நரகாசூரனும் கிறிஸ்துவும் (கிறிஸ்ணா)
1. மேற்கு வங்காளத்தில் பகாசுரன் என்ற அரக்கனை காளி வடிவில் பார்வதி தேவி வென்றதாகக் கூறப்படுகிறது.
2. அவ்வையார் விநாயகர் அகவலில் பிள்ளை தெய்வத்தைப் பாடும் போது கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே" என்று பாடுகிறார். ( மரத்தில் சூரனை பிள்ளையார் வென்றதாகப் பாடுகிறார்.
இதைப் பற்றி அறியப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/tiruchengode
3. பகாசூரனை வென்றார் பீமன் என்று மகாபாரதம் கூறுகிறது.
4. நரகாசூரனை கிறிஸ்ணர் வென்றதாகக் கூறப்படுகிறது.
5. ராமர் அரக்கனை வென்றதாகக் கூறப்படுகிறது
மேலே கூறப்பட்டவைகளை ஆராய்ந்து பார்த்தால் ஒரே அரக்கனாகிய நரகசூரனை பல தெய்வங்கள் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் நரகாசூரன் ஒருவனே அவனை அழித்த தெய்வமும் ஒருவரே, வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்ட இதிகாசங்கள் என்ற உவமைக் கதைகள் தெய்வத்துக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுத்துள்ளதால் வந்த வித்தியாசமான கதைகள் அவைகளால் உண்டான பல வழிபாட்டு முறைகள் உண்டாகியுள்ளன. அதைப் பற்றி கீழே பார்ப்போம்.
தீபாவளி
நமது இந்தியாவில் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்தியாவில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட விதமான தீபாவளி கொண்டாடப் படுகிறது. அதன் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) பகாசூரனை வென்ற பீமன். 2. மேற்கு வங்காளத்தில் தீபாவளி 3 ஜைன மதத்தின் தீபாவளி. 4. கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த தினம். 5. ராமாயணத்தில் தீபாவளி. 6. பாண்டவர்களின் வருகையும் தீபாவளியும். 7. சீக்கிய மதத்திலும் தீபாவளி. 8. சமண மதத்தில் தீபாவளி. 9. மகாராஷ்டிராவில் தீபாவளி. 10. திருமகளின் வருகையைக் குறிக்கும் தீபாவளி
தென் மாவட்டங்களில் தீபாவளி
தென் மாநிலங்களில் தீபாவளி என்பது கிறிஸ்ணன் நரகாசூரனை அழித்த நிகழ்வைக் கொண்டாடுவதாக உள்ளது. நாம் இந்த நரகாசூரனைப் பற்றியும் கிறிஸ்ணாவைப் பற்றியும் தெரிந்து கொண்டால் தான் உண்மையான தீபாவளி என்ன என்பதை அறிய முடியும்
தீபாவளி என்பது தீப ஒளியாகும், அதாவது இருளில் இருந்த மனிதக்குலம் ஒளியைப் பெற்றுக்கொண்ட தினமாகும். பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒளியாகக் கூறுகிறது. “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, மத்தேயு 4:15.
அவருடைய சிலுவை மரணம் ஒர் ஒளி கொடுக்கும் நிகழ்வு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. “ நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். கொலோசெயர் 2:14,15” அவருடைய சிலுவை மரணமே தீபாவளி பண்டிகைக்கு மூல காரணம் ஆகும்.
சூரசம்ஹாரம் என்ற சூரசங்காரம்
தெய்வம் சூரனை சூரசங்காரம் செய்த நிகழ்வு தமிழ் நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. அவர் முருகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே, முருகன் என்பது ஒரு தெய்வத்தின் பெயர் அல்ல அது அழகானவர் என்ற குணத்திற்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். மரமாக உருமாறி நின்ற சூரனை வேலினால் முருகன் கொன்றதாகக் கூறப்படுகிறது.
முருகன் சூரபத்மனை சூரசங்காரம் செய்ததும் கிறிஸ்ணா நரகாசூரனைக் கொன்ற நிகழ்வும், இயேசு கிறிஸ்து சாத்தனைச் சிலுவையில் வென்றதையே காண்பிக்கின்றன.
இயேசு கிறிஸ்து அழகானவர் என்பதைப் பற்றி அறிய ஆறுமுகம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/aaru-mugam
கிறிஸ்ணா
கிறிஸ்ணா என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, அந்த வார்த்தைக்கு கிறிஸ்து என்று அர்த்தம், அந்த வார்த்தை ஒரு பெயர் அல்ல, அது ஒரு தெய்வத்தின் குணமாகும். கிறிஸ்து, கிறிஸ்ணா என்பதற்கு இரட்சகர் அல்லது மேசியா என்று பொருள்.
