குறள் 37 -- kural 37
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
"திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்" .லூக்கா 23:27
அறத்தாறு இதுவென வேண்டா, சிவிகை
பொறுத்தவன் உடன் ஊர்ந்தான் இடை
இந்த குறளுக்கு உரை எழுதிய பலர் அறத்தின் வழி இது தான் எனத் தேட வேண்டாம். என்றும், அறத்தின் வழி இது தான் என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியதும் இல்லை.. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம். எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த விளக்கங்களில் எல்லாம் ஊர்ந்தான் என்பதின் அர்த்தத்தையும் சிவிகை என்பதின் அர்த்தத்தையும் தவறாக எடுத்துள்ளார்கள். அதின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தால் தான் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும்.
சிவிகை பொறுத்தவன் மற்றும் உடன் ஊர்ந்தான் என்ற வார்த்தைகள் இந்த குறளின் அர்த்தத்தைச் சரியாக அறிந்து கொள்ள மிகவும் முக்கியமான வார்த்தைகள் ஆகும்.
சிவிகை பொறுத்தவன்
சிவிகை என்பதற்கு இரண்டு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது
பல்லக்கு மற்றும் தண்டிகை (dooly) ஆகும். தண்டிகை என்பது பல்லக்கு தூக்க அல்லது சுமை தூக்கப் பயன்படும் இடைகழியாகும் (குறுக்கு கட்டையாகும்). இந்த குறளில் பல்லக்கு என்று எடுப்பதால்
அர்த்தம் தவறாக வருகிறது.
J.P.Fabricius Tamil and English Dictionary---- சிவிகை
civikai s. a palanquin, litter, dooly, தண்டிகை; 2. a bullock cart.
சிவிகையார், சிவியார், a caste of palanquin bearers.
சிவிகையாளன், the owner of a palanquin.
https://agarathi.com/word/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88
பல்லக்கு சுமப்பவனுக்கும் பல்லக்கில் அமர்ந்து இருப்பவனுக்கும் இருக்கும் வித்தியாசம் அறத்தின் பயன் என்று தவறாக அர்த்தம் எடுக்கப் பட்டுள்ளது. அமர்ந்து இருப்பவன் என்ற வார்த்தைக்கு உரியச் சொல் இந்த குறளில் பயன்படுத்தப் படவில்லை, ஊர்ந்தான் என்ற வார்த்தைக்கு மெதுவாக நகர்ந்து சென்றவர்கள் என எடுப்பதற்குப் பதிலாக அமர்ந்தவன் என அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது தவறான ஒன்றாகும்.
குறுக்கு கட்டை அல்லது இடைகழியைச் சுமந்தவனுக்கும் கூட ஊர்ந்து சென்றவர்களைப் பார்த்தால் அறத்தின் வழி எது என்று தெரியும் என்பது அர்த்தம் ஆகும்.
உடன் ஊர்ந்தான்
உடன் ஊர்ந்தான் என்பது உடன் மெதுவாகச் செல்பவர்கள் ஆகும். ஆனால் இந்த குறளுக்கு அர்த்தம் எழுதியவர்கள் உடன் ஊர்ந்தான் என்பதை பல்லக்கில் ஏறி அமர்ந்து செல்பவர்கள் என அர்த்தம் எடுத்துள்ளார்கள். அந்த அர்த்தம் தவறு ஆகும்.
ஊர்தல் என்பது மெதுவாக நடந்து செல்வது ஆகும். ஒருவன் மெதுவாக நடக்கும் போது ஊர்ந்து போகாமல் வேகமாகப் போ என கூறுவது வழக்கம். அதே போல் எறும்பு ஊர்ந்து செல்கிறது என்றால் அது மெதுவாகச் செல்கிறது என அர்த்தம்.
எனவே ஊர்ந்தான் என்பதற்குப் பல்லக்கில் அமர்ந்து செல்பவன் என அர்த்தம் எடுப்பது குறளின் உள்ளான அர்த்தத்தை அறியாமல் எழுதப்பட்ட விளக்கங்கள் ஆகும்.
அறத்தாறு இதுவென வேண்டா, சிவிகை
பொறுத்தவன் உடன் ஊர்ந்தான் இடை
அறத்தாறு இதுவென வேண்டா = அறத்தின் வழி இது தான் எனத் தேட வேண்டாம்.
