top of page

வள்ளி – தெய்வானை

வள்ளி = தெய்வானை என்றவுடன் யாபகத்துக்கு வருவது தெய்வமாகிய முருகனுடைய இரு மனைவிகள் என்பதே ஆகும்.

 

தெய்வத்துக்கு மனைவிகள் உண்டா ?

தெய்வத்துக்கு மனைவிகள் உண்டா என்பது ஒரு கேள்விக்குறியாகும். மேலோட்டமாகப் பார்த்தால் இரு மனைவிகள் இருப்பது போல உருவகப்படுத்தப் பட்டுள்ளது. அதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் இருக்கும் விடை கிடைக்கும்.

 

அகத்தியர் அவர்கள் தன்னுடைய அகத்தியர் ஞானம் 30ல் 23 வது பாடலில் தெய்வத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது “குவலயத்தில் (பூமியில்) தானுஉதித்துக் குருவாய் வந்து கனமான சமுசாரம் ஒன்றில்லாமல் சன்னியாசி போலிருந்து தவத்தைக்காட்டி”  என்று பாடுகிறார்.

இந்த உலகத்தில் வந்து மனித குமாரனாக பிறந்து குருவாய் வந்து பாரமான மனைவி இல்லாமல் சன்னியாசியாக வாழ்ந்தவர் தெய்வம் என்று கூறுகிறார்.

 

தெய்வம் சம்சார வாழ்க்கை உடையவராக இந்த பூமியில் வாழவில்லை, ஆகையால் தான் இன்றும் அனேகர் சன்னியாசியாக வாழ்ந்து தெய்வத்தை அடைய முயர்ச்சிக்கிறார்கள்.

 

அகத்தியர் ஞானம் 30ல் 23 வது பாடல்

 

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின் 
குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி

அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.

 

வள்ளி – தெய்வானையின் விளக்கம்

 

தெய்வானை

தெய்வம் இந்த பூமியில் மனித குமாரனாக பிறந்தது ஒரு தெய்வத்தின் ஆணையின் படியாகும், இதைப்பற்றி அறிய ஆனைமுகன் என்ற பக்கத்தை பார்க்கவும்.

https://www.narrowpathlight.com/kural-268-what-is-the-command

தெய்வம் இந்த பூமிக்குத் தெய்வத்தின் ஆணையின் படி வந்ததால் தான் அவருடைய ஒரு மனைவி தெய்வானை ( தெய்வத்தின் ஆணை ) என்று பெயர் சூடப்பட்டுள்ளது.

 

வள்ளி – ஜெயங்கொண்டவர்கள்

மறுபக்கம் இந்த பூமியில் ஜெயங்கொண்டவர்களுடைய ஆத்துமாக்களை மணந்து பரலோகம் அழைத்துச் செல்வது அவருடைய பணியாகும். அந்த ஜெயங்கொண்டவர்களுக்கு வள்ளி என்ற  பெயர் கொடுக்கப்பட்டு அவருக்கு இன்னொரு மனைவியாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

 

வள்ளி  -  குறவர் குலப் பெண்

வள்ளி என்ற பெயரை வேறு விதமாக பார்த்தால் வள்ளி என்ற பெண் ஒரு பெண் மானிடத்தில் ஒரு முனிவரின் பார்வையால் பிறந்து, குறவர் குல முறைமையின் படி வளர்க்கப்பட்ட ஒரு பெண் ஆகும். அதாவது பிறப்பிலும் வளர்ப்பிலும் தாழ்ந்த நிலமையில் உள்ள ஒரு பெண் ஆகும்.

தெய்வம் இந்த பூமியில் தாழ்ந்த நிலமையி;ல் உள்ளவர்களையும், வருமையில் இருப்பவர்களையும், மற்றும் இழிநிலையில் உள்ளவர்களையும் தெரிந்து கொண்டு அவர்களை இரட்சித்து அவர்கள் ஆத்துமாவை மணந்து பரலோகம் அழைத்துச் செல்லுபவர் ஆவார். அதனால் அப்படிப் பட்டவர்களை வள்ளி என உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த உலகத்தையும், தன் மாமிசத்தையும், சாத்தனையும் ஜெயித்தவர்கள் ஜெயங்கொண்டவர்கள் ஆவார்கள். வள்ளி என்ற பெயர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

போக நாதர் – ஆத்தும மணவாளன்

இயேசு கிறிஸ்து தெய்வத்தின் கட்டளை படி இந்த பூமிக்கு வந்து ஜெயங்கொண்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்களை இந்த பூமியில் இருந்து பரலோகம் அழைத்துச் செல்பவர் ஆவார். அதனால் தான் அவரை நாம் போக நாதர் என்று அழைக்கிறோம்.

