திருமூலர் அருளிய திருமந்திரம் -- பாடல் 1 - கடவுள் வாழ்த்து
"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே.”
திருமூலர் அவர்கள் தனது திருமந்திரம் பாடல் 1 ஆகிய கடவுள் வாழ்த்து பாடலில் முழு பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்ட திரியேக தெய்வத்தின் தன்மையையும், பரிசுத்த ஆவியை பற்றியும், குமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தனது ஐம்புலங்களை வென்றதையும், எழுந்து உயிர்த்ததையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் வழி பக்தி மார்க்கத்தில் தெய்வம் ஆறு முகமாக அல்லது ஆறுவழியாகப் பிரிந்து வழிபடப்படுவதையும், திருவள்ளுவர் கூறும் எண்குணத்தை உடைய தெய்வமாக இருப்பதையும் தெளிவாக கூறியுள்ளார். இதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முகம் என்ற வார்த்தைக்கு வழி என்பது தான் அர்த்தம் எனவே ஆறு முகம் என்பது ஆறு வழியாக விரிந்ததையே குறிக்கும். ( முகம் என்றால் வழி ஆகும். (முகம் = mouth, entrance, face to face, honor ( prize ) beginning )ஆகவே தான் கப்பல் வந்து தங்கும் இடத்துக்குத் துறைமுகம் என்றும் கப்பல் துறைமுகத்தில் நுழைவு வாயில் முகத்துவாரம் என அழைக்கப்படுகின்றன )
பாடல் விளக்கம்
1) ஒன்றவன் தானே
ஒன்றவன் தானே என்பது வானத்தையும் பூமியையும், அண்டச் சராசரங்களையும் படைத்த தெய்வம் ஒருவரே ஆகும் என்பதைக் கூறச் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
ஓன்றான தெய்வம் காணக்கூடாத சர்வ வல்லமையுள்ள தேவன், அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம் .பண்ணுகிறவர். அவர் பட்சிக்கிற அக்கினியாய் இருப்பவர், இருக்கிறவராகவே இருப்பவர்.
I AM that I AM ஆக உள்ளவர். அவர் முடிவற்றவர், அவர் நித்தியமானவர். அவர் ஆதியும் அந்தமும் ஆனவர்.. அவர் பரலோக பிதா ஆவார் ... அவர் ஒருவரே தேவன்
பரிசுத்த வேதாகமம்
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். I தீமோ 6:16
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார். வெளி 1:8
And God said unto Moses, I AM THAT I AM: and he said, Thus shalt thou say unto the children of Israel, I AM hath sent me unto you.
2) இரண்டவன் இன்னருள்
இன்னருள் என்பது இனிமையான தெய்வத்தின் அருள் ஆகும். இது பரலோகத்தில் இருந்து வரும் தெய்வத்தின் ஆவியாகிய பரிசுத்த ஆவியைக் குறிக்கும்.
தூய ஆவியானவர் திரித்துவத்தில் இரண்டாம் நபர் ஆவார்.
ஒருவராக இருக்கும் தெய்வம் இன்னருளாகவும் இருக்கிறார் அதாவது இனிமையான அருளாக இருக்கிறார். அருள் என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. அருள் என்பது பரத்தில் இருந்து வரும் கடவுளுடைய ஆவியாகும். அதலால் தான் ஒருவருக்கு சாமி வந்து விட்டால் அருள் வந்து விட்டதாகக் கூறுகிறோம்.
ஒருவராய் இருக்கும் தெய்வத்தின் பண்புகளில் ஒன்று அன்பு, மற்றொன்று வல்லமை ஆகும். அந்த தெய்வத்தின் வல்லமையைச் சக்தி என்று அழைக்கிறோம். சக்தி என்பது சத்து, சத்தி என்ற வார்த்தையில் இருந்து வந்த சொல் ஆகும்
கடவுளின் சக்தி, கடவுளின் வல்லமை மற்றும் கடவுளின் அருள் என்பது கடவுளின் ஆவியாகிய பரிசுத்த ஆவியைக் குறிக்கும் வார்த்தைகள் ஆகும்
பரிசுத்த வேதாகமம்
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ஆதி 1:1-2
அவர் ( இயேசு கிறிஸ்து ) ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். மாற்கு 1:10
3) நின்றனன் மூன்றினுள்
ஒருவராய் இருக்கும் தெய்வம், பரிசுத்த ஆவியாகவும் செயல்பட்டு இரண்டாக மாறுகிறார்,. அதே போல் திரித்துவ தேவன் என்று அழைக்கப்படும், பிதா, குமாரன்,பரிசுத்த ஆவி என்ற மூவருக்குள்ளாகவும் நிற்கிற தெய்வமாக இருக்கிறார்.
