top of page

ஒற்றாடல்  =  தூதர்களின் ஆளுமை

ஓற்றாடல் என்ற அதிகாரம் 59 ஆம் அதிகாரமாக வருகிறது. ஒற்று என்பது தூது அல்லது வேவு என அர்த்தம். ஒற்றன் என்றால் தூதன் அல்லது வேவு காரன் ஆகும். ஒற்றாடல் என்பது தூதர்களின் அல்லது ஒற்றர்களின் ஆளுமையாகும், இந்த அதிகாரம் முழுவதும் தெய்வத்தின் தூதர்களைப் பற்றியது ஆகும் அரசர்களின் ஒற்றர்களைப் பற்றியது அல்ல என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். திருக்குறள் ஒரு தெய்வீகப்படைப்பு, அது கடவுளைப்பற்றித்தான் பேசுகிறது. திருக்குறளில் வரும் மன்னவன், வேந்தன், பதி, அரசன் என்ற வார்த்தைகள் தெய்வத்தையே குறிக்கிறது. எனவே இந்த அதிகாரத்தில் வரும் ஒற்றாடல் என்பது தேவ தூதர்களின் ஆளுமையாகும்.  

தேவ தூதர்களின் ஆளுமை என்பது தமிழ் வழி கிறிஸ்தவத்தில் பூத கணங்களின் ஆளுமையாகும். தேவ தூதர்களைப்பற்றிய உண்மைகளை பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

பரிசுத்த வேதாகமம்

தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.  வெளி 7:11-12

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:10

இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? எபிரேயர் 1:14

பூத கணங்கள் என்பவை இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுகின்ற பதினெண் கணங்களில் ஒரு கணம் ஆவார். இந்த பூத கணங்கள் தெய்வத்தின் சேவகர்களாகக் கயிலை மலையில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

குறள் 581:   kural 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

 

ஒற்றும்      = தேவ தூதர்களின் ஆளுமையும்

உரைசான்ற நூலும் = ஆகமப்பிரமாணங்கள் நிரம்பிய பரிசுத்த வேதம்

இவையிரண்டும்  = இவை இரண்டும்
தெற்று என்க  =  தெளிவு அல்லது சான்று என்று ஆகும்.

மன்னவன் கண் = தெய்வத்தின் ஞானத்திற்கு

 

விளக்கம்

 

தேவ தூதர்களின் ஆளுமையும், ஆகமப்பிரமாணங்கள் நிரம்பிய பரிசுத்த வேதாகமம்., இவை இரண்டு காரியங்களும் மனிதனின் பயனுக்காக உருவாக்கப்பட்டுக் கொடுக்கப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட இவை இரண்டும் தெய்வத்தின் ஞானத்திற்கு சான்று கூறுபவன ஆகும்.

 

பரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய  சாட்சி  சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.  சங்கீதம் 19:7

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:10

பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் ( இயேசுவிடம் இருந்து ) மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 1:51

உரை : உரைக்கை சொல் பொருள் விளக்கம் ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின் ஒலி புகழுரை விரிவுரை

சான்ற- (1) :  நிறம்பிய பாடல் வரி : அகம்.125:14.

தெற்று- (2)  :  தெளிவு பாடல் வரி : அகம்.48:4 அகம்.328:8.

தெளிவு :  விளக்கம் துலக்கம் உடற்செழிப்பு பதநீர் நினைவு மன அமைவு அறிவு நற்காட்சி உளக்குறிப்பு நீக்கம் சான்று ஆராய்வு நம்பிக்கை சாறு கஞ்சித்தெளிவு இலாபம் பொருள் புலப்பட அமையும் செய்யுளின் குணம்

கண் : விழி கண்ணோட்டம் பீலிக்கண் கணு மரக்கணு தொளை மூங்கில் முரசடிக்குமிடம் மூட்டுவாய் பெருமை இடம் ஏழனுருபு அறிவு ஞானம் பற்றுக்கோடு உடம்பு அசை உடலூக்கம்

குறள் 582:  kural 582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

 

எல்லார்க்கும்     = உலக மக்கள் அனைவருக்கும்

எல்லாம் நிகழ்பவை =  நிகழ்கின்றவை அனைத்தையும் தேவ தூதர்கள் மூலமாக

எஞ்ஞான்றும்  = எப்பொழுதும்
வல் அறிதல்    = விரைவாக அறிந்து கொள்வது

வேந்தன் தொழில் =தெய்வத்தின் வேலையாகும்.