கிறிஸ்ணாவைப் பற்றிச் சொல்லப்பட்டவை அனைத்தும் கிறிஸ்துவைப் பற்றியதே ஆகும். மகாபாரதம். ராமாயணம் இதிகாசங்கள் ஆகும், இதிகாசங்கள் என்றால் உவமைகள் என்று அர்த்தம். கிறிஸ்ணா என்ற பெயர் இதிகாசங்களுக்குள்ளாகவே காணப்படுகிறது. இவைகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சொல்லப்பட்ட உவமைக் கதைகள் ஆகும்,
அந்த இதிகாசங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன, மொழியை வைத்து இரண்டும் வெவ்வேறு தெய்வங்கள் என்று பிரித்து வழிபடப்படுகிறது. இரு மொழிகளுக்கு உள்ள வித்தியாசத்தில் தெய்வத்தையும் இரண்டாகப் பிரித்து கிறிஸ்து வேறு என்றும் கிறிஸ்ணா வேறு என்றும் கூறுகிறோம்.
இதைப் பற்றி அறிந்து கொள்ள இதிகாசங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும்
https://www.narrowpathlight.com/parables-of-god
நரகாசூரன்
நரகாசூரன் என்றால் நரகம் + சூரன் ஆகும், அதாவது நரகத்தை ஆள்கின்ற வீரன் அல்லது நரக வாழ்வைக் கொடுக்கக்கூடிய அசுரன், அரக்கன், அல்லது சாத்தான் ஆகும். இந்த நரகாசூரன் யார் என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே, அவனைக் கொன்றது யார் என்பது நமக்குப் புரியும்.
நரகாசூரன் என்ற சாத்தான் அல்லது அசுரன் இந்த உலகத்தில் உள்ள மக்களை நரகத்துக்குக் கொண்டு செல்வதற்காகப் போராடுபவன் ஆவான். அவன் ஒரு விழுந்து போன தூதன் ஆவான். அவனும் அவனுடைய கூட்டமும் தேவனுக்கு மேலாகத் தங்களை உயர்த்த நினைத்ததினால் கீழே தள்ளப்பட்டார்கள், அவர்கள் மூன்றில் ஒரு பகுதி தேவ தூதர்கள் ஆவார்கள். அவர்கள் முக்கோடி முக்கோடி தள்ளப்பட்ட தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 3.333333333333333333333. அந்தக் கூட்டத்தின் தலைவனுக்கு லூசிபர் என்ற பெயர் உண்டு.
லூசிபர் / அதிகாலையின் மகன்:-
பரிசுத்த வேதாகமம் ஏசா 14:12-15ல் லூசிபரை:” அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்” என்று குறிப்பிடுகிறது.
லூசிபர் ஒருகாலத்தில் துதிப்பதற்கும் ஆராதிப்பதற்கும் பொறுப்புடையவனாயிருந்தான். ஒரு உயர்ந்த நிலையில் தேவனுக்கு அருகாமையில் இருந்தவன். ஆனால் பிற்காலத்தில் இந்தப் பெயர்கள், பதவிகள் நிமித்தம் அவன் பெருமையினால் நிறைந்து, தேவனைப்போல தானும் வணங்கப்பட்ட வேண்டுமென்று விரும்பினான். அவனுடைய பெருமையின் நிமித்தமாகத் தேவன் அவனைப் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார். இவைகளெல்லாம் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே ஆதாமுக்கு முன்பாக நடைபெற்றவைகள். இவன் ஒரு சாதாரணத் தூதனாகக் காணப்படவில்லை. அவன் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்தப் பர்வதத்தில் இருந்தவன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினவன். ஆனால் தேவனுக்கு மேலாக உயரவேண்டும் என்ற அவனுடைய எண்ணத்தால், பெருமையால் தள்ளப்பட்டான். இன்று அவன் தன்னுடைய ராஜ்யத்தை இரண்டாவது வானத்தில் ஸ்தாபித்து அங்கிருந்து பொல்லாத செயல்களைச் செய்கிறவனாகக் காணப்பட்டான். லூசிபரின் விழுகைக்கு பின்பாக தேவன் படைத்த செம்மையான பூமி பின்பு ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. அவன் வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரம் ஆவான்..
அவனை இயேசு கிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்து மனிதக் குமாரனாகப் பிறந்து, தன்னுடைய சிலுவை மரணத்தினால் இரத்தம் சிந்தி வென்று உலக மக்களுக்கு ஒர் ஒளியை ஏற்படுத்தினார். அவர் உலக மக்களைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் மனிதக் குமாரனாகப் பிறந்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்வையே தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.
