குடவாயில் -குடவாசல்
குடவாயில் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட குடவாசல் (Kodavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.
இந்த ஊரின் பெயரை வைத்து குடவாசல் என்பதற்குப் பல விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் குடவாசல் என்பதற்குச் சரியான அர்த்தம் கொடுக்கப்படவில்லை, குடவாசல் அல்லது குடவாயில் என்ற வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
தலம் திருக்குடவாயில் என்ற தேவாரப் பதிகம் 2022 திருப்பாட்டு, 2 ஆம் திருமுறையில் உள்ளது. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் – கோணேசுவரர், தேவியார் – பெரியநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
இதில் சொல்லப்பட்ட இடம் திருக்குடவாயில் ஆகும். இந்த பதிகம் திருக்குடவாயில் என்ற இடத்தை வைத்து எழுதப்படவில்லை. தலம் – திருக்குடவாயில் என்ற பதிகம் எழுதப்பட்டதினால் அந்த பெயர் அந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும்.
திருக்குடவாயில் என்ற பதிகத்தில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் எதுவும் தமிழ் நாட்டில் நடைபெறவில்லை. இந்த பதிகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பிறகு அவர் அடக்கம் செய்யப்பட்ட குடைந்தெடுக்கப்பட்ட குகை கல்லறையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒன்றாகும். அதை உள்ளே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்
குடவாசல் என்பது குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் அல்லது ஒரு குகையின் வாசல் ஆகும். இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மலைகளில் குடைந்து எடுக்கப்பட்ட ஒரு குகையைக் கல்லறையாகப் பயன்படுத்தியுள்ளனர், இயேசு கிறிஸ்துவின் கல்லறையும் அப்படிப்பட்டதே, அப்படிப்பட்ட கல்லறையே குடவாசல் என்று அழைக்கப்படுகிறது. இறந்த ஒருவரை உள்ளே வைத்து விட்டு ஒரு பெரிய கல்லை வைத்து மூடிவிடுவார்கள். அதைக் கீழே உள்ள வசனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
பரிசுத்த வேதாகமம்
அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள். மத்தேயு 15:46-47
கோனேஸ்வரர்
இந்த தலத்தில் உள்ள தெய்வத்தின் பெயர் கோனேஸ்வரர் ஆவார். கோன் + ஏஸ்வரர் ஆவார். கோன் என்றால் அரசன் ஆகும் ஏஸ்வரர் என்றால் ஏசுவரர் ஆகும். அதாவது அரசனாக அல்லது பதியாகக் கருதப்பட்ட ஏஸ்வரர் ஆவார். https://shivatemples.com/sofct/sct094.html
2ஆம் திருமுறை தேவாரப் பதிகங்கள் 2022 திருக்குடவாயில் - பண் – இந்தளம் – திருச்சிற்றம்பலம். இந்த திருமுறை 2022 இல் 11 பாடல்கள் உள்ளன. அவைகளில் குடவாயிலாகிய குடைந்தெடுக்கப்பட்ட கல்லறைதனில் நடந்த நிகழ்வுகள் குறிக்கப்பட்டு இருக்கிறது. அதைக் கீழ் உள்ள வரிகளில் பார்க்கலாம்.
1) முதல் பாடலில் “குடவா யில் மன்னி நிகழும்” என்ற வரி வருகிறது
குடைந்து எடுக்கப்பட்ட குகை கல்லறையின் குடவாசல் தவம் முடிந்து உயிர்த்தெழுதல் நிகழும் வரை சீசர்களைப் பொறுக்கச் சொன்ன இயேசு கிறிஸ்து
2) இரண்டாம் பாடலில் “குடவா யில்தனில் நீடும்” என்ற வரி வருகிறது
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாசலில் நிலைத்து நின்ற அதாவது உயிர்த்தெழுந்து கல்லறை வாசலில் நின்று காட்சி அளித்த இயேசு கிறிஸ்து
3) மூன்றாம் பாடலில் “குடவா யில்தனில் நிலையார்” என்ற வரி வருகிறது
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் நிலைத்து நின்று கொண்டிருந்த தெய்வம்
4) நான்காம் பாடலில் “குடவா யில்தனில் நிலவும்” என்ற வரி வருகிறது
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில் அருகில் தன்னை உயிருடன் இருக்கிறவராகக் காண்பித்து சாவாமை வரம் உள்ளவராக வாழுகின்ற தெய்வம் ஆவார்.
5) ஐந்தாம் பாடலில் “குடவா யில்தனில் நின்ற” என்ற வரி வருகிறது
இந்த பாடலில் "குடவாயில்தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே" என்ற வரிகள் வருகின்றன, அந்த பாடல் வரிகள் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் வாசலில் உயிர்தெழுந்து நின்ற இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது
6) ஆறாம் பாடலில் “குடவா யில்தனில் நிலைசேர்” என்ற வரி வருகிறது
குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் உயிர்த்து கல்லரை முன்பாக கூடிய அல்லது திரண்ட சீடர்கள் மற்றும் ஸ்திரீகளோடு நின்று காட்சி அளித்த தெய்வம்
7) ஏழாம் பாடலில் “குடவா யில்தனில் நிறையார்” என்ற வரி வருகிறது
அவர் குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் பரிசுத்தம், நீதி, மாட்சிமை நிறைவாகக் கொண்டு நின்ற தெய்வம்
8) எட்டாம் பாடலில் “குடவா யில் மன்னும் வரையார்” என்ற வரி வருகிறது
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையாகிய குடவாயில் முன்பாக வரையறுக்கப்பட்ட படி உயித்தெழுந்து உறுதியாய் நின்று கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது
9) ஒன்பதாவது பாடலில் “குடவா யில்தனில் மன்னும்” என்ற வரி வருகிறது
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் உயிர்த்தெழுந்து கல்லறை வாயிலில் உறுதியாய் நின்ற இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது
10) பத்தாம் பாடலில் “குடவா யில்தனில் உயரும்” என்ற வரி வருகிறது
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் இருந்து உயிர்த்து வானுலகத்துக்கு உயர்ந்தவர் அதாவது உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றவர்
11) பதினென்னாம் பாடலில் “குடவா யில்தனில் நெடுமா” என்ற வரி வருகிறது
குடைந்தெடுக்கப்பட்ட கல்லறைதனில் வைக்கப்பட்ட நெடுமால் அதாவது நீண்ட மேகம் ஆனவர் அதாவது மேகம் போன்று மகிமை நிறைந்தவராகிய தெய்வம் உயிர்த்தெழுந்து வானம் சென்றவர் என அர்த்தம்.
இப்படி வார்த்தைகள் உபயோகப்படுத்தப் பட்டுள்ளதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்
இந்த பாடல்களின் முழு விளக்கம் பார்க்கக் கீழ் கண்ட link ஐ பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/saiva-siddhantham
2ஆம் திருமுறை 2022 திருக்குடவாயில் - பண் – இந்தளம் – திருச்சிற்றம்பலம் பாடல்கள்
திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 01 பார்க்கவும்
ஓடுந் நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.02 பார்க்கவும்
கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 03 பார்க்கவும்
சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 04 பார்க்கவும்
என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 05 பார்க்கவும்
அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 06 பார்க்கவும்
அறையார் கழலன் னமலன் னியலிற்
பறையாழ் முழவும் மறைபா டநடங்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 07 பார்க்கவும்
வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 08 பார்க்கவும்
பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 09 பார்க்கவும்
வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 10 பார்க்கவும்
கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே. 11 பார்க்கவும்
guru