 

விளக்கம்

நல்லோர், தீயோர், நீதிமான்கள், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வன எல்லாவற்றையும், எப்போதும் தேவ தூதர்கள் மூலமாக விரைந்து அறிந்து தெரிந்து கொண்டு அவர்களுடைய வேண்டுதல்கள், நினைவுகள், வருத்தங்கள் எல்லாவற்றையும் அறிந்து உலக மக்கள் அனைவரது தேவைகளையும், வேண்டுதல்களையும் செய்து கொடுப்பது தெய்வத்தின் வேலையாகும்.

 

( இந்த குறளில் எல்லார்க்கும் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. எல்லார்க்கும் என்பது இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் என அர்த்தம் ஆகும். உலக மக்கள் அனைவர் மத்தியில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஒற்றனால் அறிந்து கொள்ள முடியாது. தெய்வத்தின் கணங்களாகிய தேவ தூதர்கள் இந்த பூமியில் எல்லாப் பகுதியிலும் ஆவியாக ( உருவம் அற்றவர்களாக ) வியாபித்து இருக்கிறபடியால் அவர்கள் எல்லாருடைய வேண்டுதல்கள், நினைவுகள், வருத்தங்கள் எல்லாவற்றையும் தெய்வத்திடம் கொண்டு சேர்ப்பார்கள் அதையே இந்த குறள் தெளிவு படுத்துகிறது. ) .

 

பரிசுத்த வேதாகமம்

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். . மத்தேயு 18:10

தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார். சங்கீதம் 104:4

 

வல் : வலிமை திறமை மேடு சூதாடுகருவி முலைக்கச்சு விரைவு

குறள் 583:   kural 583

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்

 

ஒற்றினான் = உள்ளங்களை ஆராய்ந்து அறிபவர்களாகிய தேவ தூதர்கள்  

ஒற்றிப்    =ஆராய்ந்து அறிந்தும்

பொருள் தெரியா  = கண்டுபிடிக்க முடியாத உள்ளத்தில் மறைந்திருக்கும் காரியங்களாகிய வருத்தம், மன பாரங்கள், துன்பங்கள் ஆகியவற்றை

மன்னவன் கொற்றங் = தெய்வத்தின் வலிமை, சக்தி அல்லது ஆவியினால்
கொளக்    = நிரம்பி வழிபடும் போது அந்த மனிதனின் உள்ளத்தில்

கிடந்தது இல் = இருந்தவைகளாகிய துன்பங்கள், வருத்தம், மன பாரங்கள் இல்லாதவைகள் ஆகிவிடும்.

 

விளக்கம்

மனிதர்களின் உள்ளங்களை ஆராய்ந்து அறிபவர்களாகிய தேவ தூதர்கள் ஆராய்ந்து அறிந்தும் கண்டுபிடிக்க முடியாதபடி ஒருவன் உள்ளத்தில் மறைந்திருக்கும் காரியங்களாகிய வருத்தம், மனபாரங்கள், துன்பங்கள் ஆகியவை, அந்த மனிதன்  தெய்வத்தின் வலிமை, சக்தி அல்லது ஆவியினால்  நிரம்பி தெய்வத்தை வழிபடும் போது அந்த மனிதனின் உள்ளத்தில் இருந்தவைகளாகிய துன்பங்கள், வருத்தம், மனபாரங்கள் ஆகியவை இல்லாதவைகள் ஆகிவிடும். அதனால் அவன் மனபாரங்களில் இருந்து விடுதலை பெற்று வாழ முடியும்.

பரிசுத்த வேதாகமம்

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.  ரோமர் 8:26-27

 

தெரியா : கண்டுபிடிக்க முடியாத 

கொள = கொள்ள அல்லது மிக அல்லது நிரம்ப

கொற்றம் : வெற்றி வீரம் வலிமை வன்மை அரசியல்

குறள் 584:  kural 584

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று

 

வினைசெய்வார் = நாம் செய்த செயல்களினால்  உண்டான கர்ம பாவங்களையும்

தஞ்சுற்றம் வேண்டாதார்  = ஒருவனுடைய மூதாதையர் செய்த ஜென்ம பாவங்களையும், அவன் விட்டு பரிசுத்தமாக விரும்பி தெய்வத்தை நோக்கி வேண்டுதல் செய்யும் போது

என்றாங் கனைவரையும் = அப்படிப்பட்ட அனைத்து மக்களின் உள்ளங்களை

ஆராய்வ தொற்று = ஆராய்ந்து உண்மையிலே அவர்கள் தங்கள் தங்கள் பாவங்களை விட்டு விட்டு பரிசுத்தமாக வாழ நினைக்கிறார்களா என்பதைப் பரலோகம் சென்று தேவ சன்னிதியில் தெரிவிக்க வேண்டியது தேவதூதர்களின் வேலையாகும்.

