கொல்லாமை - அகிம்சை - Non Violence
கொல்லாமை என்பது அகிம்சையாகும் அதாவது Non violence ஆகும். கொல்லாமை என்பது ஒர் உயிரைக் கொல்லாமல் இருப்பது மட்டுமே என்று அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது, அது சரியான அர்த்தம் அல்ல.
கொல்லாமை அல்லது NON VIOLENCE என்பது அன்பாகச் செயல்படுவது, அமைதியாக செயல்படுவது, பாரபட்சமற்ற முறையில் செயல்படுவது, அன்பு, இரக்கம், தயவு, தாழ்மையுடன் இருப்பது, இரத்தம் சிந்தாமல் சாதிப்பது, சமரசம் மற்றும் சமாதானம் செய்வது, நிதானமாகச் செயல்படுவது ஆகும்.
இது போன்ற அகிம்சை வழியாகச் சொல்லப்பட்ட வார்த்தை கொலை செய்யாமல் இருத்தல் என்ற அர்த்தத்தில் எடுத்து அர்த்தம் எழுதியிருப்பது சரியல்ல.
அகிம்சை என்பது எந்த நிலையிலும் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத தனிப்பட்ட நடைமுறையாகும். மக்கள், விலங்குகள் மற்றும்/அல்லது சுற்றுச்சூழலைத் துன்புறுத்துவது தேவையற்றது என்ற நம்பிக்கையே அகிம்சை ஆகும். மேலும் இது வன்முறையில் இருந்து விலகியிருக்கும் பொதுவான தத்துவம் ஆகும்.
பரிசுத்த வேதாகமத்தில் "மன்னிப்பு மற்றும் அகிம்சை" என்ற உன்னதமான உபதேசம் முழுமையாக அடங்கியுள்ளது. தன்னை வெறுக்கும் தன் எதிரிக்குக் கூட உயிர் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுதல் செய்ய வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கற்றுத்தருகிறது.
( இயேசு கிறிஸ்து ) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44
இதையே திருவள்ளுவர் தனது 314 வது குறளில் நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் செய்த தீமையைப் பொருத்து அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
குறள் 314: kural 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
சொற்பொருள்
இன்னா செய்தாரை = நமக்கு துன்பம் இழைத்தவர்களையும்
ஒறுத்தல் = பொறுத்து கொண்டு
அவர்நாண = அவரை வெட்கம் அடையச் செய்ய
நன்னயஞ் செய்து விடல் = அவருக்கு நல்ல காரியங்களைச் செய்து அன்பைக் காட்டி விட வேண்டும்.
விளக்கம்
நமக்குத் துன்பம் இழைத்தவர்களையும் பொறுத்துக் கொண்டு அவரை வெட்கம் அடையச் செய்ய அவருக்கு நல்ல காரியங்களைச் செய்து அன்பைக் காட்டி விட வேண்டும்.
பரிசுத்த வேதாகமம்
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44
இயேசு கிறிஸ்து தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் அவர்களது செழிப்பிற்காகவும் பிதாவிடம் பிரார்த்தனை செய்கிறார்..
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். .......... லூக்கா 23:33-34
இந்த நிகழ்வுகளை வைத்தே திருவள்ளுவர் கொல்லாமை என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியுள்ளார்,
குறள் 321: kural 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
சொற்பொருள்
அறவினை யாது எனின் = அறம் என்றால் அது தெய்வம் நமக்காகச் செய்த தியாகச் செயல் ஆகும், அந்தச் செயல் எது என்றால்
கொல்லாமை = அகிம்சை or Non violence ஆகும்.
