GOD is the Stone and Rock ( வழியடைக்கும் கல் )
குறள் 38: --- kural 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
உள்ளே
குறள்-38, குறள்-62, குறள்-107, குறள்-121, வீழ்நாள்படாஅமை, வழியடைக்கும்கல், ஏழுபிறவி, எழுபிறவி, சந்ததியினர், ஜீவனுள்ள கல், Living stone, தெரிந்து கொள்ளப்பட்ட கல், Chosen by GOD, விலையேறப் பெற்ற கல், Precious stone, இடறுதற்கான கல், Stumbling stone, தள்ளப்பட்ட கல் Rejected stone, Disallowed stone, மூலைக்கல், Corner stone, அஸ்திபாரமான கல், Foundation Stone, பரீட்சிக்கப்பட்ட கல், Tried or Tested Stone, நொறுங்கிப்போடுகிற கல், broking stone, நசுக்கிப்போடும் கல், A crushing stone, அவரே கன்மலை, He is the Rock, தவறுதற்கான கன்மலை, Rock of Offence or Stumbling stone, நம்மை ஜெநிப்பித்த கன்மலை Begotted Rock, வந்தடையத்தக்கக் கன்மலை, Habitation rock, இரட்சிப்பின் கன்மலை, Rock of my salvation, பெலமாகிய கன்மலை, Rock of thy strength, தாகம் தீர்க்கும் கன்மலை, நித்திய கன்மலை, Everlasting Rock
இந்த குறளுக்கு உரை எழுதிய பலர், ஒருவன் தன் இறப்புவரை அறம் செய்ய ஒரு நாளும் தவறாது இருப்பானாயின் அவனுக்குப் பிறப்பு இறப்பு என்னும் தொடர் சங்கிலியில் அடுத்து பிறவிக்கான வழியை அடைக்கும் கல்லாக அது அமையும். அதாவது அவன் வீடு பேறு பெறுவான் அல்லது அவனுடைய அறமே அவனுக்குத் துணை நிற்கும். தர்மம் தலை காக்கும். என்றே எழுதியுள்ளனர்.
வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்கு அடுத்த பிறவிக்கு நாம் செல்லாமல் பரம்,செல்லக்கூடிய தடுப்புக்கல்லாக அறன் உதவும் என்று எழுதியுள்ளனர்.
நாம் அடுத்த பிறவியில் பிறக்காமல் தடுக்க பயன் படும் கல்லாக அறன் இருக்கும் என்ற அர்த்தத்தோடு திருவள்ளுவர் தனது குறளில் எழுதியிருந்தால் வாழ்நாள் வழி தடுக்கும் கல் என எழுதியிருக்க வேண்டும்.
அடுத்த பிறவிக்குச் செல்லாதவாறு வழியடைக்கும் கல் என்று அர்த்தம் எடுப்பதற்கு இந்த குறளில் மறுபிறவி என்று அர்த்தம் வரும் வார்த்தையைத் திருவள்ளுவர் எழுதவில்லை
வாழ்நாள் என்பது நாம் இந்த பூமியில் வாழும் நாட்கள் அல்லது நமது சந்ததி இந்த பூமியில் வாழும் நாட்கள் ஆகும்.
திருவள்ளுவர் தனது குறள்களில் எழுபிறவியைப்பற்றி தான் குறிப்பிடுகிறார், ஏழுபிறவியை அல்ல என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
எழுபிறவியா அல்லது ஏழுபிறவியா
திருவள்ளுவர் தனது 62 வது குறளிலும் 107 வது குறளிலும் எழுபிறவி என்றே குறிப்பிடுகிறார்.
குறள் 62: kural 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
குறள் 107: kural 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
எழுபிறவி என்றால் நமக்குப் பின் எழும்பும் சந்ததியைக் குறிக்கிறது, ஆனால் விளக்கம் எழுதிய பலர் எழுபிறவியை ஏழுபிறவி என்று எடுத்து மறுபிறவி உண்டு என அர்த்தத்தை மாற்றி எழுதியுள்ளார்கள்.
