கருப்பசாமி யார் ?
கருப்பசாமி என்ற வார்த்தையைக் கேட்ட உடனே ஞாபகம் வருவது கருப்பான உருவத்த்துடன் தோற்றம் அளிக்கும் தெய்வம் ஆகும்
1) உண்மையிலே தெய்வம் கருப்பானவரா ?,
2) கருப்பசாமி கோயில் அனைத்தும் ஊருக்கு வெளியில் அமைந்திருக்க காரணம் என்ன?
3) கருப்பசாமி கோயில் ஆராதனைக்குத் தட்டில் மதுபானம் வைப்பது ஏன் ?
4) வெள்ளைச்சாமி கருப்பசாமி ஆனரா ?
என்று ஆராய்ந்து பார்ப்போம்
1) உண்மையிலே தெய்வம் கருப்பானவரா ?,
தெய்வம் இந்த பூமியில் வந்து பிறக்கும் போது அழகானவராகத்தான் இருந்தார், அதனால் தான் அவரை கீழ்க் கண்ட பெயர்களில் அழைக்கிறோம்.
1) அழகர் 2) முருகன் (முருகு+அவன்) 3) வெள்ளைச்சாமி 4) வெள்ளை கருப்பசாமி 5) அழகு முத்து கருப்பசாமி 6) அலங்கார கருப்பசாமி 7) பால் வண்ண அய்யனார் (பாலைப்போல் வெண்மையான நிறம் உடையவர்) 8 ) சுந்தரேஸ்வரர் 9) வெண்மையும் சிவப்பும் ஆனவர் 10) பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் 11) Rose of Sharon 12) Lily of the valley 13) அதிரூபன் 14) அழகப்பன் 15) அன்பழகன் 16) அழகேந்திரன் 17) சுந்தரமூர்த்தி 18) சோமசுந்தரன் 19) அழகிய சொக்கநாதன் (செர்க்கநாதன்) 20) அழகானவர் 21 ) சந்திரகாந்தன்
இத்தனை அழகுக்குச் சம்பந்தமான பெயர்களை உடைய தெய்வம் எப்படி கருத்து போய் கருப்புசாமி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த வார்த்தையைப் படித்தவுடன் உடனே மனதில் தோன்றுவது என்னவென்றால் கருப்பசாமி வேறு - அழகாக இருக்கும் தெய்வம் வேறு என்பதே ஆகும். அது சரியா என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
இந்த பூமியில் சொல்லப்பட்ட தெய்வங்கள் எல்லாம் ஒரே தேவனையே குறிக்கிறது. நாம் தெய்வத்தின் ஒவ்வொரு குணத்துக்கு ஒரு பெயரை வைத்து தனித்தனி தெய்வமாக வணங்கி வருகிறோம். இதை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்
GOD is Trinity தெய்வம் மூன்று வகையில் செயல்படும் ஒருவரே ஆவார், அவரை நாம் பலபெயர்களில் அழைக்கிறோம். இதன் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பூமியில் வந்து உதித்த அழகான தெய்வமாகிய பிள்ளை தெய்வம் ஏன் கருப்பாகிப்போனார் என்பதைப் பார்ப்போம்
2) வெள்ளைச்சாமி கருப்பசாமி ஆன வரலாறு
கருப்பசாமி என்று ஒரு தனி சாமி இல்லை இந்த உலகத்தில் அழகான தெய்வமாக வந்து பிறந்த வெண்மையான தெய்வம் மனிதனுடைய பாவங்களை தன் மேல் ஏற்றுக்கொண்டதனால் அவர் கருப்பான தெய்வமாக மாறினார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த நிகழ்வைப் பரிசுத்த வேதாகமம் அழகாக விளக்குகிறது.
மரணத்துக்கு மரணம், இயேசுவின் மரணம்
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் அவரை கருத்து போகச் செய்தது. அவர் வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley, அதிரூபன் ஆனவர். அவர் சிலுவையிலே நமக்காக மரணம் எய்தும் போது அவருக்கு அழகுமில்லை செளந்தரியமும் இல்லை , நாம் அவரை பார்க்கும் போது அவருக்கு விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
வெள்ளைச்சாமியாய் இருந்தவர் நமக்காகச் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு கருப்பானவரானார்.
அதை பரிசுத்த வேதாகமம் கீழ் கண்ட வசனங்களில் அழகாகக் கூறுகிறது.
