
ஏழரை நாட்டு சனி
ஏழரை நாட்டு சனி என்றவுடன் சோசியர் கூரிய வார்த்தை தான் ஞாபகம் வரும். அதாவது ஒருவன் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் சோசியம் பார்க்கச் செல்லும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது. அப்படி அவன் சோசியம் பார்க்கச் செல்லும் போது அந்தச் சோசியர் அவனுக்கு ஏழரை நாட்டு சனி பிடித்து இருப்பதாகவும், அதற்குச் சில பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி பரிகாரப் பொருள்களை வாங்கி வரச் சொல்லி பூஜை செய்வது வழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.
ஏழரை நாட்டு சனி என்ன என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் தான் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
ஏழரை நாட்டு சனி என்ற வார்த்தையில் நாடு என்ற பதம் வருகிறது, எனவே இது ஒரு தனிப்பட்ட மனிதன் சம்பந்தப்பட்டதல்ல. இது ஒரு நாடு சம்பந்தப்பட்டது. இந்த உலகத்தை ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஆளப்போகும் சனியைப் பற்றியது ஆகும். அப்போது அந்த ஆட்சியில் உலகத்தில் இருக்கும் மக்களுக்குக் கடுமையான வாழ்க்கையாக அமையும், அந்த ஏழு ஆண்டுகள் பூமியில் வாழ்வது மிகவும் கஷ்டான ஒன்று ஆகும். இதையே பரிசுத்த வேதாகமம் அந்தி கிறிஸ்துவின் ஆட்சி என்று குறிப்பிடுகிறது. இதைப் பற்றிய விளக்கத்தைக் கீழே பார்ப்போம்.
ஏழரை நாட்டு சனியை = ஏழு + அரை + நாடு + சனி என்று பிரிக்கலாம்
1) ஏழு = ஏழு என்பது ஏழுவருடத்தைக் குறிக்கும்.
2) அரை = இந்த இடத்தில் அரை என்பது பகுதியைக் குறிக்கவில்லை அரசாட்சி என்பதையே குறிக்கிறது, ஏனென்றால் ஏழரை என்ற சொல் நாடு என்ற சொல்லோடு சேர்ந்து வருவதால் ஒன்றில் சமபகுதியைக் ( ½ ) குறிக்காது. ஏழரை நாடு என்று ஒரு நாடு இந்த உலகத்தில் இல்லை. அதனால் அரசு, அரசாட்சி என்ற அர்த்தமே சரியானதாகும்.
அரை என்பது ஒரு அரசு நடத்தும் அரசியலைக் குறிக்கும். அதாவது அரசாட்சியைக் குறிக்கும்.
அரை arai * n. அரசு rājan. Politics;அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக. 2430).
https://agarathi.com/word/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88
3) நாட்டு = நாட்டு என்பது ஒரு நாட்டைக் குறிக்கும்
4) சனி = சனி என்பது சாத்தான், எனவும் சைத்தான் எனவும் அந்தி கிறிஸ்து, மற்றும் தஜ்ஜால் எனவும் பிசாசு எனவும் பேய் எனவும் அழைக்கப்படுகிறது.
ஏழரை
ஏழரை என்றவுடன் ஏழு + அரை 7 ½ என்று ஞாபகத்துக்கு வரும், அது அப்படியல்ல அதன் அர்த்தத்தைப் பார்ப்போம். ஏழு = 7. அரை = ஆட்சி, அதாவது சனியினால் ஏழு வருடம் ஆட்சி செய்யப்படும் நாட்டில் இருந்து உண்டாகும் தீமை அல்லது தொல்லைகளைப் பற்றி கூறப் பயன் படுத்தப்பட்ட வார்த்தை இந்த ஏழரை நாட்டு சனி என்பதாகும்.