எனவே இந்த குறளில் மறுபிறவி செல்லாமல் தடுக்கும் கல் என்று அர்த்தம் எடுத்து எழுதியிருப்பது தவறு ஆகும்.
திருவள்ளுவர் தனது 121 வது குறளில் மறுபிறப்பு இல்லை என்பதைத் தெளிவுபடக் கூறியுள்ளார். இந்த பிறவியில் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தால் தேவர்கள் வாழும் உலகம், அடங்காமல் வாழ்ந்தால் நரக இருள் உள்ள இடம் என்று ஏழுபிறவிக் கோட்பாட்டுக்கு ஒரு முடிவு ஏற்படுத்தியுள்ளார்.
குறள் 121: kural 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
திருவள்ளுவர் தனது குறளில் ஒருவன் அடக்கத்துடன் இந்த பூமியில் வாழ்ந்தால் அவனுடைய ஆத்துமா பரலோகம் சென்று சேரும் என்றும்.
ஒருவன் தனது வாழ்வில் அடக்கம் இல்லாது வாழ்ந்தால் அவனது ஆத்துமா மரணத்திற்குப் பிறகு இறைவனின் நியாயத் தீர்ப்பை அடைந்து நரகத்தைச் சென்று சேரும் என்றும் கூறுகிறார்.
https://www.narrowpathlight.com/kural-121-heaven-hell
அப்படி என்றால் வாழ்நாள் வழியடைக்கும் கல் என்றால் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே விளங்கும்
வழி என்பதற்குப் பல அர்த்தம் உண்டு, அதில் வழி என்றால் சந்ததியினர் அல்லது பின் எழும்பும் பிறப்புகள் அல்லது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் என்ற அர்த்தங்கள் உண்டு.
அடைக்கும் என்பதற்கு வேலியடைத்தல் அல்லது அடைத்து வைத்துப் பாதுகாக்கும் என்று அர்த்தம் ஆகும்.
கல் என்பது தெய்வத்தைக் குறிக்கிறது, கல் என்பது தெய்வத்தைத் தான் குறிக்கிறது என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தைப் பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம்.
குறள் 38 இன் அர்த்தத்தைப் பார்ப்போம்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
வீழ் நாள் = சாவு அல்லது மரண நாள்
படாமை = (பெ) உறங்காமை
நன்றாற்றின் = தெய்வம் செய்த அறத்தின் படி செய்தால்
அஃதொருவன் = அது அல்லது அதாவது ஒருவன்
வாழ்நாள் = பூமியில் இருக்கும் காலம் வரை
வழி = பின்வருவது, முறைமை, சந்ததியினர்,
அடைக்கும் =- மறைத்தல், காவல்செய்தல்; வேலியடைத்தல்.
கல், = வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல்,.சிறு கல், பாறை, மலை,
விளக்கம்
அதாவது ஒருவன் தன்னுடைய மரண நாள் வரை தெய்வம் செய்த அறத்தை பின்பற்றி வாழ்ந்து அதேயே தானும் செய்யும் போது, கன்மலையாகிய (Rock - தெய்வீகமான கல்) தெய்வம் அந்த மனிதனின் சந்ததியினரோடு கூட இருந்து வேலியடைத்து தீமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்
பரிசுத்த வேதாகமம் - ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்யும் கர்த்தர்.
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். யாத் 20:6
யார் அந்த கல் ?
