top of page

திருப்பரங்குன்றம்

"வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்."  சங்கீதம் 48:2

 

பரலோகம் உண்டு அந்த பரலோகத்தில் ஒரு மலை உண்டு அது பரலோக மலை என அழைக்கப்படுகிறது. அந்த மலையில் ஒரு நதியுண்டு

 

"ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் (சீயோன் பர்வதம்)  சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது;........." சங்கீதம் 46:4,5.

 

திருப்பரங்குன்றம் என்றால் பரலோகத்தில் இருக்கும் புனிதமான மலை என அர்த்தம் ஆகும். இது ஒரு காரணப்பெயர் ஆகும்.

 

திரு = புனிதமான,

பரம் = பரலோகம்,

குன்றம் - குன்று / மலை

( பரம் என்ற வார்த்தையை உடைய சில வார்த்தைகள் 1) பரம்பொருள் 2) பரம ஈஸ்வரன் (பரலோகத்தில் உள்ள கடவுள்) 3) பரதேசி (பரலோக வாசி) 4) பரமபதம் 5) பரஞ்சோதி (பரலோக ஒளி) )

 

திருப்பரங்குன்றம் என்ற மலை பரலோகத்தில் உள்ள  மலை என அர்த்தம் ஆகும், இங்கு உள்ள திருப்பரங்குன்றம் என்ற பெயர் பரலோகத்தில் உள்ள மலைக்கு ஒரு ஒப்பனையாக அல்லது பரலோக மலையை மக்கள் நினைத்துப் பார்த்து பரலோக மலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட பெயர் ஆகும்.

பரிசுத்த வேதாகமம் பரலோக மலையைப்பற்றிக் கூறும் போது அது சீயோன் பர்வதம் எனக்குறிபிடுகிறது. இந்த பூமியின் நடு மையத்தில் அமைந்துள்ள  ஏழு மலைகளால் சூழப்பட்ட நகரமாகிய எருசலேமின் நடுவில் இருக்கும் மலைக்கு சீயோன் மலை எனப் பெயர் உண்டு.

பூமியின் மையப் பகுதியில் அமைந்துள்ள சீயோன் பர்வதம் பரலோகத்தில் உள்ள சீயோன் மலைக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள மலை ஆகும்.

 

பரலோகத்தில் அமைந்துள்ள பொன்னினால் உண்டாக்கப்பட்ட நகரமாகிய புதிய எருசலேம் நகரில் அமைந்து உள்ளதுதான் பரலோக மலை ஆகும். அந்த மலை ஒரு பொன் மயமான மலை. அந்த மலை தெய்வம் வாழும் மலை ஆகும். அந்த மலை சீயோன் மலை ஆகும்.இதைப்பற்றி பரிசுத்த வேதாகமத்தில் தான் படிக்க முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை ஆராய்ந்து பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம்.

வெளி 21-18 to 21  

அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.  பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

 

பொன் மயமான நகரத்தில் அமைந்துள்ளதால் பொன்மலை என அழைக்கப்படுகிறது.

சீயோன் மலைக்கு ஒப்பனையாகப் பரலோக மலை என்ற பெயரில் அனேக மலைக்குப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. அதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

பரலோகத்தில் உள்ள மலையைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பரிசுத்த வேதாகமம் பரலோக மலையைப்பற்றி என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அந்த பரலோகத்தில் இருக்கும் மலையின் பெயர் சீயோன் ஆகும். அந்த மலை மகாராஜாவின் நகரமாகும். அந்த பரலோக  மலையாகிய சீயோன் முழு பூமியின் சந்தோசமாக உள்ளது.

 

உலக வாழ்க்கையின் முடிவுக்குப் பிறகு நாம் பரலோக எருசலேமுக்கும் சீயோன் மலைக்கும் வர வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது

எபிரெயர் 12:22-24

நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய (பரலோகத்தில் இருக்கும்)  பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

 

பரிசுத்த வேதாகமம் பரலோக மலையை எவ்வாறு அழைக்கிறது

 

1) வடதிசையில் உள்ள மலை என்றும்

2) சீயோன் பர்வதம் என்றும்

3) பரிசுத்த மலை என்றும்

4) சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் என்றும்

5) தேவனாகிய கர்த்தர் வாசமாயிருக்கிற மலை என்றும்

6) கர்த்தரைப் புகழ்ந்து பாடும் மலை என்றும்

7) தேவன் பிரகாசிக்கிற மலை என்றும்

8) கர்த்தர் சீயோன் மலையில் இருந்து ஆசிர்வதிக்கிறார் என்று கூறுகிறது.

