Soman - சோமன்
10.904 திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை – பாடல் 3 https://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=10.904#link_1&lang=tamil
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.
சொற்பொருள்
விளங்கொளி அங்கி = விளங்கு + ஒளி = பிரகாசிக்கும் ஒளி, அங்கி என்பது அக்கினி மயமான இறைவனைக் குறிக்கிறது. அதாவது பிரகாசிக்கும் ஒளியாகிய அக்கினி மயமான தேவன்
விரிகதிர் = விரி + கதிர் சூரியன் தன்னுடைய கதிர்களை விரித்து எழுவது போல் உயிர்த்தவர்.
சோமன் = “தர்மமேக சமாதியில் திவ்ய ஆனந்தத்தை அடையும் யோகியின் அனுபவத்தையே சோம் என்று வேதம் கூறுகிறது”.தர்ம என்றால் நற்செயல் என்று அர்த்தம், மேக என்றால் மேகம் ஏறிச் சென்றவர் ஆவார், சாமதி = சமம் + ஆதி ஆதிமூலமான தெய்வத்துக்குச் சமம் ஆனவர், இதை யாகம் (sacrifice) என்று வேதம் குறிப்பிடுகிறது.
சோமன் என்றால் நற்செயலாகிய இரட்சிப்பை மனிதர்களுக்குச் சிலுவை மரணத்தினால் ஏற்படுத்தி, உயிர்த்தெழுந்து 1 மேகம் ஏறிச் சென்ற தெய்வம் அவர் ஆதிமூலமான தெய்வத்துக்குச் சமமாக அமர்ந்தவர் ஆவார்
சோதி அருள = சோதியாய் இருக்கும் தெய்வம் அருள அல்லது தெய்வத்தின் ஆணைப்படி
துளங்கொளி பெற்றன = துளங்கும் + ஒளி, = அசையும் அல்லது உலாவும் ஒளியாக இந்தப் பூமிக்கு வந்து பாடுபட்டு, மரித்து, உயிர்த்ததினால் சோமன் என்ற பெயரைப் பெற்ற மனித குமாரன் ஆவார்.
வளங்கொளி பெற்றது பேரொளி = பெரிய ஒளியாகிய தெய்வம் வளம் அல்லது இரட்சிப்பு கொடுக்கும் ஒளியாக மாறியது
வேறு களங்கு = இரட்சிப்பு அல்லது வளம் இல்லாத வேறு குற்ற வாழ்க்கை வாழ்பவர்களை
ஒளி செய்து = தன்னுடைய ஒளியினால் ஒளியாக மாற்றி, அவர்களின் இருளை அகற்றி
கலந்துநின் றானே. = நம்முடன் சேர்ந்து அல்லது அவர்கள் உள்ளத்தில் நிலைகொண்டு இருப்பவனே ஆகும்
விளக்கம்
தெய்வம் யாரும் சென்று சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்யும் ஒளிமயமானவர், அவர் பிரகாசிக்கும் ஒளியாகிய அக்கினி மயமான தேவன், அவர் மனிதக் குமாரனாக இந்தப் பூமிக்கு வந்து மரித்து மூன்றாம் நாள் சூரியன் தன்னுடைய கதிரினை விரித்து எழுவது போல் உயிர்த்த சோமன் ஆவார். அவருக்கு அந்தப் பெயர் வரக்காரணம் கடுமையான ( யாகம் செய்து, அதாவது பலியாகி ) தவத்தைக் காட்டி உயிர்த்தெழுந்து தெய்வத்தின் வலது பக்கத்தில் அமர்ந்தவர் ஆவார்.
அவர் சோதி மயமாய் இருக்கும் தெய்வத்தின் ஆணைப்படி அசையும் அல்லது உலாவும் ஒளியாக இந்தப் பூமிக்கு வந்த மனிதக் குமாரன் ஆவார்.
அவர் பெரிய ஒளியாகிய தெய்வத்துடன் இருந்தவர் அவர் இயேசு கிறிஸ்துவாக இந்தப் பூமியில் வந்து மக்களுக்கு வளம் அல்லது இரட்சிப்பு கொடுக்கும் ஒளியாகச் சுற்றித்திரிந்தார்.
