குறள் 28: நிறைமொழி மாந்தர்
( முழுமையான வார்த்தையாகிய மனித குமாரன் )
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
இந்த குறள் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது நீத்தார் என்பது எதாவது ஒரு காரியத்துக்காக தன்னுடைய இடத்தை விட்டுப் பிரிந்து வந்தவர் அல்லது மேன்மையான இடத்தை துறந்து வந்தவர் எனக் அர்த்தம் ஆகும். நீத்தார் பெருமை என்பது தெய்வம் தான் இருக்கிற மேன்மையான உலகமாகிய பரலோகத்தை விட்டு இந்த பூமிக்கு மனிதர்களை இரட்சிப்பதற்காக மனித குமாரனாக இறங்கி வந்த நோக்கத்தின் பெருமை கூறும் பகுதி ஆகும். எனக்வே நீத்தார் பெருமை என்பது வானத்தைத் துறந்து இறங்கி வந்த தெய்வமாகிய மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பெருமை கூறும் பகுதி ஆகும்.
பொதுவாகப்பார்க்கும் போது பற்றுகளைத் துறந்தவர், ஆசைகளை விட்டவர், ஐம்புலங்களின் ஆசைகளைத் துறந்தவன் என்று உலக மக்களைப் பற்றிக் குறிப்பிடுவதாகத்தெரியும் ஆராய்ந்து பார்க்கும் போது நீத்தார் பெருமை என்பது வானத்தைத் துறந்து அல்லது விட்டு இந்த பூமிக்கு வந்த மனித குமாரனைப் பற்றிக் குறிப்பிடுவதை அறிந்துகொள்ளமுடியும்.
இந்த அதிகாரத்தில் வரும் 10 குறள்களும் வானம் அல்லது பரலோகம் விட்டு வந்த தெய்வத்தின் பெருமை கூறும் பகுதி ஆகும்.
குறள் 21 = தெய்வத்தை உலக மக்களுக்கு ஒழுக்கமாகிய இரட்சிப்பை கொடுப்பதற்காக வானம் விட்டு வந்தவர் எனக்க் கூறுகிறது.
குறள் 22 = தெய்வம் வானத்தைத் துறந்து இந்த பூமிக்கு மனித குமாரனாக வந்து முதற்பலனாக உயிர்த்தெழுந்ததின் பெருமை கூறும் பகுதி அல்லது இறந்த எண்ணற்ற மனிதர்களில் இவர் இருவரே உயிர்த்தெழுந்தவர் ஆவார் அவரின் பெருமை கூறும் பகுதி ஆகும்.
குறள் 23 = இம்மை, மறுமை இவை இரண்டையும் அறிந்த தெய்வம் இந்த பூமிக்கு வந்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு மனிதர்களுக்கு மறுமை வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை கூறும் பகுதி ஆகும்,
குறள் 24 = தெய்வம் என்பவர் உலக மக்களின் ஐம்புலங்களையும் பாவம் இல்லாமல் பரிசுத்தமாகப் பாதுகாக்க இந்த உலகத்தில் கடவுளின் வித்தாக அதாவது மனித குமாரனாக வந்து உயிர்த்தவர் ஆவார் எனக் கூறுகிறது.
