top of page

திருவள்ளுவர் கூறும் செந்தண்மை என்ன? (குறள்30)
 

செந்தண்மை ( குறள் 30 )

குறள் 30: kural 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

------------------------------------------------------------------------------------

உள்ளே

அந்தணர், அறவேர், செந்தண்மை, குறள்30, இரத்தத்தின் தண்மை, blood character, red character, பாவமன்னிப்பு, சாபப்பரிகாரம், ஆத்துமமீட்பு, ஐக்கியம், சமாதானம், சுத்திகரிப்பு, பிசாசின் மீது அதிகாரம், சாத்தான், சனியன், சிலுவை மரணம், பலி நிறைவு, நேர்த்திக்கடன், பரிகாரபூர்த்தி, சிலுவைஇரத்தம், பேசுகிறஇரத்தம், தெளிக்கப்பட்ட இரத்தம், செந்தட்டி அய்யனார், செந்தி, செந்தூர், செந்தில், செந்தீவண்ணன், செந்தழல்வண்ணன்,       

------------------------------------------------------------------------------------

அந்தணர் என்போர் அறவோர்   

அந்தணர் என்பவர் பலி முடித்தவர் அல்லது பலியானவர் அல்லது யாகம் முடித்தவர்

( யாகம் = Sacrifice )

 

றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்

அந்த அந்தணர் ஆகிய தெய்வம் எல்லா உயிருக்காகவும் பலியாகி அந்தப் பலியினால் உண்டான இரத்தத்தின் தண்மையினால் (character) மனித குலத்திற்கு அனேக நன்மைகளை ஏற்படுத்தி உயிர்த்து வான் சென்றவர்.

 

வோர் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே சொல்லப்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

செய்வோர் என்றால் ஒரு காரியத்தைச் செய்கிறவர், செய்து முடித்தவர் அல்லது ஒரு காரியத்தைச் செய்வதற்கு நியமிக்கப் பட்டவர் ஆவார். முறை செய்வோர் என்றால் சொல்லப்பட்டவைகளைச் செய்து நிறைவேற்றுபவர் ஆவார்.

 

அறம் என்றால் யாகம் (sacrifice) அல்லது பலி ஆகும். வோர் என்றால் முடித்தவர் ஆகும்.

 

வோர்    

 University of Madras Lexicon                           

·முறைசெய்வோர்

·muṟai-ceyvōr   n. id.+. Executive officers; கட்டளை நிறைவேற்றும்ஏவலாளர். வேந்தன் .

https://agarathi.com/word/%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d

 தெய்வத்தின் செந்தண்மை ( blood character God )

செந்தண்மை என்பது பலி இரத்தத்தினால் உண்டான குணம் ஆகும்.

 

1) தெய்வத்தின் பலி இரத்தத்தினால் நமக்குப்பாவ மன்னிப்பு / சாப பரிகாரம் உண்டாகிறது

2) அவருடைய இரத்தம் நம்முடைய ஆத்துமாவை மீட்கிறது

3)அவருடைய இரத்தம் நம்மைக் கடவுளோடு ஐக்கியப்படுத்துகிறது

4) அவரது இரத்தம் கடவுளுடன் சமாதானம் செய்கிறது

5) அவரது இரத்தம் சுத்திகரிக்கிறது

6) அவரது இரத்தம் பிசாசின் மீது அதிகாரத்தைக் கொடுக்கிறது

 

இந்த வார்த்தைகளின் விழக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

இந்த வார்த்தைகளின் படி தெய்வம் சிலுவையில் பலியாகி அதினால் உண்டான செந்தண்மையினால் எல்லா மனித உயிர்களுக்கும் பாவமன்னிப்பாகிய பரிகாரத்தை உண்டு பண்ணினார், மேலும் குடும்ப சாபத்தையும் நீக்கினார்.

 

சிலுவையில் ஒரு பலி நிறைவு

தெய்வம் சிலுவையில் இரத்தம் சிந்திய நிகழ்வு ஒரு பலி நிறைவு ஆகும்.

நாம் இன்றும் பரிகாரம் செய்வதற்கு ஒரு ஆடு, மாடு அல்லது ஒரு பறவையைத் தெய்வத்திற்கு நேர்த்திக் கடனாகப் பலி செலுத்துகிறோம்.

தெய்வமே இந்த பூமிக்கு வந்து சிலுவையில் பலியானதினால், பரிகாரம் பூர்த்தி ஆகிவிட்டது,. அந்த சிலுவை இரத்தத்தை (செந்தண்மை) நினைவு கூறும் போது அந்த சிலுவை இரத்தம் நமக்குப் பரிகாரம் ஆகிறது.  எனவே வேறு ஒரு பலி தேவையில்லை.