.......அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம்
அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம் கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 53 : 2-7
3) கருப்பசாமி கோயில் அனைத்தும் ஏன் ஊருக்கு வெளியே அமைந்துள்ளது ?
ஊர் என்ற வார்த்தை பாளையம் என்ற வார்த்தையோடு சம்பந்தம் உள்ளது உதாராணமாக அய்யம்பாளையம், உத்தமபாளையம் என்று ஊர்ப் பெயர்களை அழைப்பது உண்டு..
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் வைத்து அறையப்படுவதற்காக ஊருக்கு வெளியில் அல்லது ஊருக்குப் புறம்பே உள்ள கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குக் கொண்டு சென்று சிலுவையில் அறைந்தார்கள்.
தெய்வம் சிலுவையில் பாடுபட்டது ஊருக்கு வெளியே ஆகும் அதாவது பாளயத்திற்கு புறம்பே ஆகும் இந்த நிகழ்வைப் பரிசுத்த வேதாகமம் கீழ் கண்ட வசனங்களில் அழகாகக் கூறுகிறது.
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும் படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள் யோவான் 19:16-19
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தை பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம் . எபிரெயர் 13 : 12-13
இதனால் தான் கருப்பசாமியின் கோயில் எல்லா ஊர்களிலும் ஊருக்கு வெளியே அமைந்துள்ளது. மேலும் சிலுவையில் பாடுபட்ட தெய்வமே காவல் தெய்வமாக காணப்படுகிறார்.
4) கருப்பசாமி கோயில் ஆராதனைக்குத் தட்டில் மதுபானம் வைப்பது ஏன் ?
ஒருவரைச் சிலுவையில் அறையும் போது மரண வேதனை உண்டாகும் அதே போல் சிலுவையில் அறையப்பட்ட மனிதனின் இரத்தம் உடம்பில் இருந்து வெளியேற வெளியேற அந்த மனிதனுக்கு அளவில்லாத தாகம் ஏற்படும், எனவே அந்த வேதனைகளைப் போக்க மற்றும் தாகத்தைத் தனிக்க கசப்பு கலந்த காடியை கொடுப்பார்கள். அதை வாங்கி குடித்தபின் தன் உயிரை விடுவார்கள்.
காடி என்பது ஒரு வகையான கடுமையான திராட்சைரசமாகும் அதாவது hard vinegar ஆகும்
Vinegar
a liquid with a strong sharp taste that is made from wine.
திராட்சை மதுவிலிருந்து தயாரிக்கப்படும் உறைப்பான கூர்ஞ்சுவை கொண்ட நீர்ம வகை; திராட்சைக் காடி.
மேலே கூறியபடி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் போது ஏற்ப்பட்ட வேதனைகளை மறக்கவும் தாகத்தை போக்கவும் அவருக்குக் காடி என்ற பானம் கொடுக்கப்பட்டது. அவர் அதை வாங்கி குடித்து தன் உயிரை விட்டார்.
இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நாம் சிலுவை மரணத்தை ஏற்று கறுத்துப்போன கருப்பான சாமிக்கு தினமும் படைக்கும் பிரசாத தட்டில் மதுபானத்தையும் சேர்த்து படைக்கிறோம்.
சங்கீதம் 69 இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் ஆகும் அந்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் காலங்களில் நிறைவேறியது.
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். சங்கீதம் 69:21
தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்க தாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். யோவான் 19:28-30
5) எதற்காகச் சிலுவை மரணத்தை அழகான தெய்வம் ஏற்றுக்கொண்டு கருத்துப் போனார்.
5.1) ஆதாமின் மரணம்
இந்த பூமியில் முதல் மனிதனாக ஆதாம் படைக்கப்பட்டான், அவன் தேவனுடைய கட்டளையை மீறிப் புசிக்கக் கூடாது என்று சொன்ன பழத்தைப் புசித்ததினால் உலகத்தில் பாவம் பிரவேசித்தது. மரணம் ஏற்பட்டது, மரிக்கும்படியாக முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட வில்லை. எப்பொழுது ஆதாமும், ஏவாளும் தேவனுடைய வார்த்தையை மீறிச் செயல்பட ஆரம்பித்தார்களோ, அந்நேரம் முதல் மரணம் மனிதனுக்குள்ளாகப் பிரவேசிக்க ஆரம்பித்தது. மரணம் என்பது, மனிதகுலத்திற்குத் தேவனால் கொடுக்கப்பட்ட தண்டனை ஆகும்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Lourdurajvs
5.2) ஆத்தும மரணம்
கடவுளால் அவரது பணி செய்யப் படைக்கப்பட்ட மானிடர், உலக பொருட்களால் மயங்கி கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்தனர். அதன் விளைவாக மனிதனுக்கு ஆத்தும மரணம் ஏற்பட்டது.