 

எனவே தான் அந்த வடமலையாகிய சீயோனில் வாசம்பன்னும் தெய்வத்தை வடமலையான் என அழைக்கிறோம்.

 

பரிசுத்த வேதாகமம்

 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.சங்கீதம் 48:2

 

 நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேம் நடுவிலே வாசம்பண்ணுவேன். எருசலேம் சத்தியநகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதமென்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 8:3

 

என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், யோவேல் 3:17

 

சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். சங்கீதம் 9:11

 

பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். சங்கீதம் 50:2

 

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. சங்கீதம் 134:3

 

பரலோக மலையாகிய சீயோன் மலைக்கு நினைவாக இந்தியாவில் பல மலைகளுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, இதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

உதாரணமாக

1) திருப்பரங்குன்றம்

2) வைகுண்ட மலை

3) மந்தரமலை

4) இமயமலை

5) திருப்பதி மலை

6) பொன் மலை

7) மேருமலை

8) திருமலை

 

இவை அனைத்தும் தமிழ் நாட்டில் அல்லது இந்தியாவில் உள்ள சில மலைகளுக்குக் கொடுக்கப்பட்ட பரலோக மலையின் நினைவு கூறுதலுக்காக அல்லது ஒப்பனையாக சொல்லப்பட்ட பெயர்கள் ஆகும்.

 

நமது நாட்டில் உள்ள சில மலைகளின் பெயர்களை அதின் அர்த்தத்தையும் பார்ப்போம்.

 

1) திருப்பரங்குன்றம்

புனிதமான பரலோகத்தில் உள்ள மலையாகும். இந்த பெயர் மதுரையில் உள்ள ஒரு மலைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

2) வைகுண்ட மலை

வைகுண்டம் என்றால் பரலோகம் ஆகும், அங்கு இருக்கும் மலை வைகுண்ட மலை ஆகும் இந்த பெயர் இமாலய மலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது

 

3) கைலாச மலை 

கைலாசம் என்றால் பரலோகம் என அர்த்தம் ஆகும்.  கைலாச மலை என்றால் கடவுளின் கரம் / புயம் உலாவுகிற மலை ஆகும். அல்லது கடவுளின் படைகளாகிய ஏஞ்சல்கள் உலாவுகிற இடம் ஆகும். இந்த பெயர் இமாலய மலைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது

 

4) மேருமலை

அதில் முக்கியமானது மேரு மலையாகும். இது ஒரு வடமலை, இது ஒரு பொன்மலை, இது ஒரு திருமலை, இது உலகத்தின் நடுவில் அமைந்திருக்கும் ஒரு மலை. 7 கண்டங்களின் நடுவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும்.

பரலோகத்தில் இருக்கும் மலை தங்கத்தினால் ஆன மலை ஆகும், இந்த பூமியில் உள்ள மலை தங்கத்தினால் ஆனது அல்ல, பொன்னினால் ஆன மலையை நினைவு படுத்தவே பொன்மலை எனப் பெயர் இடப்பட்டுள்ளது.

மேலும் மேருமலை என்பது ஏழு கண்டங்கள் நடுவில் அமைந்துள்ள மலை ஆகும், அதே போல் மேருமலை பூமியின் மையப்பகுதியில் அமைந்துள்ளதாக இருக்கிறது.

(பூமியின் மையப்பகுதியில் அமைந்திருப்பது தான் மகாராஜாவின் நகரமாகிய எருசலேம் ஆகும். அங்கு அமைந்திருக்கும் மலை சீயோன் ஆகும். இந்த சீயோன் மலைதான் மேருமலை என அழைக்கப்படுகிறது.

இது பரலோகத்தில் இருக்கும் புதிய எருசலேம் நகருக்கும், பரலோகத்தில் இருக்கும் சீயோன் மலைக்கும் ஒப்பனையானவைகள் ஆகும்.)

மேருமலை என்பது  ( golden mountain situated at the centre of the seven dwipas (continents) (The continents are, from largest to smallest: Asia, Africa, North America, South America, Antarctica, Europe, and Australia.02Jun2022 )

 

5) பொன்மலை ( Golden Rock )

மேருமலை ஒரு தங்கத்தினால் ஆன மலை எனக் குறிப்பிடப்படுகிறது, இந்த பெயர் திருச்சியில் உள்ள ஒரு இடத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னினால் ஆன மலை இந்த பூமியில் இல்லை, அந்த மலை பரலோகத்தில் உள்ளது எனப் பரிசுத்த வேதாகமம் அழகாகக் கூறுகிறது.