 

விளக்கம்

இந்த உலகத்தில் நாம் செய்த செயல்களினால் உண்டான கர்ம பாவங்களையும்  ஒருவனுடைய மூதாதையர் செய்த ஜென்ம பாவங்களையும், அவன் விட்டு பரிசுத்தமாக விரும்பி தெய்வத்தை நோக்கி வேண்டுதல் செய்யும் போது அப்படிப்பட்ட அனைத்து மக்களின் உள்ளங்களை ஆராய்ந்து உண்மையிலே அவர்கள் தங்கள் தங்கள் பாவங்களை விட்டு விட்டு பரிசுத்தமாக வாழ நினைக்கிறார்களா என்பதைப் பரலோகம் சென்று தேவ சன்னிதியில் தெரிவிக்க வேண்டியது தேவதூதர்களின் வேலையாகும்.
 

குறள் 585:  kural 585

கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

 

கடா      = கேள்விகளோடும், வினாக்களோடும்,

அஉருவொடு = உருவம் இல்லாத தன்மையோடும்

கண்ணஞ்சாது = பகல், இரவு என்று இல்லாமல் அதாவது உறக்கம் என்பது கிடையாத தன்மையோடு படைக்கப்பட்டு

யாண்டும்  =  எவ்விடத்துக்கும் சென்று
உகாஅமை =  சிதறாமல் அல்லது உள்ளதை உள்ளபடி கொண்டு வந்து தெய்வத்திடம் சேர்ப்பதுவே

வல்லதே ஒற்று  = வல்லமை நிறைந்த தேவ தூதர்களின் பணி ஆகும்

 

விளக்கம்

( இந்த குறளில் அஉருவொடு என்ற வார்த்தை உப்யோக படுத்தப்பட்டுள்ளது உருவொடு என்றால் உருவத்தொடு என்று அர்த்தம் ஆகும். அஉருவொடு என்பது உருவம் அற்ற தன்மையைக் காண்பிக்கிறது. )

 கேள்விகளோடும், வினாக்களோடும், உருவம் இல்லாத தன்மையோடும் பகல், இரவு என்று இல்லாமல் அதாவது உறக்கம் என்பது கிடையாத தன்மையோடு படைக்கப்பட்டு எவ்விடத்துக்கும் சென்று சிதறாமல் அல்லது உள்ளதை உள்ளபடி கொண்டு வந்து தெய்வத்திடம் சேர்ப்பதுவே வல்லமை நிறைந்த தேவ தூதர்களின் பணி ஆகும்

 

தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்.  சங்கீதம் 104:4

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை ( இரவும் பகலும் ) எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:10

 

கடா : ஆட்டின் ஆண் ஆட்டின் பொது எருமைக்கடா சருக்கரை காய்ச்சும் பாண்டம் வினா கேள்வி

உகாமை. உகாமை ukāmai, பெ. (n.) 1. சிதறாமை; not spilled. 2. வெளியிடாமை; not let out, not spoken. [உகு + ஆ + மை.] Listiry.
 

குறள் 586:  kural 586

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று

 

துறந்தார் படிவத்தர் ஆகி = எல்லாவற்றையும் துறந்த சன்னியாசிகள் போல உருவம் மாறி

இறந்து ஆராய்ந்து = மிகவும் ஆராய்ந்து
என் செயினுஞ்  = என்ன செய்தாலும்

சோர்வு இலது ஒற்று = தளர்ச்சி இல்லாது பணி செய்தல் தேவதூதர்களின் வேலையாகும்.

 

விளக்கம்

எல்லாவற்றையும் துறந்த சன்னியாசிகள் போல உருவம் மாறி மிகவும் ஆராய்ந்து என்ன செய்தாலும் தளர்ச்சி இல்லாது பணி செய்தல் தேவதூதர்களின் வேலையாகும்.

