top of page

                       under development

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

இந்த உலகத்தின் ஆசைகளைத் துறந்தவர்களுக்கும்,, வறுமையில் இருப்பவர்களுக்கும், இந்த பூமியில் இருக்கும் வரை பரிசுத்தமாகவும், நேர்மையாகவும், நீதியாகவும் நடந்து இறந்தவர்களுக்கும்  இல்வாழ்வானாகிய தெய்வம் பரலோகத்திற்குச் செல்ல துணை செய்யும்.

 

பரிசுத்த வேதாகமம்

துறந்தவர்கள்

1) தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. 2) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. 3)  தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:37-39

 

துவ்வாதவர்கள் -- வறுமையில் இருப்பவர்கள் அல்லது ஒதுக்கப்பட்டவர்கள்

1) துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.                            

2) நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3-10

3)  ................அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  மத்தேயு 21:31

 

இறந்தவர்கள்

1) மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்; மாற்கு 12:25

2) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  1 தெசலே 4:16               
 

நன்கு ஆராய்ந்து பார்த்தால் இயேசுகிறிஸ்துவே இல்வாழ்வான் ஆவார்.

guru

குறள் 44:  kural 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

 

சொற்பொருள்

பழி அஞ்சிப் பாத்து ஊண் = நம் ஆத்துமா பாவத்துக்கு அஞ்சி இன்ப ( நித்திய வாழ்வு ) துன்ப ( நரக ) வாழ்வை பகுத்து ஆராய்ந்து இன்ப வாழ்வாகிய நித்திய வாழ்வுக்குச் செல்லும் பாதையை

உடைத்து ஆயின் = உடையது ஆகினால்

வாழ்க்கை   = நித்திய வாழ்க்கைக்கு
வழி எஞ்சல் = செல்லும் வழிப்பயணம் அற்றுப்போகாது அதாவது இடையில் தடைப்பட்டு நிற்கிற அனுபவம்

எஞ்ஞான்றும் இல = எந்த காலத்திலும் இருக்காது. அதாவது நம் மரணம் வரை நாம் தவறாமல் வாழ்ந்து வீடுபேறு அடைவோம்.

 

விளக்கம்

நம் ஆத்துமா பாவத்துக்கு அஞ்சி இன்ப ( நித்திய வாழ்வு ) துன்ப ( நரக ) வாழ்வைப் பகுத்து ஆராய்ந்து இன்ப வாழ்வாகிய நித்திய வாழ்வுக்குச் செல்லும் பாதையை உடையது ஆகினால், நாம் அல்லது நம்முடைய ஆத்துமா நித்திய வாழ்க்கைக்குச் செல்லும் வழிப்பயணம் அற்றுப்போகாது அதாவது இடையில் தடைப்பட்டு நிற்கிற அனுபவம் எந்த காலத்திலும் இருக்காது. அதாவது நம் மரணம் வரை நாம் பாவம் செய்து தவறாமல் வாழ்ந்து வீடுபேறு அடைவோம்.

 

பரிசுத்த வேதாகமம்

நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே ( நித்திய ஜீவனை அடைந்தவர்களின் இன்பத்தில் ) நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் ( துன்பத்திற்கு )  என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?    சங்கீதம்  56:13

 

பாத்து: பகுத்து குறள் எண் : 44, 227, 1107

ஊண்  : உண்கை உணவு ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு  https://mydictionary.in/

எஞ்சல் : குறைதல் சுருங்கல் மஞ்சுதல்

எஞ்சல் :  அற்றுப்போதல்

உடைத்து : உடையதாகும் உடையது குறள் எண் : 48, 112, 126, 220, 221, 277, 336, 353, 398, 458, 459, 565, 578, 611, 624, 667, 746, 770, 780, 868, 707, 925, 1010, 1018, 1053, 1057, 1082, 1085, 1152, 1173, 1275, 1276, 1280, 1325.

