
பார்வதி
( பார்வதி, மரியாள் (mary), மரியம், மோகினி )
இந்த உலகத்தில் மனிதனாக வந்து பிறந்த தெய்வத்திற்க்கு உதவிய தாய்க்கு உலகத்தின்வழி என்ற காரணப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.. .இது ஒரு பெண்ணின் பெயர் அல்ல. .இது ஒரு பெண்ணின் குணத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல் ஆகும்.
கடவுளின் மகனைப் பெற்றெடுத்த ஒரு பெண்ணின் கதாபாத்திரம் இது ( this is a character of a woman who gave birth the son of God ) பார்வதி என்ற வார்த்தை ஒரு Symbolic அதாவது ஒரு குறியீட்டு அல்லது அடையாள வார்த்தை ( குறியீட்டுப் பிரதிநிதித்துவம் என்பது மனரீதியாக அடையாளப் படுத்தப்படுத்த உதவும் செயல்முறையாகும்)
பார்வதி என்பது ஒரு பெயர் அல்ல பார்வதி என்பது தெய்வம் இந்த பூமியில் வந்து மனிதனாகப் பிறக்க உதவிய தாயயை குறிக்கும் ஒரு அடையாளச்சொல் ஆகும், அது ஒரு காரணப்பெயர் ஆகும். அது எந்த வகையில் சரி என்பதைப்பார்ப்போம். பார்வதி என்ற வார்த்தையைக் கீழ்க்கண்டவாறு பிரித்துப்பார்க்க வேண்டும். பார்வதி என்ற வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால் பார் + வதி ஆகும், பார் என்றால் உலகம், வதி என்றால் வழி என்று அர்த்தம் ஆகும்.
பார்வதி = பார்+வதி பார் = உலகம் வதி = வழி
University of Madras Lexicon
வதி
vati n. cf. pathin. 1. Way; வழி.(பிங்.)
https://agarathi.com/word/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf
பிள்ளை தெய்வம் ஒரு கன்னியின் மூலமாகப்பிறக்க வேண்டும் என்பது ஒரு தெய்வ வாக்கு
(இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 740-700 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது ) பரிசுத்த வேதாகமம்
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். --- ஏசாயா 7:14
அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.லூக்கா 1:34,35
Quran
19:19. “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார். 19:20. அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்19:21. “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். 9:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
Bhavishya-purana
பவிஷ்ய புராண உரை 23 இயேசு ஒரு கன்னிப் பெண்ணுக்குப் பிறந்தார் என்பதை விளக்குகிறது மற்றும் உரை 30 இயேசுவே மேசியா என்பதை விளக்குகிறது
Text 23
ko bharam iti tam praaha
su hovacha mudanvitah
iishaa purtagm maam viddhi
kumaarigarbha sambhavam
“The king asked, ‘Who are you sir?’ ‘You should know that I am Isha Putra, the Son of God’. he replied blissfully, and ‘am born of a virgin.’ ”
"அரசர் கேட்டார், 'அய்யா நீங்கள் யார்?' 'நான் கடவுளின் மகன் ஈஷா புத்ரா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்'. அவர் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார், நான் ஒரு கன்னிப் பெண்ணில் பிறந்தேன்.