இந்த தெய்வத்தின் பரிகார பலியே செந்தண்மை ஆகும்.

 

பரிசுத்த வேதாகமம் தெய்வத்தின் இரத்தத்தைப் பற்றி கூறும் போது எல்லோருக்காக நன்மையானதைப் பேசுகிற இரத்தம் ( செந்தண்மை ) என குறிப்பிடுகிறது

 

பரிசுத்த வேதாகமம்.

புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.            எபிரேயர் 1224

 

செந் என்ற வார்த்தை செம் என்ற வார்த்தையில் இருந்து வந்ததாக சிலர் கூறுகின்றனர்.

செந் என்ற வார்த்தையும் செம் என்ற வார்த்தையும் ஒன்று என்றால், திருவள்ளுவர் இரு வார்த்தைகளையும்  குறள்களில்  வெவ்வேறாக உபயோகப் படுத்தி இருக்கமாட்டார்,

 

செந்தண்மை என்ற வார்த்தை 30வது குறளிலும், செம்பாகம் என்ற வார்த்தை 1092வது குறளிலும், செம்பொருள் என்ற வார்த்தை 91வது குறளிலும், மற்றும் 358வது குறளிலும் உபயோகப் படுத்தியுள்ளார், இதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குறள் 30 நீத்தார் பெருமை தலைப்பின் கீழ் வரும் ஒரு குறள். நீத்தார் பெருமை என்பது வாணத்தை (Heaven) தன் இருப்பிடமாகக் கொண்ட தெய்வம் மனித குலத்தின் மீட்புக்காக வாணத்தை  விட்டு இறங்கி வந்து சிலுவையில் இரத்தம் சிந்திப் பலியாவதைக் குறிக்கும் பகுதி ( Avathar ).

குறள் 30 ல் இரத்தம் சிந்திய நிகழ்வுக்கு செந்தண்மை பூண்டார் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்த குறளை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அந்தணர் என்பவர் ஒரு மனிதன் அல்ல அதாவது அந்தணர் என்ற வார்த்தை சிலுவையில் இரத்தம் சிந்தி செந்தண்மை பூண்ட நீத்தார் ஆகிய தெய்வத்தைக் குறிக்கிறது

 

திருவள்ளுவர் தனது 8வது குறளில் இறைவனை அந்தணன் என குறிப்பிடுகிறார். இந்த குறள் கடவுள் வாழ்த்து என்ற பகுதியின் கீழ் வருகிறது எனவே அந்தணன் என்ற வார்த்தை மனிதர்களைக் குறிப்பிடுவதாக எடுக்கக்கூடாது. அந்தணன் என்ற வார்த்தை அழகிய குணமாகிய அருள், கிருபை, இரக்கம் நிறைந்து செந்தண்மை பூண்ட தெய்வத்தையே குறிக்கும்.

 

குறள் 8 - kural 8

 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்,

 பிறவாழி நீந்தல் அரிது.

 

அறம் = பலியாகுதல், (sacrifice) நீதி, நேர்மை

ஆழி = கடல்

அந்தணன் = அழகிய குணமாகிய அருள்,கிருபை,இரக்கம் உடையவன்

தாள்  =  பாதம்,

பிற ஆழி  = அறம் அல்லாத கடல் (பாவக்கடல்)

நீதி நேர்மை ஆகிய அறத்தை, கடலைப் போல் கொண்டு வாழ்ந்து செந்தண்மை பூண்ட அந்தணனாகிய கடவுளின் பாதம் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் பிறவாழியாகியஅறம் அல்லாத கடலாகிய பாவ வாழ்க்கையை நீந்திக் கடக்க முடியாது.  

 

அறவோர் மற்றும் அறவாழி என்ற வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 

அறவோர் என்பதற்கு அறம் பூண்டவர்க்கு அதாவது பலியானவர், வேழ்வி வழியாக தெய்வாணையின் படி கடந்து சென்றவர், அல்லது இரத்தம் சிந்தி செந்தண்மை பூண்டவர் என எடுக்க வேண்டும்

 

அறவாழி என்பதற்கு வேழ்வி என்ற கடல் வழியாகச் சென்றவர் அல்லது இரத்தம் சிந்தி செந்தண்மை பூண்டவர் என அர்த்தம் எடுக்க வேண்டும்.

