ulaga matha - மலையாள்
2.022 திருக்குடவாயில்-பண்-இந்தளம்- திருச்சிற்றம்பலம் பாடல்: 3
கலையான், மறையான், கனல்ஏந் துகையான்,
மலையாள் அவள்பாகம் மகிழ்ந்த பிரான்,
கொலைஆர் சிலையான், குடவா யில்தனில்
நிலைஆர் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பொருள்
கலையான், = உலகத்துக்கு ஒளியாக வந்தவன் அல்லது வார்த்தையானவன்
மறையான், = வேத ஆகமங்களுக்கு மூலகாரணமானவன்
கனல் ஏந்துகையான், = அக்கினி மயமானவன் ( ஏந்துதல் = அணிதல் )
மலையாள் = உலக மாதாவாகி என்ற பார்வதியாகிய (பார்=உலகம், வதி=வாசல்) மரியாள்
அவள்பாகம் = அவள் தெரிந்து கொண்ட நல்ல பங்கை அல்லது பாகத்தைக் கண்டு
மகிழ்ந்த பிரான், = மகிழ்ச்சியடைந்த தெய்வம்
கொலை ஆர் = இந்த பூமிக்கு வந்து சிலுவையில் கொலை செய்யப்பட்ட (ஆர்=பூமி)
சிலையான், = மனித உருவத்தில் வந்த மனித குமாரன் ஆவார்
குடவா யில்தனில் = குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில்
நிலை ஆர் = நிலைத்து நின்று கொண்டிருந்த அழகான தெய்வம் (ஆர்=அழகு)
பெருங்கோ யில்நிலா யவனே = நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார்
விளக்கம்
உலகத்துக்கு ஒளியாக வந்தவர் அல்லது வார்த்தையானவர் (கலை என்ற வார்த்தைக்கு ஒளி அல்லது மொழி, சொல், வார்த்தை என்று அர்த்தம் ஆகும். இந்த இரண்டு அர்த்தங்களுமே இயேசு கிறிஸ்துவுக்கு பொருந்தும் ). அவர் வேத ஆகமங்கள் நிறைந்த பரிசுத்த வேதாகமத்திற்கு மூலகாரணமானவர் ஆவார். அவர் அக்கினி மயமானவர் ஆவார்,
உலக மாதாவாகக் கருதப்படும் மரியாள் இயேசு கிறிஸ்துவின் தாயானவர் ( மரியாள் தான் பார்வதி என்று அழைக்கப்படுகிறார். பார் என்றால் உலகம், வதி என்றால் வாசல் ஆகும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து பிறப்பதற்கு வாசல் ஆகப் பயன்படுத்தப் பட்டவர் ஆவார். அவர்கள் தனக்குக் கொடுக்கப்பட்ட நல்ல பங்கை அல்லது பாகத்தை விட்டு விடாமல் இயேசு கிறிஸ்துவுக்கு தாயாக மாறினார்கள். அதனால் மகிழ்ச்சியடைந்த தெய்வம் இந்த உலகத்துக்கு இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
அவர் இந்த பூமிக்கு மனித உருவத்தில் வந்த மனித குமாரன் ஆவார். அவர் வந்து சிலுவையில் கொலை செய்யப்பட்டார். அவர் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாசலில் நிலைத்து நின்ற அதாவது உயிர்த்தெழுந்து கல்லறை வாசலில் நின்று காட்சி அளித்த அழகான தெய்வம் ஆவார். அவர் நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார்

தெளிவான விளக்கம்
1) கலையான், மறையான், கனல்ஏந் துகையான்,
தெய்வம் நானே இந்த உலகத்துக்கு ஒளியாய் இருக்கிறேன் என்றவர் அதனால் அவர் உலகத்துக்கு ஒளியாக வந்தவர் ஆவார். அவர் இந்த பூமிக்கு மனித குமாரனாக வந்த பிறகு இருளில் இருக்கும் அனேக மக்கள் ஒளியை அடைந்தார்கள். வேறு விதமாகப் பார்த்தால் அவர் வார்த்தையானவர். அந்த வார்த்தை மாமிசமாகி அதாவது மனிதனாக வந்தது. அதனால் தான் எந்த ஒரு கார்யத்தை ஆரம்பிக்கும் போது “உ” என எழுதி ஆரம்பிக்கிறோம். (கலை என்ற வார்த்தைக்கு ஒளி அல்லது மொழி, சொல், வார்த்தை என்று அர்த்தம் ஆகும். இந்த இரண்டு அர்த்தங்களுமே இயேசு கிறிஸ்துவுக்கு பொருந்தும் ). அவர் வேத ஆகமங்கள் நிறைந்த பரிசுத்த வேதாகமத்திற்கு மூலகாரணமானவர் ஆவார். பரிசுத்த வேதாகமம் 66 ஆகமங்கள் அடங்கியது, அவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுகிறது. அவர் அக்கினி மயமானவர் ஆவார், அவர் யாரும் சென்று சேர முடியாத ஒளியில் வாசம் பண்ணுகிறவர். அப்படிப் பட்ட தெய்வம் மனித உருவத்தில் இந்த பூமிக்கு வந்தார்.
