கொன்று செய்த கொடுமை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு --- 7 -ஆம் திருமுறை --- கொன்று செய்த கொடுமை
தலம் : கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் பதிகம் 7.081
கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே
நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்-
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
திரு சுந்தரர் என்ற சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய திருப்பாட்டு 7 - ஆம் திருமுறை பதிகம் 7081பாடல்கள் எல்லாம் தண் கழுக்குன்றமே என்று முடிவடைகிறது. இதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்
தண் என்பது சாந்தமான தன்மையைக் காண்பிக்கிறது, கழு என்றால் கழுமரமாகும், கழுக் குன்றமே என்றால் கழுமரம் நிற்கும் மலையே என அர்த்தம் ஆகும்.
கழுக் குன்றம் என்ற வார்த்தை கழுகுக்குன்றம் என் அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது அது தவறு, கழு என்பது கழுமரத்தையே காண்பிக்கிறது. . ( தமிழ் நாட்டில் வெங்கழு, காத்தவராயன் கழுமரம், கழுவேற்றம், செங்கழு நீர் அம்மன் என்ற வார்த்தைகள் பயன் படுத்தப்படுவதை ஆராய்ந்து பார்க்கவேண்டும் )
இதை அறிந்து கொள்ள திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
அதே போல் கன்றினோடு பிடி சூழ் என்ற வார்த்தையும் தவறாகவே அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது. கன்றினோடு என்ற வார்த்தை கன்று + னோடு அதாவது தெய்வத்தின் பிள்ளையோடு என்று அர்த்தம் ஆகும், ( கன்று = குட்டி அல்லது மகன் மற்றும் குழந்தை ) அதாவது மனித குமாரனாக இந்த பூமிக்கு வந்த பிள்ளை தெய்வத்தோடு என அர்த்தம். சிலர் யானைக்குட்டி என அர்த்தம் எடுத்து விளக்கம் கொடுத்துள்ளனர், அது சரியல்ல,
தெய்வத்தை கன்றன் என்று கீழே உள்ள பாடல் வரிகள் அழைக்கிறது, கன்றன் என்றால் கன்று + அவன் என்பதாகும், கன்று என்ற வார்த்தை பிள்ளை தெய்வத்தையே குறிக்கிறது, எனவே கன்றினோடு என்ற வார்த்தை தெய்வத்தோடு என்று தான் வரும்.
கன்றன் என்ற கந்தன்
கன்றன் என்பது கன்று அவன் ஆகும், இந்த வார்த்தையாகிய கன்றன் மருவி கந்தன் என்று அழைக்கப்பட்டிருக்கக் கூடும்
2ஆம் திருமுறை 2022 - திருக்குடவாயில் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்
குன்றன்; குழகன் குடவாயில்தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே.
https://www.tamilvu.org/slet/l4120/l4120son.jsp?subid=1685
பிடி சூழ் = பிடி சூழ் என்பது பிடிக்கப்பட்ட கள்ளர்கள் இரண்டு பேர் சூழ்ந்து நிற்கிற என அர்த்தம் ஆகும்.
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே, = என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால் பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவோடு பிடிக்கப்பட்ட கள்ளர்கள் சூழ்ந்து அறையப்பட்ட தன்மையான ( சாந்தமான ) கழுமரம் நிற்கும் மலையே என அர்த்தம் ஆகும்.
மனித குமாரனாகிய தெய்வம் மற்றும் பிடிக்கப்பட்ட இரண்டு கள்ளர்கள் சூழ்ந்து இருக்கச் சிலுவையிலே அறையப்பட்டார், அதாவது இயேசு கிறிஸ்துவை சிலுவையாகிய கழுமரத்தில் அறையும் போது வேறு இரண்டு கள்ளர்களையும் சேர்த்து சிலுவையில் அறைந்தார்கள். இயேசு கிறிஸ்து நடுவிலும் மற்றும் இரண்டு கள்ளர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு வலது பக்கம் ஒருவனும் இடது பக்கம் ஒருவனும் அறையப்பட்டார்கள். அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இடம் கொல்கொதா என்கிற மலையாகும்
அதையே கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே என ஆசிரியர் எழுதுகிறார்.
