top of page


குரு யார் ? ( Guru )

"நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார் - இயேசு"


உள்ளே

சத்குரு, சற்குரு,சச்சிதானந்தன், asato ma sadgamaya, அகத்தியர் கூறும் குரு, அவ்வையார் கூறும் குரு, கோடு ஆயுதம் என்றால் என்ன?, அகண்ட தலம், பரம் பொருள், முச்சுடர், மும்மூர்த்தி, ஒளி, சத்தியம், இருள், ஜீவன், light, life, truth, darkness, ஆனந்தம், ஒளவையார், குவலயம், உருவாய், அருவாய்,
 

குரு என்ற வார்த்தை பல இடங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது, பல சாதுக்கள் மற்றும் புனிதர்கள் தங்களை குரு என அழைக்கிறார்கள். சிலர் தங்களைச் சத்குரு என அழைக்கிறார்கள், இது சரிதானா என
ஆராய்ந்து பார்க்கவேண்டும்.


குரு என்பது யாரைக்குறிக்கிறது

குரு என்றால் இருளை நீக்குபவர் என அர்த்தம், குரு என்ற வார்த்தை மனித உருவில் வந்த கிறிஸ்துவாகிய இறைவனையே குறிக்கிறது


சத் அல்லது சற் என்றால் என்ன?

சத் (Sat) (சமஸ்கிருதம்: सत्) எனும் (சற் என்ற தமிழ்)  சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது  


சத் ( சற் ) என்ற வார்த்தை சத்தியம் என்ற வார்த்தையைக் குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

asato ma sadgamaya ( அசத் தோமா சத் கமய )  இந்த வரியின் அர்த்தம்  சத்தியம் இல்லாத்தலிருந்து சத்தியத்திற்கு என்னை நடத்தும் என அர்த்தம். சத்தியமாக இருக்கும் தெய்வம் மட்டுமே ஒரு மனிதனைச் சத்தியத்திற்கு நேராக வழி நடத்த முடியும்.


சத் (Sat) (சமஸ்கிருதம்: सत्) எனும்  சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது.


சத்குரு அல்லது சற்குரு என்றால் உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளாகிய கிறிஸ்துவையே குறிக்கிறது.


அகத்தியர் தனது அகத்தியர் ஞானம்  30 ல் 23 வது பாடலில்  உயிர்த்தெழுந்து அகண்ட தலம் ( heavan ) சென்ற தெய்வத்தை குரு எனக் குறிப்பிடுகிறார்.


அகத்தியர் ஞானம்  30 ல் 23 வது பாடல்                                                                                                                                   வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின் 
குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே

( குவலயம் = உலகம் )    


மேலும் அகத்தியர் தனது  அகத்தியர் ஞானம் 30ல் தெய்வத்தை  சச்சிதானந்தன் ஆகிய சத்குரு எனக் குறிப்பிடுகிறார் இது மனிதர்களைக் குறிப்பிடவில்லை                                                             

சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி     
                                                                                                                              சச்சிதானந்தன் என்ற வார்த்தைக்கு நித்திய ஆனந்தம் அளிக்கும் கடவுள் என அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.     ஆனந்தம் என்றால் பரலோக இன்பம் (heavenly bliss, பேரின்பம்) என அர்த்தம்.

சச்சிதானந்தன்    

 https://ta.wiktionary.org/s/1uw0
உண்மைஅறிவுஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய  
பரம் பொருள்நித்திய ஆனந்தம் அளிக்கும் கடவுள்


அகத்தியர் பாடல் !      அகஸ்தியர் ஞானம் - 30

முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தி யல்ல
மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும்
அச்சுதா யிவர்களுமே ஆண்பெண் அல்ல
அரனுமல்ல, லிங்கமல்ல, அநாதியான
சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி
எச்சரிக்கை கொண்டு நட அப்பா, அப்பா!
எண்ணில்லா முக்திவழி யெய்து வாயே 
                                   

ஔவையார்        
ஔவையார் தனது விநாயகர் அகவலில் கோடாயுதத்தால் கொடுவினை களைந்த தெய்வத்தை குரு என அழைக்கிறார். அதற்கு அர்த்தம் கோடு ஆயுதத்தால் ( மரத்தால் ஆன கொலைக் கருவியில்) நமக்காகப் பலியாகி நமது கொடு வினைகளைக் களைந்த தெய்வம் ஆகும்.                                                        


குருவடி வாகிக் குவலயந் தன்னில்    (குரு வடிவாகி உலகம் தன்னில்)                                       
திருவடி வைத்துத் திறமிது பொருளென                                       
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்                                    
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே      
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25
                          
(குவலயம் = உலகம்      ---- கோடாயுதம் = மரத்தால் ஆன காவுதடி அல்லது சிலுவை)


திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 51  

அருணகிரி நாதர் தான் எழுதிய அநுபூதியில் சத்தியமாய், ( Truth ) ஒளியாய், ( Light ) நித்திய ஜீவனாய், (  eternal Life ) வழியாய் ( way to Heaven ) இருப்பவர் தான் குருவாகிய குகன் என அழைக்கிறார். இயேசு நானே வழியும், சத்தியம், ஒளியாய் மற்றும் ஜீவனாகவும்இருக்கிறேன் எனக் கூறுகிறார்.

