top of page

தென்புலத்தார் யார் ? குறள்-43,  kural 43

 

குறள் 43:

 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை

"தெய்வம் இந்த பூமியில் இருக்கும் போது தனது சீடர்களுடன் பஸ்கா விருந்து உண்டார், அதே விருந்தை பரலோகத்தில் உங்களுடன் உண்பேன் என்று கூறிச் சென்றார்"

 

இந்த குறளுக்கு அனேக விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் எல்லாம் தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். என்றே குறிப்பிடுகின்றன. அது சரிதானா என ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

 

1) தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்

இந்த குறளுக்கு அர்த்தம் எடுக்கும் போது தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்ற வரியைத் தென் புலத்தாரும் தெய்வமும் ஒரு விருந்தில் ஒத்து இருந்தனர் என எடுக்க வேண்டும்.

 

2) தானென்றாங்கு ( தான் + என்று + ஆங்கு )


தான் என்று ஆங்கு என்ற வார்த்தைக்கு இந்த குறளுக்கு விளக்கம் எழுதியவர்கள் ஒருவரும் விளக்கம் கொடுக்கவில்லை.

தான் என்று ஆங்கு என்றால் "நாம் எப்போது அவ்விடம்" என அர்த்தம் ஆகும். அதாவது நாம் எப்போது அவ்விடம் நடக்கும் விருந்தில் கலந்து கொள்வோம் என்பது அர்த்தம் ஆகும். அவ்விடம் என்பது பரலோகம் ஆகும். அங்கு நடக்கும் விருந்தில் நாம் கலந்து கொள்ளவேண்டும் என்பதே விளக்கம். அவ்விடம் என்றால் பரலோகம் அல்லது தெய்வத்தின் உறைவிடமாகும். இது குறள் 50ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

last-supper.jpg

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

 

வையத்துள்                               = இந்த பூமியில் வாழும் போதே

வாழ்வாங்கு வாழ்பவன்      = வாழ்வு ஆங்கே அதாவது அவ்விடமாகிய பரலோக

                                                            வாழ்க்கை வாழ்பவன்

வான்உறையும்                         = உயிர்த்தெழுந்து வான் ஆகிய பரலோகத்தில் இருக்கும்
தெய்வத்துள் வைக்கப் படும்  = தெய்வத்துக்குள் கொண்டு சேர்க்கப்படுவார்கள்.

 

வாழ்வாங்கு வாழ்பவன் = (வாழ்வு + ஆங்கு) அவ்விடத்துக்கு உரிய வாழ்க்கை வாழ விரும்பி வாழ்பவன்

 

விளக்கம்

ஒரு மனிதன் இந்த பூமியில் வாழும் போதே, பரலோகமாகிய அவ்விடத்துக்குரிய வாழ்க்கை வாழ விரும்பவேண்டும், அப்படி விரும்புகிறவர்கள் இந்த பூமியில் வாழும் போது அடக்கமான, பரிசுத்தமான, தூய்மையான வாழ்க்கை வாழவேண்டும். அப்படி இந்த பூமியில் பரலோகத்திற்கு சென்று சேரக்கூடிய வாழ்க்கை வாழ்பவர்கள்  உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று வாசம் செய்யும் தெய்வத்தோடு  நித்திய வாழ்க்கை வாழ்வார்கள் என அர்த்தம்.

 

இதைத் தான் வள்ளுவர் தனது 121 வது குறளில் அடக்கம் அமரருள் உய்க்கும் என எழுதியுள்ளார்.

இந்த பூமியில் அடக்கமாக வாழ்ந்தால், அந்த அடக்கம் அமரர் வாழும் இடமாகிய பரலோகத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்கும்.

https://www.narrowpathlight.com/kural-121-heaven-hell

 

பரிசுத்த வேதாகமம்

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.  2கொரி 5:1 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.  வெளி 2:7

3) ஐம்புலத்தா றோம்பல் தலை

ஐம்புலத்தா றோம்பல் தலை என்ற வார்த்தைக்கு அந்த பரலோகத்தில் நடக்கும் விருந்துக்கு நாம் செல்ல ஐம்புலத்தை இந்த பூமியில் இருக்கும் போது ஜெயித்த ஐம்புலத்தார் ஆகிய தெய்வத்தைப் போற்றி துதிக்க வேண்டும், அதே நேரத்தில் நாம் பூமியில் வாழும் போதே நமது ஐம்புலங்களையும் பரிசுத்தமாக பாதுகாத்து வாழ முதலிடம் கொடுக்க வேண்டும்.

அனேக விளக்கங்களில் ஐம்புலத்து ஓம்பல் என எடுக்கப்பட்டுள்ளது சரியல்ல. ஐம்புலத்தார் ஓம்பல் என்பதே சரியாகும்.

 

சிலுவையில் தனது ஐம்புலங்களையும் ஜெயித்தவர் ஐம்புலத்தார் ஆவார். இதைத் திருவள்ளுவர் தனது 6வது குறளில் பொறி வாயில் ஐந்தவித்தான் என குறிப்பிடுகிறார்.

சிவஞானபோதம் சூத்திரம் 8ல் ஆசிரியர் தெய்வத்தை ஐம்புல வேடர் எனக் குறிப்பிடுகிறார்.

