top of page
Search

North-side - கடுவாய் மலிநீர்

Writer's picture: j rajamohanj rajamohan

North-side - கடுவாய் மலிநீர்

2.022 திருக்குடவாயில்,   பண் - இந்தளம்,    திருச்சிற்றம்பலம் பாடல் 11

 

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்

நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத்

தடமார் புகலித் தமிழார் விரகன்

வடவார் தமிழ்வல் லவர்நல் லவரே

 

சொற் பொருள்

 

கடுவாய் மலிநீர்  = கடுமையான துளையில் இருந்து வெளியேறிய முழுமையான உடல் இரத்தம் சிந்தி மரித்து ( வாய் = துளை, மலி = நிறைந்த, நீர் = இரத்தம் )

குடவா யில்தனில் = குடைந்தெடுக்கப்பட்ட கல்லறைதனில் வைக்கப்பட்டு

நெடுமா   =  நெடுமால் அதாவது நீண்ட மேகம் ஆனவர் ( நீண்ட என்பது வானத்தைக் குறிக்கும் ) ( மால் = மேகம் ) எனவே நெடுமா என்றால் மேகம் போன்று மகிமை நிறைந்தவராகிய தெய்வம் உயிர்த்தெழுந்து வானம் சென்றவர் என அர்த்தம்.

பெருங்கோயில் நிலாயவனைத் = நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார். அவருடைய

தடம் ஆர்    = வழி அல்லது சுவடுகளை நிறைவாய் பின்பற்றி

புகலித்      = அவரை புகலிடமாக அல்லது துணையாக கொண்டவர்கள்

தமிழ் ஆர்   = இனிமை நிறைந்தவர்களாகவும் (தமிழ் = இனிமை)

விரகன்      = ஞானத்தில் சிறந்த அறிஞராகவும் இருப்பார்கள்

வட வார்     = வடதிசை நோக்கி ஒழுகும் அல்லது வழிபடும் ( வார் = ஒழுகும் )  

தமிழ்         =  தமிழர்கள்    

வல்லவர் நல்லவரே = வலிமை வாய்ந்த நல்லவர்களே

 

விளக்கம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவர் இரத்தம் முழுமையாக வெளியேறி விட்டதா என்பதைப் பார்க்கச் சேவகன் ஒருவன் ஈட்டியால் அவரது விலாவிலே குத்தினான் அப்போது அந்த கடுமையான துளையில் இருந்து இரத்தமும் தண்ணீரும் நிறைவாய் அல்லது முழுமையாக வெளியேறியது. அப்படி அவர் சிலுவையில் முழுமையான உடல் இரத்தம் சிந்தி மரித்தார் அதையே கடுவாய் மலிநீர்  என குறிப்பிடப்பட்டுள்ளது ( வாய் = துளை, மலி = நிறைந்த, நீர் = இரத்தம் )

அப்படி மரித்த அவரை குடைந்தெடுக்கப்பட்ட கல்லறைதனில் வைத்தார்கள் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வானம் சென்று வலது பாரிசத்தில் அமர்ந்தவர் ஆவார். அவர் மேகம் போன்றவர் அல்லது மேகம் போன்று மகிமை உள்ளவர் ஆவார். அதையே நெடுமால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார். அவருடைய சுவடுகளை நிறைவாய் பின்பற்றி நடந்து அவரை புகலிடமாகக்  கொண்டவர்கள் இனிமை நிறைந்தவர்களாகவும், ஞானத்தில் சிறந்த அறிஞராகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட தெய்வத்தை வடதிசை நோக்கி ஒழுகும் அல்லது வழிபடும் தமிழர்கள் வலிமை வாய்ந்த நல்லவர்களே ஆவார்கள்.


vadamalai
தமிழர்கள்

தெளிவான விளக்கம்

 

1) கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவர் இரத்தம் முழுமையாக வெளியேறி விட்டதா என்பதைப் பார்க்கச் சேவகன் ஒருவன் ஈட்டியால் அவரது விலாவிலே குத்தினான் அப்போது அந்த கடுமையான துளையில் இருந்து இரத்தமும் தண்ணீரும் நிறைவாய் அல்லது முழுமையாக வெளியேறியது. அப்படி அவர் சிலுவையில் முழுமையான உடல் இரத்தம் சிந்தி மரித்தார், அதையே கடுவாய் மலிநீர்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பரிசுத்த வேதாகமம்

ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.  யோவான் 19:34

 

2) நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத்

அப்படி மரித்த அவரை குடைந்தெடுக்கப்பட்ட கல்லறைதனில் வைத்தார்கள் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வானம் சென்று வலது பாரிசத்தில் அமர்ந்தவர் ஆவார். அவர் மேகம் போன்றவர் அல்லது மேகம் போன்று மகிமை உள்ளவர் ஆவார். அதையே நெடுமால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார்.