 

திருவள்ளுவர் தனது 31வது குறள் முதல் 40வது குறள் வரை அறன் வலியுறுத்தல் எனக் குறிப்பிடுகிறார். இந்த பகுதி மனித மீட்புக்காகச் செலுத்தப்பட்ட பலியைக் குறிக்கும் (வேழ்வி, sacrifice) பகுதியாகப் பார்க்க வேண்டும்.

 

குறள் 30:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

அந்தணர்                =   அழகிய குணமாகிய அருள், கிருபை, இரக்கம் உடையவன்

என்போர்                       = எனப்படுபவர்

 அறவோர்                        = அறன் செய்தவர் ( தெய்வத்தின் கட்டளைப்படி வேழ்வி வழியாகச்

                                                சென்று இரத்தத்தினால் ஆன செந்தண்மை உடையவர் )

மற் றெவ்வுயிர்க்கும் = எல்லா உயிருக்காகவும்
செந்தண்மை                 = தன்னை தான் பலியாக ஒப்புக்கொடுத்து அந்த

                                                இரதத்தினால் உண்டான செந்தண்மை 

பூண்டொழுக லான்  = ஏற்றுக்கொண்டு அதின் வழியாக சென்றவர்.

 

அந்தணராகிய நீத்தார் ஆகிய தெய்வம் இந்த பூமியில் வந்து எல்லா உயிருக்காகவும் தன்னை தான் பலியாக்கி (வேழ்வி, sacrifice) அந்த பலியினால் உண்டான செந்தண்மை ஏற்றுக்கொண்டு அதின் வழியாக சென்றவர் ஆகும்.

 

செந் என்ற வார்த்தை அனேக இடங்களில் பயன் படுத்தப்படுகிறது

 

செந்தட்டி அய்யனார்  (செந் + தட்டி )

செந்தட்டி என்றால்  தெய்வம் இரத்தம் சிந்தித்திறக்கப்பட்ட கதவு என அர்த்தம் எடுக்க வேண்டும்

 

செந்தி, செந்தீயன், செந்தில்

அதாவது போர் வீரர்கள் போரில் ஏற்படும் இரத்த காயங்களைத் தாங்கிக் கொள்வதற்கான சித்த அரசன் முருகன் உருவாக்கிய போர்கலை உத்தி. தலையில் செந்தீ (சிவந்த தீ) சுமப்பதால்தான் செந்தீயன் என்ற பெயர். இதுவே பின் *செந்தில்* என்றானது.

 

செந்தூர்

இரத்தம் சிந்தப்பட்ட ஊர் ஆகும்

 

செந்தீ வண்ணன் அல்லது செந்தழல் வண்ணன்    = தெய்வம் இரத்தம் போன்ற தீயின்

                                                                                                            வண்ணம் உடையவர்

எல்லாவற்றையும் ஆராய்ந்தால் செந் என்ற வார்த்தை இரத்தத்தையே குறிக்கிறது.

 ---------------------------------------------------------

நீத்தார் பெருமை என்பது வானம் நீத்து அதாவது வானம் விட்டு இறங்கி வந்தவருடைய பெருமை கூறும் பகுதி (AVATAR) ஆகும். அறன் வலியுறுத்தல் என்பது உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் பகுதி ஆகும் அதன் விளக்கங்களைக் கீழே காணலாம்.

 

நீத்தார் பெருமை

நீத்தார் பெருமை என்பது வானம் நீத்து அதாவது வானம் விட்டு இறங்கி வந்தவருடைய பெருமை கூறும் பகுதி (AVATAR)

பொதுவாகப்பார்க்கும் போது` ஒழுக்கம்` மற்றும் `பற்றுகள்` ஆகியவற்றை விட்டு வாழ்பவரைப்பற்றிப் பேசுவதாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால் வானம் விட்டு இறங்கி வந்தவருடைய பெருமை கூறும் பகுதியாக அறிந்து கொள்ள முடியும். திருவுந்தியார் தமது 1ஆவது பாடலில் கடவுள் சகளமாய் வந்தார் எனக் குறிப்பிடுகிறார் அதாவது எல்லோருக்கும் எல்லாமுமாய் இறங்கி வந்ததைக் குறிப்பிடுகிறார்

திருவுந்தியார் 1

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற

அறன்வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல் என்பது உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் பகுதி அதாவது நமக்காக வானத்தை விட்டு இறங்கி வந்து மனிதனாகப்பிறந்து தன்னையத்தானாகப்பலியாக ஒப்புக்கொடுத்த கடவுளைப்பற்றிக் கூறும் பகுதி எனப்படும்.