.

பரிசுத்த வேதாகமம்

சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. அந்நியரை (வீடு தேடி வந்து உதவி கேட்பவர்களை) உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. எபிரெயர் 13:1-2
 

இறந்து : மிகவும் போய் உட்புகுந்து
 

குறள் 587:  kural 587

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று

 

மறைந்தவை = மனிதனின் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் சிந்தனைகளை

கேட்க வற்று ஆகி = அறிந்துகொள்ள அல்லது கேட்க வல்லவர்கள் ஆகி

அறிந்தவை = அப்படி அறிந்தவற்றை
ஐயப்பாடு இல்லதே  = சந்தேகம் இல்லாமல் அல்லது மனக்குழப்பம் இல்லாமல்

ஒற்று  = இறைவன் சன்னிதியில் கொண்டு சேர்ப்பதே தேவதூதர்கள் பணியாகும்.

 

விளக்கம்

 

மனிதனின் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் நல்ல அல்லது கெட்ட சிந்தனைகளை அறிந்துகொள்ள அல்லது கேட்க வல்லவர்கள் ஆகி அப்படி அறிந்தவற்றைச் சந்தேகம் இல்லாமல் அல்லது மனக்குழப்பம் இல்லாமல் இறைவன் சன்னிதியில் கொண்டு சேர்ப்பதே தேவதூதர்கள் பணியாகும்.

 

பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.  அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.  லூக்கா 6:7-10

வற்று : வல்லது

குறள் 588:  kural 588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

 

ஒற்றொற்றித்     =  ஒருவன் ஆராய்ந்து அறிந்து

தந்த பொருளையும் = கொண்டுவந்த செய்தியாகிய பொருளையும்

மற்றுமோர்ஒற்றினால் = மற்று ஒரு ஆராய்ந்து அறிபவர் மூலம்

ஒற்றிக் கொளல்  = ஆராய்ந்து அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்

 

விளக்கம்

( இந்த குறளில் ஒற்று என்பது சாட்சியை குறிக்கிறது, அதாவது ஒரு விசயத்தை நேரிற் கண்டவர் என்று அர்த்தம் ஆகும். நாம் எந்த விசயத்திலும் நியாயம் விசாரிக்கும் போது ஒருவர் சொல்லும் சாட்சியை வைத்து முடிவெடுக்கக் கூடாது, இரண்டு சாட்சிகள் அவசியம். இந்த பழக்கம் இன்றும் நமது நீதித்துறையில் உள்ளது. )

 

குறள் விளக்கம்

ஒருவன் ( ஒரு சாட்சி ) ஆராய்ந்து அறிந்து கொண்டுவந்த செய்தியாகிய பொருளையும் மற்றுமொரு ( சாட்சி ) ஆராய்ந்து அறிபவர் மூலமாக ஆராய்ந்து அறிந்து ஏற்றுக்கொண்டு முடிவெடுக்க வேண்டும்

 

பரிசுத்த வேதாகமம்

சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலை செய்யப்படலாகாது. உபாகமம் 17:6

ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக் கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும். உபாகமம் 19:15

 

ஒற்றி = ஆராய்ந்து அறிந்தவர்கள் அல்லது நேரிற் கண்டவர்கள்

குறள் 589:  kural 589

ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

 

ஒற்று ஒற்று      =  ஆய்ந்து அறிந்த ஒரு சாட்சியின் கூற்றையும், மற்றொரு ஆய்ந்து அரிந்த சாட்சியின் கூற்றையும், ஏற்க முடியாத தன்மை வரும் ஆனால் அந்த

உணராமை ஆள்க = அறியாமையை போக்க

உடன் மூவர்      = ஒருமித்து மூன்றாவது சாட்சியின்
சொல் தொக்க =   வார்த்தை சேர்த்து முடிவு

தேறப்படும்      =  அறியப்படும்

 

விளக்கம்

( இந்த குறளில் ஒற்று என்பது சாட்சியைக் குறிக்கிறது, அதாவது ஒரு விசயத்தை நேரிற் கண்டவர் என்று அர்த்தம் ஆகும். நாம் எந்த விசயத்திலும் நியாயம் விசாரிக்கும் போது ஒருவர் சொல்லும் சாட்சியை வைத்து முடிவெடுக்கக் கூடாது, இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவசியம். இந்த பழக்கம் இன்றும் நமது நீதித்துறையில் உள்ளது. )

