top of page

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

 

”கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்"

 

நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற வார்த்தைக்கு,  

நாங்கள் யாவரும் இந்த பூமியின் குடிகள் அல்ல, நாங்கள் பரலோகதிற்கு உரியவர்கள் ஆதலால் நாங்கள் சாவுக்கு அஞ்சோம் என அர்த்தம்

 

இந்த பாடலில் 5வது வரியில் தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான சங்கரன் என்று கடவுளைப் பற்றிக் கூறும் வரிகள் உள்ளன.

 

இந்த பூமியின் தனக்குச் செந்தமில்லா தன்மை கொண்ட நன்மையானதையே செய்யும் கடவுள் (சங்கரன்) என அர்த்தம் அதாவது நான் இந்த உலகத்திற்கு உரியவர் அல்ல எனக்கூறிய கடவுள் என அர்த்தம்

 

இயேசு உயிர்த்தெழுந்து இந்த உலகத்தை விட்டுப் போகும் போது

1) நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். அதே போல

2) அவர் இந்த உலகத்திற்கு உரியவர் அல்ல என்பதையும்

3) அவரை அறிந்தவர்களை இந்த உலகாத்தார் அல்ல எனவும்  அவர் மேலும்

4)  என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றும் குறிப்பிடுகிறார். இதைப்பற்றி உள்ள விளக்கத்தை அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

 

பாடல்

இந்த பாடல் சைவ சித்தாந்தத்தில் 6வது திருமறையில் 98 பொது வில் 1வது பாடலாக அமைந்துள்ளது.

 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

 

நாம் இந்த பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்

 

( நற்சங்கம், வெண், குழையோர், காதிற், மீளா ஆளாய், கொய்ம்மலர், ஆகிய சொற்களுக்கு விளக்கம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது )

 

அர்த்தம்

நாங்கள் யாவரும் இந்த பூமியின் குடிகள் அல்ல, நாம் பரலோகதிற்கு உரியவர்கள் ஆதலால் நாங்கள் சாவுக்கு அஞ்சோம். நரகத்திற்குச் சென்று துன்பப் படமாட்டோம், பேராபத்தில் சென்று சேர மாட்டோம், சிறந்த வாழ்க்கை வாழ்ந்து  களிப்புற்றிருப்போம்,  பிணியாவது அல்லது கட்டுக்களாவது என்ன என்பதை அறியோம்,  தீமை செய்வோருக்குப் பணியமாட்டோம், எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை  

தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான (தான் இந்த உலகத்திற்கு உரியவர் அல்லாத) சங்கரன் ஆகிய தெய்வம் பரலோகத்தில்  உருவாக்கிய அல்லது நிறுவிய  நல்ல பரிசுத்த  சபை ஆகிய சங்கத்தில் கோமான் ஆகிய தெய்வத்தோடு கூட நாம் என்றும் பரிசுத்தராய், மீளா ஆளாய் அதாவது யுகாயுகமாய் இருப்போம்.                                                                                                                

இந்த பூமியில் இருந்து கொய்யப்பட்டு (கொல்லப்பட்டு) அலர்ந்தமலர் போன்று உயிர்த்தெழுந்து அதனால் உண்டான சேவையாகிய ஆத்தும மீட்பைச் செய்தவனுடைய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்து நம்மை தாழ்த்துவோமே.

இந்த பாடல் மூலமாகப் பாடல் ஆசிரியர் பரலோக வாழ்க்கையின் இரகசியத்தை அழகாகக் கூறியுள்ளார். இந்த பாடலில் கூறப்பட்ட விசயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள பரிசுத்த வேதாகமம் கூறுகிற விசயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 

பரிசுத்த வேதாகமம்.

பரிசுத்த வேதாகமம் நாம் இந்த உலகத்திற்கு உரியவர்கள் அல்ல என்றும், பரலோகம் சென்று தெய்வத்தோடு கூட யுக யுகமாய் வாழப் பிறந்தவர்கள் என்பதை சிறப்பாகக் கூறுகிறது.

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து பரலோகம் சென்று கடவுளுடைய வலது பக்கத்தில் அமர்ந்து நமக்காக வேண்டுத்ல் செய்கிறார்.