Jesus is the Stone
Jesus is the ROCK (கன்மலை)
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை 18 வகையான கல் (Stone) என்றும் கன்மலை (Rock) என்றும் குறிப்பிடுகிறது அதைக் கீழ்க் கண்ட விளக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ளுவோம்
1) ஜீவனுள்ள கல் அல்லது உயிர் உள்ள கல் ( Living stone)
2) தெரிந்து கொள்ளப்பட்ட கல் ( Chosen by GOD )
3) விலையேறப் பெற்ற கல் ( Precious stone )
4) இடறுதற்கான கல் ( Stumbling stone )
5) தள்ளப்பட்ட கல் ( Rejected stone or Disallowed stone )
6) மூலைக்கல் ( Corner stone )
7) அஸ்திபாரமான கல் ( Foundation Stone )
8) பரீட்சிக்கப்பட்ட கல் ( Tried or Tested Stone )
9) நொறுங்கிப்போடுகிற கல் (broking stone )
10) நசுக்கிப்போடும் கல் ( A crushing stone )
11) அவரே கன்மலை ( He is the Rock )
12) தவறுதற்கான கன்மலை ( Rock of Offence or Stumbling stone )
13) நம்மை ஜெநிப்பித்த கன்மலை (Begotted Rock )
14) வந்தடையத்தக்கக் கன்மலை ( Habitation rock )
15) இரட்சிப்பின் கன்மலை ( Rock of my salvation )
16) பெலமாகிய கன்மலை ( Rock of thy strength )
17) தாகம் தீர்க்கும் கன்மலை (
18 ) நித்திய கன்மலை ( Everlasting Rock )
1) இயேசு ஒரு ஜீவனுள்ள கல் ( Living stone)
ஜீவனுள்ள கல் என்பது இன்றும் உயிரோடு இருக்கும் ஒரு கல் ஆகும்
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். Bible வெளி 1:18
2) தெரிந்து கொள்ளப்பட்ட கல் ( Chosen by GOD )
மனித குல மீட்பிற்காகத் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு பாத்திரம் மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆவார்.
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; Bible ஏசாயா 61:1-3
3) விலையேறப் பெற்ற கல் ( Precious stone )
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் தெய்வம் நம்மெல்லாருக்காகவும் இயேசுவைச் சிலுவையில் ஒப்புக்கொடுத்தார் அதனால் இயேசு கிறிஸ்து விலை மதிப்பில்லாத ஒரு கல்லாக விளங்குகிறார்.
மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும்
விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், To whom coming, as unto a living stone, disallowed indeed of men, but chosen of God, and precious, I பேதுரு 2:4
4) இடறுதற்கான கல் ( Stumbling stone )
இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசும் போது அவர் உண்மையில் தேவனுடைய குமாரனா என்றும் உலக மக்களை இரட்சிக்க வந்த மீட்பரா என்றும் சிலுவையில் இரத்தம் சிந்தி மனிதகுல பாவத்தைப் போக்க வந்த ஆட்டுக்குட்டியா என்றும் உயித்தெழுந்தவரா என்றும் திரும்பவும் வருபவரா என்றும் மக்கள் மத்தியில் இடறல் உண்டு. ஒரு மனிதன் இடறுதற்கான கல் அவரே இதைக் கீழ்க் கண்ட வசனம் உறுதிப்படுத்துகிறது.
1) பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். Bible லூக்கா 2:34
2) இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
As it is written, Behold, I lay in Sion a stumbling stone and rock of offence: and whosoever believeth on him shall not be ashamed ரோமர் 9:33
5) தள்ளப்பட்ட கல் ( Rejected stone or Disallowed stone )
தனது செந்த ஜனங்களாகிய யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளப்பட்டு சிலுவையில் அறையப்பட்டவரே தள்ளப்பட்ட கல் ஆகும், அப்படித் தள்ளப்பட்ட கல்லாகிய அவர் சபைக்கு அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்கு பிரதான மூலைக்கல்லாக மாற்றப்பட்டார்.
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று Unto you therefore which believe he is precious: but unto them which be disobedient, the stone which the builders disallowed, the same is made the head of the corner, I பேதுரு 2:7
6) மூலைக்கல் ( Corner stone )
தனது செந்த ஜனங்களாகிய யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளப்பட்டு சிலுவையில் அறையப்பட்டவரே தள்ளப்பட்ட கல் ஆகும், அப்படித் தள்ளப்பட்ட கல்லாகிய அவர் சபைக்கு அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்குப் பிரதான மூலைக்கல்லாக மாற்றப்பட்டார்.