அறன் என்றால் வேள்வி முதல்வன் அல்லது உயிர்ப்பலிக்குரியவன் ( one who sacrifice ) என அர்த்தம், அல்லது புனிதமான வேலையைச் செய்து முடித்தல் எனப்பொருள்படும் (Performing a sacred duty)

திருவுந்தியார் தனது 3ஆவது பாடலில் கண்டத்தைக்கொண்டு கர்மம் முடித்தவர் எனக் குறிப்பிடுகிறார் அதாவது தன் சாவைக்கொண்டு தனக்குக் கொடுக்கப்பட்ட புனிதமான வேலையைச் செய்து முடித்தவர், புனிதமான வேலை என்பது ஆத்தும மீட்பாகும்

 

திருவுந்தியார் --- 3

கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்
(1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற

பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.
(1). பிண்டத்து

 

திருவுந்தியார் தனது 1ஆவது பாடலில் தானாகத்தந்தவர் என குறிப்பிடுகிறார் அதாவது தனது உயிரைத் தானாக முன் வந்து நமது ஆத்தும மீட்பிற்காக சிலுவையில் அல்லது காவுதடியில் பலியாகக்கொடுத்தவர் எனக் குறிப்பிடுகிறார்

 

திருவுந்தியார் 1

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற.

 

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை

 

1) அவருடைய இரத்தத்தினால் நமக்குப் பாவ மன்னிப்பு உண்டாகிறது / சாப பரிகாரம் உண்டாகிறது

பரிசுத்த வேதாகமம் இரத்தத்தைப் பற்றிக் கூறும் போது இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை

எனக்கூறுகிறது.

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.   மத்தேயு 26:28

......................அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1:7

[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.  கொ 1:14

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். --- நீதி 3:33

 

2) அவருடைய இரத்தம் நம்மை மீட்கிறது.

நம்முடைய ஆத்துமா மீட்கப்பட ஒரு விலை கொடுக்கப்பட வேண்டும். அந்த விலை ஒருவராலும் கொடுக்கப்பட முடியாது. ஆனால் மனித உருவில் வந்து சிலுவையில் பலியாகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய ஆத்துமாவை மீட்டுக்கொண்டது.

 1 பேதுரு 1:18-19

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

 

3)அவருடைய இரத்தம் நம்மைக் கடவுளோடு ஐக்கியப்படுத்துகிறது..

எபேசியர் 2:13

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

கடவுளை அறியாமல் அல்லது நாம் செய்யும் பாவங்களினால் மனிதன் கடவுளிடமிருந்து வெகுதூரம் இருக்கிறான்.அவருடைய இரத்தம் கடவுளோடு சமாதானம் செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை அது போல இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இல்லாமல் ஒப்புரவாகுதல் இல்லை

 

4) அவரது இரத்தம் கடவுளுடன் சமாதானம் செய்கிறது

மனிதன், இயற்கையாகவே பாவத்துடன் போரிடுகிறான்; பாவத்துடன் போரிடும் போது  நாம் அவரது சமாதான அடிப்படையில் மட்டுமே கடவுளிடம் வர முடியும் அதற்கு இரத்த பிராயச்சித்தம் அவசியம், அதனால் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்த பிராயச்சித்தம் செய்து சமாதானத்தை தம்முடைய இரத்தத்தின் மூலமாகக் கொடுத்தார் கொலோசெயர் 1:20-ல் பைபிள் சொல்கிறது,

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

 

5) அவரது இரத்தம் சுத்திகரிக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவத்தினால் உண்டாகும் தண்டனையை நீக்குவது மட்டுமல்லாமல், நம்மைக் கறை திறை அற்றவர்களாக்கி பரிசுத்தமாக்குகிறது  ; "அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது (1 யோவான் 1:7).

 

. 6) அவரது இரத்தம் பிசாசின் மீது அதிகாரத்தைக் கொடுக்கிறது

சாத்தான் பயப்படுகிற இரத்தம் அது. வெளிப்படுத்துதல் 12:11 சொல்லுகிறது, "ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலே அவர்கள் அவனை [சாத்தானை] ஜெயித்தார்கள்." நீங்கள் இயேசுவின் இரத்தத்திற்குள் மறைந்து கொள்ளுவதை அல்லது இரத்தத்தைப் பற்றிக் கற்றுக்கொள்வதைப் பிசாசு (சாத்தான் / சனியன் ) விரும்புவதில்லை.

guru

bottom of page