top of page

செம்பொருள் யார் ?

செம்பொருள்   -    குறள் 358    ---  kural 358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

குறள 358 மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது மெய் உணர்தல் என்றால் உண்மையான தெய்வத்தைப் பற்றி அதாவது மெய் தெய்வத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் அதிகாரம் ஆகும்.  

திருவள்ளுவர் கூரும் பொருள் என்பது  தெய்வத்தையே குறிக்கிறது அதாவது உலகப் பொருளைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் தனது குறள் 358 ல் செம்பொருள் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார், அந்த செம்பொருள் என்பதற்கு அர்த்தத்தை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

செம்பொருள் என்பதற்குச் செவ்விய பொருள் அல்லது செம்மையான பொருள் எனக் கூறப்படுகிறது அது சரியல்ல என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த குறளுக்கு எழுதியவர்களில் புலவர் மு வரதராசன் அவர்கள் ஒருவர் மட்டும் இந்த குறளுக்கு விளக்கம் எழுதும் போது முத்தி நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பது மெய்யுணர்வு என எழுதுகிறார். ஆனாலும் அந்த செம்பொருள் என்ன என்பதை விளக்கமாக எழுதவில்லை.

(மு வரதராசன்):    பிறவி துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

 

செம்பொருள்  ( செம் + பொருள் )

செம் என்ற வார்த்தை சிவந்த என்பதையே குறிக்கிறது உதாரணமாகச் செம்மண் என்றால் சிவப்பு மண் ஆகும். ஒத்த வார்த்தைகள் செம்மறி, செம்பொருள்

பொருள் என்றால் தெய்வத்தைக் குறிக்கிறது உதாரணமாக தெய்வத்தைப் பரம்பொருள் என அழைப்பது வழக்கம்.

செம்பொருள் என்றால் சிலுவையில் இரத்தம் சிந்தி சிவந்து போன தெய்வம் ஆகும்.

திருவள்ளுவர் தனது குறள் 91 இல் செம்பொருள் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளதை கவனிக்க வேண்டும். மேலும் மெய்யுணர்தல் அதிகாரம் முழுவதும் செம்பொருளாகிய தெய்வத்தைக் குறித்தே எழுதியுள்ளார்.

 

மலர் என்பதின் அர்த்தம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும், மலர் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ள இடங்களை பார்ப்போம்.  செம்மலர், கொய் மலர், மலர் மிசை ஏகினான் என்ற மூன்று வார்த்தைகள் சைவசித்தாந்தம் மற்றும் திருக்குறளில் உபயோகப் படுத்த பட்டுள்ளன அவைகளின் அர்த்தத்தை பார்ப்போம்

 

செம்மலர்

மெய்கண்டார் தனது சிவஞான போதகம் பன்னிரண்டாம் சூத்திரத்தில் செம்மலர் நோந்தாள் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியுள்ளார்

செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே .

செம்மலர் = சிவந்து + மலர் போல் மலர்ந்த

அதாவது செம்மலர் என்பது இரத்தம் சிந்தி மரித்து அலர்ந்த மலர் போல உயிர்த்த தெய்வத்தைக் குறிப்பிடுகிறது.

 

விளக்கம்

செம்மலர்   நோன்றாள்    சேரல் ஒட்டா

இரத்தம் சிந்தி மரித்து அலர்ந்த மலர் போல உயிர்த்து அதாவது மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுத்து சிலுவையில் தவமாகிய நோன்பினை கடைப்பிடித்து நின்ற தெய்வத்தின் திருவடிகளைச்  சேர்ந்து வணங்க வேண்டும். அப்படி நாம் வணங்கும் போது தெய்வத்தைச் சேரவிடாமல் தடுத்து நின்ற கொடிய பாவம் கழுவப்பட்டு நமக்காக மரித்த அன்பான தெய்வத்தோடு இணைக்கப்படுகிறோம்.

அம்மலங் கழீஇ     அன்பரொடு மரீஇ
அப்படி இனைக்கப்படுவதால் நம்முடைய பாவத்தினால் உண்டான மயக்க நிலமை முற்றிலும் நீக்கப்பட்டு நமது உள்ளத்தில் அதாவது நமது ஆன்மாவில் தெய்வத்தின் அன்பு உண்டாகிறது.