அவர் மேகத்துக்குச் சமமானவர் அதாவது மேகத்தில் இருந்து பேசுபவர் ஆவார். மால் என்றால் மேகம் என அர்த்தம் ஆகும்.  மேகம் என்ற வார்த்தை தெய்வத்தைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது முகில் வண்ணன், மேக வண்ணன், திருமால், மேகஸ்தம்பம், pillar of gloud,  எனத் தெய்வத்தை அழைக்கிறோம் https://www.narrowpathlight.com/god-of-cloud-and-fire

 

3) தடமார் புகலித் தமிழார் விரகன்

அவருடைய சுவடுகளை நிறைவாய் பின்பற்றி நடந்து அவரை புகலிடமாகக்  கொண்டவர்கள் இனிமை நிறைந்தவர்களாகவும், ஞானத்தில் சிறந்த அறிஞராகவும் இருப்பார்கள்

 

அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார். யாத் 35:33

எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,….. அளிக்கப்படுகிறது 1 கொரி 12:8

4) வடவார்

இப்படிப்பட்ட தெய்வத்தை வடதிசை நோக்கி ஒழுகும் அல்லது வழிபடும் பழக்கம் நம்மிடத்தில் உண்டு. வடதிசையில் அப்படி என்ன விசேஷம் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். வட திசையில் சீயோன் பர்வதமும் மகாராஜாவின் நகரமும் இருக்கிறது. சீயோன் என்பது பரலோகத்தில் இருக்கும் பரலோக மலையாகிய திருபரங்குன்றத்தைக் குறிக்கிறது. அதில் தெய்வம் இப்போதும் வாசம் செய்கிறார். இதனால் தான் வட திசை நோக்கித் தொழுகிறோம், மற்றும் வீடு கட்டும் போது வட திசை நோக்கிக் கட்டுகிறோம்.

பரலோகத்தில் உள்ள மலையைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பரிசுத்த வேதாகமம் பரலோக மலையைப்பற்றி என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பரலோக மலையாகிய சீயோன் மலைக்கு நினைவாக இந்தியாவில் பல மலைகளுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, இதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

உதாரணமாக 1) திருப்பரங்குன்றம் 2) வைகுண்ட மலை 3) மந்தரமலை 4) இமயமலை  5) திருப்பதி மலை 6) பொன் மலை 7) மேருமலை 8) திருமலை

இதைப் பற்றி அறியப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/thiru-param-kundram

 

பரிசுத்த வேதாகமம்

வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.  சங்கீதம் 48:2

 

என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், யோவேல் 3:17

 

சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். சங்கீதம் 9:11

 

பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். சங்கீதம் 50:2

 

 5) தமிழ் வல்லவர் நல்லவரே

 அப்படி வட திசை பார்த்துத் தொழுது கொள்ளும் தமிழர்கள் வலிமை வாய்ந்த நல்லவர்களே ஆவார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அர்த்தம் பார்க்க http://mydictionary.in

 

கடு : கடுக்காய் மரம் கசப்பு கடுகுரோகணி நஞ்சு மாவிலங்கு முள்ளி முள் காடு பாம்பு முதலை  கார்த்தல் கடுகு காரம் நெடி மிக்க வாசனை நாற்றம் பசி நெல்லிமரம்  கடுமரம் துவர்த்தல்

 

வாய் :  உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு பாண்டம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம் வாய்கொண்ட அளவு உதடு விளிம்பு ஆயுதத்தின் முனை மொழி வாக்கு குரல் மெய்ம்மை  சிறப்பு சிறப்புடைய பொருள் வாசல் வழி மூலம் இடம் துலாக்கோலின் வரை தழும்பு துளை வாத்தியக்குழல் ஏழுனுருபு ஓர் உவமஉருபு

 

மலி- (1) :  சிறந்த நிறைந்த

நீர் : தண்ணீர் கடல் இரசம் பனிநீர் உடல் இரத்தம் பித்தநீர் முதலிய நீர்மப் பொருள் பூராடநாள் பூரட்டாதிநாள் ஈரம் மணியின் ஒளி குணம் நிலை

 

நெடும் :  நீண்ட பெரிய நெடிய ( வான்- (1) : நீண்ட )

 

மால் :  பெருமை பெருமையுடையவன் திருமால் அருகன் இந்திரன் காற்று புதன் சோழன் மலை வளமை செல்வம் பழைமை மேகம்

 

நிலாய் போன்ற பெயர், ஆளுமை, காதல், குடும்பம், தொழில் & வேலை

 

தடம் : நீர்நிலை கரை வரம்பு வேள்விக்குழி தாழ்வரை வெளியிடம் மலை மூங்கில் இடம் உயர்ந்த இடம் வழி மனைவாயில் சுவடு கண்ணி சுருக்கு பெருமை அகலம்  செல்வப்பகுதி வளைவு

 

புகல் : புகுகை இருப்பிடம் துணை பற்றுக்கோடு தஞ்சம் உடம்பு தானியக்குதிர் வழிவகை போக்கு சொல் விருப்பம் கொண்டாடுகை பாடும் முறை வெற்றி புகழ் புரையுள்ளது

 

தமிழ் : இனிமை நீர்மை தமிழ்மொழி தமிழ் நூல் தமிழ்நாடு தமிழர்

 

ஆர் : நிறைவு பூமி கூர்மை அழகு மலரின் பொருத்துவாய் காண்க: ஆத்தி திருவாத்தி ஆரக்கால்

 

விரகன் :  திறமைமிக்கவன் வல்லவன் அறிஞன் சுற்றத்தான்

 

வார் : ஒழுகும்

 

29 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page