குறள் 25 தெய்வம் உயிர்த்தெழுந்த வல்லமைக்கு அகண்ட வானத்தில் உள்ள கோமானாகிய மிகச் சிறந்த தேவதூதர்களின் தலைவனே முழுமையான சான்று ஆகும் எனக் கூறுகிறது
குறள் 26 தெய்வம் சிறியவர்களாகிய மனிதன் ஒருவரும் செய்ய இயலாத காரியமான உயிர்த்தெழுதலைச் செய்து முடித்து பரலோகம் சென்ற பெரியவர் எனக் கூறுகிறது
குறள் 27 தெய்வம் ஐம்பொறிகளின் வலிமை தெரிந்து அதைக் கெடுக்கிற சாத்தானைச் சிலுவையில் ஜெயித்தவருடைய அன்பின் கட்டுப்பாட்டுக்குள் உலகம் இயங்குகிறது எனக் கூறுகிறது
குறள் 28 தெய்வத்தை வார்த்தை என்றும் அந்த வர்த்தை மனித குமாரனாகவும் இந்த பூமிக்கு வந்தார் எனக் கூறுகிறது
குறள் 29 தெய்வம் இமைப்பொழுது கைவிட்டாலும் உருக்கமான இரக்கங்களால் நம்மைச் சேர்த்துக்கொள்பவராகிய பரிசுத்தர் எனக் கூறுகிறது
குறள் 30 தெய்வம் சிலுவையில் உண்டான அந்த பலியினால் ஏற்பட்ட செந்தண்மையை ஏற்றுக்கொண்டு அதின் வழியாகப் பரலோகம் சென்றவர் எனக் கூறுகிறது.
குறள் 28: kural 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
நிறைமொழி = மேன்மையான வார்த்தை
மாந்தர் = மாமிசமாகி அல்லது மனித குமாரனாகி
பெருமை நிலத்து = பெருமையை இந்த உலகத்தில்
மறைமொழி = வேதத்தின் வார்த்தைகள்
காட்டி விடும் = மெய்ப்பித்து விடும்
காட்டுதல், வினைச்சொல். காண்பித்தல்; அறிவித்தல் · மெய்ப்பித்தல் · நினைப்பூட்டுதல் · படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ் செய்தல்;
விளக்கம்
தெய்வத்தின் மேன்மையான வார்த்தை, மாமிசமாகி அல்லது மனித குமாரனாகி இந்த உலகத்தில் மனித குமாரனாக வந்தார் அவருடைய பெருமையை இந்த உலகத்தில் உள்ள பரிசுத்த வேதத்தின் வார்த்தைகள் மெய்ப்பித்து விடும்
நிறைமொழி மாந்தர்
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை கர்த்தரின் வார்த்தை எனக் குறிப்பிடுகிறது. அந்த வார்த்தை மாமிசமாகி (மனிதனாகி) இந்த பூமியில் வளர்ந்தது.எனவும் குறிப்பிடுகிறது.மேலும் அந்த வார்த்தை ஜீவ வார்த்தை எனக் கூறுகிறது. மேன்மையான வார்த்தையாகிய மனித குமாரன் என அர்த்தம்
தெய்வம் வார்த்தையானவர் என்பதைத் திருவள்ளுவர் தனது 1வது குறளிலும், 5வது குறளிலும் அழகாக கூறியுள்ளார்
குறள் 1 - kural 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்பதற்கு வார்த்தை தான் கடவுள் என அர்த்தம்.
முதற்றே உலகு என்பதற்கு உலக தோற்றத்திற்கு முன்பாக என அர்த்தம்.
அதாவது உலக தோற்றத்திற்கு முன்பாகவே எழுத்து (வார்த்தை) வடிவத்தில் கடவுள் இருந்தார் என அர்த்தம் கொள்ள வேண்டும்.
குறள் 5 - kural 5
இந்த குறளில் திருவள்ளுவர் கடவுளை மாட்டு (வார்த்தை - word )எனக் குறிப்பிடுகிறார்
இருள்சேர் இருவினையும் சேராஇறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இருள் சேர் = இருளாகிய நரகம்
இரு வினை=ஜென்ம பாவம், கரும பாவம் ஆகிய இருவினை
பொருள் = மோட்சம்
புகழ்புரிந்தார் = வானுலக மகிமை கொடுத்தார்.
