top of page
Search

Isha - Esha - Eesan

Writer: j rajamohanj rajamohan

Updated: Mar 4

Isha - Esha - Eesan

10.904 திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை – பாடல் 4 https://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=10.904#link_1&lang=tamil

 

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி

துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்

வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி

விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.


சொற்பொருள்

இளங்கொளி = இளம்+ஒளி - இளமையான கன்று என்ற மனிதக் குமாரன் என்ற ஒளி

ஈசன்  = ஈசன் ஈசா என்ற இயேசு கிறிஸ்து ஆவார், (விளக்கம் கீழே)

பிறப்பு என்றும் இல்லி = அவருக்கு இனிமேல் இந்த உலகத்தில் பிறப்பு என்பது கிடையாது

துளங்கொளி = அசையும் அல்லது உலாவும் ஒளியாகிய

ஞாயிறும் திங்களும் கண்கள் = சூரியனும், சந்திரனும் அவருடைய படைப்பின் பெருமை கூறுபவைகள் ஆகும்.

வளங்கொளி அங்கியும் = பெரிய ஒளியாகிய தெய்வம் வளம் அல்லது இரட்சிப்பு  கொடுக்கும் பிரகாசிக்கும் ஒளி, அவர் அக்கினி மயமான தேவன் ஆவார்.

மற்றைக்கண் நெற்றி = மற்ற = வேறு, கண் = உடம்பு,  நெற்றி = வானம் வேறொரு உயிர்த்தெழுந்த உடம்புடன் வானம் சென்று

விளங்கொளி = ( விளங்கு + ஒளி = பிரகாசிக்கும் ஒளி )

செய்கின்ற மெய்காயம் ஆமே. =  செய்தல் = கிரியை, மெய் = உடம்பு, காயம் = வீடுபேறு  ஒவ்வொரு மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியாக்கி பரலோகம் சென்ற மனிதக் குமாரன் ஆவார் ஆமேன்.


ஆமே. = ஆமே என்ற வார்த்தை ஆமேன் என்பதைக் குறிக்கிறது. அதன் அர்த்தம் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம் ஆகும். இந்த வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் வருகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் ஒவ்வொரு ஜெபத்தின் முடிவிலும் ஆமேன் என்ற வார்த்தையைக் கூறுவார்கள்.


விளக்கம்

இளமையான கன்று என்ற மனிதக் குமாரன் என்ற ஒளியாகிய இறைவன், ஈசன் அல்லது ஈசா என்ற இயேசு கிறிஸ்து ஆவார், (விளக்கம் கீழே) அவருக்கு இனிமேல் இந்த உலகத்தில் பிறப்பு என்பது கிடையாது, அவர் மனிதக் குமாரனாக இந்தப் பூமிக்கு இனி வராமல் நியாயாதிபதியாக வருவார். அதையே திருவுந்தியார் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார் (விளக்கம் கீழே ) அவர் படைத்த உலாவும் ஒளியாகிய  சூரியனும், சந்திரனும், அவருடைய படைப்பின் பெருமை கூறும் முக்கியமான ( மனிதனுக்கு ) கண் போன்ற படைப்புக்கள் ஆகும்.  பெரிய ஒளியாகிய தெய்வம் வளம் அல்லது இரட்சிப்பு  கொடுக்கும் பிரகாசிக்கும் ஒளியாக இந்தப் பூமிக்கு வந்தார், அவர் அக்கினி மயமான தேவன் ஆவார். அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் வேறொரு உயிர்த்தெழுந்த உடம்புடன் வானம் சென்றவர் ஆவார். அவர் ஒவ்வொரு மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியாக்கி பரலோகம் சென்ற மனிதக் குமாரன் ஆவார் ஆமேன்.


ஆமே. = ஆமே என்ற வார்த்தை அமேன் என்பதைக் குறிக்கிறது. அதன் அர்த்தம் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம் ஆகும். இந்த வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் வருகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் ஒவ்வொரு ஜெபத்தின் முடிவிலும் ஆமேன் என்ற வார்த்தையைக் கூறுவார்கள்.


சூரியன்,சந்திரன்
sun and moon

விரிவான விளக்கம்

1) இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி இளமையான கன்று என்ற மனிதக் குமாரன் என்ற ஒளியாகிய இறைவன், ஈசன் அல்லது ஈசா என்ற இயேசு கிறிஸ்து ஆவார், அவருக்கு இனிமேல் இந்த உலகத்தில் பிறப்பு என்பது கிடையாது, அவர் மனிதக் குமாரனாக இந்தப் பூமிக்கு இனி வராமல் இந்த பூமியை நியாயம் விசாரிக்கும் நியாயாதிபதியாக வருவார். அதையே திருவுந்தியார் தனது 3 வது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதையே ஈசன் என்ற இளம் ஒளிக்கு பிறப்பென்றும் இல்லை என்று இந்த வரிகள் கூறுகிறது.

ஈசன் என்ற ஈசா பார்க்கவும்


1) பாரதியார் தனது கவிதையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பாடும் போது, ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் எனப் பாடுகிறார்.