 

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

https://vazhipokkanpayanangal.blogspot.com/2013/08/8.html

 

(ஐம்புலத்தார்,  ஐம்புல வேடர், ஐம்புல விடையன், பொறி வாயில் ஐந்தவித்தான், ஐம்புலத் தடங்கான், ஐம்புலம் வென்றோன், ஐம்புல விடையன்,  ஐம்புலன் விழையான்,  இந்த வார்த்தைகள் எல்லாம் சிலுவையில் தனது ஐம்புலங்களையும் வென்ற தெய்வத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் )

 

குறளி 43 - விளக்கம்

 

குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை

தென்                         = இனிய

புலத்தார்                     = நாட்டுக்கு உரியவர்கள்

தெய்வம் விருந்து           = தெய்வம் தரும்  விருந்து

ஒக்கல்                       = ஒத்துப்போகுதல் (பங்கு கொள்ளுதல்)

தான்என்றுஆங்கு           = நாம் எப்போது அவ்விடம் செல்வோம் என                       

                                    நினைப்பவர்கள்            
ஐம்புலத்தா றோம்பல் தலை = ஐம்புலனையும் நமக்காகப் பொறியில் வைத்து அழித்த               

                                   தெய்வத்தைப் போற்றுதலில் முதலிடம் கொடுக்க  .    

                                   வேண்டும், அதே நேரத்தில் நமது ஐம்புலத்தையும்

                                   பரிசுத்தமாகப் பாதுகாக்க முதலிடம் கொடுக்க

                                   வேண்டும்

 

( தென் என்பதற்கு இனிமையான என அர்த்தம் )

https://ta.wikipedia.org/s/b2j

 

இனிமையான நாட்டிற்கு அதாவது மோட்ச உலகத்திற்கு செல்ல தகுதி உள்ளவர்களாகிய தெய்வத்தின் சீடர்கள், தெய்வத்தோடு ஒன்றாக விருந்தில் கலந்து கொண்டனர், நாமும் அவ்விடமாகிய இனிமையான மோட்ச நகரம் செல்ல வேண்டுமானால் ஐம்புலனையும் நமக்காகப் பொறியில் வைத்து அழித்த தெய்வத்தைப் போற்றுதலில் அல்லது வணங்குவதில் முதலிடம் கொடுக்க வேண்டும் அதே நேரத்தில் நமது ஐம்புலத்தையும் பரிசுத்தமாக பாதுகாக்க முதலிடம் கொடுக்க வேண்டும்

 

தெய்வம் இந்த பூமியில் ஆயத்தம் பண்ணின விருந்து

 

தெய்வம் இந்த பூமியில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்த காலத்தில் தனது சிலுவை மரணத்துக்கு முன்பாக தமது சீடர்களுடன் ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அதில் 12 சீடர்களுடன் ஒரு வீட்டின் மேல் வீட்டறையில் அதை அருந்தினார். அந்த விருந்துக்கு last supper எனப் பெயர் உண்டு. இந்த இரவு உணவு தெய்வத்தால் தனது சிலுவை மரணத்துக்கு முந்திய இரவு உணவாக ஏற்பாடு பண்ணப்பட்ட ஒரு விருந்து ஆகும் எனவே இந்த இரவு உணவு தெய்வத்தின் கடைசி உணவாகவும் கருதப்படுகிறது (GOD'S SUPPER AND LAST SUPPER)  (Matthew 26:17–29; Mark 14:12–25; Luke 22:7–38; and I Corinthians 11:23–25).

இந்த இரவு விருந்தில்  இயேசு ரொட்டியை ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களிடம்  சாப்பிடுங்கள்  "இது என் உடல்", பின்னர் அவர் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்து, "இது என் இரத்தம்" என்றார். இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் மனிதக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக அவர் அனுபவிக்க  இருந்த சிலுவை மரணத்தை நினைவுபடுத்த கூறப்பட்டது.

 

தெய்வம் பரலோகத்தில் ஆயத்தம் பண்ணும் விருந்து

 

பரலோகத்தில் இந்த  விருந்து உங்கள் அனைவரோடும் உண்ண ஏற்பாடு செய்யப்படும் அது  நிறைவேறும்வரை இதை நான் இந்த பூமியில் உண்ணமாட்டேன் என்று இயேசு கிறிஸ்து சொல்லிச் சென்றார். அதைக் கீழ் உள்ள வசனத்தில் காணலாம்.

 

பரிசுத்த வேதாகமம்

 

இயேசு பேதுருவிடம் யோவானிடமும், "நாம் பாஸ்கா விருந்துண்ண நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.  அதற்கு அவர்கள், "நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.  இயேசு அவர்களிடம், "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டிற்குள் நீங்களும் சென்று,  அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்காவிருந்து உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள்.  அவர் மேல்மாடியில் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கே ஏற்பாடு செய்யுங்கள்" என்றார்.  அவர்கள் சென்று தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.  நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.  அப்போது அவர் அவர்களை நோக்கி, "நான் துன்பங்கள் படும்முன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.  ஏனெனில் இறையாட்சியில் ( பரலோகத்தில் ) இது (விருந்து) நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.  லூக்கா நற்செய்தி 22:8-16

guru

bottom of page