கோறல் = அந்த Non violence ஆகிய அகிம்சை
பிறவினை = மற்ற நல்ல செயல்கள்
எல்லாம் = அனைத்தையும்
தரும் = நமக்குள் உருவாக்கும் அல்லது செய்யும்
விளக்கம்
அறம் என்றால் அது தெய்வம் நமக்காகச் செய்த தியாகச் செயல் ஆகும், அந்தச் செயல் ஆகும் இதைப் பற்றி திருவள்ளுவர் தனது அறன் வலியுருத்தல என்ற அதிகாரத்தில் எழுதியுள்ளார். பார்க்கவும் https://www.narrowpathlight.com/river-of-sacrifice
அந்த அறச் செயல் எது என்றால் அகிம்சை என்ற Non violence ஆகும். அந்த Non violence ஆகிய அகிம்சையின்படி நாம் நடக்கும் போது அல்லது அந்த அகிம்சை நமது உள்ளத்தில் இருக்கும் போது மற்ற நல்ல செயல்கள் அனைத்தையும் நமக்குள் உருவாக்கும்
பரிசுத்த வேதாகமம்
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3:4
கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். சங்கீதம் 103:8-9
குறள் 322: kural 322
பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
சொற்பொருள்
பகுத்து உண்டு = நமக்கு இருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து சாப்பிட்டு
பல்லுயிர் ஓம்புதல் = பல ஏழை எளிய மக்களைக் காப்பாற்றுதல்
நூலோர் தொகுத்தவற்றுல் = வேத ஆகமங்கள் எழுதியவர்கள் தொகுத்து வழங்கியவற்றுள்
எல்லாந் தலை = எல்லாம் சிறந்தது ஆகும்.
விளக்கம்
நமக்கு இருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து சாப்பிட்டு அல்லது கொடுத்துப் பல ஏழை எளிய மக்களைக் காப்பாற்றுதல் என்ற அறிவுரை பரிசுத்த வேத ஆகமங்கள் எழுதியவர்கள் தொகுத்து வழங்கியவற்றுள் எல்லாம் சிறந்தது ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
( ஏழைகள் ) சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். சங்கீதம் 41:1-3
குறள் 323: kural 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
சொற்பொருள்
ஒன்றாக நல்லது கொல்லாமை = நிச்சயமாக அகிம்சை நல்லது
மற்றதன் பின்சாரப் = அகிம்சை அல்லாதவற்றின் பின்னால் சார்ந்து நிற்பதற்கு
பொய்யாமை நன்று = உண்மை பேசுதலே நல்லது
விளக்கம்
ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிச்சயமாக அகிம்சையைக் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி இல்லாமல் அகிம்சை அல்லாதவற்றின் பின்னால் சார்ந்து நிற்க முற்பட்டால் எல்லா நேரங்களிலும் உண்மை பேசுவதே நல்லது.
பரிசுத்த வேதாகமம்
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே ( அகிம்சையோடு ) தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். யாக்கோபு 3:13-14
ஒன்றாக : ஒரு பொருளாக நிச்சயமாக ஒருமிக்க
குறள் 324: kural 324
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி
சொற்பொருள்
நல்லாறு எனப்படுவது யாது எனின் = நல்ல வழி எனப்படுவது யாது எனின்
யாதொன்றுங் கொல்லாமை = எந்த உயிரையும் மற்றும் எந்தக் காரியத்தையும் அகிம்சையோடு
சூழும் நெறி = எண்ணி அல்லது நினைத்து செயல்படுவது நீதியின் வழியாகும்
விளக்கம்
ஒரு மனிதனுக்குச் செல்ல வேண்டிய நல்ல வழி என்ன என்றால் எந்த உயிரையும் மற்றும் எந்தக் காரியத்தையும் அன்புடனும், சமாதானத்துடனும் அணுகி அகிம்சை வழியை நினைத்து செயல்படுவது நீதியின் வழியாகும்.
பரிசுத்த வேதாகமம்
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; .................. எரேமியா 6:16
அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். நீதி 2:8-9
குறள் 325: kural 325
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
சொற்பொருள்
நிலையஞ்சி = ஒருவன் தன்னுடைய தீய வாழ்க்கையை வாழ அச்சமுற்று
நீத்தாருள் எல்லாங் = எல்லாவற்றையும் விட்டு விட்டு வாழ முயற்சி செய்பவர்கள் எல்லோரிலும்
கொலையஞ்சிக் = இம்சை செய்ய அச்சமுற்று (இம்சை என்பது அகிம்சைக்கு எதிர்ச் சொல் ஆகும், இம்சை என்பது ஒருவனுக்கு மனதிலோ அல்லது உடம்பிலோ வருத்தம் தரும் செயலைச் செய்வது இம்சையாகும். ) காயம் ஏற்படுத்துதல், துஷ்பிரயோகம், சேதம் விளைவிப்பது, எதையும் அழிக்க உடல் சக்தியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கொலை செய்தல் அல்லது violence என்று குறிப்பிடப்படுகிறது) இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய அச்சமுற்று
கொல்லாமை = அகிம்சையை
சூழ்வான் தலை = ஆராய்ந்து காத்துக் கொள்வதே அவனுக்கு முதன்மையான காரியமாக அமைய வேண்டும்.
