பங்குனி, சித்திரை, வைகாசி
பங்குனி, சித்திரை, வைகாசி என்ற தமிழ் மாதங்கள் இறைவன் வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாக நமது தமிழ் நாட்டில் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே நமது தமிழ் மாதங்கள் எல்லாம் கடவுளோடு சம்பந்தம் உள்ளவைகளாகவே உள்ளன. அதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
சாம்பல் புதன் ( Ash Wednesday ) முதல் ஈஸ்டர் வரை உள்ள நாட்கள் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் நாட்கள் ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் பாடுகள் சாம்பல் புதன் கிழமையில் இருந்து ஆரம்பிக்கிறது, அவருடைய மரணம் புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த நன் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப் படுகிறது.
ஈஸ்டர் முதல் தெய்வம் பரலோகம் செல்லும் காலம் வரை உள்ள நாட்கள் இயேசு கிறிஸ்து மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்த நாட்கள் முதல் அவர் பரம் சென்ற நாட்கள் வரை ஆகும்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மாதங்களாகிய மாசி மாதம் கடைசி வாரம் முதல் வைகாசி மாதம் வரை நடைபெற்ற நிகழ்வுகள் ஆகும். எனவே நாம் மாசி மாதம் முதல் வைகாசி வரை உள்ள மாதங்களைப் புனித மாதங்களாக கொண்டாடுகிறோம்.
பங்குனி
பங்குனி என்பது, பங்கு + நீ. “பங்குநீ” என்பதுவே, கடை குறைந்து ‘பங்குனி’ என்று ஆயிற்று.
கடவுளிடத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள பங்கை குறிப்பதற்காக வைக்கப்பட்ட மாதத்தின் பெயர் பங்குனி ஆகும்.
சித்திரை
சித்திரை என்பது சித்து + இரை ஆகும்
இரை என்பதை இறை என்றே எடுக்கவேண்டும், இறை என்பது மருவி இரை என ஆகியுள்ளது. ஏனென்றால் சித்திரை மாதத்திற்கும் தெய்வத்திற்கும் அதிகமான தொடர்பு உண்டு ஆகவே சித்து இறை என்பதே சரியாகும்.
சித்து என்பது எதைக் குறிக்கிறது எனப் பார்ப்போம்
சித்து என்பது வேள்வியைக் (Sacrifice; யாகம் ) குறிக்கும்,
சித்து இறை என்பது இறைவன் நமக்காகப் பலியானதைக் குறிக்கும். அதாவது இறைவன் நமக்காகப் பலியானார் என்பதை நினைவுபடுத்தும் மாதம் ஆகும்
சித்து
4. Sacrifice; யாகம் (பிங்.)5. Success; வெற்றி (சூடா.) 6. A masqueradedance; ஒருவகை வரிக்கூத்து (சிலப். 3, 13, உரை )
https://agarathi.com/word/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
வைகாசி
வைகாசி என்பது வை + காசி ஆகும்
வை என்றால் வைத்தல் அல்லது சேர்த்தல் ஆகும்
காசி என்றால் உலகம் ஆகும்
அதாவது தெய்வம் இந்த பூமியில் வந்து பிறந்து, இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பின்பு உயிர்த்து கடவுளுடைய உலகத்தில் (பரலோகத்தில்) சென்று பிதாவின் வலம்புரி அதாவது வலது பக்கத்தில் வைக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்டதை நினைவுபடுத்தும் மாதம் ஆகும்
காசி, உத்தர்காசி, சிவகாசி என்ற வார்த்தைகள் தெய்வத்தின் உறைவிடமான மேல் உலகத்தைக் குறிக்கிறது.
நாம் பங்குனி, சித்திரை, மற்றும் வைகாசி மாதங்களை நங்கு அறிந்து கொள்ள இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், அதற்கு முன்பு அவர் பட்ட பாடுகள் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் தான் மாதங்களை புரிந்து கொள்ள முடியும்.
பங்குனி ( பங்குநீ )
பஸ்கா பண்டிகையும் இயேசு கிறிஸ்து சீசர்களின் கால்களைக் கழுவி பங்கு உண்டாக்கியது.
பஸ்கா பண்டிகையை ஆசரிக்க முடிவு செய்தார் இயேசு கற்பித்தபடி சீசர்கள் போய், பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள். சாயங்காலமான போது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அப்போது சீசர்களின் கால்களைக் கழுவினார். பேதுரு அவரை கால்களைக் கழுவுவதைத் தடை செய்தார். அப்போது இயேசு கிறிஸ்து நான் உன் கால்களை கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை எனக் கூறினார்.அதன் பிறகு பேதுரு தெய்வத்தை தன் கால்களைக் கழுவ அனுமதித்து தேவனுடய இராஜ்யத்திற்கு பங்குள்ளவர் ஆனார். அதைத் தான் நாம் பங்குனி என அழைக்கிறோம்.
அதே போல் இன்றும் பல அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றவர்களின் கால்களைக் கழுவி தங்கள் தாழ்மையை வெளிப்படுத்துகிறார்கள்.