 

மாலற  நேயமும் மலிந்து  அவர் வேடமும்

அப்படி தெய்வத்தின் அன்பினால் நாம் நிரப்பப்படும் போது நம்முடைய பழைய சாயல் அதாவது பாவ மனிதன் மாறி புதிய சாயல் அதாவது இரத்தம் சிந்தி நமக்காக மரித்த தெய்வத்தின் சாயலாக இந்த பூமியில் வாழ்வோம்.

 

ஆலயந் தானும்   அரன் எனத்   தொழுமே .

அப்படி தெய்வத்தின் சாயலாக நாம் மாறும்  போது நமது பாவங்களை உடைத்து நீக்குகிற தெய்வம் வாழும் ஆலயமாக நமது உள்ளம் பரிசுத்தமாக மாறுகிறது.

 

இதையே திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

 

செம் என்றால் இரத்தம் சிந்திய என அர்த்தம், மலர் என்றால் மலர் போல் மலர்ந்த அல்லது அலர்ந்த அல்லது உயிர்த்த என அர்த்தம் ஆகும்

 

கொய்மலர்

இந்த பாடல் சைவ சித்தாந்தத்தில் 6வது திருமறையில் 98 பொது வில் 1வது பாடலாக அமைந்துள்ளது.

 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

 

இந்த பாடலில் கொய் மலர் சேவடி என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளது

கொய் என்றால் கிள்ளி அல்லது பிடுங்கி வெட்டி எடுக்கப்பட்ட என அர்த்தம்

மலர் என்றால் மலர் போல் மலர்ந்த அல்லது அலர்ந்த அல்லது உயிர்த்த என அர்த்தம் ஆகும்

இந்த பூமியில் இருந்து கொய்யப்பட்டு (கொல்லப்பட்டு) அலர்ந்தமலர் போன்று உயிர்த்தெழுந்தவனுடைய சேவடியை வணங்குவதைக் குறிப்பிடுகிறது.

 

மலர் மிசை ஏகினான்

 

திருவள்ளுவர் தனது திருக்குறள் பாடல் 3 இல் மலர் மிசை ஏகினான் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியுள்ளார்

மலர் என்றால் மலர் போல் மலர்ந்த அல்லது அலர்ந்த அல்லது உயிர்த்த என அர்த்தம் ஆகும்

மிசை என்பது வானத்தை குறிக்கிறது அதாவது பரலோகத்தைக் குறிக்கிறது.

ஏகினான் என்றால் ஏறிச்சென்றவர் என அர்த்தம் அதாவது உயிர்த்தெழுந்தவர் ஆகும்

 

குறள் 3    kural 3

 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார்.

 

மலர்ந்து அல்லது உயிர்த்து வானம் (HEAVEN)  சென்று இருப்பவனாகிய கடவுளின் மாண்பு மிக்க பாதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பூமியில் இன்பமான வாழ்வையும், பரலோக வீட்டின் நித்திய பேரின்ப வாழ்வையும் பெறுவர்

  

செம்மறி

செம் என்ற வார்த்தை இரத்தத்தைக் குறிக்கிறது, மறி என்றால் ஆட்டுக்குட்டி என்று அர்த்தம். செம்மறி என்றால் இரத்தம் சிந்திய ஆட்டுக்குட்டி எனப்படும்.

செம்மறி என்றால் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. ஆங்கிலத்தில் Sheep, Ovis aries, என அழைக்கப்படுகிறது. தமிழில் செம்மறி என்ற வார்த்தை  sheep என்ற ஆட்டுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு காரணப் பெயர் ஆகும்.

பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு ஆட்டுக்குட்டியானவர் எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும்,  தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.    ஏசாயா 53:7

 

இதுவரை செம்பொருள் என்றால் என்ன என்று பார்த்தோம் இனி குறள் 358 இன் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்

 

குறள் 358    kural 358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

 

பிறப்பென்னும்   = இந்த பூமியில் மனிதனாக பிறந்த

பேதைமை  நீங்கச்   = அறியாமை நீங்க          

சிறப்பென்னும்   =   முத்தி ( மோட்ச ) நிலைக்குக் காரணமான

செம்பொருள்   = சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த தெய்வம்

காண்பது அறிவு  = அவரைக் கண்டுபிடித்தல் உண்மையான அறிவு

விளக்கம்

ஒருவன் இந்த பூமியில் பிறந்து, வளரும் போது இருவகையான பாவம் உள்ளவனாகவே இருக்கிறான். ஒன்று தான் செய்கின்ற பாவம் (கர்ம பாவம்) இரண்டு மூதாதையர் வழிப் பாவம் (ஜென்ம பாவம்). அப்படி வாழும் மனிதனின் அறியாமையாகிய பாவம் மற்றும் சாபம் நீங்க, அவன் இந்த பூமியில் வாழும் போதே  மனிதக்குல மீட்புக்காகச் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, உயிர்த்து, பரலோகம் சென்ற சிறப்பென்னும் செம்பொருளாகிய தெய்வத்தைத் தேடிக் கண்டுபிடித்து வணங்கி அவரைப்போல் வாழ்தல் உண்மையான அறிவு ஆகும்.

அப்படிப்பட்ட ஒரு மனிதன் தெய்வத்தைப் போலப் பரலோக வாழ்க்கையைப் பெற்றுக் கொள்வது நிச்சயம்.

 

பரிசுத்த வேதாகமம்

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத் தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. அப் 17:27

Screenshot_20200521-144846.png

செம்பொருள் குறள் 91,

திருவள்ளுவர் செம்பொருளாகிய தெய்வத்தைக் கண்டவர்கள் இனிய சொற்களையே அன்பு, இரக்கம், கலந்து வஞ்சனை இல்லாமல் பேசுவார்கள் எனத் தனது குறள் 91 இல் அழகாகக் கூறுகிறார்.

 

குறள் 91   kural 91

இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

இன்சொலால்  = இனிய சொற்களால்

ஈரம்            =   இரக்கம், அன்பு

அளைஇப்  = கலந்து

படிறுஇலவாம்  = வஞ்சனை இல்லாமல்

செம்பொருள் கண்டார்   =   சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த தெய்வத்தைக் கண்டவர்கள்

வாய்ச் சொல்  =  வாயில் இருந்து வரும் சொல்

 

விளக்கம்

ஒருவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த தெய்வத்தை கண்டுபிடித்துவிட்டால் அவர் வாயில் இருந்து வரும் சொல் அதாவது அவர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அன்பு, இரக்கம் கலந்து வஞ்சனை இல்லாமல் இருக்கும் என்பதே விளக்கம் ஆகும்.

 

பரிசுத்த வேதாகமம்

 

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.  யோவான் 13:35

முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.    1 பேதுரு 2:10

அதிகாரம் மெய்யுணர்தல்

 

குறள் 351:   kural 351

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

 

பொருளல்ல வற்றைப்  =  இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த செம்பொருளாகிய தெய்வத்தை          

                               பரம்பொருளாக அறியாமல்  பொருள் அல்லாதவற்றை

பொருளென் றுணரும்  =   பரம் பொருளாகியதெய்வம் என்று உணரும் மனிதர்கள்
மருளானாம்    =  ( மருள் + ஆனாம் ) புத்தி தெளிவில்லாத ஆண்கள்

மாணாப் பிறப்பு  =  மயக்க உணர்வால் சிறப்பில்லாத நரக வாழ்க்கை சென்று சேர்வார்கள்.  

 

விளக்கம்

இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த செம்பொருளாகிய தெய்வத்தை பரம் பொருளாக அறியாமல்  பொருள் அல்லாதவற்றை  பரம் பொருளாகிய தெய்வம் என்று உணரும் மனிதர்கள் மனதில் புத்தி தெளிவில்லாதவர்களாகவும் தங்களுக்கு ஏற்படும்   மயக்க உணர்வால் சிறப்பில்லாத நரக வாழ்க்கை சென்று சேர்வார்கள்.  

