

ஆக :  மொத்தமாய் முழுவதும்

குறள் 366: : kural 366

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

அஞ்சுவதோரும் = ஒருவன் பயந்து தனது உள்ளத்துக்குள் இச்சை வராமல் தடுக்க வேண்டும் அப்படி வாழ்வதே

அறனே  = தெய்வம் செய்த தியாகமாகிய அறத்தைப் பின்பற்றுவது ஆகும்.

ஒருவனை வஞ்சிப்பதோரும்  = மற்றொருவனைத் தெய்வம் செய்த அறச்செயலாகிய தியாக வாழ்க்கையைப் பின்பற்ற விடாமல் தடுப்பது

அவா  = அவன் மனதில் உண்டாகும் ஆசை இச்சையாகும்.

 

விளக்கம்

ஒருவன் பயந்து தனது உள்ளத்துக்குள் இச்சை வராமல் தடுக்க வேண்டும் அப்படி வாழ்வதே தெய்வம் செய்த தியாகமாகிய அறத்தைப் பின்பற்றுவது ஆகும்.

மற்றொருவனைத் தெய்வம் செய்த அறச்செயலாகிய தியாக வாழ்க்கையைப் பின்பற்ற விடாமல் தடுப்பது அவன் மனதில் உண்டாகும் ஆசை இச்சையாகும்.

 

பரிசுத்த வேதாகமம்

நீங்கள் (இச்சையில்லாமல்) மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:3

வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;  இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். மாற்கு 4:18

குறள் 367: : kural 367

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

அவா வினை  = ஒருவன் தனது மனதில் உண்டாகும் ஆசை இச்சை செயல்களை

ஆற்ற அறுப்பின் = அறவே அல்லது முற்றுமாகத் தவிர்த்து அழிப்பானானால்

தவா வினை தான்  = அவன் நரகம் சென்று அழியாதபடி உண்டாகும் காரியங்களைச் செய்யாத நிலை

வேண்டும் ஆற்றான் வரும் = அவனுக்குள் ஏற்பட்டு அவன் எதிர்பாராத மேலான மோட்ச வாழ்க்கை வாய்க்கும்

 

விளக்கம்

ஒருவன் தனது மனதில் உண்டாகும் ஆசை இச்சை செயல்களை  அறவே அல்லது முற்றுமாகத் தவிர்த்து அழிப்பானானால், அவன் நரகம் சென்று அழியாதபடி உண்டாகும் காரியங்களைச் செய்யாத நிலை அவனுக்குள் ஏற்பட்டு அவன் எதிர்பாராத மேலான மோட்ச வாழ்க்கை வாய்க்கும்

 

பரிசுத்த வாழ்க்கை

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.  பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, ( ஆத்தும) மரணத்தைப் பிறப்பிக்கும்.  யாக்கோபு 1:14-15

 

தவா : கெடாத தவறாத அழியாத குறைவுபடாத

குறள் 368: : kural 368

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

அவா இல்லார்க்கு  =  இச்சை இல்லாமல் வாழ்வோர்க்கு

இல்லாகும்  துன்பம் = இந்த உலகத்தில் வாழும் வரை துன்பம் இல்லாத வாழ்க்கை அமையும்

ஃ துண்டேல்  =  அந்த ஆசையினால் உண்டாகும் இச்சை ஒருவன் வாழ்வில் இருந்தால்

தவா அது = அவனுக்கு அழியாத நரகம் சென்று சேரக் கூடிய செயல் உணர்வு உள்ளத்தில்

மேன்மேல் வரும் = மேன்மேலும் எழும்பி வந்து கொண்டே இருக்கும்.

 

விளக்கம்

இச்சை இல்லாமல் வாழ்வோர்க்கு  இந்த உலகத்தில் வாழும் வரை துன்பம் இல்லாத வாழ்க்கை அமையும்.  அந்த ஆசையினால் உண்டாகும் இச்சை ஒருவன் வாழ்வில் இருந்தால் அவனுக்கு அழியாத நரகம் சென்று சேரக் கூடிய செயல் உணர்வு உள்ளத்தில்  மேன்மேலும் எழும்பி வந்து கொண்டே இருக்கும்.

 

பரிசுத்த வேதாகமம்

நீதியின் பாதையில் ஜீவன் (நித்திய வாழ்வு)  உண்டு; அந்தப் பாதையில்  மரணம் இல்லை.  நீதி 12:28

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.  உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். மத்தேயு 5:29-30

குறள் 369: : kural 369

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்

துன்பத்துள்   = ஒருவனுக்கு உலகப் பொருட்கள் இல்லாமையினால் உண்டாகும் துன்பம் வந்தபோதும்

அவாவென்னுந் =  அவனுடைய உள்ளத்தில் ஆசை என்ற இச்சையினால் உண்டாகும்  

துன்பங் கெடின்  = துன்பம் இல்லாமல் பாதுகாத்துக் கொண்டால்

இன்பம் இடையறா தீண்டும் = அவனுக்கு இந்தப் பூமியில் வாழும் வரை இன்பமான வாழ்வு வந்து சேரும்.

 

விளக்கம்

ஒருவனுக்கு உலகப் பொருட்கள் இல்லாமையினால் உண்டாகும் துன்பம் வந்தபோதும்,  அவனுடைய உள்ளத்தில் ஆசை என்ற இச்சையினால் உண்டாகும் துன்பம் இல்லாமல் பாதுகாத்துக் கொண்டால் அவனுக்கு இந்தப் பூமியில் வாழும் வரை இன்பமான வாழ்வு வந்து சேரும்.

 

பரிசுத்த வேதாகமம்

வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;  இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். மாற்கு 4:18

வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.  மாற்கு 4:20

குறள் 370: : kural 370

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

ஆரா இயற்கை  =  நிரம்பாத அல்லது திருப்தி படுத்த முடியாத உள்ளத்துக்குள் எழும்பும்  இயற்கையான உணர்வுகளால் உண்டாகும்

அவாநீப்பின்  = இச்சையை நமது உள்ளத்தில் இருந்து நீக்கி விட்டால் உண்டாவது பரிசுத்தம் ஆகும்.

அந்நிலையே = அப்படிப் பட்ட பரிசுத்த நிலை ஒருவனுக்கு

பேரா இயற்கை தரும் =   அழியாத உணர்வான ஆனந்தத்தைத் தரும்  (மேலோக இன்பம்)

 

விளக்கம்

ஒருவனுடைய் உள்ளத்தில் எழும்பும் திருப்தி படுத்த முடியாத  இயற்கையான உணர்வுகளால் உண்டாகும்  இச்சையை அவன் உள்ளத்தில் இருந்து நீக்கி விட்டால் உண்டாவது பரிசுத்தம் ஆகும். அப்படிப் பட்ட பரிசுத்த நிலை ஒருவனுக்கு ஏற்படும் போது அது அவனுக்கு அழியாத உணர்வான ஆனந்தத்தைத் தரும்  (மேலோக இன்பம்)

 

பரிசுத்த வேதாகமம்

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.  மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. கலாத்தியர் 5:16-17

guru

bottom of page