நின்ற நரனாயிணார்
நின்ற நாராயணப் பெருமாள்
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்"
நின்ற நாராயணப் பெருமாள் என்ற பெயரின் அர்த்தத்தை நாம் பார்ப்போம்
நின்ற என்று கூறும் போது உட்கார்ந்து இருக்கிற கடவுள் எழுந்து நிற்கிறதை குறிப்பிடவில்லை.
நின்ற என்று குறிப்பிடும் போது நடந்து செல்லும் போது நிற்பதையே குறிக்கிறது. இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் பார்த்தால் அது Stood still எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தெய்வம் நடந்து செல்லும் போது ( இந்த பூமியில் மனிதனாக வந்த போது ) எதையோ தேடி அசையாமல் நிற்பது ஆகும்.
பரம் பொருளாகிய தெய்வம் ஏன் நின்றது எதற்காக நின்றது என்று அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாணுகுரு வாக்கைப் பார்த்தால் தெரியும்
ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி
எண்ணும்பொருள் ஒடுங்கையில்
நின்றிடும் பரம்
என்பது நாணுகுரு வாக்கு.
( ஒடுங்கையில் = குறைவுபடுகையில் )
விளக்கம் ( நல்ல மேய்ப்பன் - Good shepherd )
( ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? )
தெய்வம் (ஆத்துமாவை) தன்னோடு கூட வந்தவற்றை ஒன்றொன்றாய் தொட்டு எண்ணிப் பார்க்கும் போது கூட வந்தவற்றில் ஒன்று குறைவு படும் போது ( ஒடுங்கையில் ), குறைவுபட்டதைத் தேடி கண்டு பிடிக்க அசையாமல் நின்றுவிடுவாராம். அந்த காணாமல் போனதைக் கண்டுபிடித்தவுடன் தான் அந்த இடத்தை விட்டு நகருமாம் தெய்வம்.
மனிதன் தான் படைக்கப்பட்ட காரணத்தை மறந்து பாவ சந்தோசத்திலும், உலக சந்தோசத்திலும், வியாதியிலும், பிசாசின் பிடியிலும் இருந்து படைத்த தெய்வத்தை விட்டு தூரம் சென்று விட்டான். அப்படிப்பட்ட மனிதர்களை மீட்க அல்லது இரட்சிக்க தெய்வம் இந்த பூமியில் மனித உருவில் வந்து நின்று மீட்டதையே விளக்குகிறது.
தெய்வம் நின்றது ஏன் அல்லது எதற்காக என்பதற்குப் பல அர்த்தம் கொடுக்கப் பட்டுள்ளது, எது சரி என்பதை நாம் ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும். அதில் ஒரு அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அது சரிதானா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இங்குள்ள ஒவ்வொன்றையும் தொட்டு எண்ணி இது அல்ல இது அல்ல என்று விலக்கிச் சென்று கடைசியிலே இகம் எல்லாம் தீர்ந்தபின் எஞ்சுவது எதுவோ அதுவே பரம்பொருள் என்கிறார் குரு. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
நாராயணன் என்பதற்கு நரன் ஆயினார் ( நரன் ஆனவர் ) ( நரனாயினார் ) ஆகும்
நரன் என்ற வார்த்தை மனிதனைக் குறிக்கும்.
நரனாயினார் என்றால் மனிதனாக வந்து பிறந்த தெய்வம் ஆகும்.
நரனாயினான் என்ற வார்த்தை மருவி நாராயணன் என்று ஆனதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நாராயணன் என்பது நரனாயினார் தான் என்பதை நரசிம்மர் என்ற பதம் உறுதிப்படுத்துகிறது. நின்ற நாராயணப்பெருமாள் திருத்தலத்தைப் பற்றிய குறிப்பு மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளதாக இந்த வலைத்தளம் குறிப்பிடுகிறது
மைசூர் நரசிம்மர் ஆலயம்[தொகு]
இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது
https://ta.wikipedia.org/s/42o6
நரசிம்மன் ( lion of Judah )
நரசிம்மர் என்றால் மனிதனாக இந்த பூமியில் வந்து பிறந்த தெய்வம் சிங்கம் போன்ற தன்மை உடையவராக இருந்தார் எனவே அவருக்கு மனித உருவில் வந்த சிங்கம் என ஒரு பெயர் உண்டு
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். வெளி 5:5
பெருமாள் (அவனுள் அவள்)
பெருமாள் என்பது பெருமான் ( பெரும்+ஆண் ) என்ற வார்த்தையில் அவள் என்ற பெண்பால் வருவதால் பெருமாள் ஆகிறது. பெருமான் என்பது மிகவும் மதிப்புக்குரிய பெரியவர் என அர்த்தம் ஆகும்.
