திருவள்ளுவர் கூறும் மோட்சம், நரகம் ( குறள்-121 ) -- kural121
" நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்". மத்தேயு 25:46
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
குறள் 121ல் திருவள்ளுவர் முதல் வரியில் அமரர் என்ற வார்த்தையையும் இரண்டாவது வரியில் ஆரிருள் என்ற வார்த்தையையும் உபயோக படுத்துகிறார். இந்த இரண்டு வார்த்தைகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அமரர்
அமரர் என்றால் தேவனின் உலகத்தில் இருப்பவர் அல்லது தேவன் வாழும் மேல் உலகத்திற்குச் செல்பவர்கள் என அர்த்தம் ஆகும்.
இறந்தவர்களின் ஆத்துமா தேவன் வாழும் மேல் உலகத்தைச் சென்று சேர்ந்து விட்டது என்ற நம்பிக்கையில் இறந்தவர்களை அமரர் என அழைக்கிறோம்.
எனவே தான் இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அமரர் ஊர்தி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் எல்லோரும் பரலோகம் அல்லது மேல் உலகம் சென்று சேர்ந்து விடுவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆரிருள்
ஆரிருள் என்றால் ஆர் + இருள் ஆகும். ஆர் என்றால் கெட்ட, மோசமான நரக இருள் ஆகும்.
விளக்கம்
ஒருவன் தான் இந்த உலகத்தில் உயிரோடு உள்ள நாட்கள் முழுவதும் தன்னைப் படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட்டு அதனால் உண்டாகும் அன்பு, இரக்கம், தாழ்மை மற்றும் கிருபையினால் தன் ஐம்புலங்களையும் அடக்கி வாழ்ந்தால், அந்த அடக்கம் அமரர்கள் வாழும் இடமாகிய மேல் உலகத்துக்கு அதாவது மோட்சத்திற்கு அவனைக் கொண்டு செல்லும்.
அப்படி இல்லாமல் ஒருவன் இறைவனுக்குப் பயப்படாமல் இருந்து தன் ஐம்புலங்களையும் அடக்கி வாழாவிட்டால் அவன் ஆர் இருள் நிறைந்த நரக லோகத்திற்கு அந்த அடங்காமை அவனைக் கொண்டு சேர்க்கும்.
இந்த குறளுக்கு அர்த்தம் எழுதியவர்களில் பரிமேலழகர் மட்டுமே ஆர் இருளை நரக இருள் எனக் குறிப்பிடுகிறார்.
பரிமேலழகர் உரை:
அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின் கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்"
குறள் 121 கூறும் உண்மைகள்
திருவள்ளுவர் தனது குறளில் ஒருவன் அடக்கத்துடன் இந்த பூமியில் வாழ்ந்தால் அவனுடைய ஆத்துமா பரலோகம் சென்று சேரும் என்றும்.
ஒருவன் தனது வாழ்வில் அடக்கம் இல்லாது வாழ்ந்தால் அவனது ஆத்துமா மரணத்திற்குப் பிறகு இறைவனின் நியாயத் தீர்ப்பை அடைந்து நரகத்தைச் சென்று சேரும் என்றும் கூறுகிறார்.
1) பரலோகம் அல்லது அமரர் உலகம் என்று உண்டு
2) நரகம் அல்லது ஆர் இருள் இருக்கும் இடம் உண்டு
3) கடவுளின் நியாயத் தீர்ப்பு உண்டு
4) மறுபிறப்பு இல்லை என்பவை இந்த குறள் கூரும் உண்மைகள் ஆகும்.
மறுபிறப்பு
திருவள்ளுவர் ஒரு மனிதன் அமரர் வாழும் இடத்துக்குச் செல்ல வேண்டும் அல்லது ஆரிருள் உள்ள நரகத்துக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிடுகிறார், அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது தான் மறைந்திருக்கும் உண்மை
நியாயத்தீர்ப்பு
திருவள்ளுவர் ஒரு மனிதன் அமரர் வாழும் இடத்துக்குச் செல்ல வேண்டும் அல்லது ஆரிருள் உள்ள நரகத்துக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிடுகிறார்,
கடவுள் ஒரு மனிதனின் இறப்புக்குப் பிறகு அவனுடைய நற்செயல்கள் மற்றும் தீயசெயல்களை வைத்து நியாயத்தீர்ப்பு செய்து மோட்சம், நரகம் என்ற இடங்களுக்குப் பிரித்து அனுப்புவார்.