சிவிகை = சுமை தூக்க பயன்படும் குறுக்கு கட்டை
பொறுத்தவன் = சுமந்தவன்
உடன் ஊர்ந்தான் = உடன் மெதுவாக பின் சென்றவர்கள்
இடை = நடுவில் நின்று பார்த்தால்
விளக்கம்
அறத்தின் வழி இது தான் எனத் தேட வேண்டாம். என்றும், அறத்தின் வழி இது தான் என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியதும் இல்லை.. குறுக்கு மரம் அல்லது இடைகழி அல்லது சிலுவை தூக்கிச் செல்பவரையும் அவர் பின்னால் மெதுவாக ஊர்ந்து நடந்து சென்றவர்கள் நடுவில் நின்று கண்ட அளவில் அறத்தின் வழி இது என அறியலாம்.
இயேசுவை கொல்ல பயன் படுத்தப்பட்ட சிலுவை என்பது இரண்டு மரத்தால் ஆனது. ஒரு மரம் நெடுமரம் இரண்டாவது மரம் குறுக்கு மரம் ஆகும் நெடுமரம் மலையில் நடப்பட்டு இருக்கும், குறுக்கு மரம் சுமந்து செல்லப்பட்டு பிறகு ஒன்று சேர்க்கப்பட்டு அதில் இயேசுவை அடித்து கொன்றார்கள், இயேசு சுமந்து சென்றது குறுக்கு தடி ஆகும்,
குறுக்கு தடியின் பெயர்கள் = காவு தடி, இடைகழி, சிலுவை ஆகும்
நமது நாட்டில் இடைகழி அல்லது குறுக்கு மரத்தைத் தான் காவடியாகத் தெய்வத்தின் மரணத்தை நினைவு கூறும் வகையில் தூக்கிச் செல்கிறோம்.
இடைகழியை தூக்கிச் சென்று புனிதமான கழுமரம் அல்லது நெடுமரத்துடன் சேர்க்கும் போது முழு சிலுவை ஆகிறது. கழுமரத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளத் திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தை பார்க்கவும்
https://www.narrowpathlight.com/thirukalukundram
மனிதர்களின் பாவம் தீர்க்க நிகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம்.
இயேசு தன் சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதா என்ற இடத்துக்குச் சென்றார். செல்லும் வழியெல்லாம் அவரை சாட்டையால் அடைத்தனர். அதைப் பார்த்த பெண்கள் அனைவரும் அவர் படும் வேதனைகளைக் கண்டு கதறி அழுதனர். ( இதுவே அறத்தின் வழியாகும் அல்லது அறத்தாறு ஆகும் )
இயேசுவை கொல்கொதாவில் வைத்து சிலுவையில் அறைந்தனர். அவரின் ஆடையையும் களவாடிக்கொண்டனர். இந்த உலகில் ஜலத்தை இசைபாட வைத்த தேவகுமாரனின் இறுதி தாகத்துக்கு கசப்பான காடியை குடிக்கத் தந்தனர். இத்தனை வேதனைகளோடும் அவர் யாரையும் சபிக்கவில்லை. மனிதர்களின் பாவங்களைத் தீர்க்கும் வாசலாக ஒளியாகத் தன் மரணம் அமையப்போவதை அவர் அறிந்திருந்தார்.அதற்காக அவர் சகலத்தையும் அந்த நாளில் சகித்துக்கொண்டார்.
இன்றைக்கு நாம் எளிதாகப் பாவங்களை இயேசுவின் ரத்தத்தினால் மன்னிப்புப் பெறுகிறோம். அவரின் சிலுவையின் நிழலில் இளைப்பாறுகிறோம். அப்படிப்பட்ட மீட்பை நமக்கு வழங்கும் தேவனின் பாடுகளை இந்த நாளில் நாம் தியானம் செய்தால் நாம் மீண்டும் மீண்டும் வாழ்வில் பாவங்களால் இடரலடையாது இருப்போம்.
இந்த குறள் அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பின் கீழ் 37வது குறளாக வருகின்றது. அறன் வலியுறுத்தல் என்பது தன்னைத் தான் பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்த முதல்வனைப் பற்றியது ஆகும்.
