top of page

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
.   

குறள் -12 

                                                           ------------------------------------

திருக்குறள் ஒரு தெய்வீகப்படைப்பு, அது கடவுளைப்பற்றித்தான் பேசுகிறது, அதின் அர்த்தங்களைப் புரிந்து கொள்வது என்பது சற்று கடினமானது, ஏன் என்றால் திருக்குறள் அதின் அர்த்தங்களை தனக்குள்ளாக தானே மறைத்துக்கொண்ட ஒருபடைப்பு. எனவேதான் பல தமிழ் அறிஞர்கள் உரைகள் பல எழுதியிருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமாக இல்லை.வேறுபடுகிறது.

துப்பு

துப்பு என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது, துப்பு = சாமர்த்தியம், துணை,தூய்மை, அறிவு (துணையானவர்), பலம் நிறைந்தவர், வல்லமை(சத்தி,சக்தி) உடையவர், திறமை, நம்முடைய  நாட்டில் துப்பு என்ற வார்த்தையை பயன்படுத்திப் பேசப்படும் வார்த்தைகள்.                                    

1. துப்புக்கெட்டவன்   

2. துப்பு இல்லையா

3 துப்பு துலக்குதல்

4. துப்பு அறிதல் '

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

என்ற குறளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தம் என்ன என்பதைப் பார்ப்போம். உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என அர்த்தம் கொடுக்கப் பட்டுள்ளது,

 

துப்பு என்ற வார்த்தைக்குத் தூய்மை என்ற வார்த்தை தான் சரியான அர்த்தமாக அமைகிறது எப்படி என்றால், துப்பு என்ற வார்த்தை தெய்வத்தின் குணத்தைக் குறிப்பதாகவே உள்ளது.

 எட்டாம் திருமுறை a - திருவாசகம் திருச்சிற்றம்பலம் பாடல் 6 தெய்வத்தை துப்பனே தூயாய் எனப்பாடுகிறார்.       

அதே போலத் திருவாய்மொழி வியாக்கியானம் -ஈடு -4-7-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் — அவர்கள் தெய்வத்தை ஆழ்கடலைக்கடைந்த துப்பனே!‘ எனப்பாடுகிறார்,

எனவே துப்பு என்ற வார்த்தைக்கு உணவு என்பதின் அர்த்தமாக இருக்க முடியாது, தெய்வீக குணத்திற்கு உரியத் தூய்மை என எடுக்க வேண்டும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81290&padhi=29&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருமரை 8, 29 அருட்பத்து, பாடல் 6

துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே 


திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-7-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

அப்ப னே!அடல் ஆழி யானே!
ஆழ்கட லைக்கடைந்த
துப்ப னே!‘உன் தோள்கள் நான்கும்
கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு,
ஆவி துவர்ந்துதுவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று
ஏழையேன் நோக்குவனே.

https://thiruvonum.wordpress.com/2013/03/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE-403/

மேலே சொல்லப்பட்ட குறளை கீழ்க்கண்டவாறு பிரித்துப்பார்க்க வேண்டும்

 துப்பார்க்குத்  = துப்பு + ஆர்க்கு

துப்பாய         = துப்பு + ஆய 

துப்பாக்கித்    = துப்பு + ஆக்கி

துப்பார்க்குத்  = துப்பு + ஆர்க்கு
துப்பாய      = துப்பு + ஆய

தூஉம்            =  தூவும்

மழை.

 

ஆர் (குறள் 121, kural 121 )

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

ஆர் என்ற வார்த்தை  121வது  திருக்குறளில் வருகிறது, ஆர் இருள் என்ற வார்த்தை கெட்ட இருள் அதாவது நரக இருள் என்பதையே குறிப்பிடுகிறது. எனவே துப்பு ஆர்க்கு என்ற வார்த்தைக்கு தூய்மை கெட்டவர்கள் ( without Holiness) என அர்த்தம் எடுக்க வேண்டும்

ஆய  (குறள் - 2 )

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

ஆய என்ற வார்த்தை  2 வது திருக்குறளில் வருகிறது, கற்றதினால் ஆய பயன்  அதாவது கற்றதினால் வரும் பயன் என்ன என்று குறிப்பிடுகிறது. ஆய பயன் என்றால் வரும் பயன் என அர்த்தம், ஆய என்றால் வரும் என அர்த்தம்

சி. ஜெயபாரதன் அவர்கள் ஆய என்ற வார்த்தைக்கு உலகில் தோன்றிய எனக்குறிப்பிடுகிறார்.  எனவே துப்பு ஆய என்ற வார்த்தைக்குத தூய்மையாய் வந்த என அர்த்தம் எடுக்க வேண்டும்

சி. ஜெயபாரதன்

9/1/13 ஆய என்றால் உலகில் தோன்றிய.