 

போக நாதர் அவர்களை பற்றி சித்தர் கோரக்கர் அவர்கள் தனது “சந்திரரேகை”  நூலில் குறிப்பிட்டுள்ளார்,  போக நாதர் அவர்கள் இந்த பூமிக்குத் திரும்பவும் வருவார் என வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும், போக நாதர் வரும் நேரத்தில் சமாதியாய் இருக்கும் சித்தர் கோரக்கர் அவர்கள் சமாதியில் இருந்து அவருடைய உடல் ஆத்துமாவுடன் இனைந்து ஜோதி லிங்கமாகத் தோன்றி புறப்படுவதாகவும், போக நாதர் எந்த சந்தர்ப்பத்தில் பூமிக்குத் திரும்ப வருவார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 

"ஆகுமந்த நாளதனில் போக நாதர்

அகில பரதேச வெளி விட்டு நீங்கி

வாகுறவே நமதுபுவி வருவதாக

வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்

பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்

பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி

நாகுபணசல படதி நவநீதங்கள்

நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"

.

இயேசு கிறிஸ்து திரும்பவும் வரும் போது சித்தர் கோரக்கர் தனது சமாதியில் இருந்து ஜோதி லிங்கமாக எழும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாமும் கூட சித்தர் கோரக்கர் அவர்கள் சொல்லியது போல இயேசு கிறிஸ்து வரும் போது நம் ஆத்துமா எழும்பி தெய்வத்தோடு செல்வோம். இதன் விளக்கத்தை அரிய பார்க்கவும்

https://www.narrowpathlight.com/who-is-poga-nathar

.

இந்த பூமியில் இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்து, மனிதக் குல மீட்பிற்காகச் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரலோகம் சென்று தேவனுடைய வலது பக்கம் அமர்ந்து, நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

அவர் கடைசிக் காலம் ஆரம்பிக்கும் போது இந்த பூமிக்கு வந்து தம்முடைய மக்களை தன்னோடு கூட அழைத்துச் செல்வார்.

 

1) கட்டளை ( ஆணை ) அல்லது தெய்வானை (தெய்வத்தின் ஆணை)

முதல் மனிதனாகிய ஆதாம் அவனது மனைவி  ஏவாள் ஆகிய இருவரும் படைக்கப்பட்ட உடன் பாவத்துக்கு உள்ளானதினால் இந்த உலகத்தில் பாவம் வந்தது. அதன் விழைவாக பத்து கட்டளைகள் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது. மனிதன் அந்த கட்டளைகளை மீறி நடந்ததால் பலிக்கோட்பாடு உண்டானது. பலிக்கோட்பாடு கொடுக்கப்பட்ட பின்பு பாவமும், பலியும் பெருக ஆரம்பித்தது எனவே   கடவுளே மனிதனாகப் பிறந்து மனிதனுக்காகப்  பலியாக வேண்டும் என்ற கட்டளை ( தெய்வ ஆணை ) உண்டானது. அதின் அடிப்படையில் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக வந்து இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்து பரலோகம் சென்று, கடவுளின் வலது பக்கத்தில் அமர்ந்து, பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்,  அவர் ஜெயங்கொண்டவர்களை ( வள்ளி ) பரலோகம் அழைத்துச் செல்வார்.

இயேசு கிறிஸ்து மனிதனாக (மனித குமாரனாக) பூமியில் பிறக்க வேண்டும் என்பது கட்டளை

 

பரிசுத்த வேதாகமம்

 (இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கிமு 1500-450 ஆண்டுகளில் எழுதப்பட்டது )

King James Version (KJV)

I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.

ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; நீர் என் மைந்தர் இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.  சங்கீதம் 2:7   

 (இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 740-700 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது )

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7:14

 

2) வள்ளி என்பதின் விளக்கம்

வள்ளி என்பது ஜெயங்கொண்டவர்களை உருவகப்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். வள்ளி என்பது போரில் புறங்கொடாமல் போரிட்ட வீரனுக்கு அரசன் அணிவிக்கும் வீரக்கழல்  ஆகும். வள்ளுவன் என்ற பெயர் அவருக்கு தெய்வத்திற்க்காக இந்த பூமியை ஜெயங்கொண்டதினால் கொடுக்கப்பட்டு இருக்கலாம். வள்ளுவர் என்ற பெயர் ஒரு காரணப்பெயர் ஆகும்.

வள்ளி என்ற வார்த்தைக்கு விளக்கத்தை கீழே உள்ள கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

வள்ளி (சொல் விளக்கம்)

https://ta.wikipedia.org/s/3d1h

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigationJump to search

தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்த 12-இல் ஒன்று பாடாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் தொல்காப்பியம் கொடிநிலை கந்தழி வள்ளி எனக் காட்டிய துறைகளுக்கும் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் அந்த 48 துறைகளில் அடங்கும்.

தொல்காப்பியம் தரும் விளக்கம்[தொகு]

வீரக்கழல்

வள்ளி என்பது போரில் புறங்கொடாமல் போரிட்ட வீரனுக்கு அரசன் அணிவிக்கும் வீரக்கழல் இது பொன்னால் செய்யப்பட்டு வாடாமல் இருக்கும். [1]

கடவுளின் வள்ளண்மு

வள்ளி என்னும் துறை வள்ளல் தன்மையைப் போற்றும் துறை. இது கடவுளின் வள்ளல் தன்மையைப் போற்றுவதாய்க் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும், [2]

மகளிர் தோளில் ஒப்பனையாக எழுதப்படும் கொடி

வள்ளி என்பது மகளிரின் தோளில் எழுதப்படும் கொடி-ஓவிய ஒப்பனை. [3]

 

2.1 ) வள்ளி – குறவர் சுமுதாயப் பெண்

வள்ளி என்ற பெயரை வேறு விதமாக பார்த்தால் வள்ளி என்ற பெண் ஒரு பெண் மானிடத்தில் ஒரு முனிவரின் பார்வையால் பிறந்து குறவர் குல முறைமையின் படி வளர்க்கப்பட்ட ஒரு பெண் ஆகும். அதாவது பிறப்பிலும் வளர்ப்பிலும் தாழ்ந்த நிலைமையில் உள்ள ஒரு பெண் ஆகும்.

 

வள்ளி என்ற பெயர் குறவர் குல பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதா அல்லது மனிதக்குலத்தில் தாழ்ந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்பதை பார்த்தால், சிவகாசியில் உள்ள மக்களின் வகையறாவில் ஒன்று “வள்ளி குட்டி அரசன் வகையறா” ஆகும். இந்த பெயரை நன்கு ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கும். வள்ளி குட்டி என்றால் இந்த பூமியில் வந்து பிறந்து இந்த உலகத்தை, மரணத்தை, சாத்தானை மற்றும் மாமிசத்தை ஜெயித்த பிள்ளைகள் என்று அர்த்தம் ஆகும். வள்ளி குட்டி அரசன் வகையறா என்றால் உலகம், மரணம், சாத்தான் மற்றும் சரீரத்தை ஜெயித்த பிள்ளைகளின் தெய்வத்தின் வகையறா என்று அர்த்தம் ஆகும்.

 

வள்ளி என்ற பெயர் குறவர் குலப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் சிவகாசியில் உள்ள மக்களின் வகையறா ஒன்றுக்கு வள்ளிக்குட்டி அரசன் வகையறா என்ற பெயர் கொடுக்கப்பட்டு இருக்காது. வள்ளி என்ற பெயர் சமுதாயத்தில் தாழ்ந்தவர்கள், ஏழைகள், போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும்.