விளக்கம்
ஒருவன் தன்னுடைய தீய வாழ்க்கையை வாழ அச்சமுற்று எல்லாவற்றையும் விட்டு விட்டு வாழ முயற்சி செய்வானாகில் அப்படிச் செய்பவர்கள் எல்லோரிலும் அவன் இம்சை செய்ய அச்சமுற்று (இம்சை என்பது அகிம்சைக்கு எதிர்ச் சொல் ஆகும், காயம் ஏற்படுத்துதல், துஷ்பிரயோகம், சேதம் விளைவிப்பது, எதையும் அழிக்க உடல் சக்தியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கொலை செய்தல் அல்லது violence என்று குறிப்பிடப்படுகிறது) இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய அச்சமுற்று அகிம்சையை ஆராய்ந்து காத்துக் கொள்வதே அவனுக்கு முதன்மையான காரியமாக அமைய வேண்டும்.
இம்சை என்பது ஒருவனுக்கு மனதிலோ அல்லது உடம்பிலோ வருத்தம் தரும் செயலைச் செய்வது இம்சையாகும்.
பரிசுத்த வேதாகமம்
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. 1பேதுரு 4:15
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். நீதி 16:17
சூழ் : ஆலோசனை ஆராய்ச்சி சுற்று தலை மாலை கடலைப்பருப்பு
அஞ்சி : தபால் அதியமான் நெடுமான் அஞ்சி தலைவன்
நிலை : நிற்கை உறுதி தன்மை நிலைமை தொழில் இடம் தங்குமிடம்
குறள் 326: kural 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று
சொற்பொருள்
கொல்லாமை மேற்கொண்டு = ஒருவன் அகிம்சையைக் கைக்கொண்டு
ஒழுகுவான் = நடந்தால் அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தானாகில்
வாழ்நாள்மேல் செல்லாது = அவன் சரீரத்தில் இந்தப் பூமியில் உயிரோடு இருக்கும் வரை
உயிர் உண்ணும் = அவனுடைய நித்திய சீவன் என்ற ஆத்துமாவை அழிக்கும் அதிகாரம்
கூற்று = எமன் என்ற உயிரைப் பறிக்கும் தொழிலை உடைய மரணத் தூதனுக்குக் கிடையாது.
விளக்கம்
ஒருவன் அகிம்சையைக் கைக்கொண்டு நடந்தால் அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தானாகில் அவன் சரீரத்தில் இந்தப் பூமியில் உயிரோடு இருக்கும் வரை அவனுடைய நித்திய சீவன் என்ற ஆத்துமாவை அழிக்கும் அதிகாரம் எமன் என்ற உயிரைப் பறிக்கும் தொழிலை உடைய மரணத் தூதனுக்குக் கிடையாது.
பரிசுத்த வேதாகமம்
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான். எசேக்கி 18:27
கூற்று : இயமன் (யமன்)
கூற்று : உயிரைப் பறிக்கும் தொழிலன் கொலைத் தொழிலன் எமன்
குறள் 327: kural 327
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
சொற்பொருள்
தன்னுயிர் நீப்பினுஞ் = அகிம்சையைக் கடைப்பிடித்து நடக்கும் ஒருவன் தன்னுடைய உயிராகிய சீவன் பிரிந்தாலும்
செய்யற்க = செய்யக்கூடாது
தான் பிறிது = நாம் வேரொரு
இன் உயிர் நீக்கும் வினை =அருமையான உயிரை அழிக்கும் செயல்
விளக்கம்
அகிம்சையைக் கடைப்பிடித்து நடக்கும் ஒருவன் ஒருவன் தன்னுடைய உயிராகிய சீவன் பிரிந்தாலும் தான் வேரொரு அருமையான உயிரை அழிக்கும் செயலைச் செய்யக்கூடாது
பரிசுத்த வேதாகமம்
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. யோவான் 15:13
குறள் 328: kural 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை
சொற்பொருள்
நன்றாகும் ஆக்கம் = நன்மையினால் உண்டாகும் உயர்வு, செல்வம், பொன்
பெரிதெனினுஞ் = பெரியதாக என்னப்பட்டாலும்
சான்றோர்க்குக் = அகிம்சையைக் கடைப்பிடிக்கும் அறிஞர்களுக்கு
கொன்று ஆகும் = violence என்ற இம்சையினால் வரும் (இம்சை என்பது அகிம்சைக்கு எதிர்ச் சொல் ஆகும், இம்சை என்பது ஒருவனுக்கு மனதிலோ அல்லது உடம்பிலோ வருத்தம் தரும் செயலைச் செய்வது இம்சையாகும்)
ஆக்கம் கடை = உண்டாகும் உயர்வு, செல்வம், பொன் ஆகியவை கீழ்மையான செயல் ஆகும்.