நரகாசூரனை சிலுவையில் வென்ற இயேசு கிறிஸ்து
கொலோசெயர் 2:14,15. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
இந்தப் பூமியில் இதுவரை நடந்த எல்லா யுத்தங்களிலும் தலையாய மாபெரும் ஓர் யுத்தம் உண்டு! ஆனால், இவ்வுலகில் உள்ள எந்தச் சரித்திரப் புத்தகங்களிலும் இந்த யுத்தம் எழுதப்படவில்லை. பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே உண்டு. இந்த யுத்தம் கல்வாரியில் நடந்தது! இவ்வுலகத்தின் அதிபதியாகிய சாத்தானை இயேசு தன்னுடைய மரணத்தின் மூலமாய் ஜெயித்த, கெம்பீரம் நிறைந்ததோர் யுத்தம்!!
பரிசுத்த வேதாகமம் சாத்தனை இயேசு கிறிஸ்து சிலுவையில் செயித்தைக் கூறுகிறது “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் (இயேசு) அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராகி, மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே (கல்வாரி சிலுவையில் அவர் அடைந்த மரணத்தினாலே) அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்". எபிரேயர் 2:14-15.
இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக நம்மீது விழுந்த ஆக்கினையைத் தன் மீது ஏற்றுக்கொண்டு, நம்மை நித்திய நரகத்திலிருந்து இரட்சிப்பதற்காகவே இந்தப் பூமிக்கு வந்தார். மேலும், சாத்தான் நமக்கு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாதபடி, நம்மீது அவன் கொண்டிருந்த வல்லமையையும் இயேசு அழித்துப்போட்டார்!!
இந்த நிகழ்ச்சியையே தீபாவளி என்று அழைத்துக் கொண்டாடுகிறோம். இயேசு கிறிஸ்து சாத்தானை செயித்த தினத்தைக் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி என்று கொண்டாடுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் புனித வெள்ளியும் ஒரு தீபாவளி தான் அதைப் பற்றி அறிய வெள்ளி சனி ஞாயிறு என்ற பக்கத்தைப் பார்க்கவும்
https://www.narrowpathlight.com/friday-saturday-sunday
முருகன் – கள்ளழகர்
இயேசு கிறிஸ்துவின் குணங்களில் ஒன்று அழகானவர் அதையே நாம் முருகன் அல்லது கள்ளழகர் என அழைக்கிறோம்
இயேசு கிறிஸ்து வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley என அழைக்கப்படுகிறார். எனவேதான் அவரை அழகன் அல்லது முருகன் என அழைக்கிறோம். முருகன் என்றால் அழகன் என்று அர்த்தம் ஆகும்.
அவர் சிலுவையில் அறையப்பட்ட போது இரண்டு கள்ளர்களுக்கு நடுவே உள்ள சிலுவையில் அறையப்பட்டார். அதனால் கள்ளனில் ஒருவராக என்னப்பட்டார். எனவே அவரை நாம் கள்ளழகர் என அழைக்கிறோம்.
தீபாவளி வகைகள்
https://www.bbc.com/tamil/articles/cx2ln61zev7o
https://www.safarmentor.com/blog/diwali-celebration-in-india/
1) பகாசூரனை வென்ற பீமன்
பகாசுரன் மகாபாரதத்தின் உப கதை ஒன்றின் நாயகன். ஏக சக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்த அரக்கன். குந்தியும், பாண்டவர்களும் தங்கியிருந்த அரக்கு மாளிகை எரிந்த பிறகு தப்பிப் பிழைத்து ஏக சக்கரம் என்ற கிராமத்தில் பிராமணர்கள் போல் வேடமிட்டு வசித்து வந்த போது பாண்டவர்களில் பலவானான பீமனால் கொல்லப்பட்டான்.
2. மேற்கு வங்காளத்தில் தீபாவளி
தீபாவளி கொண்டாட்டம் மேற்கு வங்காளத்தில் பகாசுரன் என்ற அரக்கனை காளி வடிவில் பார்வதி தேவி பெற்ற வெற்றியைக் குறிக்கிறது.
3 ஜைன மதத்தின் தீபாவளி.
ஜைன மதத்தைப் பொறுத்தவரை, தீபாவளி என்பது நிர்வாணத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு சிறப்பு நாள் அல்லது கடைசி ஜெயின் தீர்த்தங்கரரான மகாவீரரின் ஆன்மாவின் இறுதி வெளியீட்டைக் குறிக்கிறது.
https://www.safarmentor.com/blog/diwali-celebration-in-india/
4. கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த தினம்
வட இந்தியாவில் தீபாவளி பெரிதும் ராமாயணத்தோடு தொடர்புப் படுத்தப்படும் நிலையில் தென்னிந்தியாவில் இந்தப் பண்டிகை நரகாசுர வதத்தோடு தொடர்புப் படுத்தப்படுகிறது.