பரிசுத்த வேதாகமம்
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, எபிரேயர் 9:27
பரிசுத்த வேதாகமம் அடக்கத்துடன் வாழ்ந்தவர்களை நன்மை செய்தவர்கள் எனவும் அடங்காமல் வாழ்ந்தவர்களைத் தீமை செய்தவர்கள் எனவும் குறிப்பிடுகிறது, மேலும் அடக்கத்துடன் வாழ்பவர்கள் ஜீவனை (பரலோக வாழ்வை) அடைவார்கள் என்றும், அடங்காமல் வாழ்பவர்களுக்கு நரக ஆக்கினை ( தண்டனை ) உண்டு எனக் குறிப்பிடுகிறது.
யோவான் 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
திருவள்ளுவர் இந்த நரக இருளைப் பற்றி வேறு சில குறள்களில் குறிப்பிட்டு உள்ளார் அவற்றை ஆராய்ந்து பார்ப்போம்.
1) குறள் 5: -- kural5
திருவள்ளுவர் குறள் 5ல் இறைவனைப் பற்றி குறிப்பிடும் போது, இறைவன் நரக இருளுக்குக் கொண்டு சேர்க்கும் இருவினையாகிய ஜென்ம பாவம், மற்றும் கரும பாவம் இல்லாதவர் எனக் குறிப்பிடுகிறது. ஜென்ம பாவம் மற்றும் கரும பாவம் உள்ளவர்கள் நரக இருள் சென்று சேர்வார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. ஜென்ம பாவம் என்பது முன் ஜென்ம பாவம் அல்ல மூதாதையர்கள் வழி பாவம் ஆகும்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இருள் சேர் = இருளாகிய நரகம்
இரு வினை=ஜென்ம பாவம், கரும பாவம் ஆகிய இருவினை
பொருள் = மோட்சம்
புகழ்புரிந்தார் = வானுலக மகிமை கொடுத்தார்.
மாட்டு = சொல் or word
ஜென்ம பாவம் = மூதாதையர் வழியுரிமையான பாவம்
கர்ம பாவம் = செயல் பாவம்
இருளாகிய நரகத்தில் கொண்டுசேர்க்கும் ஜென்ம பாவம் கரும பாவம் ஆகிய இரு வினைகளையும் சேராத இறைவன், வார்த்தையாகி (word of God) பூமிக்கு வந்து ஒளி உள்ள இடமாகிய மோட்சம் சென்று சேர்ந்து நமக்கு வானுலக மகிமை கொடுத்தார். (பிறப்பிலும், வளர்ப்பிலும் பாவம் இல்லாதவர்)
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை பாவமில்லாதவர் என்றும் அவர் பாவத்தை அறியாதவர் என்றும் குறிப்பிடுகிறது.
I யோவான் 3:5
அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.
II கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
2) குறள் 352: --- kural352
திருவள்ளுவர் தனது குறள் 352ல் நரகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்த உலகத்தின் மயக்கத்தை விட்டுவிட்டு பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் பாவம் மன்னிக்கப்பட்டு அல்லது பாவவிடுதலை கிடைத்து இந்த பூமியில் விடுதலை பெறுவார்கள். அவர்களுடய ஆத்துமா இருள் நிறைந்த நரகம் செல்லாமல் பரலோகத்திற்குச் சென்று இன்பமான வாழ்க்கை வாழும். என்று குறிப்பிடுகிறார்.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
இருள் நீங்கி = இருள் நிறந்த நரகம் செல்லாமல்
இன்பம் பயக்கும் = பரலோக வாழ்க்கை (இன்பம்) உண்டாகும்
மருள் நீங்கி = உலக மயக்கம் விட்டு
மாசறு காட்சி யவர்க்கு = குற்றம் நீங்கி மெய்யுணர்வு கண்டவர்களுக்கு அல்லது அடைந்தவர்களுக்கு.
இந்த உலகத்தின் மயக்கத்தை விட்டுவிட்டவர்களின் பாவம் மன்னிக்கப்பட்டு அல்லது பாவவிடுதலை கிடைத்து அவர்கள் இருள் நிறைந்த நரகம் செல்லாமல் பரலோகத்திற்குச் சென்று இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள்.
பரிசுத்த வேதாகமம் உலக சிநேகம் (மருள்) தேவனுக்கு விரோதமான பகை என்றும் ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. என்றும் உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போகும் என்றும் குறிப்பிடுகிறது
யாக்கோபு 4:5
.........உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
I யோவான் 2:15
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
I யோவான் 2:15
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
3) குறள் 243: -- kural243
திருவள்ளுவர் தனது குறள் 243ல் நரகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் அல்லது நடத்தப்படுகிறவர்கள், இந்த உலகத்தில் இருக்கும் போதே ஜென்ம பாவம் மற்றும் கரும பாவத்தை விட்டு விலகி வாழ்வார்கள், அப்படி பாவம் இல்லாமல் வாழ்பவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஆத்துமா கெட்ட இருளை உடைய நரகத்திற்குச் சென்று சேராமல் மோட்ச வாழ்க்கையை அடைந்து நீடு வாழும் எனக் குறிப்பிடுகிறார்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
அருள் சேர்ந்த = பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட ஆகும்.