 

பரிசுத்த வேதாகமம்

நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.   லூக்கா 12:5

 

குறள் 352:   kural 352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

 

இருள்நீங்கி =  நரக இருள் நீங்கி

இன்பம் பயக்கும்  = பரலோக இன்பம் உண்டாகும்

மருள்நீங்கி        =   பாவத்தினால் உண்டான புத்தி தெளிவில்லாத நிலை நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு = மாசற்ற தெய்வத்தை காட்சியாக்க் கண்டவருக்கு

 

விளக்கம்

இந்த பூமியில் ஒரு மனிதனுக்கு இரண்டு வகையான பாவம்  உண்டு 1) கர்ம பாவம் அதாவது தான் செய்த பாவம் 2) ஜென்ம பாவம் அதாவது மூதாதையர் வழிப் பாவம். அப்படி அந்த பாவத்தினால் தெய்வத்தை அறிய முடியாத புத்தி தெளிவில்லாத நிலை உண்டாகும். அந்த புத்தி தெளிவில்லாத நிலை ஒரு மனிதனை ஆர் இருளாகிய நரகத்துக்கு நேராக நடத்தும். அந்த பாவத்தில் இருக்கும் மனிதன் தனக்காக இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த செம்பொருளாகிய மாசற்ற தெய்வத்தை பரம் பொருளாகக்  கண்டுவிட்டால் அவனுக்கு நரக இருள் நீங்கி பரலோக இன்பம் உண்டாகும் அதாவது நித்திய ஆனந்தம் உண்டாகும்.

 

பரிசுத்த வேதாகமம்

அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது. அவர்களது பிடிவாத உள்ளத்தின் விளைவாய் ஏற்பட்ட அறியாமையின் காரணத்தால் அவர்கள் கடவுள் தரும் வாழ்வுக்குப் புறம்பானவர்களாக இருக்கிறார்கள்.   அவர்கள் உள்ளம் மரத்துப்போய்ப் பேராசை கொண்டு, ஒழுக்கக் கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் தங்களை காமவெறிக்கும் உட்படுத்தினார்கள்.....    .....    திரு விவிலியம் எபேசியர் 4:18-19

குறள் 353:   kural 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து

 

ஐயத்தின் நீங்கித் =  மெய் பொருளாகிய தெய்வத்தைப் பற்றிய சந்தேகம் நீங்கி

தெளிந்தார்க்கு     =  புத்தி தெளிந்தவர்களுக்கு

வையத்தின்           =  உலகத்தில் இனிமையாக
வான                        =  வானம் அல்லது பரலோகம்

நணிய துடைத்து = அருகில் உள்ளது போல் தெரியும்

 

விளக்கம்

 

குறள 351 இல் சொல்லப்பட்டது போல  இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்த செம்பொருளாகிய தெய்வத்தை பரம் பொருளாக அறிந்து கொண்டவர்களாகிய மனிதர்கள் உண்மையான தெய்வம் யார் ? என்ற சந்தேகம் நீங்கி வாழ்வார்கள்.

அப்படி வாழ்பவர்கள் இந்த உலகத்தில் இனிமையாகத் தோன்றும் நன்மைகளை விட்டு பரலோக நன்மைகளை உணர்ந்து வாழ்வார்கள்.

அப்படி பரலோக வாழ்க்கையை நினைத்து வாழ்பவர்களுக்கு வானுலகமாகிய பரலோகம் மிக அருகில் இருப்பது போல் தெரியும்.

 

பரிசுத்த வேதாகமம்
 

தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.  பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள்மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து (பரலோகத்தில்) இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.   .... வெளி 14:12-13

குறள் 354:   kural 354

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு

 

ஐ + உணர்வு          =  ஐம்புலன்களில் தெளிவு பெற்று

எய்தியக் கண்ணும்   =  உலக வாழ்க்கையின் நோக்கத்தை அடைந்ததின்

பயமின்றே             = பலன் + இல்லையே
மெய்யுணர்வு          = மெய்ப் பொருளாகிய தெய்வத்தைப் பற்றிய உணர்வு

இல்லா தவர்க்கு      = இல்லாதவர்க்கு

 

விளக்கம்

இந்த உலகத்தில் வாழும் காலத்தில் மனிதர்கள் மெய்ப் பொருளாகிய  அல்லது செம்பொருளாகிய தெய்வத்தைப் பற்றிய தெளிவு இல்லாதவர்களாக வாழ்ந்தால்.