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; And are built upon the foundation of the apostles and prophets, Jesus Christ himself being the chief corner stone; எபேசியர் 2:20
7) அஸ்திபாரமான கல் ( Foundation Stone )
ஒருவன் தன் வாழ்க்கையை அஸ்திபாரமான கல்லாகிய இயேசு கிறிஸ்துவின் மேலும் அவர் போதனைகள் மேலும் கட்டுகிறானோ அவனே புத்தியுள்ளவன் எனப் பரிசுத்த வேதம் நமக்குப் போதிக்கிறது.
1) என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார். Bible லூக்கா 6:49
2) ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான். Therefore thus saith the Lord GOD, Behold, I lay in Zion for a foundation a stone, a tried stone, a precious corner stone, a sure foundation: he that believeth shall not make haste. Bible ஏசாயா 28:16
8) பரீட்சிக்கப்பட்ட கல் ( Tried or Tested Stone )
இயேசு சாத்தானால் சோதனை செய்யப்படத் தெய்வத்தால் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அவர் பரீட்சிக்கப்பட்ட பின்பு தன்னுடைய ஆத்தும மீட்பின் பனியைத் ஆரம்பித்தார்
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். Bible மத்தேயு 4:3-4,11
9) நொறுங்கிப்போடுகிற கல் (broking stone )
ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். ( இயேசுவாகிய ) இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Therefore say I unto you, The kingdom of God shall be taken from you, and given to a nation bringing forth the fruits thereof. And whosoever shall fall on this stone shall be broken: but on whomsoever it shall fall, it will grind him to powder. மத்தேயு 21:43-44
10) நசுக்கிப்போடும் கல் ( A crushing stone )
ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். ( இயேசுவாகிய ) இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Therefore say I unto you, The kingdom of God shall be taken from you, and given to a nation bringing forth the fruits thereof. And whosoever shall fall on this stone shall be broken: but on whomsoever it shall fall, it will grind him to powder. மத்தேயு 21:43-44
11) அவரே கன்மலை ( He is the Rock )
அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். Bible உபாகமம் 32:4
12) தவறுதற்கான கன்மலை ( Rock of Offence or Stumbling stone )
அனேகர் இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் தங்களுடைய பாவத்தில் நிலை கொண்டு பரலோக ராஜ்யத்திற்கு வராமல் விழுந்து போவார்கள் 1)ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்து போகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக் கடவோம். Bible எபிரெயர் 4:11
2) இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
As it is written, Behold, I lay in Sion a stumbling stone and rock of offence: and whosoever believeth on him shall not be ashamed. Bible ரோமர் 9:33
13) நம்மை ஜெநிப்பித்த கன்மலை (Begotted Rock )
நாம் நம்மைப் படைத்த மறந்து போனதின் காரணமாக உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய் என்று அவர் நமக்காகப் பரிதவிக்கும் காரியத்தை விளக்கும் வசனம்.
உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.Bible உபாகமம் 32:18
14) வந்தடையத்தக்கக் கன்மலை ( Habitation rock )
நாம் எந்தவித சூல்நிலையிலும் வந்தடையத்தக்கக் கன்மலை அவரே
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர். Bible சங்கீதம் 71:3
15) இரட்சிப்பின் கன்மலை ( Rock of my salvation )
கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக. Bible II சாமுவேல் 22:47
16) பெலமாகிய கன்மலை ( Rock of thy strength )
என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. Bible சங்கீதம் 62:7
17) தாகம் தீர்க்கும் கன்மலை
இஸ்ரவேலரின் வனாந்தரப் பிரயாணத்தின் போது கன்மலையில் இருந்து வந்த தண்ணீரைக் குடித்தார்கள் அந்த கன்மலை கிறிஸ்துவே.
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே I கொரி 10:4
18 ) நித்திய கன்மலை ( Everlasting Rock )
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். Bible ஏசாயா 26:4
இயேசுவே அந்த கல் என்பதை விளக்கும் பாடலை youtube linkல் பார்க்கவும்
THE ROCK THAT IS HIGHER THAN I
CHORUS
There is a Rock that is higher than I-
A mighty Rock that I can run to
If I abide there, I will never be moved;
His Name is Jesus, my firm foundation
https://www.youtube.com/watch?v=N4E-xIA-8AQ
guru