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா (மலை) என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். யோவான் 19:16-18
பாடல் விளக்கம்
கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே
நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்-
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
பிள்ளை தெய்வத்தைக் கழுமரத்தில் கொன்று செய்த கொடுமையால் பல சாபங்கள் அதே போல் பல சொற்களைச் சொல்லவே வந்த பாவ வினைகள் பல, (இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று தங்கள் மேலும் தங்கள் பிள்ளைகள் மேலும் சொல்லி ஏற்றுக் கொண்டார்கள்..) அப்படி தெய்வத்தை கொன்றவர்களுக்கும், சொன்னவர்களுக்கும் நடுவில் நின்ற தெய்வ குற்றமாகிய பாவ வினைகள் பல, அந்த பாவ வினைகள் இப்பொழுதும் இந்த உலகத்தில் வாழுகிற பிள்ளைகளாகிய நம்மை பின் தொடர்ந்து வருகிறபடியால், அப்படிப்பட்ட பாவ வினைகள் நீங்க, நம்மை விட்டு என்றுமே பிரியாத தெய்வத்தை அவர் கொல்லப்பட்ட இடமாகிய கழுமரம் நிற்கும் மலையாகிய தன்மையான அல்லது சாந்தமான கழுக்குன்றம் சென்று சென்று வழிபட வேண்டும்.
அந்த கழுமரம் நிற்கும் மலையில் பிள்ளை தெய்வம் மற்றும், பிடிக்கப்பட்ட இரண்டு கள்ளர்கள் சூழ இருந்தார்கள், அதையே கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே என்று கூறப்பட்டுள்ளது.
தெளிவான விளக்கம்
1) கொன்று செய்த கொடுமையால் ,
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் கொன்றதினால் செய்யப்பட்ட கொடுமையால் அவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்த மக்கள் தங்கள் மேல் சாபத்தை வரவழைத்து கொண்டார்கள். அதையே ஆசிரியர் கொன்று செய்த கொடுமையால் பல என எழுதுகிறார். இயேசு கிறிஸ்துவை மக்கள் சிலுவையில் அறைய அப்போது ஆட்சி செய்த ஆளுநராகிய பிலாத்துவிடம் முறையிட்டார்கள், அவனோ தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று தங்கள் மேலும் தங்கள் பிள்ளைகள் மேலும் ஏற்றுக்கொண்டார்கள்..
பரிசுத்த வேதாகமம்
............... பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். மத்தேயு 27:24-25
மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். மாற்கு 14:21
...................................... இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். யோவான் 19:10-11
அப்படி கொடியவர்களால் கொல்லப்படும் போது, தெய்வம் தன்னை கொலைசெய்ய முயன்று ஒப்புக்கொடுத்த மக்களின் பாவம் அதிகமானது என்று அறிந்து அவர்களை மன்னித்தார். இதையே திருவள்ளுவர் தனது 550 குறளில் எழுதுகிறார்.
குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
கொலையிற் = சிலுவையில் மரண தண்டனை பெற்ற போதும்
கொடியாரை = தன்னை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தவர்களை
வேந்தொறுத்தல் = மன்னித்தது தெய்வம்
பைங்கூழ் = மனித குமாரனுக்கு ஏற்ற உண்மையான உணவு ஆகும்
களை = குற்றம் செய்த கள்வனை
கட்டதனொடு = மன்னித்து தன்னுடன் சேர்த்து
நேர் = ஒப்புரவு ஆக்கி பரலோகம் சேர்த்தது தெய்வம்
விளக்கம்
தெய்வம் தான் சிலுவையில் தொங்கும் போது தன்னை கொலை செய்ய ஒப்புக்கொடுத்த கொடியவர்களைத் தெய்வம் மன்னித்தது, அதே போல் பாவம் செய்து சிலுவையில் தன்னோடு கூட அறையப்பட்ட இரண்டு கள்ளர்களில் ஒருவன் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புரவு ஆகி மன்னிப்பைப் பெற்றுக்கொண்டதால் தெய்வம் அவனை தன்னோடு கூட பரலோகத்தில் இருப்பதற்கு அழைப்பைக் கொடுத்தார். அந்தப்படி பாவம் செய்த மனிதர்களை மன்னித்து பிதாவாகிய தெய்வத்தோடு ஒப்புரவு ஆக்கி பரலோகம் அழைத்துச் செல்வதுவே மனித உருவில் வந்த தெய்வமாகிய மனித குமாரனுக்கு ஏற்ற நல்ல உணவு ஆகும்.