அப்படிப் பட்ட மனிதர்கள் தங்களுடைய ஐம்புலங்களிலும் தெளிவு பெற்று இந்த உலகத்தில்  தாங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை அடைந்து இருந்தாலும்,

அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பலன் கிடையாது. அதாவது பரலோக வாழ்க்கை கிடைக்காது.

 

பரிசுத்த வேதாகமம்

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?  1 பேதுரு 4:18

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது..................ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?      1 கொரி 18 & 20

குறள் 355:   kural 355

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

 

எப்பொருள் = எந்த தெய்வம்

எத்தன்மைத்தாயினும் = எந்த குணம் உடையது என்றாலும்

அப்பொருள்             = கூறப்பட்ட அந்த தெய்வத்தை அறிந்து கொள்வதை விட
மெய்ப்பொருள்         = செம்பொருளான மெய் தெய்வத்தை        

காண்ப தறிவு          =கண்டுபிடித்து வணங்குவதே அறிவு  

 

விளக்கம்

பலர் பல தெய்வங்க்களிப் பற்றி கூறினாலும் அந்த தெய்வம் பல குணங்களை உடையது என்றாலும், கூறப்பட்ட அந்த தெய்வத்தை அறிந்து கொள்வதை விட செம்பொருளான மெய் தெய்வத்தைக் கண்டுபிடித்து அவரே தெய்வம் என வணங்குவதே அறிவு  

 

( திருவள்ளுவர் இந்த குறளில் மெய்ப் பொருளாகிய தெய்வத்தைப் பற்றிப் பேசுகிறார், பொருள் என்பது  தெய்வத்தையே குறிக்கிறது அதாவது உலக பொருளைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். )

 

பரிசுத்த வேதாகமம்

..........அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்......   2 பேதுரு 3:17-18

குறள் 356:   kural 356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

 

கற்றீண்டு     =   கற்று + ஈண்டு = இந்த வாழ்க்கையில் கற்றறிந்து

மெய்ப்பொருள் = உண்மை தெய்வத்தை

கண்டார்       =  கண்டுபிடித்தவர்க்ள்

தலைப்படுவர்  =  பெற்றுக்கொள்வார்கள்
மற்றீண்டு      = மற்றது + ஈண்டு =   மற்ற ஒரு துன்பம் நிறைந்த  நரக  வாழ்க்கை

வாரா நெறி   =  வராத வழியை

 

விளக்கம்

இந்த உலகத்தில் வாழும் போதே உண்மை தெய்வத்தை அதாவது செம்பொருளைக் கண்டுபிடித்து வாழுபவர்கள், ஆர் இருள் ( குறள்-121 ) நிறைந்த  அதாவது  நித்திய நித்தியமாக துன்பம்  தரக் கூடிய நரக வாழ்க்கை சென்று சேராத ( வராத ) வழியைப் பெற்றுக் கொள்வார்கள்

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்."  bible

 குறள் 357:   3kural 357

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

 

ஓர்த்துள்ளம்    =   உள்ளத்தில் ஆராய்ந்து

உள்ளது உணரின் =  உள்ளத்தில் உள்ள மெய்ப்பொருளை உணந்து

ஒருதலையாப்   = நிச்சயமாய்
பேர்த்து          =  மீட்பு அல்லது இரட்சிப்பு

(போக்குதல்; நிலைமாறச்செய்தல்; அப்புறப்படுத்துதல்; திருப்பிப்போடுதல்; பிடுங்கல்; கெடுத்தல்; ஒடுங்கிக்கொள்ளுதல்; பிரித்தல்; மீட்குதல்; வசூலித்தல்; செலுத்துதல்; விடுத்தல்.)