Text 30
isha muurtirt-dradi praptaa
nityashuddha sivamkari
ishamasihah iti ca
mama nama pratishthitam
“Having placed the eternally pure and auspicious form of the Supreme Lord in my heart, O protector of the earth planet, I preached these principles through the Mlecchas’ own faith and thus my name became ‘isha-masiha’ (Jesus the Messiah).” பூமியின் பாதுகாவலரே, இறைவனின் நித்திய தூய்மையான மற்றும் மங்களகரமான வடிவத்தை என் இதயத்தில் வைத்து, நான் இந்த கொள்கைகளை மிலேச்சர்களின் சொந்த நம்பிக்கையின் மூலம் உபதேசித்தேன், இதனால் எனது பெயர் 'இஷா-மசிஹா' என்று ஆனது." https://www.indiadivine.org/the-prediction-of-jesus-christ-in-the-bhavishya-purana/
கன்னியின் மூலமாகப் பிறந்தவர் (ஆண் துணையில்லாமல் பிறந்தவர்)
இந்த உலகத்தில் தெய்வம் மனிதனாகப் பிறப்பதற்கு ஒரு ஆண் துணையில்லாமல் அதாவது தெய்வத்தின் பிறப்பு ஒரு பரிசுத்த பிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தெய்வத்தின் வார்த்தையின் படியும், அவரது ஆவியின் உதவியுடன் பிறந்ததால் கன்னியின் மூலமாகப் பிறந்தவர் என அழைக்கப்படுகிறார். இதே நிகழ்வு பற்றிக் வைணவத்தில் கூறும் போது கடவுளே (விஷ்ணு) கன்னியாக (மோகினியாக) உருமாறி பிள்ளை தெய்வத்தை (ஐயப்பன் ) பெற்றாதாகக் கூறப்படுகிறது. இதே நிகழ்வு அய்யனார் பிறப்பு பற்றி கூறும் போதும் கடவுளே (விஷ்ணு) க்ன்னியாக (மோகினியாக ) மாறி கடவுளோடு சேர்ந்து அய்யனார் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அதே போல் பிரம்மாவின் பிறப்பைக் கூரும் போது விஷ்ணு அவர்களின் தொப்புள் கொடியில் இருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப்படி ஈஸா, ஐயப்பன், அய்யனார், பிரம்மா ஆகிய நான்கு பெயர்களும் இயேசுவையே குறிக்கிறது.
கடவுள் மனிதனாகப்பிறப்பதற்கு இறைவன் தெரிந்தெடுத்த கன்னி மரியாள் (Mary). இந்த நிகழ்வு பரிசுத்த வேதாகமத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. இதே நிகழ்வு பற்றி குர்ஆன் கூறும் போது கன்னியாகிய மரியம் ஈஸாவை (இயேசு) கடவுளின் வார்த்தையாலும், கடவுளின் ஆவியாலும் பெற்றெடுத்தார் எனக் குறிப்பிடுகிறது.
சைவத்தில் கடவுள் மனிதனாகப் பிறப்பதற்கு உதவிய பெண்ணின் பெயர் பார்வதி எனக் குறிப்பிடுகிறது.
வைணவத்தில் கடவுள் மனிதனாகப் பிறப்பதற்கு உதவிய பெண்ணின் பெயர் மோகினி எனக் குறிப்பிடுகிறது. (விளக்கம் கீழே)
குர்ஆனில் கடவுள் மனிதனாகப் பிறப்பதற்கு உதவிய பெண்ணின் பெயர் மரியம் எனக் குறிப்பிடுகிறது. (விளக்கம் கீழே)
அய்யனார் பிறப்பதற்கு உதவிய பெண்ணின் பெயர் மோகினி எனக் குறிப்பிடுகிறது (விளக்கம் கீழே)
இந்த நான்கு பெயர்களும் ஒரே தாயாகிய மரியாளையே குறிக்கிறது, இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். (விளக்கம் கீழே)
1 ) பார்வதி
உலகத்தின் வழி என்ற கன்னியின் மூலமாகப் பிறந்த பிள்ளை தெய்வத்தின் குணங்கள்
a) பிறப்பு (அழுக்கு உருண்டை பிடித்து வைத்தல்)
b) இறப்பு (தலை வெட்டப்படுதல்)
c) இரத்தம் சிந்தப்படுதல் (தலை வெட்டப்பட்டவுடன் இரத்தம் முழுவதும் தரையில் சிந்தப்படுகிறது)
d) உயிர்த்தெழுதல் (வேறு ஒரு தலையை ஒட்டவைத்து உயிர் பெறுதல்)
e) வலது பக்கம் அமர்தல் (உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று இறைவனின் வலது பக்கம் அமர்தல்)
1) கன்னியின் மூலமாகப் பிறந்தவர். ( பிறப்பு )
தெய்வம் (பிள்ளை) கன்னியின் வயிற்றில் பிறந்தவர். அதாவது ஒரு உலக மனிதனின் துணையில்லாமல் அதாவது கடவுளின் வார்த்தையாலும், அவரது ஆவியினாலும் இந்த பூமியில் பிறந்தவர் தான் பிள்ளை தெய்வம். இதை வெளிப்படுத்தப் பல விதமான கதைகள் கூறப்படுகின்றன.
a) பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. இப்படி ஒரு பிள்ளை தெய்வ அவதாரக்கதை உள்ளது
b). பார்வதி தனது உடலில் இருக்கும் அழுக்கையெல்லாம் தேய்த்துத் திரட்டி உருண்டையாக்கி, அந்த உருண்டை ஒரு ஆளாக உருவெடுக்க வேண்டுமென்று நினைத்தார்கள். அந்தப்படியே அந்த அழுக்கு உருண்டை உடனே ஒரு மனித உருவமாகி பிள்ளை தெய்வம் ஆகிவிட்டது. பார்வதி அந்த அழுக்கு உருண்டை மனிதனைத் தனது குளியல் அறைக்கு வெளியில் காவலாளியாய் இருக்கும்படி நியமித்தார்கள். இப்படி மற்றும் ஒரு பிள்ளை தெய்வ அவதாரக்கதை உள்ளது.
எனவே தான் மார்கழி மாதம் கோலம் போடும் போது சாணியைப் பிள்ளை மாதிரி பிடித்து வைத்து அதின் மேல் பூசனிப்பூவை வைப்பது நமது தமிழ் நாட்டுப்பழக்கம். தற்போது இந்த காரியம் குறைந்து கொண்டே வருகிறது
2) தலை வெட்டப்படுதல் ( இறப்பு )
இந்த கதையில் சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்காததால் கோபம் கொண்டு பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்
3) இரத்தம் சிந்தப்படுதல் (தலை வெட்டப்பட்டவுடன் இரத்தம் முழுவதும் தரையில் சிந்தப்படுகிறது)
தலை வெட்டப்பட்டவுடன் வெளிப்பட்ட இரத்தம் இந்த பூமியில் சிந்தப்படுகிறது. அந்த நிகழ்வு இந்தக்கதையில் மறைபொருளாக இருக்கிறது.
4.) உயிர்தெழுந்தவர் (வேறு ஒரு தலையை ஒட்டவைத்து உயிர் பெறுதல்)
இந்த நிகழ்வு உயிரை விட்ட பின்பு திரும்பவும் பெற்றுக்கெண்டதைக் காண்பிக்கிறது
இந்த நேரத்தில் அங்கு வந்த பார்வதி தேவி கோவம் கொல்ல சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
5) பரலோகம் சென்று வலது பக்கத்தில் அமர்ந்தவர்
உயிர்த்தெழுந்த தெய்வம் பரலோகம் சென்று பிதாவின் வலது பக்கம் அமர்ந்து இருக்கிறார். எனவே தான் அவர் வலம்புரி பிள்ளை என அழைக்கப்படுகிறார்
இந்த கதையின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தால் மறைந்து இருக்கும் உண்மைகள் தெரிய வரும்
முதலில் பிள்ளை தெய்வத்தின் தலை வெட்டப்பட்டது
இரண்டாவது தெய்வத்தின் தலை வெட்டப்பட்டதால் இரத்தம் இந்த மண்ணில் சிந்தப்பட்டது
மூன்றாவதாக இறந்து போன தெய்வம் திரும்பவும் உயிர் பெற்று உயிர்த்தெழுந்தார். அப்படி உயிர்த்தெழுந்தவர் பரலோகம் செல்வதற்கான மேனியைப் பெற்றுக்கொண்டார்.
நான்காவது உயிர்த்தெழுந்த தெய்வம் பரலோகம் சென்று பிதாவின் வலது பக்கம் அமர்ந்து இருக்கிறார். எனவே தான் அவர் வலம்புரி பிள்ளை என அழைக்கப்படுகிறார்.
.
தெய்வம் ஒரு கன்னியின் மூலமாகத்தான் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது தெய்வத்தின் திட்டம், இந்த கதையில் அந்த கன்னியாக இந்த பூமியில் வந்து பிள்ளை தெய்வத்தை உண்டாக்கிக் கொடுத்தவருக்கு பார்வதி என்ற காரணப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ( இந்த பூமியில் பிறந்த ஒரு கன்னிப்பெண் பிள்ளை பெற்றால் அது பாவமாகக் கருதப்படும் எனவே தெய்வ நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண் துணை இல்லாமல் பிள்ளை தெய்வம் உருவானதாகக் கூறப்படுகிறது )
1) இயேசுகிறிஸ்துவின் பிறப்பு
ஒரு கன்னியின் மூலமாக இயேசு பிறப்பார் எனப் பரிசுத்த வேதாகமம் நமக்கு இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே குறிப்பிடுகிறது.