மாட்டு = சொல் or word
ஜென்ம பாவம் = மூதாதையர் வழியுரிமையான பாவம்
கர்ம பாவம் = செயல் பாவம்
விளக்கம்
இருளாகிய நரகத்தில் கொண்டுசேர்க்கும் ஜென்ம பாவம் கரும பாவம் ஆகிய இரு வினைகளையும் சேராத இறைவன், வார்த்தையாகி (word of God) பூமிக்கு வந்து ஒளி உள்ள இடமாகிய மோட்சம் சென்று சேர்ந்து நமக்கு வானுலக மகிமை கொடுத்தார். (பிறப்பிலும், வளர்ப்பிலும் பாவம் இல்லாதவர்)
உ
நாம் எந்த காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன் "உ" என போட்டு ஆரம்பம் செய்கிறோம் இது வார்த்தையாகிய கடவுளைக் குறிக்கிறது ( Son of GOD or கடவுளின் குமாரன்
வைணவத்தில் வார்த்தை தான் பிரம்மா எனக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம், பிரம்மா என்றால் படைத்த கடவுள் எனக் அர்த்தம் ஆகும்
The BruhatAranyaka Upanishad says, “VagyavaiBrahmma”, the word is Brahmma (creator). வாக்யா வை பிரம்மா
https://www.speakingtree.in/blog/back-to-vedas
Brahmmavindu Upanishad says, “ShabdovaiBrahmma”, the voice is Brahmma
சப்தோ வை பிரம்மா
https://www.speakingtree.in/blog/back-to-vedas
“ShabdaksharamParamBrahmma”, the voice and word became absolute God.சப்தாக்ஸ்கரம் பரம் பிரம்மா
https://www.speakingtree.in/blog/back-to-vedas
பரிசுத்த வேதாகமம்
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:1-3
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது யோவான் 1:14.
ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். 1யோவான் 1:1
இதைப்பற்றி அறிந்துகொள்ள எண்குணத்தான் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
நீத்தார் பெருமை -- அதிகாரம் 3
குறள் 21: kural 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
ஒழுக்கத்து = மனிதர்கள் மனதில் ஒழுக்கமாகிய பரிசுத்தம் உண்டாக்க
நீத்தார் பெருமை = பரலோக வாழ்க்கையை விட்டு பூமிக்குப் பிள்ளை தெய்வமாக அல்லது
மனித குமாரனாக வந்தவர் பெருமையை
விழுப்பத்து வேண்டும் = சிறப்பை தைரியமாகக் கூற வேண்டியது
பனுவல் துணிவு = புத்தகத்தின் அல்லது நூலின் கடமையாகும்
.விளக்கம்
மனிதர்கள் மனதில் ஒழுக்கமாகிய பரிசுத்தம் உண்டாக்கப் பரலோக வாழ்க்கையை விட்டு பூமிக்குப் பிள்ளை தெய்வமாக அல்லது மனித குமாரனாக வந்தவர் பெருமையைச் சிறப்பை தைரியமாகக் கூற வேண்டியது புத்தகத்தின் அல்லது நூலின் கடமையாகும்
இந்த குறளில் சொல்லப் பட்டபடி திருவள்ளுவர் தனது நூல் திருக்குறளில் தைரியமாக மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சிறப்பைக் கூறியுள்ளதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
பரிசுத்த வேதாகமம்
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:9-10
குறள் 22: kural 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
துறந்தார் பெருமை = மேன்மையான பரலோக வாழ்க்கையைத் துறந்து இந்த பூமிக்குப் பிள்ளை தெய்வமாக அல்லது மனித குமாரனாக வந்தவரின்
துணைக்கூறின் = மேன்மை கூறினால்
வையத்து இறந்தாரை = இந்த பூமியில் இறந்தவர்களை
எண்ணிக்கொண்டு = எண்ணிப்பார்த்தால்
அற்று = இறந்தவர்கள் மத்தியில் இல்லாதவரான தெய்வம் ஆவார் அதாவது உயித்தெழுந்தவர் ஆவார்
விளக்கம்