நாடு
ஏழரை என்ற வார்த்தையுடன் நாட்டு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. நாடு என்பது ஒரு இடத்தைக் குறிக்கிறது . ஆனால் நாட்டு என்ற வார்த்தையைப் பற்றி எந்த வித விளக்கம் கொடுக்கப்படாமல், ஏழரை ஆண்டுகள் என்று மட்டும் என்று எல்லா விளக்கங்களில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு நாடு சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வாகும். இந்த குறிப்பிட்ட ஏழு வருட அரசாட்சி என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களை எல்லாம் ஒரு நாட்டில் இருந்து சனி அரசாட்சி செய்யும் நிகழ்வாகும். இது தனி ஒரு மனிதனுக்கு மட்டும் நேரிடும் தொல்லையாக எடுக்க முடியாது
சனி
சனி என்பது சாத்தான், எனவும் சைத்தான் எனவும் அந்தி கிறிஸ்து, மற்றும் தஜ்ஜால் எனவும் பிசாசு எனவும் பேய் எனவும் அழைக்கப்படுகிறது. நாம் கோபத்தில் மற்றவர்களைச் சனியனே என்றும் சனி பிடித்தவன் என்றும் வசை பாடுகிறோம். சனி என்ற வார்த்தை saturn என்ற வார்த்தையில் இருந்து வந்தது எனவே சனிக்கிழமையை saturday (saturnday) என அழைக்கிறோம்.
ஏழு வருட அந்தி கிறிஸ்துவின் ஆட்சியும், இயேசு கிறிஸ்துவினால் அவன் அழிக்கப்படுதலும்
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட அந்தி கிறிஸ்துவை தஜ்ஜால், ஏழரை நாட்டு சனி மற்றும் ஒன்றிய அந்தாக் ஆசர் என்று அழைக்கிறார்கள்.
ஏழரை நாட்டு சனி என்று தமிழ் வழியில் சொல்லப்படுகிறது
அந்தி கிறிஸ்து என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
தஜ்ஜால் என்று குர்ஆன் கூறுகிறது
ஒன்றிய அந்தாக் ஆசர் என்று சமஸ்கிருதம் கூறுகிறது.
இந்த நாண்கு வார்த்தைகளும் ஒரே நபர் ஆன அந்தி கிறிஸ்துவைக் குறிக்கிறது.
1) அந்தி கிறிஸ்து
இஸ்ரவேல் ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே மேசியா வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை மையப்படுத்தி சாத்தான் தன்னை மேசியா என்று அறிவித்து எருசலேம் தேவாலயத்தில் தன்னை தேவனாக உயர்த்தி அமருவான். அப்போது இந்த உலகத்தில் உள்ள ராஜ்யங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும். இந்த நிகழ்வு நடைபெற எருசலேமில் மூன்றாவது தேவாலயம் கட்டப்பட வேண்டும். அந்த இடத்தில் உள்ள மசூதியை அகற்றிவிட்டு தேவாலயம் கட்ட இஸ்ரவேல் நாடு முயற்சி எடுத்து வருகிறது.
அந்தி கிறிஸ்துவை இயேசு கிறிஸ்து தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். இதைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் மற்றும் குர்ஆனிலும் எழுதப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம்
மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் ( அந்திகிறிஸ்துவைக் ) குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத் தகாத இடத்திலே ( தேவாலயத்திலே ) நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! மாற்கு 13:14-17
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் ( அந்திகிறிஸ்துவாகிய சனி ) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். ---......................நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். 2 தெசலோ 2:3-4,8
2) தஜ்ஜால்
அந்தி கிறிஸ்து என்ற ஏழரை நாட்டு சனி இஸ்லாமியர்களால் தஜ்ஜால் என அழைக்கப்படுகிறான். அவன் உலகத்தின் கடைசிக் காலத்தில் தோன்றுவான், அவனை இயேசு கிறிஸ்து அழிப்பார் என்று குர்ஆன் கூறுகிறது. இதை கீழே உள்ள விக்கிப்பீடியாவின் கட்டுரை தெளிவாக்குகிறது.