அறன் வலியுறுத்தல்
அறன்வலியுறுத்தல் என்பது உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் பகுதி, வேள்வி முதல்வன் அல்லது உயிர்ப்பலிக்குரியவன் ( one who sacrifice ) என அர்த்தம், அல்லது புனிதமான வேலையைச் செய்து முடித்தல் எனப்பொருள்படும் (Performing a sacred duty)
guru
குறள் 31: kural 31
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
சிறப்பீனும் = முக்தி கொடுக்கும்
செல்வமும் ஈனும் = இந்த உலக வாழ்க்கையிலும் செழிப்பான வாழ்க்கையும் கிடைக்கும்
அறத்தினூஉங்கு = தெய்வம் ஏற்றுக்கொண்ட அறத்தின் வழி செல்வதே சிறந்தது
ஆக்கம் = பயன்
எவனோ உயிர்க்கு = எல்லா உயிர்க்கும்
விளக்கம்
எல்லா உயிர்களும் இந்த பூமியில் வாழும் போதே தெய்வம் ஏற்றுக்கொண்ட அறத்தின் (சிலுவை மரணத்தின்) வழி செல்வதே சிறந்தது ஆகும், அதனால் வரும் பயன் அல்லது நன்மை என்னவென்றால் பரலோக வாழ்வான முக்தி வாழ்வு கிடைக்கும் அதனுடன் சேர்ந்து இந்த பூமியில் வாழும் போது எல்லா ஆசீர்வாதங்களும் கிடைக்கும் என்பதே அர்த்தம்
பரிசுத்த வேதாகமம்
அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடே கூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு 10:29-30
குறள் 32: kural 32
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
அறத்தினூஉங்கு = தெய்வம் ஏற்றுக்கொண்ட அறத்தை விடச் சிறந்த
ஆக்கமும் இல்லை = செயலும் இல்லை
அதனை மறத்தலின் = அந்த அறத்தின் படி வாழாவிட்டால்
ஊங்கில்லை கேடு = மேன்மை அல்லது முக்தி உண்டாகாமல் கேடு ஆகிய
நரகவாழ்க்கை உண்டாகும்.
விளக்கம்
தெய்வம் ஏற்றுக்கொண்ட சிலுவை மரணத்தின் (அறத்தின்) வழி செல்வதே சிறந்தது அதை விட ஒரு மனிதனுக்கு இந்த பூமியில் மேன்மையான அல்லது உயர்வான வாழ்வு கிடையாது அப்படிப்பட்ட வழியை மறந்து வாழ்கின்ற ஒருவருக்கு மேன்மையான பரலோக வாழ்வு அல்லது முக்தி உண்டாகாது, அந்த அறத்தின் வாழ்க்கை வாழாதவர்களுக்கு ஏற்படுவது கேடு ஆகும் அதாவது நரக வாழ்வே உண்டாகும்.
பரிசுத்த வேதாகமம்
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் (பரலோக வாழ்வை) கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. யோவான் 10:28
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1 கொரி 1018
குறள் 33: kural 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
ஒல்லும் வகையான் = பொருந்துதல் அல்லது உடன்படுதல் வேலையைச் செய்தவர்
அறவினை ஓவாதே = தெய்வம் செய்த இரட்சிப்பை விட்டு நீங்காதே
செல்லும் = செல்லுகின்ற
வாய் எல்லாஞ் = வழி அல்லது இடம் எல்லாம்
செயல் = செல்வாக்கு
விளக்கம்
பாவத்தினால் படைத்த தெய்வத்தைப் பிரிந்த மனிதனை தம்முடைய சிலுவை மரணத்தினால் உண்டான இரட்சிப்பினால் ஒன்று சேர்த்த ( பொருந்தச் செய்த அல்லது உடன்படச் செய்த ) மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் தியாகமாகிய உயிர்ப்பலியாகிய அறத்தை விட்டு நீங்காமல் வாழும் ஒருவனுக்குச் செல்லக்கூடிய வழிகள் அல்லது இடம் எல்லாம் செல்வாக்கு அதாவது நாடெங்கும் செல்லும் மதிப்பு உண்டாகும்.
பரிசுத்த வேதாகமம்
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோ 1:20
குறள் 34: kural 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
மனத்துக்கண் = மனதின் விருப்பம் அல்லது நோக்கம்
மாசிலன் ஆதல் = கறைதிரை இல்லாமல் அல்லது மாசு இல்லாமல் இருப்பது
அனைத்தறன் = தெய்வம் தந்த அறத்தின் (இரட்சிப்பின்) வழியாகும்
ஆகுல நீர பிற = மற்ற மனதுகள் எல்லாம் நீர் இல்லாத நிலம் போல ஆகும். அதாவது மற்ற மனதுகள் ஒழிந்து போகும்
விளக்கம்
வெளி வேசத்தினால் நிறைந்தைவைகள் ஆகும். அல்லது உலக ஆசையினால் நிறைந்தவைகளாகும்.