மேன்மையான பரலோக வாழ்க்கையைத் துறந்து இந்த பூமிக்கு பிள்ளை தெய்வமாக அல்லது மனித குமாரனாக வந்தவரின் மேன்மை கூறினால் இந்த பூமியில் இறந்தவர்களை எண்ணிப்பார்த்தால் தெரியும். இயேசு கிறிஸ்து இறந்தவர்கள் மத்தியில் இல்லாதவரான தெய்வம் ஆவார் அதாவது உயித்தெழுந்தவர் ஆவார்
பரிசுத்த வேதாகமம்
அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
அவர் இங்கே (கல்லறையில்) இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். லூக்கா 24:5-7
குறள் 23: kural 23
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
இருமை வகை தெரிந்து = மனித வாழ்வில் உண்டாக வேண்டிய இந்த உலக வாழ்க்கையையும் மற்றும் அவன் இறந்த பிறகு உண்டாகும் பரலோக வாழ்க்கை ( இம்மை மற்றும் மறுமை ) ஆகிய இரண்டையும் வகுத்து ஏற்படுத்தி
ஈண்டு அறம் பூண்டார் = இந்த பூமிக்கு மனித குமாரனாக வந்து சிலுவை மரணத்தை ஏற்றுப்
பரலோகம் சென்று வழி விட்ட தெய்வமானவரின்
பெருமை பிறங்கிற்று உலகு = பெருமை இந்த பூவுலகத்தில் சிறந்து விளங்கிற்று
விளக்கம்
ஒரு மனிதனின் வாழ்க்கையில் உண்டாக வேண்டிய இந்த உலக வாழ்க்கையையும் மற்றும் அவன் இறந்த பிறகு உண்டாகும் பரலோக வாழ்க்கை ( இம்மை மற்றும் மறுமை ) ஆகிய இரண்டையும் வகுத்து ஏற்படுத்திய பின்பு இந்த பூமிக்கு மனித குமாரனாக வந்து சிலுவை மரணத்தை ஏற்றுப் பரலோகம் சென்று மனிதனுக்கு பரலோகம் செல்ல வழி விட்ட தெய்வமானவரின் பெருமை இந்த பூவுலகத்தில் சிறந்து விளங்கிற்று.
பரிசுத்த வேதாகமம்
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். ரோமர் 1:5
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிற படியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். எபிரெயர் 4:14
குறள் 24: kural 24
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
உரனென்னும் = சிலுவையில் சாத்தானை வெற்றி சிறந்த (உரன் = வெற்றி)
தோட்டியான் = காவல்காரன்
ஓரைந்தும் காப்பான் = உலக மக்களின் ஐம்புலங்களையும் பாவம் இல்லாமல் காத்து
பரலோகம் அழைத்துச் செல்லும்
வரனென்னும் = சிறந்த மனிதராக இந்த பூமிக்கு வந்த மனித குமாரன் ஆவார் (வரன்=சிறந்த மனிதர்)
வைப்பிற்கு ஓர் வித்து = அவர் உலகத்துக்குக் கடவுளின் வித்தாக வந்து உயிர்த்தவர் ஆவார் (வைப்பு = உலகம்)
விளக்கம்
இயேசு கிறிஸ்து இந்த உலகில் சிறந்த மனிதராகவும் பரிசுத்தராகவும் வந்த மனித குமாரன் ஆவார். அவர் சிலுவை மரணத்தின் மூலமாக சாத்தானைச் ஜெயித்த ஒரே மனிதக் குல காவல்காரன் ஆவார். அவர் உலக மக்களின் ஐம்புலங்களையும் பாவம் இல்லாமல் காத்து அவர்களின் ஆத்துமாவைப் பரலோகம் அழைத்துச் செல்லும் தெய்வம் ஆவார். அவர் உலகத்துக்குக் கடவுளின் மகனாகிய வித்தாக வந்து உயிர்த்தவர் ஆவார்
பரிசுத்த வேதாகமம்
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். ரோமர் 1:5
குறள் 25: kural 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
ஐந்தவித்தான் = சிலுவையிலே தன்னை பலியாக ஒப்புக்கொடுத்து தன்னுடைய
ஐம்புலங்களையும் ஜெயித்தவரின்
ஆற்றல் = உயிர்த்தெழுந்த வல்லமையை
அகல் விசும்புளார் = அகண்ட வானத்தில் (பரலோகத்தில்) உள்ள
கோமான் = மிகச் சிறந்தவராகிய
இந்திரனே = தேவ தூதர்களின் தலைவனே
சாலுங் கரி = முழுமையான சான்று
விளக்கம்