தஜ்ஜால் - Dajjal
https://ta.wikipedia.org/s/j2q
தச்சால் (Dajjal, மஸீஹ் தஜ்ஜால்) அல்லது மசீக் தச்சால் என்பவன் உலக அழிவின் சமீபத்தில் வெளிப்படும் விசித்திர மனிதன் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும்[1]. உலக இறுதியின் பத்து அடையாளங்களின் தச்சாலின் வெளிப்பாடு இரண்டாவது மற்றும் மிக முக்கிய அடையாளம் ஆகும். இசுலாமிய நம்பிக்கைகளின் படி, பூமி தனது இறுதிநாளை நெருங்கும் நேரத்தில் தச்சால் நடு கிழக்கு ஆசியாவில் இருந்து வெளிப்படுவான். மெக்கா, மதீனா, தூர் சீனா மலை மற்றும் அல் அக்சா மசூதி அகியவற்றைத் தவிர்த்து உலகின் அனைத்துப் பகுதிகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவான்[2]. பின்பு தானே கடவுள் எனவும் மக்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் எனவும் கட்டளையிடுவான். மாய மந்திர வித்தைகளைக் காட்டியும், ஒரேயொரு இறந்த மனிதனை உயிர்ப்பித்தும் மக்களைத் தனது பக்கம் ஈர்ப்பான். பெண்கள் மற்றும் இசுபகான் பகுதியை சேர்ந்த யூதர்களில் பெரும்பாலோர் அவனை பின்பற்றுவார்கள். இறுதியில் சிரியாவில் இருந்து வெளிப்படும் நபி ஈசா (இயேசு) வினால் இசுரேலின் லூத்து என்னும் இடத்தில் வைத்துக் கொல்லப்படுவான்[3].
3) ஒன்றியஅந்தாக் ஆசர்
https://ta.wikipedia.org/s/j2q
ஒன்றிய அந்தக் ஆசர் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் அந்தி கிறிஸ்து அல்லது தஜ்ஜாலுக்கு கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இந்தியாவின் வட பகுதிகளில் இவ்வாறு அழைக்கிறார்கள்.
தச்சாலை ஒன்றிய அந்தாக் ஆசர் என்பவனைப் பற்றிய குறிப்பு உள்ளது. அந்தாக் ஆசர் எனும் சமசுகிருதச் சொல்லுக்கு இறுதியில் வரும் ஒற்றைக்கண்ணன் என்பது பொருளாகும். இவன் வன்மம் மிகுந்தும் ஆயிரம் கைகள், ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் பாதங்கள் மற்றும் இரண்டாயிரம் கண்களைக் கொண்டவனாகவும் இருப்பான். இவன் மந்தார் பர்வதத்தில் நுழைய முற்படும்போது கொல்லப்படுவான்.
எருசலேம் நகரம்
உலகம் முழுவதற்கும் மையப் பகுதியான எருசலேம் நகரத்தில் இருந்து கொண்டு முழு உலகத்தையும் ஆழுகை செய்யப்போகும் அந்தி கிறிஸ்து என்ற ஏழரை நாட்டு சனி, அந்த நகரத்தில் யூதர்களுக்கும் முழு உலகத்துக்கும் மேசியாவாக தன்னை காட்டிக் கொண்டு, அங்குக் கட்டப்படப் போகிற மூன்றாவது தேவாலயத்தில் இருந்து கொண்டு, தன்னை தெய்வத்துக்கு மேலாகப் பெரியவனாக காண்பித்து கொண்டு உலகம் முழுவதையும் ஆழுகை செய்வான்.
பரிசுத்த வேதாகமம்
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் ( அந்திகிறிஸ்துவாகிய சனி ) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 2 தெசலோ 2:3-4
ஏழரை நாட்டு சனி என்ற அந்தி கிறிஸ்துவின் ஆட்சி ஒரு நாடு, ஒரு ஆட்சி, ஒரு தலைவன் என்ற முறைமையின் படி அமைந்திருக்கும். அந்த ஆட்சியில் என்ன என்ன நடக்கும் என்பதப் பார்ப்போம்.
1) ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே தலைவன்
உலகம் முழுவதும் ஒரே தலைவனின் ஆட்சி அமையும், அப்படி அமையும் போது ஒரே மொழி. ஒரே பணம், என்று அமையும். இதில் பல நன்மைகள் இருந்தாலும். உலகத்தில் உள்ள எல்லா மக்களின் தனி நபர் சுதந்தரம் பரி போய்விடும். எந்த வகையிலாவது நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருப்போம்.