ஏசாயா 7:14
(இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 740-700 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
மேலே சொல்லப்பட்ட தெய்வவாக்கின் படி இயேசு கிறிஸ்து கன்னியாகிய மரியாளின் (உலகத்தின் வழி ) மூலமாக இந்த உலகத்தில் பிறந்தார்.
லூக்கா 1:30-35
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
2) இயேசுகிறிஸ்துவின் இறப்பு
அவர் மனிதக் குலத்தின் பாவத்திற்காகவும், சாபங்களுக்காகவும் இந்த உலகத்தில் மனிதனாக வந்து பிறந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.
மாற்கு 9:31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
ரோமர் 4:25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
3) இரத்தம் சிந்தப்படுதல்
ஒரு மனிதனின் பாவம் போவதிற்காக ஒரு ஆடு பலியாக கொடுக்கப்பட வேண்டியுள்ளது. அதே போல் தெய்வம் இந்த உலகத்தின் பாவம் போக்கத் தெய்வமே மனிதனாகப் பிறந்து தன்னுடைய இரத்தம் முழுவதும் இந்த பூமியில் சிந்தி இந்த உலகத்தின் பாவத்தை போக்கினார். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஒரு பலியின் நிறைவு ஆகும்.
எபிரெயர் 9:14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனசாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரெயர் 10:10,12 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
4.) இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தவர்
அவர் மனிதக் குலத்தின் பாவத்திற்காகவும், சாபங்களுக்காகவும் இந்த உலகத்தில் ம்னிதனாக வந்து பிறந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, மூண்றாம் நாள் உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.
ரோமர் 1:4,5 இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
5)வலது பக்கம் அமர்ந்தவர் (வலம்புரி)
அவர் மனிதக் குலத்தின் பாவத்திற்காகவும், சாபங்களுக்காகவும் இந்த உலகத்தில் மனிதனாக வந்து பிறந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.
ரோமர் 8:33,34 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
Mary in Islam (mariyam)
மரியம், ஈசாவின் (இயேசு) தாயார், குர்ஆனில் பெயரிடப்பட்ட ஒரே பெண் என இஸ்லாத்தில் ஒரு தனி உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளார், பத்தொன்பதாவது சூரா மரியம் என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அவள் பெயரிடப்பட்டது. பைபிளை விடக் குரான் மரியாளை அடிக்கடி குறிப்பிடுகிறது. குரானின் கூற்றுப்படி, பிறப்பிலிருந்தே தெய்வீக அருள் மேரியைச் சூழ்ந்துள்ளது, மேலும் ஒரு இளம் பெண்ணாக, தேவதூதர் கேப்ரியல் மூலம் கடவுளிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றார், கடவுள் அவளைத் தேர்ந்தெடுத்தார், அவளைத் தூய்மைப்படுத்தினார், மேலும் "உலக பெண்களை விட அவளுக்கு முன்னுரிமை அளித்தார்." ."[7] இந்த நிகழ்வு, அதே கதையின்படி, அவள் கன்னியாக இருக்கும்போதே தெய்வீக ஆவியின் தலையீட்டின் மூலம் அதிசயமான முறையில் அவளால் கருத்தரிக்கப்படவிருந்த ஒரு குழந்தையை அறிவிக்கிறது, அதன் பெயர் இயேசுவாக இருக்கும். "அபிஷேகம் செய்யப்பட்டவர்", வாக்களிக்கப்பட்ட மேசியாவாக இருப்பார். எனவே, மரபுவழி இஸ்லாமிய நம்பிக்கை "இயேசுவின் கன்னிப் பிறப்பின் கோட்பாட்டை நிலைநிறுத்தியுள்ளது
https://en.wikipedia.org/wiki/Mary_in_Islam
மோகினி
ஏனென்றால் சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயப்பன்.
ttps://ramanans.wordpress.com/2011/09/02/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-4/
இதே கதை தான் அய்யனார் அவர்களுக்கும் உரியது. ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன.
https://www.tamilhindu.com/2010/12/ayyanar-shasta-ayyappan-divine-manifestations/
https://kallarkulavaralaru.blogspot.com/2018/04/blog-post_85.html
பார்வதி, மரியம், மேரிமாதா, மோகினி என்ற நான்கு பெயர்களும் இந்த பூமியில் மனித குமாரனாக வந்து பிறந்த இயேசு கிறிஸ்துவின் தாயையே குறிப்பிடுகிறது.
guru