5. ராமாயணத்தில் தீபாவளி
வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகை ராமாயணத்துடன் தொடர்புப் படுத்தப்படுகிறது. வனவாசம் செல்லும் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர் தங்கள் வனவாசத்தை முடித்துக்கொண்டு, அயோத்திக்குத் திரும்பும் தினமே தீபாவளியாகக் கருதப்படுகிறது. ராவணனை வெற்றிகொண்டு, சீதையை மீட்டு அயோத்திக்கு ராமர் திரும்புவது என்பது, தீமையை நன்மை வெற்றிகொள்வதன் அடையாளமாகக் காட்டப்படுகிறது.
ஆனால், வால்மீகி ராமாயணம் ராமனுக்காக நகரம் தயாரானதைக் குறிப்பிடுகிறதே தவிர, அதே முறையில் பின்னாளில் கொண்டாடப்பட வேண்டும் என்பதாகக் கூறவில்லை.
6. பாண்டவர்களின் வருகையும் தீபாவளியும்
ராமாயணக் காலத்திற்குப் பிந்தைய காலத்தில் நடப்பதாகக் காட்டப்படும் மகாபாரதத்தோடும் தீபாவளிப் பண்டிகை தொடர்புப் படுத்தப்படுகிறது. பாண்டவர்களை கௌரவர்கள் சூதாட்டத்தில் வென்ற பிறகு, அவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்றும் ஒர் ஆண்டு யாருக்கும் தெரியாத வகையில் வசிக்க வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது. இந்த 13 ஆண்டு கால வனவாசம் நிறைவுபெற்றதும் பாண்டவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வருகின்றனர். அவர்களது வருகையை அறிந்த மக்கள் ஆனந்தமடைந்து, வீடுகளையும் வீதிகளையும் அலங்கரித்தனர். வீட்டு வாயிலில் தீபங்களை ஏற்றி பாண்டவர்களை வரவேற்றதாகவும் அந்த தினமே தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாகவும் ஒரு கதை உண்டு. இந்தக் கதை மிகப் பெரிய அளவில் பிரபலமாகாத ஒரு நம்பிக்கை.
7. சீக்கிய மதத்திலும் தீபாவளி
சீக்கியர்களும் தீபாவளியை ஒரு குறிப்பிடத்தகுந்த நாளாகக் கொண்டாடுகின்றனர். சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு ஹர்கோபிந்த்தையும், 52 இளவரசர்களையும் பேரரசர் ஜஹாங்கீர் சிறைப்படுத்தினார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அவர்கள் வருகையைக் கொண்டாடப் பொற்கோவில் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்த நாளை 'பந்தி சோர் தீவஸ்' (Bandi Chhor Divas), அதாவது 'விடுதலை நாள்' என்ற பெயரில் குறிப்பிட ஆரம்பித்த சீக்கியர்கள், அந்தத் தினத்தைத் கோலாகலமாகக் கொண்டாடினர்.
8. சமண மதத்தில் தீபாவளி
சமண மதத்திலும் தீபாவளிப் பண்டிகை இருக்கிறது. தீபாவளியும் மகாவீரரும்
https://www.hindutamil.in/news/spirituals/18454--1.html
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி கொண்டாடப்படும் நாள் அன்றுதான் வர்த்தமான மகாவீரர் நினைவும் அனுசரிக்கப்படுகிறது. இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லாமல், எப்படி இரண்டும் ஒரே நாளில் வரும்? இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.. தீபாவளி சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை என்கிறார் சமண-பவுத்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
சமண மதத்தில் தீபாவளி என்பது 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த தினத்தைக் குறிக்கிறது.
.
9. மகாராஷ்டிராவில் தீபாவளி
மகாராஷ்டிராவில் தீபாவளி கொண்டாட்டம் நாட்டின் பிற பகுதிகளில் காணப்படுவதை விடச் சுவாரஸ்யமாக வேறுபட்டது. ஒரு பொதுவான மராத்தி குடும்பத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் மராத்தி நாட்காட்டியின்படி 'அஷ்வின் கிருஷ்ண துவாதசி' திதியில் வரும் 'வாசு-பரஸ்' உடன் தொடங்குகிறது. . பசுவிற்கும் தங்கள் குழந்தைகளுக்கும் சேவை செய்ததற்காக ஒரு பெண்ணின் நன்றியை இந்த பாரம்பரியம் குறிக்கிறது.
https://www.tourmyindia.com/states/maharashtra/diwali-festival.html