கால்களை கழுவுதல்
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் 13:3-15
சித்திரை ( சித்து இறை )
தெய்வம் பலியானதைக் குறிக்கும் மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. சாம்பல் புதனில் இருந்து 43வது நாள் வெள்ளிக் கிழமை புனித வெள்ளியாகும். தெய்வம் மனிதக் குல மீட்பிற்காகவும், பாவத்திற்காகவும் மரித்த நாளாக உள்ளதால் புனித வெள்ளி என அழைக்கப்படுகிறது.
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில்நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. யோவான் 19 : 16-19
அவருடைய பாடுகளின் காலங்களை நினைவு கூறும் வகையில் பங்குனி மாதம் முழுவதும் விரதம் இருப்பதுவும், அலகு குத்தி காவடி எடுப்பதுவும், கருப்பு வெள்ளை புள்ளி குத்தி நேர்த்தி கடன் கழிப்பதுவும் போன்ற காரியங்களை செய்கிறோம்.
அதில் மிகவும் முக்கியமானதாக பங்குனி மாதக் கடைசியில் பறவைக் காவடி எடுக்கிறோம். இந்த பறவைக் காவடி சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை நினைவு படுத்துவதாக உள்ளதை கவனிக்க வேண்டும்.
காவடி என்பது காவுதடி ஆகும். காவுதடி என்பது சிலுவையின் தமிழ் வார்த்தையாகும்.
இதை பற்றி முழுமையாகப் படிக்க திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
சித்து என்ற வார்த்தையை வைத்து தெய்வத்தை சித்தீஸ்வரன் என்று அழைக்கிறோம்,
மேலும் சித்தம்மாள், சித்துஅம்பலம் (சிற்றம்பலம்), சித்தராஜபுரம், (சித்துராஜபுரம் ) சித்தரசன் (சித்து அரசன்) என்ற வார்த்தைகள் உண்டு
சித்தம்மாள்
நமக்காக சிலுவையில் பலியான தெய்வத்தின் தாய் ஆகும்
சித்து அம்பலம்
நமக்காக சிலுவையில் பலியான தெய்வம் உயிர்த்தெழுந்து அம்பலம் (பெரிய இடம்) அதாவது பரலோகம் சென்றவர் ஆகும்
சித்து ராஜ புரம்
நமக்காக சிலுவையில் பலியான ராஜாவாகிய தெய்வத்தின் ஊர் ஆகும்
சித்து அரசன்
நமக்காக சிலுவையில் பலியான ராஜா ஆகும்.
வைகாசி ( வை + காசி )
தெய்வம் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து, தன்னை நாற்பது நாள் இந்த பூமியில் இருந்து பரலோகம் சென்றார். அவர் பரலோகம் சென்று பிதாவின் வலது பக்கம் (வலம்புரியில்) அமர்ந்தார். அதை நினைவு படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பெயர் தான் வைகாசி ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அப் 1:3
இவ்விதமாய் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16:19
சென்றாயப் பெருமாள்
சென்றாயப் பெருமாள் என்பது பரலோகம் சென்ற நல்ல மேய்ப்பன் ஆகிய தெய்வத்தை குறிக்கும்
சென்ற + ஆயன் ( மேய்ப்பன் ) + பெருமாள்
Good shepherd, நல்ல ஆயன் அல்லது நல்ல மேய்பன் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும்
முளைப்பாரி ( முளை + பாரி }
முளை என்பது முளைத்த என அர்த்தம்
பாரி என்றால் அரசன் ஆகும்
அதாவது பூமியில் புதைக்கப்பட்ட ( கல்லறையில் வைக்கப்பட்ட ) தெய்வம் செடி முளைத்து எழுவது போல் உயிர்த்ததை விளக்கும் ஒரு சொல் ஆகும்.
பங்குனி, சித்திரை,வைகாசி ஆகிய மாதங்களில் முளைப்பாரி எடுப்பது உயிர்த்த்ழுந்த தெய்வத்தைக் குறிக்கவே ஆகும்.
சாம்பல் புதன் ( Ash Wednesday ) -- YeSHIVA வின் இராத்திரி
திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும்.
இந்த சாம்பல் புதன் கொண்டாடப்படுவதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்
அவர் மரணத்துக்கு ஏதுவான துக்கம் கொண்டிருந்தார் எனவே இரண்டு சீசர்களை அழைத்துக்கொண்டு போய் ஜெபம் செய்ய ஆரம்பித்தார், அப்போது சீசர்கள் உறங்க ஆரம்பித்து விட்டனர். இயேசு கிறிஸ்து அவர்களைப் பார்த்து ஒரு மணி நேரமாவது என்னேடு விழித்திருக்கக் கூடாதா என்றார் அதைத் தான் நாம் இயேசுவின் (YESHIVA வின் ) இராத்திரியாக கொண்டாடி இரவு முழுவதும் முழித்திருக்கிறோம்.
பரிசுத்த வேதாகமம்
பேதுருவையும், செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி; சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும், நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது. என்னைக் காட்டிக் கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார். மத்தேயு 26 : 37-46
guru