இந்த பூமிக்கு வந்து மனிதகுல மீட்பிற்க்காகத் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து தன்னுடைய ஐம்புலன்களையும் ஜெயித்தவரின் உயிர்த்தெழுந்த வல்லமையை அகண்ட வானத்தில் (பரலோகத்தில்) உள்ள கோமானாகிய மிகச் சிறந்த தேவதூதர்களின் தலைவனே முழுமையான சான்று ஆகும்
பரிசுத்த வேதாகமம்
ஓய்வு நா[ட்க]ள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; மத்தேயு 28:1-6
குறள் 26: kural 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
செயற்கரிய = ஒருவரும் செய்ய இயலாத காரியமாகிய உயிர்த்தெழுதலைச்
செய்வார் பெரியர் = செய்து பரலோகம் சென்றவர் பெரியவரான தெய்வம் ஆவார்.
சிறியர் = மற்ற மனிதர்கள் எல்லாம் படைப்பிலே சிறியவர்கள்
செயற்கரிய = மனிதர்கள் தான் செய்ய முடியாத காரியமாகிய உயிர்த்தெழுதலை
செய்கலா தார் = தெய்வத்தின் துணையில்லாமல் செய்ய இயலாதவர்கள்
விளக்கம்
இந்த பூமியில் வந்து பிறந்த எந்த ஒரு மனிதனும் தேவதூதர்களிலும் சற்றுச் சிறியவன் ஆக தெய்வத்தால் படைக்கப்பட்டவன் ஆவார்கள். இயேசு கிறிஸ்துவும் அதே நிலைமையில் தான் படைக்கப்பட்டார், ஆனாலும் அவர் மனித குலத்துக்காகத் தெய்வானையின் படி நீத்தார் ஆக இந்த பூமிக்கு வந்து சிலுவை மரணத்தை ருசி பார்த்து அல்லது ஏற்றுக்கொண்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயித்தெழுந்தார். அப்படியே தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக படைக்கப் பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் ( persecution ) மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதை ( முடிசூட்டப்பட்டு பெரியவர் ஆனதை ) காண்கிறோம். இதையே இந்த குறள் அழகாக கூறுகிறது
குறள் விளக்கம்
ஒருவரும் செய்ய இயலாத காரியமாகிய உயிர்த்தெழுதலைச் செய்து முடித்து பரலோகம் சென்றவர் பெரியவரான தெய்வம் ஆவார். மற்ற மனிதர்கள் எல்லாம் படைப்பிலே சிறியவர்கள் ஏனென்றால் மனிதர்கள் தான் செய்ய முடியாத காரியமாகிய உயிர்த்தெழுதலைத் தெய்வத்தின் துணையில்லாமல் செய்ய இயலாதவர்கள் ஆவார்கள்
பரிசுத்த வேதாகமம்
ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
.......... தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும் படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் ( முடிசூட்டப்பட்டு பெரியவர் ஆனதை ) காண்கிறோம். எபிரெயர் 2:6-7,9
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், ( முந்தின பெரியவர் ) எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். கொலோ 1:17-18
குறள் 27: kural 27
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
சுவை = வாய்
ஒளி = கண்
ஊறு = உடம்பு
ஓசை = காது
நாற்றம் =மூக்கு
என்ற ஐந்தின் = என்ற ஐம்பொறிகளின்
வகை தெரிவான் = வலிமை தெரிந்து அதைக் கெடுக்கும் சாத்தானைச் சிலுவையில் ஜெயித்த தெய்வத்தின்
கட்டே உலகு = அன்பின் கட்டுப்பாட்டுக்குள் உலகம் இயங்குகிறது
விளக்கம்
ஒரு மனிதனின் ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், மெய். ஆகியவற்றின் வலிமையை அறிந்து அவற்றைக் கெடுக்கப் பார்க்கும் சாத்தானை சிலுவையில் ஜெயித்த தெய்வத்தின்
அன்பின் கட்டுப்பாட்டுக்குள் உலகம் இயங்குகிறது. அதாவது சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. மேலும் எல்லாம் ( அண்ட சராசரங்கள் ) அவருக்குள் நிலைநிற்கிறது.