6) மந்தரமலை

மந்தர மலை என்பது சுவர்க்கம் அல்லது பரலோகத்தில் இருக்கும் மலை ஆகும். இந்த பெயர் சூட்டப்பட்ட மலை மந்தரகிரியில் இருக்கிறது.

மந்தரம்

mantaram   s. mount Mandara, மந்தரகிரி; 2. one of the notes of the musical scale; 3. the base or lowest part in music; 4. Swerga, சுவர்க்கம். https://agarathi.com/word/%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

 

7) இமயமலை

இமயமலை என்றால் உயர்ந்த இடத்தில் இருக்கும் மலை ஆகும், உயர்ந்த இடம் என்றால் பரலோகம் ஆகும். அல்லது இறைவன் மையம் கொண்டுள்ள மலை அல்லது இறைவன் மயமாகவே காட்சியளிக்கும் மலை ஆகும்.

இந்த கைலாச மலைதான் இமாலய மலை,( Himalayas ) மேருமலை, மந்தரமலை, இமயமலை என்றும் அழைக்கப்படுகின்றன

வடமலை எனக்குறிப்பிடும் போது

பரலோகம்

பரலோகம் என்பது தெய்வத்தின் உறைவிடம் ஆகும். அந்த பரலோகம் இந்த பூமியில் இல்லை. பரலோகம் என்பது நாம் சென்று சேர வேண்டிய இடம் ஆகும், அங்கு தான் பரலோக மலை இருக்கிறது. நாம் பரலோகம் வந்து சேர வேண்டும் என்பதயே தெய்வமும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார்

 

ஒருவன் இந்த உலகத்தை ஜெயித்தால் தான் பரலோகம் செல்ல முடியும் அப்படி ஜெயிப்பவர்களுக்குத் தான் வள்ளி எனப்பெயர் கூறப்படுகிறது

 

பரலோகம் என்ற வார்த்தையை நாம் பல பெயர்களில் அழைக்கிறோம்

  1. பரலோகம்

  2. பரமண்டலம்

  3. சொர்க்கம்

  4. மேலோகம் 

  5. அமரர் வாழும் இடம்

  6. கைலாசம்

  7. காசி

  8. உத்தர்காசி

  9.  அகண்ட தளம்

  10. கூடம் ( கூடமுடையார்)

  11. தேவ இந்திரன் வாழும் இடம்.

 

மேலே சொல்லப்பட்ட இடங்கள் குறிப்பிடும் பரலோகம் இந்த   பூமியில் இல்லை. 

இங்கே பரலோகம் எனப் பெயர் சூட்டப்பட்ட இடங்கள் எல்லாம் மேலே உள்ள பரலோகத்திற்கு ஒப்பனையாகக் கொடுக்கப்பட்ட பெயர்கள்

 

நாம் பூமியில் உள்ள பரலோகத்தின் பெயர்களை வைத்திருக்கும் இடங்களுக்குச் செல்வதினால் பரலோகம் செல்ல முடியாது.

 

நாம் பரலோகம் செல்ல வேண்டும் என்றால் நாம் கடவுளுக்குப் பிரியமாக வாழ வேண்டும்

அதாவது பரிசுத்தமாகவும், நீதி செய்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

 

நாமும் பரிசுத்தமாகவும், நீதி செய்கிறவர்களாகவும் இந்த பூமியில் வாழ்ந்து இயேசு உயிர்த்து எழுந்து வாசம் செய்யும் பரலோக மலைக்கு செல்ல ஆயத்தம் ஆவோமா.

இயேசு உயிர்த்தெழுந்து தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். அவரே உயிர்த்தெழுந்தவர்களில் முதற்பலனானவர்.

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. I பேதுரு 3:22

அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.  I கொரி 15:23

guru

-------------------------------------------------------------------------------------------------------------------

மேரு

https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81  

s. A fabulous mountain said to be situated in the centre of the earth called also மகாமேரு, and பொன்மலை. 2. Mount, mountain, a hill in general,

மேரு

mēru   n. mēru. 1. The golden mountain round which the planets are said torevolve, believed to be the centre of the sevenDwīpas (centre of seven continents )

What are the main 7 continents?

The continents are, from largest to smallest: Asia, Africa, North America, South America, Antarctica, Europe, and Australia.02-Jun-2022

What are the seven Dwipas?

Bangera identifies them as: 1) 'Plaksha'-South America, 2) 'Pushkara'-North America, 3) 'Krauncha'-Africa, 4) 'Jambu'-Asia including 'Bharat Varsha', 5) 'Shaka'-Europe, 6) 'Shalmali'-Australia, 7) 'Kusha'Oceania (i.e. several Pacific Ocean Islands, New Zealand, Melanesia, etc.).

guru

bottom of page