top of page
Search

Kalakandan - காளகண்டன் - நீள நின்று தொழுமின்

Writer: j rajamohanj rajamohan

Updated: Mar 15, 2024

 Kalakandan - காளகண்டன் - நீள நின்று தொழுமின், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருப்பாட்டு-7 ஆம் திருமுறை,தலம்,கழுக்குன்றம்திருக்கழுக்குன்றம்- பதிகம்7.081, பாடல்3,கர்மபாவம்,ஜென்மபாவம், காளம்,கருமை,நஞ்சு, எட்டிமரம்,மேகம், கழு, சூலம், நீதி,உண்மை, ஒழுக்கம்,கொள்கை, நடத்தை,உறைதல்,தோய்தல்,தங்குதல், ஒழுகுதல், இறுகுதல்.


நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-

தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,

காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.!


நீள நின்று தொழுமின் =  நெடுமையான வரிசையில் நின்று தொழுவீர்களாக

நித்தலும் நீதியால்   =  தினமும் உண்மையுடன், ஒழுக்கத்துடன்,

ஆளும் நம்ம வினைகள் = நம்மை ஆளுகின்ற வினைகள் அல்லது நமது பாவங்கள் ( கர்ம

                            பாவம் ,ஜென்ம பாவம்)

அல்கி அழுந்திட  = நம்முடன் தங்கி அதாவது நம் உள்ளத்துக்குள் இருந்து கொண்டே நம்மை அழுத்தி வருத்திட

தோளும் =  நம்மை தூக்கி சுமக்கின்ற தோள்களை உடைய

எட்டும் உடைய =  மற்றும் நமது கூடவே வரும் கால்களை உடைய

மா மணி  = மணி என்பது மாணிக்கம் என்பது தூய்மையானது அது போலத் தூய்மையான அல்லது பரிசுத்தமான தெய்வம்

சோதியான் =  அவர் இந்த உலகத்திற்கு ஒளியாய் வந்த ஒளி மயமான  தெய்வம் ஆவார்

காளகண்டன் = காளம் + கண்டவர், காளம் என்பது கழுமரத்தை காண்பிக்கிறது, அதாவது கழுமரத்தில் மரணத்தைக் கண்டவர் ஆவார்

உறையும் தண் கழுக்குன்றமே.! = அவர் இருக்கும் சாந்தமான தன்மையுள்ள கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையே


விளக்கம்

உலக மக்களே நம்முடன் தங்கி அதாவது நம் உள்ளத்துக்குள் இருந்து கொண்டே நம்மை அழுத்தி வருத்திடச் செய்யும், நம்மை ஆளுகின்ற இரு வினைகளாகிய கர்ம பாவம், மற்றும் மூதாதையர் வழி பாவம் ( ஜென்ம பாவம் ) முழுவதும் நம்மை விட்டு நீங்கும் படியாகவும் அந்த பாவத்தினாலும், சாபத்தினாலும் வரும் கஷ்டங்கள் நம்மைச் சேதப்படுத்தாதபடி நம்மைப் பாதுகாக்கும் படியாக நம்மை தூக்கி சுமக்கும் தோழ்களை உடைய தெய்வம், நம்முடைய வாழ்க்கையில் நம் கூடவே பயணித்து வரக்கூடிய கால்களை உடையவர் ஆவார். 

அப்படிப்பட்ட தெய்வம் மா மணிச் சோதியான் ஆவார், அதாவது மாணிக்கத்தைப் போல் தூய்மை மற்றும் பரிசுத்தம் உடைய ஒளிமயமான தெய்வம் ஆவார். அவரே உலகத்துக்கு ஒளியாய் வந்தவர் ஆவார். அவர் கழுமரமாகிய சிலுவையில் மரணத்தைக் கண்டவர் ஆவார். அப்படிப்பட்ட தெய்வம் இருக்கும் இடமாகிய சாந்தமான தன்மையான கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையாகிய கழுக்குன்றமே ஆகும்.

