3) குறள் 243: -- kural243
திருவள்ளுவர் தனது குறள் 243ல் நரகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் அல்லது நடத்தப்படுகிறவர்கள், இந்த உலகத்தில் இருக்கும் போதே ஜென்ம பாவம் மற்றும் கரும பாவத்தை விட்டு விலகி வாழ்வார்கள், அப்படி பாவம் இல்லாமல் வாழ்பவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஆத்துமா கெட்ட இருளை உடைய நரகத்திற்குச் சென்று சேராமல் மோட்ச வாழ்க்கையை அடைந்து நீடு வாழும் எனக் குறிப்பிடுகிறார்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
அருள் சேர்ந்த = பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட ஆகும்.
(தெய்வ வழிபாட்டின் போது அருள் இறங்கி விட்டது அல்லது அருள் வந்து விட்டது எனக் குறிப்பிடுகிறோம். இது கடவுளின் பரிசுதத ஆவியைக் குறிக்கும்.)
நெஞ்சினார்க்கில்லை = உள்ளம் உடையவர்களுக்கு இல்லை
இருள் சேர்ந்த = ஆர் இருளை உடைய
இன்னா உலகம் புகல் = நரக உலகம் சேர்தல்
பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்றுக் கொண்ட உள்ளம் உடையவர்கள், கெட்ட இருளை உடைய நரகத்திற்கு சென்று சேர்வதில்லை.
பரிசுத்த வேதாகமம் , மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.அதாவது நரகத்துக்கு சென்று சேரக்கூடிய நியாயத்தீர்ப்பு (தண்டனை) இல்லை எனக் கூறுகிறது
ரோமர் 8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
4) குறள் 753 --- kural753
திருவள்ளுவர் தனது குறள் 753ல் நரகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது பரலோகத்தில் இருக்கும் பரம் பொருளாகிய சத்திய ஒளியை வேண்டிக் கொள்ளுகிறவர்களின் அல்லது நினைக்கும் உள்ளத்திற்குள் அந்த ஒளி சென்று நரகமாகிய இருள் அகற்றும் என குறிப்பிடுகிறார்.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
பொருள் = பரம்பொருள் அல்லது பரலோகம்
பொய்யா = உண்மையான அல்லது சத்தியம்
விளக்கு + உம் = ஒளியால்
எண்ணிய = நினைத்த
தேயத்துச் சென்று = உடலுக்குள் சென்று
இருளருக்கும் = நரக இருளில் இருந்து விடுதலை கிடைக்கும்
பரலோகத்தில் இருக்கும் பரம் பொருளாகிய சத்திய ஒளியை வேண்டிக் கொள்ளுகிறவர்களின் அல்லது நினைக்கும் உள்ளத்திற்குள் அந்த ஒளி சென்று நரகமாகிய இருள் அகற்றும்
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை குறிப்பிடும் போது அவர் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார் என்றும் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி என்றும் அவரே மெய்யான ஒளி என்றும் அவரிடத்தில் இருள் இல்லை என்றும் கூறுகிறது
யோவான் 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவான் 1:9
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
I யோவான் 1:5
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
பரலோகம், நரகம் மற்றும் ஒரு மனிதனுக்கு மறுபிறப்பு இந்த பூமியில் இல்லை என்பதையும், ஒரு மனிதன் மரித்த பிறகு நியாயத்தீர்ப்பு அடைந்து பரலோகம் அல்லது நரகம் சென்று சேர வேண்டும் என்பதை ப்ரிசுத்த வேதாகமம் அழகாகக் கூறுகிறது. அதை நாம் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வெளி 1:18
"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." --இயேசு
guru