பரிசுத்த வேதாகமம்

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. வெளி 2:7

 

தெய்வம் இந்த பூமியில் தாழ்ந்த நிலமையி;ல் உள்ளவர்களையும், வருமையில் இருப்பவர்களையும், மற்றும் இழிநிலையில் உள்ளவர்களையும் தெரிந்து கொண்டு அவர்களை இரட்சித்து அவர்கள் ஆத்துமாவை மணந்து பரலோகம் அழைத்துச் செல்லுபவர் ஆவார். அதனால் அப்படிப் பட்டவர்களை வள்ளி என உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையே திருவுந்தியார் தனது 12 வது பாடலில் மூலையிருந்தாரை அதாவது வாழ்க்கையில் சோர்ந்து போய் துன்ப்ப்பட்டு செய்வது அறியாது மூலையில் அமர்ந்து இருப்பவரை முற்றம் அதாவது மோட்சம் சேர்த்தவர் என குறிப்பிடுகிறார்

 

திருவுந்தியார்  12

மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென் றுந்தீபற

தவத்திற் றலைவரென் றுந்தீபற.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 1 சாமு 2:8

………………………………….இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 21:31

நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, ) ஒரு மூலையில் இருந்து )  உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். ஏசாயா 41:9

 

3) தெய்வானை

தெய்வானை என்பது தெய்வத்தின் ஆணையாகும். தெய்வானையை (தெய்வ + ஆனை ) மணந்து அதாவது ஏற்று இந்த பூமிக்கு மனித தெய்வமாக வந்து தன்னுயிரைத் தானாக முன் வந்து மனித குல மீட்பிற்காக பலியாக கொடுத்தவரை இந்த பூமியில் பிறந்து வாழும் எல்லா உயிர்களும் வணங்கும்.

 

தெய்வத்தின் ஆணையை ஏற்று அதன் வழியாக (காரணமாக) இந்த உலகத்தில் வந்து அந்த ஆணையை நிறைவேற்ற மனிதனாக பிறந்ததால் மனித குமாரனை ஆனை முகன்  அல்லது கட்டளை முருகன் அல்லது தெய்வானை என அழைக்கின்றோம்.

 

தெய்வத்தின் ஆணையை ஏற்று அதாவது அந்த ஆனையை மணந்து இந்த பூமிக்கு வந்ததால் தான் நாம் தெய்வானையைத் தெய்வத்தின் மனைவி என அழைக்கிறோம்.

 

4) ஆணையா ? ஆனையா ?

ஆனை என்றால் யானை என்று எடுக்கக்கூடாது, ஏன் என்றால் சங்கம் மறுவிய காலத்தில் (கி.பி. 300 - கி.பி. 700) ஆண் யானைக்குக் களிறு என்றும் பெண் யானைக்குப் பிடி என்று தான் பெயர் வழக்கம் உண்டு உதாரணமாகச் சைவ சித்தாந்தத்தின் மெய்க்ண்ட சாத்திரங்கள் பதினாங்கினுள் ஒன்றை எழுதியவர் திருக்களிற்றுபடியார் ஆவார் அவருக்கு அந்த பெயர்க் காரணம்  என்ன என்பதைப்பார்ப்போம்

பெயர்க் காரணம்      

இந்நூலாசிரியர் தாழ்ந்த இனத்தவராதலால் முதலில் இவர் செய்த நூல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆசிரியர் திருவருளை வேண்டி, தன் நூலைத் தில்லை நடராசப் பெருமான் சந்நிதிக்குச் செல்லும் பஞ்சாக்கரப் படியில் (திருக்களிற்றுப்படி) வைக்க, படியின் இரு பக்கமுள்ள கல்யானைகள் உயிர் பெற்றுத் தம் தும்பிக்கையால் அந்நூலை எடுத்து நடராசப் பெருமானின் திருவடியில் வைக்க, அந்நூலின் சிறப்பை உணர்ந்த அடியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அதனாலேயே, அந்நூல் அப்பெயர் பெற்றது என்பது கர்ண பரம்பரையாக வழங்கும் செய்தியாகும்.[2]

 

இந்த பெயர் காரண்த்தை ஆராய்ந்து பார்த்தால் யானைக்குப் பதிலாக ஆனை என சங்கம் மறுவிய காலத்தில் (கி.பி. 300 - கி.பி. 700) உபயோகிக்கப் பட்டு இருந்தால் திருக்களிற்றுப்படியார் என்பதற்குப் பதிலாக திருஆனைப்படியார் என வழங்கப்பட்டு இருக்க வேண்டும்

அதே போல்  தெய்வம் தெய்வானை என்ற பெண்ணை மணந்திருக்க, தெய்வ யானை என்று எடுப்பது தவறு.