இந்த நிகழ்வுக்காக நம்மைத் தயார் செய்ய நம்மை சுற்றி நடக்கும் நிகழ்சிகள் நடைபெரறுகின்றன. இப்பொழுதே ஒரு நாடு இன்னொரு நாட்டை தன்னுடன் சேர்க்க முயற்சி செய்து வருகின்றன, உதாரணமாக கிரேட்டர் ஈரான் தன்னுடைய நிலப்பரப்புகளை கிரேட்டர் பெர்சியா காலத்தைப் போல விஸ்தரிக்க நினைக்கிறது. சீனாவும் தன்னுடைய எல்கையை விஸ்தரிக்கவே நினைக்கிறது. ரஷ்யா தன்னுடைய ஆதிக்கத்தைத் தனக்கு அருகில் எல்லா நாடுகளிலும் செலுத்த நினைக்கிறது. அமெரிக்கா கனடாவைத் தன்னுடன் சேர்க்கவே விரும்புகிறது. அதே போல இந்தியாவும் அகண்ட பாரதம் அமைக்க விரும்புகிறது.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே சட்டம் (Uniform civil code) , ஒரே நாடு ஒரே சந்தா, ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே மாதிரியான வரி, ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு ஒரே அடையாள அட்டை ( aadhaar ) என்று வர ஆரம்பித்து விட்டது.
2) New world order
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு புதிய உலகக் கட்டளை ( New world order ) வாட்டிகன் சிட்டியில் இருந்து போப் அவர்களால் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலத்தில் உலகக் கட்டளை சில நன்மைகளுக்காக இருக்கலாம், ஆனால் சில காலங்கள் சென்ற பிறகு இது ஒரு அதிகாரமுள்ள கட்டளையாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் உலகத்தில் உள்ள மனிதர்களை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வர செய்யப்படும் முன்னோடி நிகழ்ச்சிகளாகும்.
3) பதினெட்டு இலக்க எண் ( UID - unique identification number ) 666
இதில் UID - unique identification number என்ற 18 இலக்க எண் மிகவும் முக்கியமானது. அதன் முக்கியத்தைக் கீழே பார்ப்போம்
பதினெட்டு இலக்க எண் இந்த பூமியில் வாழும் எல்லா மக்களுக்கும் கொடுக்கப்படும். அந்த எண் இல்லாதவர்கள் இந்த பூமியில் எந்தப் பொருளையும் வாங்கவோ, விற்கவோ முடியாது. அதற்கு அடையாளமாக நமது நாட்டில் உள்ள ஆதார் எண்ணை எடுத்துக் கொள்ளலாம். அதே போல எல்லா நாடுகளும் ஒரு அடையாள எண்ணைத் தங்கள் மக்களுக்குக் கொடுத்துள்ளன.
இந்த எண்கள் எல்லாம் அட்டைகளில் பொரிக்கப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போதே இந்த எண் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. உதாரணமாக Pan card number, smart card number, Aadhaar card number, bank atm card number, bank account number.
இந்த மாதிரி அட்டைடுகள் ஒரே நம்பரில் இனைக்கப்பட்டு அந்தி கிறிஸ்துவின் காலத்தில் உலகத்தில் உள்ள மக்கள் யாவருக்கும் கொடுக்கப்படும். அந்த அட்டை இல்லாமல் ஒருவரால் வாங்கவோ விற்கவோ முடியாது.
நாள் செல்லச் செல்ல இந்த அடையாள நம்பர் எலக்டிரானிக்ஸ் சிப்பில் ஏற்றப்பட்டு ஒவ்வொருவரின் வலது கரத்திலோ, நெத்தியிலோ பொருத்தப்படும். ஒருவரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது. இது ஒரு முத்திரையாகக் கருதப்படும். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்தப் பூமியில் வாழ முடியாது. இந்த முறையைப் பல நாடுகள் தங்கள் மக்களுக்குப் பொருத்திப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.
Wikipedia, the free encyclopedia
A human microchip implant is any electronic device implanted subcutaneously (subdermally) usually via an injection. Examples include an identifying integrated circuit RFID device encased in silicate glass which is implanted in the body of a human being. This type of subdermal implant usually contains a unique ID number that can be linked to information contained in an external database, such as identity document, criminal record, medical history, medications, address book, and other potential uses.
இந்த 18 இலக்க எண்ணைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே பார்க்க முடியும். இந்த முத்திரையைப் பொருத்திக் கொண்டவர்கள் ( இயேசு கிறிஸ்துவுக்கு ) ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள்..இதைக் கீழே உள்ள வசனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
பரிசுத்த வேதாகமம்
மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. வெளி 13:15-18
அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். வெளி 14:9-10
guru