ஆய்ந்து அறிந்த ஒரு சாட்சியின் கூற்றையும், மற்றொரு ஆய்ந்து அறிந்த சாட்சியின் கூற்றையும், ஏற்க முடியாத தன்மை வரும் ஆனால் அந்த அறியாமையை போக்க ஒருமித்து மூன்றாவது சாட்சியின் வார்த்தை சேர்த்து முடிவு அறியப்படும்

 

பரிசுத்த வேதாகமம்

ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக் கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும். உபாகமம் 19:15

 

உணராமை : அறியாமல் குறள் எண் : 589 திருக்குறள் அகராதி (1981)

ஆள்க : விடுக போக்குக குறள் எண் :589திருக்குறள் அகராதி (1981)

உடன்  :  ஒருங்கே ஒருமிக்க  ஒருகாலத்தே (மண.)  குறள் எண் : 309, 589 திருக்குறள் அகராதி (1981)

தொக்க : ஒத்தன குறள் எண் : 589 திருக்குறள் அகராதி (1981)

தொக்க tokk   rel. parti. Joined, united, சேர்ந்த; [ex தொகு, v. n.] (p.) தொக்கமனிதர்,  s. Assembled men.
 

குறள் 590: kural 590

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தான் ஆகும் மறை

 

சிறப்பு அறிய  = முத்தி நிலையை அறிந்து நடக்கும் படி செய்ய

ஒற்றின் கண் = தூதர்கள் அறிவு

செய்ய அற்க = சரியான நிலையுள்ளதாக இருக்க வேண்டும்

செய்யிற் ( செய் + இல் )     =  அப்படிச் சரியாக இல்லாவிட்டால்
புறப்பு அடுத்தான் = முத்தி நிலைக்குச் செல்ல முடியாதபடி அடுத்த காரியமாக அதாவது புறப்பொருளாக  

ஆகும் மறை  = ஆகிவிடும் வேத ஆகமங்கள்  (அதாவது ஒரு மனிதனுக்கு அகப்பொருளாக இருக்க வேண்டிய வேதாகமம் புறப்பொருளாக மாறிவிடும் )

 

விளக்கம்

ஒரு மனிதனை முத்தி நிலையை அறிந்து நடக்கும் படி செய்யத் தூதர்கள் அறிவு சரியான நிலையுள்ளதாக இருக்க வேண்டும் அதாவது தேவ தூதர்கள் மனிதர்களுக்கு அவர்கள் செய்யும் சரியில்லாத காரியங்களை நினைவு படுத்தி அதை விட்டு வெளியே வர உதவி செய்ய வேண்டும்  அப்படிச் சரியாக இல்லாவிட்டால் அந்த மனிதன் முத்தி நிலைக்குச் செல்ல முடியாதபடி வேத ஆகமங்கள் அடுத்த காரியமாக அதாவது புறப்பொருளாக அதாவது தேவை அற்றதாகிவிடும் (அதாவது ஒரு மனிதனுக்கு அகப்பொருளாக இருக்க வேண்டிய வேதாகமம் புறப்பொருளாக மாறிவிடும் )

சிறப்பு : முத்தி வீடு தேவர்பதம் குறள் எண் : 31 திருக்குறள் அகராதி
(1981)

அறிய :  அறிந்து நடக்கும்படி செய்ய குறள் எண் : 795 திருக்குறள்  அகராதி (1981)

கண் : விழி கண்ணோட்டம் பீலிக்கண் கணு மரக்கணு தொளை மூங்கில் முரசடிக்குமிடம்  மூட்டுவாய்  பெருமை இடம் ஏழனுருபு  அறிவு பற்றுக்கோடு உடம்பு அசை உடலூக்கம்

அற்கு aṟku   III. v. i. endure, be ermanent சாசுவதமாயிரு, நிலைபெறு. அற்கல், v. n.  

சாசுவதம் : அசையாநிலை வீடுபேறு நிலையுள்ளது

செய்ய ceyya   adj. (from the root செ) red, சிவந்த; 2. fair, beautiful, அழகுள்ள; 3. perfect, correct, செப்பமான.

புறம் என்பதன் பொருள், புறத்தே நிகழும் ஒழுக்கம் என்பதாம். புறம் - வெளி. இதுவும் இடவாகு பெயரே

bottom of page