சி. ஜெயபாரதன் On Sun, Sep 1, 2013 at 10:07 AM, Sanathani <bliss192@

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

---------------------------------------

துப்பார்க்குத்  = துப்பு கெட்டவர்களுக்கு 

துப்பாய         = துப்பு கொடுப்பதற்குத் துப்பாக உலகில் தோன்றி

துப்பாக்கித்    = துப்பு ஆக்கி

துப்பார்க்குத்  = துப்பு கெட்டவர்களுக்கு 

துப்பாய      =  துப்பு கொடுப்பதற்குத் துப்பாக உலகில் தோன்றி

தூஉம் மழை   =  பரலோகத்தில் (Heaven) இருந்து பரிசுத்த ஆவியை மழை போல் பெய்யச்செய்வார்

துப்பு கெட்டவனுக்காகத் துப்பாக வந்து அவனை துப்பாக ஆக்கி துப்பு கெட்டவனுக்காகத் துப்பாக வந்து  ( பரிசுத்த ஆவியை ) தூவும் மழை 

தூய்மை அற்றவர்களுக்குத்  தூய்மை கொடுப்பதற்கு தூய்மை வடிவில் உலகில் தோன்றிய கடவுள், தூய்மை அற்றவர்களை, தூய்மை ஆக்க, பரலோகத்தில் (Heaven) இருந்து பரிசுத்த ஆவியை மழை போல் பெய்யச்செய்து பரிசுத்தமாக்குகிறார். 

ஆர் இருள் (பொல்லாத இருள், கெட்ட இருள், நரக இருள்) சென்று சேரக்கூடிய தூய்மை கெட்டவர்களுக்கு அதாவது பாவ வாழ்க்கை வாழ்பவர்களுக்குத் தூய்மை கொடுப்பதற்கு ( பாவத்திலிருந்து விடுவித்து பரிசுத்தம் கொடுப்பதற்கு ) தூய்மை வடிவில், அல்லது வால் அறிபவனாக (பரிசுத்தர் ஆக) உலகில் தோன்றிய கடவுளை வணங்கும் போது தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்க உலகில் தோன்றிய பரிசுத்த கடவுள், பரலோகத்தில் (Heaven) இருந்து பரிசுத்த ஆவியை மழை போல் பெய்யச்செய்வார்.

வான் சிறப்பு

மேலே சொல்லப்பட்ட குறள் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் உள்ளது வான் சிறப்பு என்ற அதிகாரம் முழுவதும் கடவுளின் அருள் (பரிசுத்த ஆவி) பற்றிக் குறிப்பிடுவதாக உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குறள் 11 - kural 11

பரிசுத்த ஆவி   உலக மக்கள் வாழ அருளப்படும் அமிழ்தம் என்று அழைக்கப்படுகிறது.

குறள் 12 - kural 12

பரிசுத்த ஆவி மனிதனுக்குத் தூய்மை கொடுக்க உதவத் தூவும் மழையாக அழைக்கப்படுகிறது.

குறள் 13 - kural 13

பரிசுத்த ஆவி மனிதனின் உள்ளிருந்து வாட்டும் பாவமாகிய பசி போக்கும் மழையாக  அழைக்கப்படுகிறது  

குறள் 14 -kural 14

பரிசுத்த ஆவி மற்றவர்களுக்கு உதவும் ஊழியம் ( விவசாயம் ) செய்ய உதவும்.

புயல்காற்றைப் போல அழைக்கப்படுகிறது

குறள் 15 -kural 15

பரிசுத்த ஆவி கெட்டவர்களைத் தூயவர்களாக மாற்றும் மழை என்று அழைக்கப்படுகிறது

குறள் 16 - kural 16

பரிசுத்த ஆவி உள்ளான மனிதனின் (ஆத்துமா) வளர்ச்சிக்கு உதவ வானத்திலிருந்து வரும் பனித்துளியாக அழைக்கப்படுகிறது.

குறள் 17 -kural 17

பரிசுத்த ஆவி பரிசுத்தவான்கள், நீதிமான்கள், தங்கள் மேன்மையை இழந்து போகாதபடி பெய்யும் இடி மின்னலோடு கூடிய பெரும் மழை என அழைக்கப்படுகிறது

குறள் 18 - kural 18

ரிசுத்த ஆவி கடவுளுக்கு உகந்த பூசனை (பூஜை) சிறப்பாக செய்ய உதவும் வானிலிருந்து வரும் அருள் மாரியாக அழைக்கப்படுகிறது

குறள் 19 - kural 19

பரிசுத்த ஆவி இவ்வுலகத்தில் தானம், தவம் ஆகிய இரண்டு நற்செயல்களும் எப்போதும் செயல் பட உதவும் மழையாக அழைக்கப்படுகிறது

குறள் 20 - kural 20

பரிசுத்த ஆவி யாவர்க்கும் ஒழுக்கம் அருளக்கூடிய வானிலிருந்து வரும் அருளாக அழைக்கப்படுகிறது.

தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்க உலகில் தோன்றிய பரிசுத்த கடவுள் இயேசுவே.

guru

bottom of page