கீழே கொடுக்கப்பட்டவைகளை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்று கூறி பரலோக வாழ்க்கையை நாடுகிறவர்களைப் பற்றி இயேசு என்ன கூறுகிறார் என்பது தெரியும்.

 

1) இயேசு இந்த உலகத்தை விட்டுப் போகும் போது நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். அதே போல

2) இயேசு இந்த உலகத்திற்கு உரியவர் அல்ல என்பதையும்

3) இயேசுவை அறிந்தவர்களை இந்த உலகத்தார் அல்ல எனவும்

4) இயேசு மேலும் : என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றும்

 (இந்த உலகத்தை ஜெயித்துப் பரலோகம் வருகிறவர்களுக்கு)

5) பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றார்

6) ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றார்.

7) ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுப்பேன் என்றார்,

8)  ஜெயங்கொள்ளுகிறவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றார்.

.9)  ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். என்றார்.

10) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும்

11) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுடைய பெயரைப் பரலோகத்தில் என் பிதாவுக்கு  முன்பாகவும் அவருடைய தூதர்கள் முன்பாகவும் அறிக்கையிடுவேன் என்றார்.

12 ) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன் என்றார்.

13) என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன் என்றார்.

14) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவன் பரலோகத்தில் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும் படிக்கு அருள்செய்வேன்.

பரிசுத்த வேதாகமத்தின் வசன ஆதாரங்கள்.

1) என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.  யோவான் 16:33

2) நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. யோவான் 17:16

 

3) நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. யோவான் 15:19

 

4) இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார் யோவான் 18:36

 

5) ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. வெளி 2:7

 

6) ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது  வெளி 2:11

7) ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.  வெளி 2:17.

 

8) ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். வெளி 2:26

 

9) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். வெளி 3:5

 

10) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.  வெளி3:12

 

11) நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளி 3:21

 

நற்சங்கம், வெண், குழையோர், காதிற், மீளா ஆளாய், கொய்ம்மலர் விளக்கம்

 

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

 

நற் சங்க  = நல்ல சங்கம் அல்லது சபை ஆகும்

வெண் = வெண்மையான அல்லது பரிசுத்தமான

குழையோர் = குழை என்றால் ஆகாயம் அல்லது பரலோகம்

                              குழையோர் என்றால் பரலோக வாசிகள் அல்லது பரதேசிகள்                   

                             ஆகும்.

காதிற் = காதி என்றால் படைப்பு,

                 காதிற் என்றால் படைக்கப்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட என அர்த்தம்

 

இதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட விளக்கங்களில் நற் சங்கத்தைப் பற்றி எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை அதே போல வெண் குழையோர் என்பதை வெண்குழையை என அர்த்தம் எடுக்கப் பட்டுள்ளது, குழை என்பதற்கு ஆகாயம் மற்றும் குண்டலம் என அர்த்தம் உண்டு. குழையோர் என்பதை ஆகாயத்தில் இருப்பவர் என அர்த்தம் எடுப்பது சாலச் சிறந்தது. காதி என்பதற்கு படைப்பு என்ற அர்த்தம் உண்டு, காதிற் என்றால் படைப்பில் அல்லது படைக்கப்பட்ட என அர்த்தம், இது தவறாக காதில் என அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது. ஆராய்ந்து பார்த்தால்                                       

கடவுள் பரலோகத்தில்  உருவாக்கிய அல்லது நிறுவிய  நல்ல பரிசுத்த  சபை ஆகிய சங்கத்தில் கோமான் ஆகிய தெய்வத்தோடு கூட நாம் என்றும் பரிசுத்தராய், மீளா ஆளாய் அதாவது யுகாயுகமாய் இருப்போம் என்பதே சரியாகும்   

                                                                                                            

நற் சங்கம்

நற் சங்கம் என்பது பரலோகத்தில் கடவுளால் பரலோக வாசிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பரிசுத்தமான சபையாகும், இந்த சபையைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் தான் பார்க்கமுடியும்.

நற் சங்கத்தை வேதாகமம் பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை என குறிப்பிடுகிறது.                                                             

 

இந்த உலகத்தை ஜெயித்துப் பரலோகத்திற்கு வருபவர்களை அவருடைய ஆலயத்தில் தூணாக்குவேன் என இயேசு வாக்கு கொடுக்கிறார். அப்படி வருபவர்கள் அதினின்று ஒருக்காலும் நீங்காமல் யுக யுகமாய் இருப்பார்கள் எனவும் கூருகிறார், அதைத் தான் பாடல் ஆசிரியர் மீளா ஆளாய் எனக் குறிப்பிடுகிறார்.