விளக்கம்
ஒருவனுக்கு நன்மையான காரியங்களைச் செய்வதால் உண்டாகும் உயர்வு, செல்வம், பொன் ஆகியவை பெரியதாக என்னப்பட்டாலும் அகிம்சையைக் கடைப்பிடிக்கும் அறிஞர்களுக்கு violence என்ற இம்சையினால் வரும் உயர்வு, செல்வம், பொன் ஆகியவை கீழ்மையானதாக அல்லது இழிவானதாகக் கருதப்படும்.
(இம்சை என்பது அகிம்சைக்கு எதிர்ச் சொல் ஆகும், இம்சை என்பது ஒருவனுக்கு மனதிலோ அல்லது உடம்பிலோ வருத்தம் தரும் செயலைச் செய்வது இம்சையாகும்)
பரிசுத்த வேதாகமம்
அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல் அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ! எரேமியா 22:14
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். நீதி 16:8
குறள் 329: kural 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
சொற்பொருள்
கொலை வினையர் = அகிம்சை வழிகளை விட்டு விட்டு தீமையான அல்லது கொடுமையான செய்கைகளைச் செய்யும்
ஆகிய மாக்கள் = கூட்டமாகிய மனிதர்கள் அனைவரும்
புலை வினையர் = ;தீய அல்லது இழிவான காரியங்களைச் செய்வதினால்
புன்மை = குற்ற உணர்வு பெற்று அல்லது துன்பம் அடைந்து
தெரிவார்அகத்து = மனதில் நிம்மதி இல்லாத வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு வாழ்வார்கள்..
விளக்கம்
அகிம்சை வழிகளை விட்டு விட்டு தீமையான அல்லது கொடுமையான செய்கைகளைச் செய்யும் கூட்டமாகிய மனிதர்கள் அனைவரும் தீய அல்லது இழிவான காரியங்களைச் செய்வதினால் குற்ற உணர்வு பெற்று அல்லது துன்பம் அடைந்து தங்கள் மனதில் நிம்மதி இல்லாத வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு வாழ்வார்கள்..
பரிசுத்த வேதாகமம்
வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும். இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்குவரும் சுதந்தரமுமாம் என்றான் யோபு 20:17-19
துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. சங்கீதம் 7:9-10
குறள் 330: kural 330
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
சொற்பொருள்
உயிரு உடம்பின் = நித்திய ஜீவனாகிய ஆத்துமாவை
நீக்கியார் என்ப = பாவம் செய்து இழந்து போனவர்கள்
செயிர் உடம்பின் = நோயுடன் வாழும் உடம்புடன்
செல்லாத்தீ = வாழ இயலாத கொடிய அல்லது நிம்மதியற்ற
வாழ்க்கை யவர் = வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவார்கள்
விளக்கம்
நித்திய ஜீவனாகிய ஆத்துமாவைப் பாவம் செய்து இழந்து போனவர்கள் நோயுடன் வாழும் உடம்புடன் வாழ இயலாத கொடிய அல்லது நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவார்கள்
ஒருவன் தன் உயிரை உடம்பில் இருந்து நீக்க முடியாது. ஒருவன் இரந்து போனால் அதற்குப் பிறகு அவனுக்கு என்ன நேரிட்டாலும் அவனுக்குத் தெரியாது. எனவே இந்த குறள் உயிரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அதற்கும் மேலான ஆத்துமாவைப் பற்றிப் பேசுகிறது என்பதை நாம் அறிந்து அர்த்தம் எடுக்க வேண்டும்.
பரிசுத்த வேதாகமம்
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும். சங்கீதம் 26:9
என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். சநீதம் 116:8
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். நீதி 6:32
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். நீதி 16:17
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக் 18:4
guru