ஒரு மனிதன், தெய்வம் ஏற்படுத்தித் தந்த இரட்சிப்பு வழியாகிய அறவழியில் நடக்கும் போது அந்த மனிதனின் உள்ளமானது கறைதிரை அல்லது மாசு இல்லாமல் பரிசுத்தமாக இருக்கும். அப்படி இரட்சிப்பின் வழியில் நடக்கும் மற்ற உள்ளங்கள் அனைத்தும் வெளி வேசம் உள்ளவைகளாக்வும் உலக ஆசை நிறைந்தவைகளாக இருக்கும். அவைகள் நீர் இல்லாத நிலம் போல ஆகி பரலோக வாழ்க்கையை இழந்துவிடும்.
கண்,= நயனம், நேத்திரம், நாட்டம், நோக்கம்,
பரிசுத்த வேதாகமம்
........ பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத் 5:20-21
குறள் 35: kural 35
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
1) அழுக்காறு - பிறர் பொருள்களின் மீதும் வளர்ச்சியின் மீதும் பொறாமை
2) அவா - ஆசை, பேராசை; நம் ஐம்புலன்களின் ஆசைகளில் மூழ்குதல்
3) வெகுளி - கோபம், பிறர் மீது வெறுப்பு
4) இன்னாச்சொல் - கீழ்மையான சொற்கள், தீங்கு விளைவிக்கும் சொற்கள்; பிறர் மனதைக் காயப்படுத்தும் சொற்கள் இழுக்கா - இழக்காமல்
இயன்றது - இயற்றுதல் - செய்தல்; நடத்துதல், சம்பாதித்தல், தோற்றுவித்தல்
விளக்கம்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களையும் ஒரு மனிதனின் மனதில் இருந்து நீக்குவது தெய்வம் நமக்காக சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் உண்டான அறத்தின் செயல் ஆகும். அதாவது தெய்வம் ஏற்படுத்திக் கொடுத்த இரட்சிப்பு ஒரு மனிதனுக்குள் ஏற்படும் போது அந்த மனிதனின் உள்ளத்தில் இருந்து பொறாமை, உலக ஆசை, கோபம், பிறர் மனதை காயப்படுத்தும் சொல் ஆகியவை ஏற்படாமல் உள்ளம் அமைதியாகச் செயல்படும்..
பரிசுத்த வேதாகமம்
(மனதில் ஏற்படும் கிரியைகள்) மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,......., பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே..... கலாத்தியர் 5:19-21
குறள் 36: kural 36
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
அன்று அறிவாம் என்னா = பின்பு ஒரு நாள் தெய்வம் கொடுத்த இரட்சிப்பை அறிந்து கொள்ளலாம் என்று எண்ணாமல்
அறஞ்செய்க (அறத்தை விதைத்தல்) = தெய்வம் சிலுவையில் உண்டாக்கிய ஆத்தும மீட்பாகிய அறத்தை உடனே அறிந்து பிறர் அந்த இரட்சிப்பை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்
மற்றது (மற்று+அது) = தெய்வம் கொடுத்த அந்த இரட்சிப்பு
பொன்றும் கால் = இறக்கும் நேரத்தில்
பொன்றாத் துணை = இறவாத (பரலோக) வாழ்க்கைக்குச் சென்று சேர துணையாகும்
விளக்கம்
பின்பு ஒரு நாள் தெய்வம் கொடுத்த இரட்சிப்பை அறிந்து கொள்ளலாம் என்று எண்ணாமல் நாம் வாழும் இந்த காலத்திலேயே தெய்வம் நமக்காகச் சிலுவையில் ஏற்படுத்திக்கொடுத்த இரட்சிப்பை அறிந்து நாம் ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும். அதே போலத் தெய்வம் சிலுவையில் உண்டாக்கிய ஆத்தும மீட்பாகிய அறத்தை அதாவது இரட்சிப்பைப் பிறர் அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படி நாம் செய்யும் போது தெய்வம் கொடுத்த அந்த இரட்சிப்பு நாம் இறக்கும் போது நம்முடைய ஆத்துமா தெய்வத்திடம் சென்று பரலோக வாழ்க்கை வாழ உதவும்.
பரிசுத்த வேதாகமம்
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். யோவான் 11:25-26
குறள் 38: kural 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
வீழ் நாள் = சாவு அல்லது மரண நாள்
படாமை = (பெ) உறங்காமை
நன்றாற்றின் = தெய்வம் செய்த அறத்தின் படி செய்தால்
அஃதொருவன் = அது அல்லது அதாவது ஒருவன்
வாழ்நாள் = பூமியில் இருக்கும் காலம் வரை
வழி = பின்வருவது, முறைமை, சந்ததியினர்,
அடைக்கும் =- மறைத்தல், காவல்செய்தல்; வேலியடைத்தல்.
