top of page

கார்த்தீஸ்வரன்

( God of fire and Cloud )

 

கார்த்தீஸ்வரன் என்பதறகு நாம் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். கார்த்தீஸ்வரன் என்ற வார்த்தையைக்கீழ் கண்டவாறு பிரித்துப் பார்க்கவேண்டும்.

கார்த்தீஸ்வரன் = கார் +  தீ + ஈஸ்வரன்

கார் = மேகம் ,   தீ   = அக்கினி

 

கார்தீஸ்வரன் என்பதின் அர்த்தம்

மேகஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் காட்சி தரக்கூடிய இறைவன் (ஸ்தம்பம் = தூண் )

நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நம்முடன் கூடவே மேகமாகவும் அக்கினியாகவும் இருந்து கடைசி வரை நம்மை வழி நடத்தக் கூடிய தெய்வம் என அர்த்தம்

 ( கார் என்பது இந்த இடத்தில் மேகத்தை குறிக்கிறது, கருமை மற்றும் இருளை குறிக்கவில்லை)

மேகம் ( CLOUD )

மேகம் என்ற வார்த்தை தெய்வத்தை குறிக்கும் சொல்லாகவே உள்ளது முகில் வண்ணன், முகிலன்-மேக வண்ணன், திருமால், மேகஸ்தம்பம், pillar of gloud,  எனத் தெய்வத்தை அழைக்கிறோம். எனவே நாம் கார் என்பதற்கு இருள் என எடுக்கக்கூடாது.

( கார் kār   s. & adj. blackness, black, கருமை, கரிய; (s.) darkness, இருள்; 2. cloud, மேகம்; 3. rainy season, கார்காலம்;  }

தீ (அக்கினி, FIRE )

தெய்வத்தை நாம் அக்கினி மயமான தெய்வம், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவர் என அழைக்கிறோம் எனவே தெய்வத்திற்க்கு தழல் வண்ணன், செந்தழலோன், அக்கினி ஸ்தம்பம், pillar of fire, பட்சிக்கிற அக்கினி எனப்பெயர்கள் உண்டு

வேதாகமம் அக்கினி மயமான தெய்வத்தைப்பற்றிக் கூறும் வார்த்தைகள்

உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.

For the LORD thy God is a consuming fire, even a jealous God.

உபாகமம் 4:24                                                                  

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.   யாத் 19:18 

மேகஸ்தம்பம் மற்றும் அக்கினிஸ்தம்பத்தைப் பற்றி அதிகமாகப்     பரிசுத்த வேதாகமத்தில் தான் பார்க்கமுடியும்.

pillars of fire and cloud என்ற Wikipedia வின் தொகுப்பிலும் மேகஸ்தம்பம் மற்றும் அக்கினி   ஸ்தம்பத்தைப்பற்றி வேதாகமத்தின் சுருக்கமான தொகுப்பைப்பார்க்க முடியும்                                                                       https://en.wikipedia.org/wiki/Pillars_of_fire_and_cloud

 

மோசே ஜனங்களை வணாந்திர வழியாக நடத்தி சென்ற போது இறைவன் அவர்களோடு மேகஸ்தம்பமாக்வும், அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும் கூடவே சென்றார். அந்த நிகழ்வுகளைப் பரிசுத்த வேதாகமத்தின் யாத்திராகமம்  (book of Exodus ) என்ற அதிகாரம் முழுமையாக பார்க்க முடியும். அதின் சில வசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது                               

யாத் : 13 : 21,22                                                      

அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.                

பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.                                                           

நெகேமியா 9:19

 நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.                                       

 

யாத் 33: 9,10,

மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடார வாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார். ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடார வாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடார வாசலில் பணிந்து கொண்டார்கள்.

மேகஸ்தம்பம், அக்கினி ஸ்தம்பம் பற்றிய  ஒரு அருமையான பாடல்            கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதைக் கொடுக்கப்பட்டுள்ள youtube linkல் கேட்டு மகிழவும்

 

மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என்வாழ்விலே

பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்துகொண்டது
பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் செல்லுது
ஆகா என் தேவன் தந்தாரே
நல்ல மங்காத அபிஷேகமே

https://www.youtube.com/watch?v=AlZ-dTz9mY8

மேகஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னைச் சூழ காத்து நிற்குமே-2
சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திட
தேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும்

https://www.youtube.com/watch?app=desktop&v=yCuWQbyuyrs

https://www.youtube.com/watch?v=rd0YRr_DDQc

கார்த்திகை மாதம்,

கார் + தீ + கை எனப் பிரித்து பார்க்க வேண்டும்

மேகம்,அக்கினி மயமான தெய்வத்தின் கரம் உள்ள மாதம் என அர்த்தம்

கார்த்திகை என்பதற்கு கார் + திகை என அர்த்தம் கொடுக்கப் பட்டுள்ளது. கார் என்றால் இருள், திகை என்றால் முடிவு அதாவது இருளின் முடிவு என அர்த்தம் கொடுக்கப் பட்டுள்ளது.

அது சரியாக இருக்க முடியாது, ஏன் என்றால் திகை என்பதின் அர்த்தம் முடிவு அல்ல எனவே கார் + தீ+ கை எனப் பிரித்துப் பார்பது தான் சரி.

கை  ----கரம்,   யானைத்துதிக்கை. 

   

கார்த்திகா                                                                   

கார் + தீ + கா எனப் பிரித்துப் பார்க்க வேண்டும்

மேகம்,அக்கினி மயமான தெய்வத்தின் பாதுகாப்பு உள்ள பெண் என அர்த்தம் கொள்ள வேண்டும்.

கா   kā   n. கா-. 1. Preservation, protection; பாதுகாப்பு (திவா.)   

   

கார்த்திகேயன்,

கார் + தீ + கேயன் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும்

கேயன்  = மகன் (son ), அல்லது அரசன்

மேகம்,அக்கினி மயமான தெய்வத்தின் மகன் அல்லது தெய்வ்மாகிய அரசன்என அர்த்தம்

Guru

bottom of page