குறள் 45:  kural 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

 

சொற்பொருள்

அன்பும்    =  தெய்வம் நம் மேல் கொண்ட அன்பினால் தனது ஒரே பேரான குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பி உலக மக்களுக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அப்படிப் பட்ட அன்பு நம் உள்ளத்திலும்

அறனும் = இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏற்படுத்திக் கொடுத்த பலியாகிய அறத்தின் வழி நம் உள்ளத்திலும்

உடைத்தாயின் = குடி கொண்டு இருந்தால்

இல்வாழ்க்கை = தெய்வம் நம் உள்ளத்தில் குடி கொள்வார்,
பண்பும்  =  உள்ளத்தில் அழகும் மற்றும் நற்குணமும்

பயனும் அது  = ஈகை மற்றும் அடுத்தவர்களுக்குப் பயன் படக்கூடிய தன்மை உண்டாகும்

 

விளக்கம்

தெய்வம் நம் மேல் கொண்ட அன்பினால் தனது ஒரே பேரான குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பி உலக மக்களுக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அப்படிப் பட்ட அன்பும், அதே போல் இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏற்படுத்திக் கொடுத்த பலியாகிய அறத்தின் வழி நம் உள்ளத்தில்  குடி கொண்டு இருந்தால் இல்வாழ்வானாகிய தெய்வம் நம் உள்ளத்தில் குடி கொள்வார், அப்படிக் குடி கொள்ளும் போது நம் உள்ளத்தில் தெய்வீக அழகும், நற்குணமும், ஈகை மற்றும் அடுத்தவர்களுக்குப் பயன் படக்கூடிய தன்மை உண்டாகும். அதனால் நாம் இந்த உலகத்தில் இன்பமாகவும் பரலோகத்தில் நீடு வாழவும் முடியும்.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.  யோவான் 3:16-17

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?   1 கொரி 6:19

 

பயன் > பயத்தல், உதவுதல், உண்டாதல், தருதல், பெறுதல். பயன் > பயன்படுதல் > பயன்பாடு. உடையன, பயனைத் தருவன என்று பொருள்.25 Mar 2022

குறள் 46:  kural 46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

 

சொற்பொருள்

அறத்தாற்றின்   = தெய்வம் செய்த இரட்சிப்பு என்ற அறத்தின் வழியாக

இல்வாழ்க்கை ஆற்றின் = ஒருவன் தன்னுடைய இல்லறமாகிய வாழ்க்கையை நடத்தும்

புறத்தாற்றில் = வேறு ஒரு வழியைப் பின்பற்றி
போஒய்ப்   =  செல்வானாகில்

பெறுவது எவன் = அவன் பெற்றுக் கொள்வது யாது ?

விளக்கம் 

தெய்வம் சிலுவையில் மேற்கொண்ட தியாகமாகிய பலியாகிய அறத்தின் வழியில் இல்வாழ்க்கை நடத்துகிற ஒருவன் பரலோகம் சென்று சேரக் கூடிய வழியைக் கண்டடைவான், அப்படிச் செல்லும் ஒருவன் அந்த வழியையை விட்டு வேறுவழியில் அதாவது உலக இன்பத்தின் பின்னால் சென்றால், அவன் பெற்றுக் கொள்வது யாது ? அவனால் தெய்வத்தோடு வாழும் நித்திய வாழ்க்கை அல்லது பரலோக வாழ்க்கையைப் பெறமுடியாது

பரிசுத்த வேதாகமம்

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.  அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.  2 பேதுரு 2:20-21

குறள் 47: kural 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

 

சொற்பொருள்

இயல்பினான்   = தெய்வத்தின் தன்மையாகிய தாழ்மை, பரிசுத்தம், இரக்கம், நன்மை செய்தல் போன்ற குணங்களை கடைப்பிடித்து

இல்வாழ்க்கை  = குடும்ப வாழ்க்கை

வாழ்பவன் என்பான் = நடத்துகிற ஒருவன்
முயல்வாருள்  = அப்படி நடக்க முயற்சி செய்யும் அல்லது இனிமேல் முயற்சி செய்ய முற்படும் மனிதர்கள்

எல்லாம் தலை = எல்லோருக்கும் முதன்மையானவனாக எண்ணப்படுவான்

 

விளக்கம்

தெய்வத்தின் தன்மையாகிய தாழ்மை, பரிசுத்தம், இரக்கம், நன்மை செய்தல் போன்ற குணங்களை கடைப்பிடித்து, இல்வாழ்க்கையாகிய குடும்ப வாழ்க்கை நடத்துகிற ஒருவன், அப்படித் தெய்வத்தின் தன்மை இல்லாமல்  வாழ்க்கை நடத்த முயற்சி செய்யும் அல்லது இனிமேல் முயற்சி செய்ய முற்படும் மனிதர்கள் எல்லோருக்கும் முதன்மையானவனாக எண்ணப்படுவான்.