தெய்வம் வார்த்தையானவர் என்பதைத் திருவள்ளுவர் தனது 1வது குறளிலும், 28வது குறளிலும் அழகாகக் கூறியுள்ளார்
குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்
சொற்பொருள்
நிறைமொழி = மேன்மையான வார்த்தை
மாந்தர் = மாமிசமாகி அல்லது மனித குமாரனாகி
பெருமை நிலத்து = பெருமையை இந்த உலகத்தில்மறைமொழி = வேதத்தின் வார்த்தைகள்
காட்டி விடும் = மெய்ப்பித்து விடும்
விளக்கம்
தெய்வத்தின் மேன்மையான வார்த்தை, மாமிசமாகி அல்லது மனித குமாரனாகி இந்த உலகத்தில் மனித குமாரனாக வந்தார் அவருடைய பெருமையை இந்த உலகத்தில் உள்ள பரிசுத்த வேதத்தின் வார்த்தைகள் மெய்ப்பித்து விடும்
குறள் 1 - kural 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்பதற்கு வார்த்தை தான் கடவுள் என அர்த்தம்.
முதற்றே உலகு என்பதற்கு உலக தோற்றத்திற்கு முன்பாக என அர்த்தம்.
அதாவது உலக தோற்றத்திற்கு முன்பாகவே எழுத்து (வார்த்தை) வடிவத்தில் கடவுள் இருந்தார் என அர்த்தம் கொள்ள வேண்டும்.
மேலும் அரிந்து கொள்ள எண்குணத்தான் என்ற பக்கத்தைப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/eight-characters-of-god
பரிசுத்த வேதாகமம்
ஒளியாய் வந்தவர்
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். யோவான் 12:46
வார்த்தையானவர்
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14
மறையான்
என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். ஏசாயா 51:4
அக்கினிமயமானவர்
கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத் 19:18 ஒரு சிங்காசனத்தின் சாயலும்,
உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4:24
2) மலையாள் அவள்பாகம் மகிழ்ந்த பிரான்,
உலக மாதாவாகக் கருதப்படும் மரியாள் இயேசு கிறிஸ்துவின் தாயானவர் ( மரியாள் தான் பார்வதி என்று அழைக்கப்படுகிறார். பார் என்றால் உலகம், வதி என்றால் வாசல் ஆகும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து பிறப்பதற்கு வாசல் ஆகப் பயன்படுத்தப் பட்டவர் ஆவார். அவர்கள் தனக்குக் கொடுக்கப்பட்ட நல்ல பங்கை அல்லது பாகத்தை விட்டு விடாமல் இயேசு கிறிஸ்துவுக்கு தாயாக மாறினார்கள். அதனால் மகிழ்ச்சியடைந்த தெய்வம் கன்னியாக இருந்த மரியாள் மூலமாக இந்த உலகத்துக்கு இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
பரிசுத்த வேதாகமம்
ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். லூக்கா 1: 26-35, 37-38
மலையாள் என்ற உலக மாதாவாகிய மரியாள் என்ற பார்வதியைப் பற்றி அறிந்து கொள்ளப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/parvathy-mary-mariyam
3) கொலைஆர் சிலையான்,
அவர் இந்த பூமிக்கு மனித உருவத்தில் வந்த மனித குமாரன் ஆவார். அவர் வந்து சிலுவையில் கொலை செய்யப்பட்டார்.
பரிசுத்த வேதாகமம்
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியர் 2:6-7
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். அப் 2:23
4) குடவா யில்தனில் நிலைஆர் பெருங்கோ யில்நிலா யவனே.
அவர் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாசலில் நிலைத்து நின்ற அதாவது உயிர்த்தெழுந்து கல்லறை வாசலில் நின்று காட்சி அளித்த அழகான தெய்வம் ஆவார். அவர் நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17
இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.
திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்
திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கலை : கூறு சந்திரனது பதினாறு கூறுகளுள் ஒன்று ஒளி எட்டு விநாடி அல்லது முப்பது காட்டை கொண்ட ஒரு காலநுட்பம் அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்று கல்வி சாத்திரம் மொழி சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்று உடல் புணர்ச்சிக்குரிய காரணங்கள் ஆண்மான் ஆண்குரங்கு அரைப்பட்டிகை மேகலை என்னும் அணி ஆடை நூல் மரவைரம் மகரமீன் மகரராசி
ஏந்துதல் : கைந்நீட்டுதல் கையில் எடுத்தல் தாங்குதல் பூணுதல் மிகுதல் சுமத்தல்
பூணுதல் : அணிதல் மேற்கொள்ளுதல் விலங்கு முதலியன தரித்தல் சூழ்ந்துகொள்ளுதல் உடைத்தாதல் சிக்கிக்கொள்ளுதல் நுகத்திற் கட்டப்படுதல் நெருங்கியிறுகுதல்
ஆர் : நிறைவு பூமி கூர்மை அழகு மலரின் பொருத்துவாய்
ஆர் : அழகு நுண்மை ஆத்தி மாலை
Comments