மானிடருக்கு மீட்பு தேவைப்பட்டது. எனவே உலக மீட்பருக்காக ஏங்குமாறு, மானிடரின் உள்ளங்கள் அகத்தூண்டுதல் பெற்றன.இயேசு இந்த உலகிற்கு வந்ததின் நோக்கத்தைப் பரிசுத்த வேதாகமம் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10
ஆதாமின் வழியாக உலகில் நுழைந்த பாவம், இயேசுவின் வழியாகவே நீக்கப்பட்டது என்பது உண்மை. இதைப் பரிசுத்த வேதாகமம் பின் வருமாறு கூறுகிறது.
நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் நாம் மீட்கப்பட்டு கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள்.
ஆதாமின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், இயேசு கிறிஸ்துவின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசெயர் 1:20
6) காபா
காபாவில் இஸ்லாமியர்கள் ஒரு கருப்பு கல்லை முத்தமிடுவது வழக்கம். அந்த கல் வானத்தில் இருந்து வந்ததாக நம்பிக்கை உண்டு. மேலும் அந்த கல் வானத்தில் இருந்து வந்த போது அது மிகவும் வெண்மையான தேற்றம் உள்ளதாக இருந்தது. அது ஆதாமின் பாவத்தினாலும், எல்லா மனிதர்களின் பாவத்தாலும் கறுத்துப் போனதாகக் கூறப்படுகிறது. ஆதாமின் பாவத்தையும், மனிதர்களுடைய பாவத்தையும் போக்க வந்த வெண்மையான கல் இயேசு கிறிஸ்துவே. இதன் உண்மையைக் கீழ் கண்ட you tube linkல் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=2eFXJVXJBfY&t=758s
7) கருத்துப் போன தெய்வம் இயேசு கிறிஸ்து தான் என்பதின் விளக்கம்
7.1) வாக்கு வழி கருப்பண்ணசாமி
வாக்கு என்பது வார்த்தை, சொல், ஆகும் வாக்குவழி கருப்பசாமி என்பது வார்த்தையாகிய தெய்வம் ஆகும் வார்த்தையாகிய தெய்வம் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது, பரிசுத்த வேதாகமம் வார்த்தை அல்லது வாக்கைப் பற்றிக் கூறும் போது அந்த வார்த்தை மாம்சமாகி இந்த பூமிக்கு மனித குமாரனாக வந்தது எனக் குறிப்பிடுகிறது. வார்த்தையாகிய கடவுளைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளக் குறள் 1 என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
( GO )
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அந்த வார்த்தை மாம்சமாகி, ( இயேசுவாகி ) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:1,2,14
7.2) ஆலடி கருப்பசாமி
ஆ என்ற வார்த்தைக்குப் பெண் மாடு என அர்த்தம், ( பசு = ஆன்மா )
லடி என்பது கொட்டில், குடில், தொழுவம் ஆகும்
ஆலடி கருப்பசாமி என்றால் மாட்டுக் கொட்டில் பிறந்த கருப்பசாமி ஆகும்
சத்திரத்தில் இடம் கிடைக்காததால் இயேசு கிறிஸ்துவை மாட்டுக் கொட்டியில் கிடத்தி இருந்தார்கள்.
அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். --- லூக்கா நற்செய்தி 2:6,7
https://bible.catholicgallery.org/tamil/etb-luke-2/
https://temple.dinamalar.com/news_detail.php?id=101299
7.3) அன்பு கருப்பசாமி
இயேசு கிறிஸ்து அன்பு மிகுந்தவராக இருந்தார் அவர் இந்த பூமியில் இருக்கும் போது மனிதர்களுக்கு நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்தார்.
அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். I யோவான் 3;16
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. I யோவான் 4:8,9
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் ----- அப் 10:38
7.4) கிளிக்கூண்டு கருப்பசாமி,
இயேசு கிறிஸ்துவை கைது செய்து சிலுவையில் அறைவதற்காக கொண்டு சென்றார்கள் அவர் கிளிக்கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல இருந்தார்
அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; யோவான் 18:11-12
7.5) சப்பாணி கருப்பசாமி
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையக் கொண்டு செல்லும் போது அவர் ஒன்றும் செய்ய இயலாத சப்பாணியைப் போல காணப்பட்டார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்
அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள் --- யோவான் 19 1-3, 16-19
7.6) ஈசான கருப்பசாமி,
ஒரு கட்டிடம் கட்டும் போதும் ஈசான மூலையில் மூலைக்கல் வைத்துப் பூஜித்து கட்டிடம் கட்டுவது வழக்கம். அப்படிப்பட்ட அந்த மூலைக்கல் இயேசு கிறிஸ்துவாகும் தனது செந்த ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளப்பட்டு சிலுவையில் அறையப்பட்டவரே தள்ளப்பட்ட கல் ஆகும், அப்படித் தள்ளப்பட்ட கல்லாகிய அவர் சபைக்கு அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்குப் பிரதான மூலைக்கல்லாக மாற்றப்பட்டார். Jesus Christ himself being the chief corner stone; எபேசியர் 2:20
மூலைக்கல்லைப் பற்றி மலும் அறிந்து கொள்ள வழி அடைக்கும் கல் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
7.7) பாதாள கருப்பசாமி
இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளம் இரங்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் எனவே அவரை பாதாளம் வென்றவர் எனக் கூறுகிறோம்.
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:18
7.8) புழு கருப்பசாமி
புழு கருப்பசாமி என்ற பெயரை புளு கருப்பசாமி எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர், இது அறியாமையினால் செய்த ஒரு தவறு ஆகும். புளு என்பது ஒரு ஆங்கில வார்த்தை ஆகும். புழு கருப்பசாமி என்பதே சரியாகும். அதாவது மன்புழுவைப் போல் பூமிக்கு உள் இருந்து வெளி வந்தவர் அதாவது உயிர்த்தெழுந்தவர் ஆகும், இதையே வானரமுட்டி கருப்பசாமியின் விளக்கமும் கூறுகிறது.
7.9) வானரமுட்டி கருப்பசாமி
வான் + அரம்+ முட்டி,
வான் = மேல் உலகம் -- Heaven
அரம் = கீழறை ( கல்லறை )
முட்டி = முட்டின (முடிதல்)
கல்லறையை முட்டி (திறந்து) வான் சென்ற கருத்துப் போன சாமி ஆகும்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபிறகு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டார், மூன்றாம் நாளில் அவர் கல்லறையை திறந்து உயிர்த்தெழுந்தார்.
கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார் I கொரி 15 : 3-8
அரம்
arm
s. A file, rasp, ஓர்கருவி. 2. (p.) A cellar, cell, cavern or sub terraneous room, கீழறை. 3. The abyss including all the nether worlds, பாதாளம். (திருச்செந்.)
முட்டுதல்
மோதுதல்; தடுத்தல்; எதிர்த்தல்; எதிர்ப்படுதல்; பிடித்தல்; தேடுதல்; குன்றுதல்; நிறைதல்; முடிதல்; தடைப்படுதல்; பொருதல்; வழுவுதல்.
7.10) வழிவிடும் கருப்பசாமி
இயேசு கிறிஸ்து மனிதனுக்குக்கொடுத்த ( உயிரை ) ஆத்மாவைக்காப்பாற்ற மனிதனாகப்பிறந்து, இறந்து, உயிர்த்து, பரலோகம் சென்று, பரலோகத்தைத் திறந்து, வழி ஏற்படுத்தி, மனிதன் இறந்த பின்பு அந்த ஆத்துமாவுக்குப் பரலோகம் செல்ல வழி விட்டவர் ஆகும் வழி விட்ட தெய்வத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வழி விட்ட தெய்வம் என்ற பக்கத்தைப் பார்க்கவும். ( GO )
7.11) மீன்வெட்டி கருப்பசாமி
அவர் உயிர்த்தெழுந்த பிறகுத் தனது சீசர்களுக்கு கடல்கரை ஓரம் காட்சியளித்தார் அப்போது அவர் சில மீன்களைச் சுட்டு அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். அவரும் அதை உண்டார்
இயேசு அவர்களை நோக்கி வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது, இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். யோவான் 21:12-14
நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.---- லூக்கா 24:39:44
7.12) உத்திர கருப்பசாமி
உத்திரம் என்றால் மேலே என்று பொருள். உத்தர் காசி என்றால் மேலே உள்ள நகரம் என அர்த்தம் இயேசு கிறிஸ்து உயித்தெழுந்து பரலோகம் சென்று அங்கு இன்றும் நமக்காகப் பிதாவின் வலது பக்கத்தில் இருந்து ( வலம்புரியில் இருந்து ) பரிந்து பேசுகிறார். உத்திர என்ற வார்த்தைக்கு விளக்கம் அதிகம் வேண்டும் என்றால் திருப்பரங்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16{19
7.13) வேட்டை கருப்பசாமி
சாத்தானை வேட்டையாடும் கருப்பசாமி என்று பொருள்
இயேசு கிறிஸ்து சிலுவையில் சாத்தானை ஜெயித்து வெற்றி சிறந்தார் அதனால் நாம் சாத்தானின் செயல்களில் இருந்து விடுபட்டு பரலோகம் செல்லும் வாய்ப்பை பெறுகிறோம்.