இந்த குறளின் விளக்க உரைக்குக் குறள்-550 மன்னிப்பு என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
2) பல சொல்லவே நின்ற பாவ வினைகள் தாம், பல, நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரான் இடம்-
அவரைக் கொன்ற பாவ வினைகள் இப்போதும் நம்மை தொடருகின்றன, அவர் சொல்லிய அன்பு, பரிசுத்தம் ஆகியவற்றைப் பின் பற்றாமல் நாம் அவரை இன்றும் சிலுவையில் அறைந்து கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த பூமியில் நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. என்று பரிசுத்த வேதாகமம் ரோமர் 3:10-12 இல் கூறுகிறது. அப்படிப்பட்ட நம் பாவ வினைகள் நீங்கவே நம்மை விட்டு என்றுமே பிரியாத தெய்வத்தை அவர் கொல்லப்பட்ட இடமாகிய மலையில் சென்று சென்று வழிபட வேண்டும்
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஒப்புக்கொடுத்ததினால் உண்டான பாவம் பல ஆகும், அதே போல் இன்றும் அவரை 1) மக்கள் சிலுவையில் அறைகிறார்கள் எனப் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. 2) இயேசு கிறிஸ்துவை அறிந்தும் அறியாதவர்கள் போலப் பாவம் செய்து பாவத்திலேயே இருப்பவர்கள், மற்றும் 3) இயேசு கிறிஸ்துவை விட்டு விலகிப்போனவர்கள், மற்றும் 4) அவரை எதிர்ப்பவர்கள் மற்றும் தூஷிப்பவர்கள் யாவரும் இப்பொழுதும் பாவம் செய்து அவரை திரும்பவும் சிலுவையில் அறைகிறார்கள் அப்படிப்பட்ட பாவ வினைகள் நமக்கு அதிகம், அவைகள் நீங்கவே நம்மை விட்டு என்றுமே பிரியாத தெய்வத்தை அவர் கொல்லப்பட்ட இடமாகிய மலையில் சென்று சென்று வழிபட வேண்டும்
பரிசுத்த வேதாகமம்
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எபிரெயர் 6;6
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். எபிரெயர் 10;29
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத ..............போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். யூதா 1:10
3) கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே
அந்த இடமாகிய மலை பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவும், பிடிக்கப்பட்ட கள்ளர்கள் சூழ அறையப்பட்ட சாந்தமான தன்மையான கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையே ஆகும்
காவடி
ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து (விரதம் இருந்து), தன் சிலுவையை (காவு தடியாகிய காவடி) எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் - Bible
இந்த வசனத்தின் படி, காவடி எடுத்து மலை ஏறும் பழக்கம் நம் மக்களிடத்தில் உண்டு. .இயேசுவை கொல்ல பயன் படுத்தப்பட்ட சிலுவை என்பது இரண்டு மரத்தால் ஆனது ஒரு மரம் நெடுமரம் என்றும் குறுக்கு மரம் ஆகும் நெடுமரம் மலையில் நடப்பட்டு இருக்கும், குறுக்கு மரம் சுமந்து செல்லப்பட்டு பிறகு ஒன்று சேர்க்கப்பட்டு அதில் இயேசுவை அடித்துக் கொன்றார்கள், இயேசு சுமந்து சென்றது குறுக்கு தடி ஆகும் குறுக்கு தடியின் பெயர்கள் = காவு தடி, இடைகழி, சிலுவை ஆகும் நமது நாட்டில் இடைகழி அல்லது குறுக்கு மரத்தைத் தான் காவடியாகத் தெய்வத்தின் மரணத்தை நினைவு கூற தூக்கிச் செல்கிறோம். இடைகழியை தூக்கிச் சென்று புனிதமான கழுமரம் அல்லது நெடுமரம் அல்லது ஈட்டியோடு சேர்க்கும் போது முழு சிலுவை ஆகிறது.
இதை அறிந்து கொள்ள திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
guru
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல் 2
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு --- 7 -ஆம் திருமுறை ---தலம் : கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 2 - இறங்கிச் சென்று தொழுமின்
இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே!
பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்-
நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு இழி
கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே. ( பார்க்கவும் )
-------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல் 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு --- 7 -ஆம் திருமுறை ---தலம் : கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 3
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-
தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,
காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே. ( பார்க்கவும் )
-----------------------------------------------------------------------------------------------------------------
பாடல் 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 4
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக்
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே! ( பார்க்கவும் )
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல் 5
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 4
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்,
இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்-
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே! ( பார்க்கவும் )
-------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல் 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081
மடம் உடைய அடியார் தம் மனத்தே உற
விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன்,
படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்-
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே, ( பார்க்கவும் )
பாடல் 7
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற
ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்-
தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே,
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே (பார்க்கவும்)
பாடல் 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற
வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே (பார்க்கவும்)
பாடல் 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081
பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,
குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்-
மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே! (பார்க்கவும்)
பாடல் 10
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
கல்லில் வெள்ளை அருவித் தண் கழுக்குன்றினை,
மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே! (பார்க்கவும்)