(தெய்வ வழிபாட்டின் போது அருள் இறங்கி விட்டது அல்லது அருள் வந்து விட்டது எனக் குறிப்பிடுகிறோம். இது கடவுளின் பரிசுதத ஆவியைக் குறிக்கும்.)
நெஞ்சினார்க்கில்லை = உள்ளம் உடையவர்களுக்கு இல்லை
இருள் சேர்ந்த = ஆர் இருளை உடைய
இன்னா உலகம் புகல் = நரக உலகம் சேர்தல்
பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்றுக் கொண்ட உள்ளம் உடையவர்கள், கெட்ட இருளை உடைய நரகத்திற்கு சென்று சேர்வதில்லை.
பரிசுத்த வேதாகமம் , மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.அதாவது நரகத்துக்கு சென்று சேரக்கூடிய நியாயத்தீர்ப்பு (தண்டனை) இல்லை எனக் கூறுகிறது
ரோமர் 8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
3) குறள் 243: -- kural243
திருவள்ளுவர் தனது குறள் 243ல் நரகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் அல்லது நடத்தப்படுகிறவர்கள், இந்த உலகத்தில் இருக்கும் போதே ஜென்ம பாவம் மற்றும் கரும பாவத்தை விட்டு விலகி வாழ்வார்கள், அப்படி பாவம் இல்லாமல் வாழ்பவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஆத்துமா கெட்ட இருளை உடைய நரகத்திற்குச் சென்று சேராமல் மோட்ச வாழ்க்கையை அடைந்து நீடு வாழும் எனக் குறிப்பிடுகிறார்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
அருள் சேர்ந்த = பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட ஆகும்.
(தெய்வ வழிபாட்டின் போது அருள் இறங்கி விட்டது அல்லது அருள் வந்து விட்டது எனக் குறிப்பிடுகிறோம். இது கடவுளின் பரிசுதத ஆவியைக் குறிக்கும்.)
நெஞ்சினார்க்கில்லை = உள்ளம் உடையவர்களுக்கு இல்லை
இருள் சேர்ந்த = ஆர் இருளை உடைய
இன்னா உலகம் புகல் = நரக உலகம் சேர்தல்
பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்றுக் கொண்ட உள்ளம் உடையவர்கள், கெட்ட இருளை உடைய நரகத்திற்கு சென்று சேர்வதில்லை.
பரிசுத்த வேதாகமம் , மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.அதாவது நரகத்துக்கு சென்று சேரக்கூடிய நியாயத்தீர்ப்பு (தண்டனை) இல்லை எனக் கூறுகிறது
ரோமர் 8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
4) குறள் 753 --- kural753
திருவள்ளுவர் தனது குறள் 753ல் நரகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது பரலோகத்தில் இருக்கும் பரம் பொருளாகிய சத்திய ஒளியை வேண்டிக் கொள்ளுகிறவர்களின் அல்லது நினைக்கும் உள்ளத்திற்குள் அந்த ஒளி சென்று நரகமாகிய இருள் அகற்றும் என குறிப்பிடுகிறார்.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
பொருள் = பரம்பொருள் அல்லது பரலோகம்
பொய்யா = உண்மையான அல்லது சத்தியம்
விளக்கு + உம் = ஒளியால்
எண்ணிய = நினைத்த
தேயத்துச் சென்று = உடலுக்குள் சென்று
இருளருக்கும் = நரக இருளில் இருந்து விடுதலை கிடைக்கும்
பரலோகத்தில் இருக்கும் பரம் பொருளாகிய சத்திய ஒளியை வேண்டிக் கொள்ளுகிறவர்களின் அல்லது நினைக்கும் உள்ளத்திற்குள் அந்த ஒளி சென்று நரகமாகிய இருள் அகற்றும்
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை குறிப்பிடும் போது அவர் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார் என்றும் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி என்றும் அவரே மெய்யான ஒளி என்றும் அவரிடத்தில் இருள் இல்லை என்றும் கூறுகிறது
யோவான் 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவான் 1:9
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
I யோவான் 1:5
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
பரலோகம், நரகம் மற்றும் ஒரு மனிதனுக்கு மறுபிறப்பு இந்த பூமியில் இல்லை என்பதையும், ஒரு மனிதன் மரித்த பிறகு நியாயத்தீர்ப்பு அடைந்து பரலோகம் அல்லது நரகம் சென்று சேர வேண்டும் என்பதை ப்ரிசுத்த வேதாகமம் அழகாகக் கூறுகிறது. அதை நாம் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வெளி 1:18
"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." --இயேசு
guru