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.--- கொலோசெயர் 2:14-15
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். வெளி 12:9
8) தெய்வம் மூன்று வகையில் செயல்படும் ஒருவரே ஆவார், அவரை நாம் பலபெயர்களில் அழைக்கிறோம்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி
8.1 ) பிதாவானவர் உருவம் இல்லாத கடவுள் ஆவார். இவர் அக்கினி மயமானவர். 8.2 ) குமாரன் என்பவர் பிதாவானவரின் தத்ரூபமான பிள்ளை தெய்வம் ஆகும் அவர் பிதாவானவரின் வாக்குப்படி (சொல் படி, தெய்வானைப்படி) இந்த பூமியில் வந்து பிறந்து மனிதகுல மீட்பிற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தவர். 8.3 ) பரிசுத்த ஆவியானவர் என்பவர் குமாரன் சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு பிறகு உயிர்த்து பரம் ஏறிய பிறகு இந்த உலகத்தில் அருளப்பட்டார் அவர் ஒவ்வொரு மனிதனின் மனதில் இருந்து நல்வழிப்படுத்தி குமாரனிடம் கொண்டு சேர்ப்பவர் ஆகும்
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இந்த மூவரும் ஒருவரே அதனால் தான் திரியேக தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். இந்த மூவரும் ஒருவரே என்பதை அகத்தியர்
தனது அகத்தியர் ஞானம் 30ல் முச்சுடரு மொன்றாகும் மும் மூர்த்தியல்ல
மூவருமே ஆளுருவமொன்றேயாகும் என்று பாடுகிறார்
அகத்தியர் பாடல்
முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தி யல்ல
மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும்
அச்சுதா யிவர்களுமே ஆண்பெண் அல்ல
அரனுமல்ல, லிங்கமல்ல, அநாதியான
சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி
எச்சரிக்கை கொண்டு நட அப்பா, அப்பா!
எண்ணில்லா முக்திவழி யெய்து வாயே!
அகஸ்தியர் ஞானம் - 30
8.4) இதே விசயத்தை சைவத்திலும், வைணவத்திலும் பார்க்கமுடியும்
பரிசுத்த வேதாகமம்
பிதா குமாரன் பரிசுத்த ஆவி
உருவம் அற்றவர் உருவத்தில் வந்தவர் ஆவியானவர்
அருவம் உருவம் அருஉருவம்
சைவம்
தகப்பன் பிள்ளை தாய்
சிவன் முருகன் சக்தி
சிவன் பிள்ளையார் சக்தி
வைணவம்
Formless with Form Semi Form
பரம் அமரம் பராபரம்
பரசொருபம் அந்தர்யாமி சொருபம் விபசொருபம்
வியூகசொருபம்
அர்ச்சவதாரம்
சிவன் ஜய்யப்பன் விஷ்ணு
சிவன் பிரம்மா விஷ்ணு
இந்த அட்டவணையில் உள்ளபடி பார்த்தால், நாம் வழிபடும் அனைத்து தெய்வங்களும் இதற்குள் அடங்கும்
பரம் அர்ச்சம் வியூஹம் விபவம் அந்தர்யாமி ஆகியவற்றின் அர்த்தம் பார்க்க கீழே உள்ள பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.facebook.com/AnmikamarintatumAriyatatum/photos/a.747299215324263/876426645744852/?type=
guru