 

பரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.  சங்கீதம் 103:17 இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள். ஓசியா 14:9

குறள் 48: kural 48

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

 

ஆற்றின்   = ஆற்றின் என்றால் அறத்தாறு ஆகும் அதாவது அறமாகிய சிலுவை மரணத்தினால் உண்டான இரட்சிப்பின் வழியில்

ஒழுக்கி    = ஒழுக்கமாக நடந்து

அறனிழுக்கா = தெய்வம் செய்த அறத்துக்கு இழுக்கு வராமல்

இல்வாழ்க்கை = ஒருவன் குடும்ப வாழ்க்கை செய்தால்
நோற்பாரின் = அவனது நோன்பு இருக்கும் காலத்தில்

நோன்மை  = அந்த தெய்வத்தின் அறமானது அவனுக்குள் இருக்கும் தீய சக்திகளை

உடைத்து = உடைத்துப் போடும் அல்லது அளித்துப் போடும்.

 

விளக்கம்

ஆற்றின் என்றால் அறத்தாறு ஆகும். அறத்தாறாகிய தெய்வம் சிலுவையில் மேற்கொண்ட தியாகமாகிய அறத்தின் வழியில் ஒழுக்கமாய் இருந்து அந்த அறனுக்கு இழுக்கு வராமல் அதாவது தெய்வம் செய்த தியாகத்துக்கு இழுக்கு வராமல் வாழ்வதே இல்வாழ்க்கை ஆகும்.

அப்படி ஒருவன் தெய்வம் செய்த தியாகத்தை விட்டு விலகாமல் இல்வாழ்க்கை வாழும் போது அவன் நோன்பு இருந்தால் அப்படி நோன்பு இருப்பவனின் உள்ளத்தில் உள்ள பெருமை மற்றும்  அந்த மனிதனின் மாம்சத்தினால் உண்டாகும் தீய வலிமையாகிய இச்சைகளை அந்த தெய்வத்தின் அறம் உடைத்துப்போடும்.

 

அறத்து ஆறு என்பதின் விளக்கம் குறள் 37ல் உள்ளது    (பார்க்கவும்)

குறள் 37:

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

 

பரிசுத்த வேதாகமம்

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,  பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,  சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.  கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.   கலாத்தியர் 5:19-24

குறள் 49:  kural 49

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

 

சொற்பொருள்

அறன் எனப்பட்டதே = தெய்வம் சிலுவையில் செய்த தியாகமாகிய அறனைப் பின்பற்றி வாழ்க்கை நடத்துவது மட்டுமே

இல்வாழ்க்கை  = ஒரு மனிதனின் சரியான குடும்ப வாழ்க்கையாக அமையும்

அஃதும் பிறன்  = அதுவும் பிற மக்கள் நம்மை

பழிப்பது இல் ஆயின் நன்று =  குற்றப்படுத்தாமல் அல்லது நமது அறவாழ்வைக் குறைகூறாமல்

இருந்தார்கள் ஆனால் நலமாய் இருக்கும் அதாவது மற்றவர்கள் நம்முடைய வாழ்க்கை முறையைப் பார்த்து தெய்வத்தை அறிந்து கொள்ள  வேண்டும்,

 

விளக்கம்

தெய்வம் சிலுவையில் செய்த தியாகமாகிய அறனைப் பின்பற்றி வாழ்க்கை நடத்துவது மட்டுமே  ஒரு மனிதனின் சரியான குடும்ப வாழ்க்கையாக அமையும். அந்த இல்வாழ்க்கையும் பிற மக்கள் நம்மைக் குற்றப்படுத்தாமல் அல்லது நமது அறவாழ்வைக் குறைகூறாமல் இருக்கும் படி வாழவேண்டும். அப்படி வாழ்வதே நலமானதாக இருக்கும் அதாவது மற்றவர்கள் நம்முடைய வாழ்க்கை முறையைப் பார்த்து தெய்வத்தை அறிந்து கொள்ள  வேண்டும்,

 

ரிசுத்த வேதாகமம்

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.  கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.  1 பேதுரு 3:15-16

bottom of page