2) பவிஷ்ய மஹாபுராணம் பின் வருமாறு கூறுகிறது, "நீங்கள் யார் என்பதை நான் அறியலாமா? அதற்கு அந்த மனிதர் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார், நான் ஒரு கன்னிப் பெண்ணுக்குப் பிறந்த கடவுளின் மகன். என் பெயர் ஈசா மஸீஹா”.(மேசியா).


3) இஸ்லாத்தில், ஈசா என்பது இயேசுவைக் குறிக்கிறது, இஸ்லாத்தில் ( Quran ) ஈசா என்ற வார்த்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, 187 தடவைகளுக்கு மேல் குறிப்பிடப்படுகிறது.


திருவுந்தியார் --- 3

கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்

பிண்டத்தில் வாராரென் றுந்தீபற

பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.


திருவுந்தியார்தனது 3ஆவது பாடலில் கண்டத்தைக்கொண்டு கர்மம் முடித்தவர் எனத் தெய்வத்தைக் குறிப்பிடுகிறார் அதாவது தன் சாவைக்கொண்டு தனக்குக் கொடுக்கப்பட்ட புனிதமான வேலையைச் செய்து முடித்தவர் என்றும். இனி அவர் பிண்டத்தில் வரமாட்டார் அதாவது மனிதனாக இரண்டாவது முறை வரமாட்டார், ஆனால் அவர் இரண்டாவது முறையாக இந்த உலகத்தை நியாயம் விசாரிக்கும் நியாதிபதியாக வருவார். அவருக்குப் பிறப்பு இறப்பு என்பது கிடையாது என்று எழுதுகிறார்.

 

பரிசுத்த வேதாகமம்

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும்,கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.  எபிரெயர் 10:30


2) துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்

அவர்  படைத்த உலாவும் ஒளியாகிய சூரியனும், சந்திரனும், அவருடைய படைப்பின் பெருமை கூறும் முக்கியமான ( மனிதனுக்கு ) கண் போன்ற படைப்புக்கள் ஆகும்.


பரிசுத்த வேதாகமம்

( இயேசு கிறிஸ்து )  சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும்  அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன்  மனுஷருக்கு ஒளியாயிருந்தது. என்று கூறுகிறது.  யோவான் 1:2-3

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய  இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள்  பூமியின்மேல் பிரகாசிக்கவும்,  பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும்  இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன்  அவைகளை  வானம் என்கிற  ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதி 1:16-18


3) வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி

பெரிய ஒளியாகிய தெய்வம் வளம் அல்லது இரட்சிப்பு  கொடுக்கும் பிரகாசிக்கும் ஒளியாக இந்தப் பூமிக்கு வந்தார், அவர் அக்கினி மயமான தேவன் ஆவார். அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் வேறொரு உயிர்த்தெழுந்த உடம்புடன் வானம் சென்றவர் ஆவார்..


பரிசுத்த வேதாகமம்

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா  மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று  விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.  1தீமேத் 3:16


4) விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே

அவர் ஒவ்வொரு மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியாக்கி பரலோகம் சென்ற மனிதக் குமாரன் ஆவார் ஆமேன்.


கடவுள் ஆம் என்றும் ஆமேன் என்றும் இருக்கிறார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. ஸ்ரீலங்காவில் ஆம் என்ற வார்த்தையை ஓம் என்றே கூறுவார்கள்.  இந்த ஆம் என்பது வடக்கத்திய மொழிகளில் குறிப்பிடப்படும் போது ஓம் என்று மாறியுள்ளது. இதைப் பற்றிய விளக்கம் கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடியோவில் உள்ளது.


ஆமே. = ஆமே என்ற வார்த்தை ஆமேன் என்பதைக் குறிக்கிறது. அதன் அர்த்தம் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம் ஆகும். இந்த வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் வருகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் ஒவ்வொரு ஜெபத்தின் முடிவிலும் ஆமேன் என்ற வார்த்தையைக் கூறுவார்கள்.


பரிசுத்த வேதாகமம்

என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே  பிரசங்கிக்கப்பட்ட  தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல  என்றும்  இராமல், ஆம் என்றே இருக்கிறார். எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள்  ஆமென் என்றும் இருக்கிறதே. 2 கொரி 1:19:20

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 1 பேதுரு 3:22

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள் : பெயர் : நிலவு வான்மதி, சந்திரன் ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கண் : விழி கண்ணோட்டம் பீலிக்கண் கணு மரக்கணு தொளை மூங்கில்  முரசடிக்குமிடம் மூட்டுவாய் பெருமை இடம் ஏழனுருபு அறிவு பற்றுக்கோடு உடம்பு  அசை உடலூக்கம்

நெற்றி : கண்புருவங்களுக்கு மேலுள்ள பகுதி முன்படை முன்பகுதி உச்சி கட்டடத்தின் மேனிலை முகப்பு  வானம் தண்டிகையின் தலைப்பு மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம் நடு முயற்சி

காயம் : ஆகாயம் உடல் பெருங்காயம் ஐங்காயம் மிளகு  உறைப்பு குழம்பில் வெந்த கறித்துண்டு கறிச்சம்பாரம்  காயமருந்து காழ்ப்பு அடிபட்டதனால் உண்டான புண் வடு நிலைபேறு

 

 

 
 
 

Comments


bottom of page