யோவான் 14:6

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.  

(Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.)                                                          John 9 : 5   As long as I am in the world, I am the light of the world. 


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


)  பாடல் அர்த்தம்

 

உருவாய்        =   உருவத்தில் இருப்பவராய்

அருவாய்,       =   உருவம் இல்லாதவராய்

உளதாய்        =   நம்முடன் சத்தியமாய், உண்மையாய் இருப்பவர்

இலதாய்        =   மரித்தவராய்
மருவாய்        =   இனைப்பவராய்

மலராய்,        =   மலர் போல மலர்ந்தவராய் (உயிர்த்தவராய்)

மணியாய்       =   கோதுமை மணி போலப்பலன் கொடுத்தவராய்

ஒளியாய்        =   உலகிற்கு ஒளியாய்
கருவாய்        =   உலகின் கருப்பொருளாய் (மையப்பொருளாய்)

உயிராய்        =   நித்திய ஜீவனாக ( Everlasting Life )

கதியாய்        =   வைகுண்டம் / மோட்சம் செல்லும் வழியாய்

விதியாய்      =   தெய்வ ஆனையின்படி (கட்டளை) பூமிக்கு வந்தவராய்
குருவாய்       =  பரலோகம் அழைத்துச்செல்லும் கிறிஸ்துவாய் (குரு)

வருவாய்,      =   திரும்பவும் வருகிறவராய்

அருள்வாய்     =   அருள் (ஆவியின் வரம்) தருபவராய்

குகனே         =   கிறிஸ்துவே ( son of God ), குருவே      

 

இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழு பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட விசயங்களை இந்த பாடலின் ஆசிரியர் நான்கு வரிகளில் சொல்லி விட்டார். நாம் அதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்

 

2 ) விளக்கம்

உருவமே இல்லாதவர், தெய்வ ஆனையின் படி உலகிற்கு ஒளியாய், மனித உருவில் பூமிக்கு வந்து, பாவத்தில் இருந்த மனிதக்குலத்தை கடவுளோடு இணைக்க, கோதுமை மணி போல மரித்து, உயிர்த்து, கருப்பொருளாகி, இன்றும் நம் உள்ளத்தில் வாழ்ந்து, மனிதர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் வழியாகி, குரு என்ற கிறிஸ்துவாகி, திரும்பவும் பூமிக்கு நியாயாதிபதியாய் வருபவரே, ஆவியின் அருள் (வரம்) தருவாய் கிறிஸ்துவே (குருவே)  


Meaning of the mantra ‘Asatoma Ma Sadgamaya’

asato ma sadgamaya
tamaso ma jyotirgamaya
mrtyorma amrtam gamaya
om shanti shanti shanti.

 

Lead me from the asat to the sat.
Lead me from darkness to light.
Lead me from death to immortality

Om Peace Peace Peace.
(Brhadaranyaka Upanishad — I.iii.28)

https://www.tamilbrahmins.com/threads/asatoma-ma-sadgamaya.21929/


Lead me from the untruth to the truth   
Lead from the darkness to the light:
Lead me from death to immortality:
Let there be peace peace and peace fulness.

 

குரு என்பவர் மனிதனை இருளில் இருந்து ஒளிக்கும், உண்மை இல்லாததில் இருந்து உண்மைக்கும், மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கும் வழி நடத்துபவர் ஆகும்.

இயேசு கிறிஸ்து நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்றும் நானே ஒளியுமாய் இருக்கிறேன் என்று கூறுகிறார்.
John 14:6  Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.)

John 9 : 5  As long as I am in the world, I am the light of the world. 


பரிசுத்த வேதாகமம்

இயேசு கிறிஸ்து குருவைப் பற்றி குறிப்பிடும் போது கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாயிருக்கிறார். மற்றவர்களை குரு என்று அழைக்கப்படாதிருங்கள் எனக்கூறுகிறார்.

கிறிஸ்து என்றால் இரத்தம் சிந்தி மீட்டவர் என அர்த்தம்.

நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

மத்தேயு 23:10     


மேலே கூறியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இயேசு கிறிஸ்துவே குருவாய் வெளிப்படுவார். (தெரிவார்).                                                                                                     

bottom of page