கல், = வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல்,.சிறு கல், பாறை, மலை,
விளக்கம்
அதாவது ஒருவன் தன்னுடைய மரண நாள் வரை தெய்வம் செய்த அறத்தைப் பின்பற்றி வாழ்ந்து அதேயே தானும் செய்யும் போது, கன்மலையாகிய (Rock - தெய்வீகமான கல்) தெய்வம் அந்த மனிதனின் சந்ததியினரோடு கூட இருந்து வேலியடைத்து தீமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்
பரிசுத்தவேதாகமம் - ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்யும் கர்த்தர்.
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். யாத் 20:6
பரிசுத்த வேதாகமம் - Jesus is the ROCK (கன்மலை)
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
As it is written, Behold, I lay in Sion a stumbling stone and rock of offence: and whosoever believeth on him shall not be ashamed ரோமர் 9:33
கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்
But the LORD is my defence; and my God is the rock of my refuge. சங்கீதம் 94:22
முழு விளக்கம் வாழ்நாள் வழியடைக்கும் கல் என்ற பக்கத்தில் உள்ளது ( GO )
இயேசுவே அந்த கல் என்பதை விளக்கும் பாடலை youtube linkல் பார்க்கவும்
THE ROCK THAT IS HIGHER THAN I
CHORUS
There is a Rock that is higher than I-
A mighty Rock that I can run to
If I abide there, I will never be moved;
His Name is Jesus, my firm foundation
https://www.youtube.com/watch?v=N4E-xIA-8AQ
குறள் 39: kural 39
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
அறத்தான் = அறம் செய்தவன் (சிலுவையில் இரட்சிப்பை ஏற்படுத்தியவர்)
வருவதே = உள்ளத்திற்குள் வருவதே
இன்பம் = ஆனந்தம் ஆகும் (பரலோக இன்பம் ஆகும்)
மற்றெல்லாம் = மற்ற உலகத்தின் காரியங்கள் எல்லாம்
புறத்த =இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை.
புகழும் இல = உயர்வான வாழ்க்கை (பரலோக வாழ்க்கைக்கு) செல்ல உதவுவைகளும் அல்ல
விளக்கம்
சிலுவையில் அறமாகிய இரட்சிப்பை ஏற்படுத்தியவர் நமது உள்ளத்திற்குள் வருவதே ஆனந்தம் ஆகும் (பரலோக இன்பம் ஆகும்) மற்ற உலகத்தின் காரியங்கள் எல்லாம் இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை.ஆகும். அப்படிப்பட்ட காரியங்கள் உயர்வான வாழ்க்கையைத் தராது அதாவது நமது ஆத்துமா பரலோக வாழ்க்கைக்கு செல்ல உதவுவைகள் அல்ல
இல்வாழ்வான் ஆகிய உள்ளத்தில் வாழ்பவனைப் பற்றி மேலும் அறிய கீழ் கண்ட பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
https://www.narrowpathlight.com/god-who-dwells-with-humans
பரிசுத்த வேதாகமம்
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளி .3:20
குறள் 40: kural 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
செயற்பு ஆலது (ஆல்+அது) = செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் ஆலமரத்தை போல
ஓரும் அறனே ஒருவற்கு = ஒருவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தக் கூடிய நிலை ஆகும்
உயற்பு ஆலது (ஆல்+அது) = மற்ற செயல்கள் எல்லாம் ஆலமரத்தைப் போல என்றும் மாறாத
ஓரும் பழி = மகிழ்ச்சியற்ற நிலையை உருவாக்கும்.
விளக்கம்
ஒருவன் தெய்வம் நமக்காகச் சிலுவையில் ஏற்படுத்திய இரட்சிப்பாகிய அறனைப் பின்பற்றி அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்த செயல்கள் அவனுக்கு ஆலமரத்தைப் போல நிலையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ( பரலோக வாழ்க்கையை ஏற்படுத்தும் ). அறனைப் பின்பற்றி நடத்தப்படாத செயல்கள் அனைத்தும் ஆலமரத்தைப் போல என்றும் மாறாத மகிழ்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும் ( நரக வாழ்க்கையை ஏற்படுத்தும் ).
பரிசுத்த வேதாகமம்
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். மாற்கு 9: 47-48