அதே போல் குறள் 268 ல் பெற்றானை என்பதை பெற்றயானை என்று எடுத்தால் குறளின் மொத்த அர்த்தமும் மாறிவிடும்

தமிழ் மொழியில் இலக்கண மாற்றங்கள் மற்றும் வார்த்தை உச்சரிப்பின் மாற்றங்கள் சங்கம் மறுவிய காலத்திற்குப் பின்பு உண்டானவை.

எனவே ஆனை என்பதை ஆணை அல்லது கட்டளை என எடுப்பது சாலச்சிறந்தது.

இதைப்பற்றி அறிய அனைமுகன் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

https://www.narrowpathlight.com/kural-268-what-is-the-command

 

குறள் 268:

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்

 

விளக்கம்

தான் பெற்ற ஆணையின் படி தன் உயிரைத் தான் அற அதாவது தன் உயிரை  முழுமையாகத் தானாகச் சாகக் கொடுத்தவரை மண்ணில் வாழும் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும்.

 

5) முருகன்

முருகன் என்ற வார்த்தைக்கு அழகானவன் என்று அர்த்தம் ஆகும். முருகன் என்பது ஒரு கடவுளின் பெயர் அல்ல அந்த பெயர் ஒரு அழகான தெய்வத்துக்குப் கொடுக்கப்பட்ட காரணப்பெயர் ஆகும். அதை நாம் ஆராய்ந்து பார்த்தால் தெய்வத்தின் குணமாகிய அழகன் என்பதையே தெய்வத்துக்குப் பெயராக வைத்து அவருக்கு ஒரு உருவம் கொடுத்து வணங்குகிறோம்.

 நமது நாட்டில் கடவுளுடைய குணங்களைத் தெய்வங்களாக வணங்குகிறோம். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பெயர் கொடுத்து வணங்குகிறோம். இந்த குணங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவைகள் ஆகும். இதை முழுமையாக அறிந்து கொள்ள இந்த வலை தளத்தில் உள்ள மற்ற கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். https://www.narrowpathlight.com/articles  

 

உதாரணம்

தெய்வம் அழகானவர் = முருகன்

தெய்வம் வல்லமை நிறைந்தவர்  =  சக்தி

தெய்வம் குமாரன் ஆகிய son of GOD = குமரக்கடவுள்

தெய்வம் கன்னியின் மூலமாகப் பிறந்தவர் = ஐயப்பன்

தெய்வம் உயிர்த்தெழுந்தவர்  = பிள்ளையார்

தெய்வம் ஆவியானவர்         = விஷ்ணு

தெய்வம் வெண்மையானவர்  = பால் வண்ண அய்யனார்

தெய்வம் பரிசுத்தமானவர்     = வெண்குடை அய்யனார் ( தூய குணத்தை குடையாக  பிடித்துக் கொண்டு நிற்பவர்

தெய்வம் சிருஷ்டிகர்           = பிரம்மா

பூபாலன்                         = மனித குமாரன்

லோக பாலன்                   = மனித குமாரன்

சொக்கநாதன்                    = பரலோகத்தில் இருந்து வரப்போகிற ஆத்தும மணவாளன்

போக நாதர்                     = ஆத்தும மணவாளன்  

தெய்வானை  =   தெய்வத்தின் ஆனை, தெய்வத்தின் கட்டளை,

ஆனைமுகன் =    தெய்வத்தின் ஆணை அல்லது கட்டளையயைப் பரிசாகப் பெற்றவர் அல்லது தெய்வத்தின் கட்டளை வழியாக இந்த பூமிக்கு வந்தவர் ஆவார்.

கட்டளை முருகன் = தெய்வத்தின் ஆணை அல்லது கட்டளை வழியாக இந்த பூமிக்கு வந்த அழகான தெய்வம் ஆவார்.

கட்டளை மாரியம்மன் = தெய்வத்தின் கட்டளை பெற்று இந்த பூமிக்கு வந்த ஆவி அல்லது அருள் மற்றும், மாரியாகிய மனித குமாரனாகிய தெய்வம்
guru

 

IMG_20240705_123702_2.jpg
bottom of page