பரிசுத்த வேதாகமம்
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. கொலோசெயர் 1:15-17
ஊறு
ūṟu s. touch, தீண்டுகை; 2. evil, mischief, தீமை; 3. wound காயம்; 4. murder, கொலை; 5. body, சரீரம்; 6. obstacle, hindrance, இடையூறு
குறள் 29: kural 29
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது
குணமென்னும் = ஒழுக்கத்தில் அல்லது பரிசுத்தத்தில்
குன்று ஏறி நின்றார் = குன்றைப்போல உயர்ந்த இடத்தை அடைந்து நின்ற தெய்வத்துக்கு
வெகுளி = மனிதன் மீது கோபம் ஏற்பட்டாலும்
கணமேயுங் = கணமேனும் = அந்த நிமிடத்தில்
காத்தல் அரிது = அந்த கோபம் மறைந்து விடும்
விளக்கம்
இந்த உலகத்தில் வந்து பிறந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தத்தில் உயர்ந்த இடத்தை அடைந்து நின்றவர். அந்த தெய்வத்தை அறியாமல் அவரை விட்டு விலகும் மாறுபாடான ஒரு வாழ்க்கையை மனிதர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள், அப்படிப் பட்ட மனிதர்கள் மீது கோபம் ஏற்பட்டாலும் அந்த கோபம் இமைப்பொழுதில் அல்லது அந்த நிமிடத்திலேயே அந்த கோபத்தை விட்டு விட்டு, மனிதக் குலத்தின் மேல் தான் வைத்திருக்கும் அன்பினாலும் உருக்கமான இரக்கங்களாலும் அவனை தன் வசமாகக் திரும்பவும் சேர்த்துக் கொள்ளும் இரக்கம் உள்ள தேவன் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான். லூக்கா 4:33-34
என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. ஒசியா11:7
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் (இமைப்பொழுது) மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். ஏசாயா 54 : 7-8
குறள் 30: kural 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
அந்தணர் = அழகிய குணமாகிய அருள், கிருபை, இரக்கம் உடையவன்
என்போர் = எனப்படுவார்
அறவோர் = அறன் செய்தவர் ( தெய்வத்தின் கட்டளைப்படி வேழ்வி வழியாகச்
சென்று இரத்தத்தினால் ஆன செந்தண்மை உடையவர் )
மற் றெவ்வுயிர்க்கும் = எல்லா உயிருக்காகவும்
செந்தண்மை = தன்னை தான் பலியாக ஒப்புக்கொடுத்து அந்த
இரதத்தினால் உண்டான செந்தண்மை
பூண்டொழுக லான் = ஏற்றுக்கொண்டு அதின் வழியாக சென்றவர்.
விளக்கம்
அந்தணராகிய நீத்தார் ஆகிய தெய்வம் இந்த பூமியில் தெய்வாணையின் படி வந்து எல்லா உயிருக்காகவும் தன்னை தான் பலியாக்கி (வேழ்வி, sacrifice) அந்த பலியினால் உண்டான செந்தண்மை ஏற்றுக்கொண்டு அதின் வழியாகச் சென்றவர் ஆகும்.
இந்த குறளைப் பற்றி மேலும் அறிய தெந்தண்மை என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
பரிசுத்த வேதாகமம்
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். எபிரெயர் 13:12 நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். வெளி 1:6
guru