அங்குச் சென்று நெடுமையான வரிசையில் நின்று  தினமும் உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் மற்றும் பரிசுத்தத்துடனும் தொழுவீர்களாக


காளகண்டன்
காளம்


தெளிவான விளக்கம்

1) நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்

உலகத்தில் படைக்கப்பட்ட மக்களாகிய நாம் நம்மை படைத்த தெய்வத்தை, அனுதினம்  பரிசுத்தத்துடனும், நீதியுடனும், ஒழுக்கத்துடனும், உண்மையுடனும், நெடுமையான வரிசையில் நின்று  தொழ வேண்டும் அல்லது வணங்க வேண்டும்,

2) ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-

நாம் ஏன் அவரை வணங்க வேண்டும் என்றால் நம் உள்ளத்துக்குள் இருந்து கொண்டே நம்மை அழுத்தி வருத்திட செய்யும், நம்மை ஆளுகின்ற இரு வினைகளாகிய கர்ம பாவம், மற்றும் மூதாதையர் வழி பாவம் ( ஜென்ம பாவம் ) முழுவதும் நம்மை விட்டு நீங்கும் படியாகவும் அந்த பாவத்தினாலும், சாபத்தினாலும் வரும் கஷ்டங்கள் நம்மை ஒன்று சேர்ந்து நம்மை அமுக்கி நம்மைச் சேதப்படுத்தாதபடி, அதாவது நம்முடைய ஆத்துமா கடவுள் இடம் சென்று சேரக் கூடாதபடி தடுக்கும் பாவங்களையும், சாபங்களையும் விட்டு விட அவரை வணங்க வேண்டும்.

பரிசுத்த வேதாகமம்

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;  எபிரெயர் 12:1


3) தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,

நம்மை அழுத்துகிற பாவத்தினாலும், சாபத்தினாலும் வரும் கஷ்டங்கள் நம்மைச் சேதப்படுத்தாதபடி நம்மைப் பாதுகாக்கும் படியாக நம்மைத் தூக்கிச் சுமக்கும் தோழ்களை உடைய தெய்வம், அதே போல நம்முடைய வாழ்க்கையில் கஷ்ட நேரங்களிலும், துன்ப நேரங்களிலும் நம் கூடவே பயணித்து நமக்கு துணையாக வந்து அந்த கஷ்ட நேரத்திலும், துன்ப நேரத்திலும் நமக்கு உதவி செய்து, அந்த சூழ்நிலைகளைக் கடந்து போகப் பண்ணுகிறவர் ஆவார். அதாவது நம் கூட வரக்கூடிய கால்களை உடையவர் ஆவார்.  அப்படிப்பட்ட தெய்வம் மாமணிச் சோதியான் ஆவார், அதாவது மாணிக்கத்தைப் போல் தூய்மை மற்றும் பரிசுத்தம் உடைய ஒளிமயமான தெய்வம் ஆவார். அவரே உலகத்துக்கு ஒளியாய் வந்தவர் ஆவார்

பரிசுத்த வேதாகமம்

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய  கர்த்தர்உங்களைச் சுமந்துகொண்டுவந்ததைக் கண்டீர்களே.  உபாகமம் 1:31

தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது;.... சங்கீதம் 68:7-8

........இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:  மாற்கு 10:32

நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.  யோவான் 9:5 அ

வன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று

உரத்தசத்தமிட்டான். லூக்கா 4:34


4) காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே

காள கண்டவன் என்பதற்கு காளம் கண்டவன் என அர்த்தம் ஆகும், காளம் என்பது கழுமரத்தைக் காண்பிக்கிறது. காளகண்டன் என்றால் கழுமரத்தில் தன் மரணத்தைக் கண்டவன் என்பதாகும். இதற்குப் பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, எது சரி என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அப்படி கழுமரத்தில் மரணத்தைச் சந்தித்த, தெய்வம் தங்கி இருக்கும் இடமாகிய சாந்தமான தன்மையான கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையாகிய கழுக்குன்றமே ஆகும்.

                              ------------------------------------------------------------ NEXT

Kalam , காளம் , கருமை ; நஞ்சு ; பாம்பு ; எட்டிமரம் ; மேகம் ; நல்வினைக்கு காரணமான பெருமழை ; கழு ; ஊதுகொம்பு ; அவுரிப்பூண்டு ; சூலம்

நீதி என்பதன் பொருள் : உண்மை, ஒழுக்கம், நீதி, நல்ல நடத்தை, கொள்கை, நெறிமுறை, நடத்தை,. 

உறைதல் = தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

தோளும் =  புயம் அல்லது கை     -- --       எட்டும் =  காலும் அல்லது நடையும்

அல்கி = சேர்ந்து

 
 
 

Comments


bottom of page