உள்ள வேண்டா =  நினைக்க வேண்டா

பிறப்பு           =   இந்த உலக வாழ்க்கையில்

விளக்கம்

இந்த உலகத்தில் பிறந்த எந்த ஒரு மனிதனும் தனது உள்ளத்தைத் தெய்வம் வாழும் வாழும் ஆலயமாக ஒப்புக் கொடுக்க வேண்டும், அப்படி தெய்வம் வந்து தங்கக்கூடிய உள்ளம் உடையவர்கள் தங்கள் உள்ளத்தை ஆராய்ந்து உள்ளத்தில் மெய் தெய்வமாகிய இல்வாழ்வான் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் , அவர்களுக்கு நிச்சயமாகப் பரலோக வாழ்க்கை உண்டு. எனவே அவர்கள் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் இரத்ததினால் உண்டாகும் மீட்பு அல்லது இரட்சிப்பைப் பற்றி சந்தேகமாக நினைக்க வேண்டாம். அதாவது உள்ளத்தில் தெய்வம் தங்கி வாழ்ந்தால் அவனுக்குப் பரலோகம் உண்டு என்பதே ஆகும்.

 

பரிசுத்த வேதாகமம்

1)நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17

 

(இதைப் பற்றி அறிந்து கொள்ள இல்வாழ்வான் என்ற பக்கத்தைப் பார்க்கவும். ( GO ) )

குறள் 359:   kural 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

 

சார்பு உணர்ந்து        =  நாம் சார்ந்து இருக்கும் உலக பொருளின் நிலை உணர்ந்து

சார்பு கெட ஒழுகின்   = அந்த உலகப் பொருளைச் சார்ந்து வாழாமல் ஒழுக்கமாக

                           செம்பொருளான தெய்வத்தைச் சார்ந்து வாழ்ந்தால்

மற்றது அழித்துச்    =  மற்ற வாழ்க்கையாகிய நரகவாழ்க்கைக்கு செல்லும் வழியை
சார் தரா              = சார்ந்து வாழாமல், நரகவாழ்க்கைக்கு செல்லும் வழியை அழித்து
சார் தரும் நோய்   =  உலகப் பொருள்களை சார்ந்து வாழ்வதால் வரும் நரக

                         வாழ்க்கையாகிய துன்பம் திரும்பவும் வராது

 

விளக்கம்

நாம் சார்ந்து இருக்கும் உலக பொருளின் நிலை உணர்ந்து, அந்த உலகப் பொருளைச் சார்ந்து வாழாமல் ஒழுக்கமாக, செம்பொருளான தெய்வத்தைச் சார்ந்து வாழ வேண்டும்.

அப்படி செம்பொருளான தெய்வத்தை சார்ந்து வாழ்ந்தால் மற்ற வாழ்க்கையாகிய நரகவாழ்க்கைக்கு செல்லும் வழியை நாம் சார்ந்து வாழாதபடி நம்மைப் பாதுகாத்து , நரகவாழ்க்கைக்கு செல்லும் வழியை அழித்துவிடும்,  நரக வாழ்க்கையாகிய துன்பம் திரும்பவும் நமக்கு வராதபடி காத்துக் கொள்ளும்

 

பரிசுத்த வேதாகமம்

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.     மத்தேயு 6:24

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.   1கொரி 15:19

குறள் 360:  kural 360

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமங் கெடக்கெடு நோய்         

 

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் = = ஆசைப்படுதல், அளவுக்கு அதிக கோபப்படுதல்,

                                                                    எந்த உலகப் பொருள் மீதும் மயக்கம் ஆகிய மூன்றின்
நாமங் கெடக்                                  =  பெயர் கெட வாழ்ந்தால்

கெடு நோய்                                       = துன்பமான நரக வாழ்க்கை வராது.

 

விளக்கம்

ஆசைப்படுதல், அளவுக்கு அதிக கோபப்படுதல்,  எந்த உலகப் பொருள் மீதும் மயக்கம் ஆகிய மூன்று குணங்களும் நமது உள்ளத்தில் வராத ஒரு வாழ்க்கை நாம் வாழ்ந்தால் அதாவது செம்பொருளாகிய சிலுவையாகிய கழுமரத்தில் இரத்தம் சிந்தி உயிர்த்த தெய்வத்தை நாம் அறிந்து வாழ்ந்தால், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குணங்களின் பெயர்களும் நமது உள்ளத்தில் உள்ள நல்ல தெய்வீக குணங்கள் மூலமாக அழிந்து போகும். அப்படி ஒரு வாழ்க்கை வாழும் போது நமக்கு நரக வாழ்க்கை உண்டாகாது.

 

பரிசுத்த வேதாகமம்

எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.......    மத்தேயு15:19-20

guru

bottom of page