அவர் வேறுபட்டு இருக்கும் மனிதர்களை அதாவது இரட்சிப்பு இல்லாமல் தெய்வத்தை விட்டு பிரிந்து நின்ற மனிதர்களின் குற்றங்களைத் தன்னுடைய ஒளியினால் அகற்றி பரலோகத்திற்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றினார், அவர் அவருடைய வேலையைச் செய்து முடித்து மனிதர்களுடைய உள்ளத்தில் வாழுவதற்காக நம்முடன் சேர்ந்து நிலைபெற்றானே

தெளிவான விளக்கம்
1) விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
பிரகாசிக்கும் ஒளி, அங்கி என்பது அக்கினி மயமான இறைவனைக் குறிக்கிறது. அதாவது பிரகாசிக்கும் ஒளியாகிய அக்கினி மயமான தேவன், சூரியன் தன்னுடைய கதிர்களை விரித்து எழுவது போல் உயிர்த்தவர் ஆவார். அவர் பாடுபட்டு மரித்து உயிர்த்ததினால் அவரை சோமன் என்று அழைக்கின்றனர்.
( சோமன் = “தர்மமேக சமாதியில் திவ்ய ஆனந்தத்தை அடையும் யோகியின் அனுபவத்தையே சோம் என்று வேதம் கூறுகிறது”.தர்ம என்றால் நற்செயல் என்று அர்த்தம், மேக என்றால் மேகம் ஏறிச் சென்றவர் ஆவார், சாமதி = சமம் + ஆதி ஆதிமூலமான தெய்வத்துக்குச் சமம் ஆனவர், இதை யாகம் (sacrifice) என்று வேதம் குறிப்பிடுகிறது.
சோமன் என்றால் நற்செயலாகிய இரட்சிப்பை மனிதர்களுக்குச் சிலுவை மரணத்தினால் ஏற்படுத்தி, உயிர்த்தெழுந்து மேகம் ஏறிச் சென்ற தெய்வம் அவர் ஆதிமூலமான தெய்வத்துக்குச் சமமாக அமர்ந்தவர் ஆவார் )
பரிசுத்த வேதாகமம்
இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து, ஏசாயா 10:17
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். சங்கீதம் 80:19
2) துளங்கொளி பெற்றன சோதி அருள
சோதியாய் இருக்கும் தெய்வம் அருள அல்லது தெய்வத்தின் ஆணைப்படி அசையும் அல்லது உலாவும் ஒளியாக இந்தப் பூமிக்கு வந்து பாடுபட்டு மரித்து உயிர்த்ததினால் சோமன் என்ற பெயரைப் பெற்ற மனிதக் குமாரன் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். யோவான் 16:28
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். யோவான் 12:46
3) வளங்கொளி பெற்றது பேரொளி
பெரிய ஒளியாகிய தெய்வம் வளம் கொடுக்கும் ஒளியாக மாறியது. அதாவது இந்த உலகத்துக்கு ஒளியாக வந்த மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்து இருளில் இருக்கும் ஜனங்களுக்கு அன்பு, இரக்கம். தயவு என்ற வெளிச்சத்தை காண்பித்தார். அவர் காண்பித்த அந்த இரட்சிப்பில் தான் உலகம் இயங்குகிறது.
பரிசுத்த வேதாகமம்
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. மத்தேயு 4:15-16
4) வேறு களங்கொளி செய்து கலந்து நின்றானே.
அவர் வேறுபட்டு இருக்கும் மனிதர்களை அதாவது இரட்சிப்பு இல்லாமல் தெய்வத்தை விட்டுப் பிரிந்து நின்ற மனிதர்களின் குற்றங்களைத் தன்னுடைய ஒளியினால் அகற்றி பரலோகத்திற்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றினார், அவர் அவருடைய வேலையைச் செய்து முடித்து மனிதர்களுடைய உள்ளத்தில் வாழுவதற்காக நம்முடன் சேர்ந்து நிலைபெற்றானே.
பரிசுத்த வேதாகமம்
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். சங்கீதம் 86:5
……… நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2 கொரி 6:16
------------------------------------------------------
Comments