 

பரிசுத்த வேதாகமத்தின் வசன ஆதாரங்கள்

 

1) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.  வெளி 3:12

 

2) எபிரெயர் 12:22-24

நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய (பரலோகத்தில் இருக்கும்)  பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும்,............... வந்து சேர்ந்தீர்கள்.

 

கொய்மலர்

மலர் என்பதின் அர்த்தம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும், மலர் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்ப்போம்.

 

1) கொய் மலர் சேவடி

இந்த பூமியில் இருந்து கொய்யப்பட்டு (கொல்லப்பட்டு) அலர்ந்தமலர் போன்று உயிர்த்தெழுந்தவனுடைய சேவடியை வணங்குவதைக் குறிப்பிடுகிறது.

 

2) செம்மலர் நோன் தாள்

இரத்தம் சிந்தி மரித்து அலர்ந்த மலர் போல உயிர்த்து மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுத்த தவமாகிய நோன்பினை ஏற்றவனுடைய பாதங்களை வணங்குவதைக் குறிப்பிடுகிறது.

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் பன்னிரண்டாம் சூத்திரம்

செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே

 

3) மலர் மிசை ஏகினான்

திருக்குறள் 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார்.

மலர்ந்து அல்லது உயிர்த்து வானம் (HEAVEN)  சென்று இருப்பவனாகிய கடவுளின் மாண்பு மிக்க பாதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பூமியில் இன்பமான வாழ்வையும், பரலோக வீட்டின் நித்திய பேரின்ப வாழ்வையும் பெறுவர்

மலர் = மலர்ச்சியுற்று / உயிர்த்து  (Full-blown flower, blossom)

மிசை = வானம்

 

”கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்"

இந்த வார்த்தையின் படி இயேசு கிறிஸ்து எங்களது பரலோக வாழ்வு (நித்திய ஜீவன்), சாவு எங்களுக்கு ஆதாயம் அதாவது நன்மை ஏன் என்றால் சாவுக்குப் பிறகு அமையும் பரலோக வாழ்க்கை எங்கள் ஆதாயம்

 

guru

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கொய்

koy   I. v. t. cut off (துண்டிக்கப்பட்டது),  snip, shear (வெட்டு),  crop (harvest :: அறுவடை), pluck flowers (separate forcibly) etc, அறு; 2. gather a cloth into folds, சுருக்கு; (சுருக்குப்போட்டுக்்கொள்ள, to commit suicide dy hanging.)

 

குழை

 (வி) 1. துவளு, வாடு, 2. நெகிழ், 3. இளகு, 4. உடல் தளர்,மெய் துவளு, 5. மென்பதமாகு, 6. தன்னல நோக்கத்தில் நயமாக நடந்துகொள், 7. உழக்கு, கூழாக்கு, 8. தழையச்செய், 9. துவளச்செய்,  ஆகாசம், காடு, குண்டலம்

சங்கரன்

என்பது நலத்தைச் செய்பவன் என்பது அதன் பொருள்
பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/385

https://ta.wikisource.org › wiki › பக...

 

 காதி

மகிழ்ச்சியான, படைப்பு, நிதானமான, அதிர்ஷ்டம், கொந்தளிப்பான, நவீனதாராள,, தீவிரநட்பு, திறமையான, கவனத்துடன்

 

 

அலர்ந்த மலர்

alr (p. 28) --அலரு, கிறது, அலர்ந்தது,வரும், அலர, v. n. To blossom, open as a flower, பூமலர. 2. To spread or be diffused as the rays of the sun, water, news, &c., to expand, விரிய. அலர்கதிர்ஞாயிறு, s. The beamspreading sun. அலர்ந்தகாதல், s. Expanded love. (சிந்தாமணி.) அலர்ந்தபூ, s. A full-blown flower. அலர்முலை, s. Distended breasts. அலர்ச்சி, v. noun. Blossoming, blooming, மலர்கை. 14)

 

.

bottom of page