இதை நன்கு அறிய வேண்டும் என்றால் அம்மன் என்ற வார்த்தையைப் பார்க்க வேண்டும். அம்மா என்ற வார்த்தையில் அவன் என்ற ஆண்பால் வார்த்தை சேர்வதால் அம்மன் என்று வருகிறது
ஏன் என்றால் தெய்வம் ஒரு தகப்பனின் குணத்தையும் ஒரு தாயின் குணத்தையும் உடையவர், அப்படிப் பட்ட தெய்வத்தை கூப்பிடுவத்ற்க்காக உபயோகப் படுத்தப் பட்ட வார்த்தைகள் (அவனுள் அவள்)
பரிசுத்த வேதாகமம்
தகப்பன்
.......... தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன், உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:3,4
தாய்
.....................இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். ஏசாயா 66:12
நின்ற நரனாயின பெருமாள் என்றால் மனித உருவில் இந்த பூமிக்கு வந்து காணாமல் போன ஒரு மனிதனுக்காக அசையாமல் நின்று அவனை இரட்சித்து (அவன் ஆத்துமாவை காப்பாற்றி) பரலோகம் அழைத்துச் செல்லும் ( தந்தையின் குணத்தையும் மற்றும் தாயின் குணத்தையும் ஒன்றுசேரப் பெற்ற ) தெய்வம் ஆகும்.
தெய்வம் காணாமல் போனதை ஏன் தேட வேண்டும்?
ஏன் என்றால் இந்த பூமியில் பிறந்த எல்லா மனிதர்களின் ஆத்துமா தெய்வத்திற்குச் செந்தமானது, எனவே காணாமல் போன ஆத்துமாக்களைத் திரும்பவும் தன்னிடம் சேர்த்துக் கொள்ளத் தெய்வம் இன்றும் நின்று தேடுகிறது
பரிசுத்த வேதாகமம்
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக்கியேல் 18:4
தெய்வம் அசையாமல் நின்ற சில சந்தர்ப்பங்கள்
1) கெட்டுப்போன ஒரு மனிதனுக்காக நின்றார்.
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
அவன் அதைக்கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.---- மத்தேயு 18:11-14
2) மனந்திரும்ப விரும்புகிறவர்களுக்காக நின்றார்
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் லூக்கா 15:7
3} சுகமாக விரும்பிய ஒரு குருடனுக்காக நின்றார்.
பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று (stood still), அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். லூக்கா 18:35-43
4) அத்தி மரத்தின் மேல் ஏறி அமர்ந்து இயேசுவைப் பார்க்க நினைத்த சகேயு என்ற குள்ளனுக்காக அத்தி வரதராக நின்றார்
ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, ( நின்று ) அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள். சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:2-10
5) குணமாக்கப்பட்ட பெரும் பாடுள்ள ஸ்திரியைப் பார்க்க நின்றார்
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.அப்பொழுது ( நின்று ) இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்டகாரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். லூக்கா 8:43-48
6) பிசாசு பிடித்திருந்தவனிடம் இருந்து பிசாசை விரட்டி பன்றிகளுக்குள் அனுப்ப நின்றார்.
அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும் வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகு காலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு ( நின்று ) அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாத படிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்ளே போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார். அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது. லூக்கா 8:27-33
guru
----------------------------------------------------------------------------------------------------------------------------
நரன்
-
தமிழ்ச் சொல் தான் என்று கீழே அறியலாம். நரை (=பெருமை, உயர்வு) + அன் = நரன் = உயர்வுடையவன் = மனிதன். அஃறிணையைக் காட்டிலும் மனிதன் உயர்வானவன் என்பதால் தான் மனிதரை உயர்திணையாக வகுத்தனர் தமிழர். இந்த அடிப்படையில் மனிதனுக்குச் சூட்டப்பட்ட பெயரே நரன் ஆகும்.
-
நின்ற நாராயணப் பெருமாள்
அமைவிடம்
பெயர்: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைவிடம் ஊர்: திருத்தங்கல் ,
(திருத்தண்கால்) மாவட்டம்: விருதுநகர் மாநிலம்: தமிழ்நாடு,
தாயார் : ஸ்ரீ செங்கமல தாயார்
மூலவர் : ஸ்ரீ நின்ற நாராயணன்
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : விருதுநகர்
கடவுளர்கள்: ஸ்ரீ நின்ற நாராயணன்,ஸ்ரீ செங்கமல தாயார்
மைசூர் நரசிம்மர் ஆலயம்[தொகு]
இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது.