மாதா, பிதா, குரு, தெய்வம்
(Matha,Pitha,Guru,Theivam )
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழி தமிழ் நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு முதுமொழி ஆகும்.
பலர் மாதா, பிதா, குரு, தெய்வம்- இதில் உயர்ந்தவர் யார்? என்ற கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறார்கள்
சிலர் இறைவன் எல்லாரிலும் உயர்ந்தவராவார். எனவே, இந்த வரிசையானது, மாதாவைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர், பிதாவைக் காட்டிலும் குரு உயர்ந்தவர், குருவைக் காட்டிலும் கடவுள் உயர்ந்தவர் என்ற பொருளில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த வரிசை ஏறு முகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, இறங்கு முகமாக அல்ல என குறிப்பிடுகிறார்கள்
மேலும் சிலர், தாயின் பணி தந்தையைச் சுட்டிக் காட்டுதல், தந்தையின் பணி குருவைச் சுட்டிக் காட்டுதல், குருவின் பணி தெய்வத்தைச் சுட்டிக் காட்டுதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிலர், தாய்,தந்தை,ஆசிரியர்(குரு), மூவரும் கடவுளுக்கு இணையானவர்கள், அவர்களை வணங்கினால் வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெறலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
தமிழ் ஒரு மறைவான, அழகான மொழி, தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ள எந்த வார்த்தையானாலும், பெயர்கள் ஆனாலும் ஆராய்ந்து பார்த்து தான் அதை புரிந்து கொள்ள (முடியும்) வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழியை ஆராய்ந்து பார்த்தால் நமக்கு கிடைக்கும் விளக்கம் என்ன என்பதைப்பார்ப்போம். மாதா, பிதா, குரு ஆகிய மூவரையம் ஒன்று சேர்த்து பார்த்தால் தான் தெய்வம் யார் ? என்பது தெரியும்
மாதா + பிதா + குரு = தெய்வம்
நாம் மாதா, பிதா, குரு,தெய்வம் என்ற வார்த்தையை இரண்டு விதமாக ஆராய்ந்து பார்க்கலாம்
முதல் வகை ( குணங்கள் )
மாதாவின் குணங்கள், பிதாவின் குணங்கள் மற்றும் குருவின் குணங்கள் மூன்றையும் ஒன்று சேர பார்த்தால் தெய்வத்தின் குணம் என்ன என்பது தெரியும்
இரண்டாம் வகை ( ஆள் தத்துவம் )
தெய்வம் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய கடவுள் மூன்றில் ஒன்றான கடவுள் அதனால் தான் அவரை நாம் திரியேக தெய்வம் என அழைக்கிறோம் ( God is Trinity) எனவே மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாக்கியத்தை கீழ் கண்டவாறு அறிந்து கொள்ள வேண்டும். மாதா + பிதா + குரு = தெய்வம். அதாவது மாதா, பிதா, குரு ஆகிய மூவரையம் ஒன்று சேர்த்து பார்த்தால் தான் தெய்வம் யார் ? என்பது தெரியும்
( குணங்களின் அடிப்படையில் ) முதல் வகை
மூன்றில் ஒன்றான கடவுளின் குணங்கள் என்பது மாதா, பிதா, குரு ஆகிய மூவரின் குணங்களை அடிப்படையாக கொண்டதாக உள்ளது, எனவே மாதா, பிதா, குரு ஆகியவர்களின் குணத்தை உடையவர் தான் தெய்வம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1) மாதாவின் குணங்கள் என்ன என்று பார்ப்போம்
1. தியாக அன்புள்ளவர் (sacrificing love ) 2. கருவில் சுமந்தவர் 3. தவம் இருந்து பிள்ளை பெற்றவர்---- அதாவது இரத்தம் சிந்தி பிள்ளைபெற்றவர் 4.பிறசவித்தவர் - பிரசவம் என்பது (பிறப்பு + சவம் ) தான் சவமாகி பிள்ளை பெற்றவர் அதாவது தான் இறக்கின்ற நிலைக்குச் சென்று பிள்ளை பெற்றவர்
2) பிதாவின் குணங்கள் என்ன என்று பார்ப்போம்
நிபந்தனை அற்ற அன்பு உள்ளவர் ( unconditional love ), சுமப்பவர், காப்பவர், தேவைகளை நிறைவேற்றுபவர் அல்லது கொடுப்பவர் (provider), இரக்கம் உள்ளவர் (Compassion). உள்ளத்தின் ஆசையை அரிந்து பூர்த்தி செய்பவர் ( Empathy), கண்டிப்பானவர் (strict)
3) குருவின் குணங்கள் என்ன என்று பார்ப்போம்
நித்தியமான அன்பு உள்ளவர் ( everlasting love ), ஞானத்தை போதிப்பவர் ( wisdom),அறியாமையில் இருந்து உண்மைக்கு அழைத்துச் செல்பவர், வாழ்வில் இருளை நீக்கி ஒளியை உண்டாக்குபவர், வாழ்வு இல்லா நிலையில் இருந்து நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்பவர்
கடவுளின் குணங்கள்
மாதா, பிதா, குரு ஆகியவர்களின் குணத்தை உடையவர் தான் தெய்வம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1. தியாக அன்புள்ளவர் (sacrificing love )
தன்னை தானாகவே சிலுவையில் பலியாக சாகக்கொடுத்தவர் எனவே நாம் அவரை தியாகராஜன் என குறிப்பிடுகிறோம். இதை தான் திருவுந்தியார் தமது 1 வது பாடலில் தானாக முன்வந்து தன்னையே பலியாக சிலுவையில் ஒப்புக் கொடுத்தவர் என குறிப்பிடுகிறார்
திருவுந்தியார்— 1
அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென்றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற
2. கருவில் சுமந்தவர்
கர்ப்பத்தில் ஆதரித்தவர், காப்பாற்றினவர், தாயின் வயிற்றிலிருந்தது முதல் தேவனாயிருந்தவர்
பரிசுத்த வேதாகமம்
நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். (சங்கீதம் 71:6 )
3. தவம் இருந்து பிள்ளை பெற்றவர்
அதாவது இரத்தம் சிந்தி பிள்ளை பெற்றவர்
தெய்வம் நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டவர்
4. . பிரசவம்
பிரசவம் என்பது ஒரு பிறப்பு, ஒரு சவம் என பொருள்
.தெய்வம் நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி பின்பு உயிர்த்தெழுந்து நம்மை மீட்டுக்கொண்டவர், அவர் நம்மை அக்கிரமத்தில் இருந்து, பாவத்தில் இருந்து மீட்டு நற்கிரியைகள் செய்ய இரத்தத்தினால் சுத்திகரித்தார்.
பரிசுத்த வேதாகமம்
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோமர் 5:8 )
5.ஆசைகளை அடக்கி வாழ்பவர்
பரிசுத்த வேதாகமம்
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். ( பிலிப்பியர் 2:7 )
6. அரவணைப்பு..
தெய்வம் நம்மை அரவணைத்து ஆறுதல் தருபவர், அரவணைத்து தேற்றுகிறவர்.
பரிசுத்த வேதாகமம்
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. . (சங்கீதம் 94:19 )
7. அர்ப்பணிப்பு
8. நிபந்தனை அற்ற அன்பு உள்ளவர் ( unconditional love )
உலகத்தில் பிறந்த எந்த ஒருவரும் கெட்டுப்போகாமல் பரலோகம் செல்ல வேண்டும் என்ற அன்பை உடையவர்
பரிசுத்த வேதாகமம்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )
9. சுமப்பவர்
பரிசுத்த வேதாகமம்
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ( ஏசாயா 43:4 )
10. காப்பவர்
பரிசுத்த வேதாகமம்
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். (சங்கீதம் 121:7 )
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். ( சங்கீதம் 121:8 )
11. தேவைகளை நிறைவேற்றுபவர் அல்லது கொடுப்பவர் (provider)
பரிசுத்த வேதாகமம்
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ( மத்தேயு 7:11 )
12. இரக்கம் உள்ளவர் (Compassion).
பரிசுத்த வேதாகமம்
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. (லூக்கா 1:50 )
13. உள்ளத்தின் ஆசைகளை அறிந்து பூர்த்தி செய்பவர் ( Empathy)
பரிசுத்த வேதாகமம்
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. (சங்கீதம் 20:4 )
14. கண்டிப்பானவர் (strict)
பரிசுத்த வேதாகமம்
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். (யோவான் 16:8 )
15. நித்தியமான அன்பு உள்ளவர் ( everlasting love )
குருவின் அன்பு நம்மை இந்த உலகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும், எப்படி கடவுளுக்கு பிரியமாக வாழ்வது என்று அறிவித்து நம்முடைய ஆத்துமாவை பரலோகத்திற்கு கொண்டு செல்வது வரை உள்ளது எனவே தான் அவருடைய அன்பு நித்தியமான அன்பு என குறிப்பிடுகிறோம்
16. ஞானத்தை போதிப்பவர் ( wisdom)
கர்த்தருக்கு பயப்படும் பயத்தை சொல்லிக் கொடுப்பவர் குரு அதன் மூலமாக ஞானத்தை அடைய வைப்பவர்
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.
நீதிமொழிகள் 1:7
17. உண்மை இல்லாததில் இருந்து உண்மைக்கு ( TRUTH ) அழைத்துச்செல்பவர்
18. இருளில் இருந்து ஒளிக்கு ( LIGHT ) அழைத்துச் செல்பவர்
19. வாழ்வு இல்லா நிலையில் இருந்து நித்திய வாழ்வுக்கு ( LIFE ) அழைத்துச் செல்பவர்
பரிசுத்த வேதாகமம் இயேசுவே சத்தியம், இயேசுவே ஒளி, இயேசுவே நித்திய வாழ்வு.என கூறுகிறது As long as I am in the world, I am the light of the world
உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.
John 14:6
Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
இதை வைணவத்தில் கீழ் கண்டவாறு குறிப்ப்டுகிறார்கள்
Asatoma Sad-Gamaya (சத்தியம்)
Tamaso Maa Jyotir-Gamaya (ஓளி)
Mrytyor-Maa Amritam Gamaya (ஜீவன்)
குரு (Guru)
குரு என்ற வார்த்தை தெய்வீக வடிவமாகவே பார்க்கப்படுகிறது, இந்த வார்த்தைக்கு ஒரு உலகத்தில் இருக்கும் ஆசிரியர், ஆசான், வாத்தியார் என எடுத்து அர்த்தம் தேடுவது தவறு.
அகத்தியர் தனது அகத்தியர் ஞானம் 30 ல் 23 வது பாடலில் குருவாய் வந்து உதித்து (பிறந்து) என மனித உருவில் வந்து இந்த பூமியில் பிறந்த தெய்வத்தை குறித்து பாடுகிறார்
அகத்தியர் ஞானம் 30 ல் 23 வது பாடல்
வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்
குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.
பார்க்கவும் youtube link
https://www.youtube.com/watch?v=OWekkZCg2sg&t=33s
எனவே குரு என்ற வார்த்தை மனித உருவில் வந்த கடவுளாகிய பிள்ளை தெய்வத்தை (Son of GOD) கூறுவதாகவே அமைகிறது. எனவே மனித உருவில் வந்த கடவுளாகிய பிள்ளை தெய்வத்தை (Son of GOD) தவிர மற்றவர்கள் தன்னை குரு என அழைக்ககூடாது. இதைப்பற்றி இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடும் போது கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குரு என குறிப்பிடுகிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப் படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
மத்தேயு 23:10
எனவே மாதா பிதா குரு தெய்வம் என்ற வார்த்தை மனித உருவில் வந்த தெய்வமாகிய இயேசுவையே குறிப்பிடுகிறது
( ஆள் தத்துவம் ) இரண்டாம் வகை
திரித்துவம் ( TRINITY )
கிறித்தவ இறையியலின்படி கடவுள், இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள் தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறுபாடும் இன்றி, இந்த மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. இதனால் கிறிஸ்தவ சமயத்தினர் கடவுளை மூவொரு இறைவன் என்று அழைக்கின்றனர்.
பரிசுத்த வேதாகமம் மாதாவை பரிசுத்த ஆவியாகவும் ( Spirit the God ), பிதாவை பிதாவாகவும் (Father the God ) குருவை இயேசுவாகவும் (Son the God ) அறிவிக்கிறது
இதைப்பற்றி திருவுந்தியார் தனது வது பாடலில் திரியேக தெய்வத்தை கீழ் கண்ட வாரு குறிப்பிடுகிறார்
திருவுந்தியார் தனது 5 வது பாடலில் ஏகனு மாகி அநேகனும் ஆனவன் (ஒருவர் மூவராக செயல்பட கூடியவர் ---- GOD IS TRINITY ) என்று கடவுளை பாடுகிறார்
திருவுந்தியார் 5
ஏகனு மாகி யநேகனு மானவன்
நாதனு மானானென் றுந்தீபற
நம்மையே யாண்டனென் றுந்தீபற.
அகத்தியர் தனது அகத்தியர் ஞானம் 30 ல் முச்சுடரு மொன்றாகும் மும்மூர்த்தியல்ல மூவருமே ஆளுருவ மொன்றேயாகும் என்று பாடுகிறார்
அகத்தியர் பாடல்
முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தி யல்ல
மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும்
அச்சுதா யிவர்களுமே ஆண்பெண் அல்ல
அரனுமல்ல, லிங்கமல்ல, அநாதியான
சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி
எச்சரிக்கை கொண்டு நட அப்பா, அப்பா!
எண்ணில்லா முக்திவழி யெய்து வாயே!
திருவள்ளுவர் மூன்றில் ஒன்றான தெய்வத்தை குறிப்பிடும் போது இயல்புடைய மூவர் என குறிப்பிடுகிறார், தனது முதல் குறளில் தெய்வத்தை ஆதிபகவன் என குறிப்பிடுகிறார். ஆதி + பகவன். பகு + அவன் = பகவன் ( பகு = பிரி )
ஒருவராய் இருக்கும் இறைவன் தம்மை தாமே பிரித்து மூவராக ஆனார் என மூன்றில் ஒன்றான தெய்வத்தை பற்றி குறிப்பிடுகிறார். மாதா என்ற வார்த்தை பரிசுத்த ஆவியை குறிப்பதாக உள்ளது
பரிசுத்த ஆவியை பற்றி திருவள்ளுவர் குறிப்பிடும் போது வானத்தில் இருந்து வரும் பரிசுத்த ஆவியை வான் சிறப்பு என குறிப்பிடுகிறார் வான் சிறப்பு என்பது வானத்தில் இருந்து வரும் அருள் அல்லது கடவுளின் ஆவி அதாவது தூய ஆவி ( HOLY SPIRIT ) பற்றிய சிறப்பு கூறும் பகுதி ஆகும்
பொதுவாக பார்க்கும் போது நீர் மற்றும் மழையைப்பற்றி குறிப்பிடுவதாக தெரியும் ஆராய்ந்து பார்க்கும் போது வான் சிறப்பு என்பது வானிலிருந்து வரும் அமிழ்தம் அல்லது தூய ஆவியைப்பற்றி குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடியும்.
திருவள்ளுவார் தம்முடைய 11 வது குறளில் வானிலிருந்து வரும் ‘அருள்’ அல்லது ‘மாரியை’ அமிழ்தம் என குறிப்பிடுகிறார், அமிழ்தம் என்பதற்கு தேவலோகத்தில் உள்ள பானம் அதாவது `பரிசுத்த ஆவி` என்று பொருள்
குறள் 11
வானின் றுலகம் வழங்கி வருதலால்,
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
திருவள்ளுவர் தனது 211 வது குறளில் மாரி மாட்டு என கடவுளை குறிப்பிடுகிறார்.
குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ, உலகு.
வார்த்தையாகிய கடவுளின் ஆவி ( மாரி ) நம்மிடம் இருந்து எந்த வித கைமாறும் எதிர்பாராமல் நமக்கு செய்த ஒப்பற்ற செயலுக்கு அதாவது நம்மை மீட்டு நமக்கு பரலோக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நாம் பதில் செய்ய நினைத்தால் இந்த உலகம் கொள்ளாது என கூறுகிறார்.
குரு
குரு என்ற வார்த்தை தெய்வீக வடிவமாகவே பார்க்கப்படுகிறது, இந்த வார்த்தைக்கு ஒரு உலகத்தில் இருக்கும் ஆசிரியர், ஆசான், வாத்தியார் என எடுத்து அர்த்தம் தேடுவது தவறு.
அகத்தியர் தனது அகத்தியர் ஞானம் 30 ல் 23 வது பாடலில் குருவாய் வந்து உதித்து (பிறந்து) என மனித உருவில் வந்து இந்த பூமியில் பிறந்த தெய்வத்தை குறித்து பாடுகிறார்
அகத்தியர் ஞானம் 30 ல் 23 வது பாடல்
வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்
குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே
எனவே குரு என்ற வார்த்தை மனித உருவில் வந்த கடவுளாகிய பிள்ளை தெய்வத்தை (Son of GOD) கூறுவதாக அமைகிறது. எனவே மனித உருவில் வந்த கடவுளாகிய பிள்ளை தெய்வத்தை (Son of GOD) தவிர மற்றவர்கள் தன்னை குரு என அழைக்கக் கூடாது. இதைப்பற்றி இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடும் போது கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குரு என குறிப்பிடுகிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
மத்தேயு 23:10
எனவே மாதா பிதா குரு தெய்வம் என்ற வார்த்தை மனித உருவில் வந்த தெய்வமாகிய இயேசுவையே குறிப்பிடுகிறது
References
1. டாக்டர்மு. தெய்வநாயகம் M.A., Ph.Dஅவர்கள்எழுதியமெய்கண்டார்அருளியசிவஞானபோதம்
2. திருக்குறள் – அடிப்படைகிறிஸ்தவமே by கிறிஸ்டோபர் M
3. சைவசித்தாந்தத்தின்முதல்சாத்திரமானதிருவுந்தியார்இன்அடிப்படை கிறித்தவமா? byசீர்காழிசிவ.சந்திரசேகரன்
4.வேதஞானவித்தகர், மறைதிரு, அமரர் N.J.S சிவசுந்தரம்எழுதியமுக்திவழி
5.NarsanrorInstitue of Leadership Training (NILT)
6. Back to Vedas by NimathiNilayam
https://www.speakingtree.in/blog/back-to-vedas
7. சைவசித்தாந்தநூல்கள் – VI
https://shaivam.org/saiva-siddhanta/thiruvundiya-uyyavandadeva-nayanar