பரிசுத்த வேதாகமம்
[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை ,(இயேசு கிறிஸ்து) பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; I யோவான் 5:7
அகத்தியர் (agathiyar )
பரிசுத்த வேதாகமத்தில் கூறப்படும் திரியேக தெய்வத்தை அகத்தியர் தனது பாடலில் அழகாக விளக்குகிறார். அவர் தனது அகத்தியர் ஞானம் 30ல் முச்சுடரு மொன்றாகும் மும் மூர்த்தியல்ல மூவருமே ஆளுருவமொன்றேயாகும் என்று பாடுகிறார்.
அதாவது முச்சுடராகிய தெய்வம் ஒரே சுடர் தான் அதாவது ஒருவர் தான் என்றும் அவர் மும் மூர்த்தியல்ல என்றும் அரனுமல்ல என்றும், லிங்கமும் அல்ல என்றும் அநாதியான சட்சிதான்ந்தனேயே வணங்குவாயாக என தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
சிலர் திரியேக தெய்வமாகிய பிரித்து பார்க்க முடியாத தெய்வத்தை மும்மூர்த்திகள் என்று ( மூன்று நபர்கள் ) என குறிப்பிடுகிறார்கள். சித்தர்கள் தமிழ் வழி சைவ சித்தர்கள் ஆவார்கள், அவர்கள் வைணவ வழியில் வந்த மும்மூர்த்திகளைப் பற்றி கூறியிருக்க முடியாது. மும்மூர்த்திகள் என்பதை மறுத்து கூறுகிற அகத்தியர் அவர்கள் முச்சுடரும் ஒன்றாகும் என்று குறிப்பிடுகிறார். அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அகத்தியர் பாடல்
முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தி யல்ல
மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும்
அச்சுதா யிவர்களுமே ஆண்பெண் அல்ல
அரனுமல்ல, லிங்கமல்ல, அநாதியான
சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி
எச்சரிக்கை கொண்டு நட அப்பா, அப்பா!
எண்ணில்லா முக்திவழி யெய்து வாயே!
அகஸ்தியர் ஞானம் - 30
அகத்தியர் கூறும் முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தியல்ல மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும் என்ற கூற்றை திருவுந்தியார் அவர்கள் தனது 5 வது பாடலில் உறுதிப் படுத்துகிறார். திருவுந்தியார் தனது 5 வது பாடலில் ஏகனுமாகி அநேகனும் ஆனவன் அதாவது தெய்வம் ஒருவராய் இருந்து மூவராக செயல்படக் கூடியவர் ---- GOD IS TRINITY என்று கடவுளை பாடுகிறார்.
திருவுந்தியார் 5
ஏகனு மாகி யநேகனு மானவன்
நாதனு மானானென் றுந்தீபற
நம்மையே யாண்டனென் றுந்தீபற
விளக்கம்
ஒருவனாகிய தெய்வம் அநேகன் ( மூவர் ) ஆனவனும் ஆவான். அவனே ஆத்தும மணவாளன் ஆனான் என்று வேகமாகச் சொல்லு. அந்த மூன்றில் ஒன்றான திரியேக தெய்வம் நம்மையே ஆண்டு கொண்ட ஆண்டவர் என்று வேகமாகச் சொல்லு என்பதாகும்.
திருக்குறள் கூறும் மூன்றில் ஒன்றான தெய்வம் - Trinity God
திருவள்ளுவர் தனது முதல் குறளில் தெய்வத்தை ஆதி பகவன் என்று குறிப்பிடுகிறார். ஆதி பகவன் என்பது ஆதியிலே இருந்த தெய்வம் தன்னைத்தானே மூன்று தெய்வங்களாக பகுத்து நின்ற மூன்றில் ஒருவராகிய தெய்வம் என குறிப்பிடுகிறார்.
ஆதிபகவன்
பகு + அவன் = பகவன் ( பகு = பிரி )
ஒருவராய் இருக்கும் இறைவன் தம்மை தாமே பிரித்து மூவராக ஆனார்.
இந்த விசயத்தை தனது குறளின் பாயிரத்தில் விளக்குகிறார்
திருவள்ளுவர் தனது முதல் மூன்று அதிகாரத்தில் மூவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1)கடவுள் வாழ்த்து 2) வான் சிறப்பு 3) நீத்தார் பெருமை ஆகும்
1) கடவுள் வாழ்த்து என்பது வான் உறையும் தெய்வத்தின் சிறப்புக் கூறும் பகுதி ஆகும் அதாவது GOD's Pride ஆகும்
2) வான் சிறப்பு என்பது வானத்தில் இருந்து வரும் அருள் அல்லது பரிசுத்த ஆவி பற்றிக் கூறும் சிறப்பு ஆகும் அதாவது Heaven's Pride or Holy Sprit's Pride ஆகும்.
3) நீத்தார் பெருமை என்பது தனது உறைவிடமான வானத்தை விட்டு அதாவது வானம் நீத்து, பூமிக்கு இரங்கி வந்த மனித குமாரானாகிய தெய்வத்தின் பெருமை ஆகும். அதாவது Son of GOD's Pride ஆகும்
கடவுள் (வாழ்த்து), = வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கடவுள்
வான் (சிறப்பு) = ஆவியாகிய கடவுள்
நீத்தார் (பெருமை) = வானம் ( HEAVEN )விட்டு இறங்கி வந்த மனித
குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகிய கடவுள்
மேலும் தனது 41 வது குறளில் இயல்புடைய மூவர் எனத் தெய்வத்தைக் குறிப்பிடுகிறார்.
குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
இல்வாழ்வான் என்பான் = மனிதனுடைய உள்ளத்தில் அல்லது
இல்லத்தில் வாழும் சாமி ஆகும்.
இயல்புடைய மூவர்க்கும் = ஒரே குணத்தை உடைய திரியேக
தெய்வம் ( GOD of Trinity )
நல்லாற்றின் = மனிதக் குலத்துக்கு நல்ல காரியம் செய்து முடிக்க
நின்ற துணை = உறுதுணையாக நின்றவர்
பரிசுத்த வேதாகமம் கூறும் மூவொரு கடவுளைப் பற்றித்தான் சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Father the God =பிதாவாகிய கடவுள்
Spirit the God = பரிசுத்த ஆவியாகிய கடவுள்
Son the God = குமாரன் (இயேசு) ஆகிய கடவுள்
என மூன்றில் ஒன்றான கடவுளைப்பற்றிக் குறிப்பிடுகிறது
4) நான்குணர்ந்தான்
மூவொரு தெய்வமாக இருக்கும் கடவுள் நான்காவதாக மனிதனை தனக்கென்று அடையாளம் கண்டு கொண்டார் அதுவே நான்குணர்ந்தான் ஆகும்.
திரியேக தெய்வம் ஆகிய கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்து அவனோடு கூட உலாவி அவனோடு இருக்க விரும்பினார். அவனோ பாவம் செய்து விலகிப் போனான். விழுந்து போன மனிதக் குலத்தை இயேசு கிறிஸ்து மூலமாக மீட்டு அவனுடைய உள்ளத்தில் வாசம் பண்ண ஆரம்பித்தார். மனிதனை நான்காவதாக உணர்ந்ததால் நான்குணர்ந்தான் என்று அழைக்கப்படுகிறார்.
உணர்ந்தவன் என்றால் அடையாளம் கண்டு கொண்டவன் என்ற அர்த்தம் உண்டு. அதாவது மூவராய் இருக்கும் தெய்வம் நான்காவதாக ஒருவரை அடையாளம் கண்டு கொண்ட ஒரு நிகழ்ச்சி நான்குண்ர்ந்தான் ஆகும்.
பலர் நான்குணர்ந்தான் என்றதற்கு நான்கு வேதங்களாகிய ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை உணர்ந்தவன் எனக் குறிப்பிடுகின்றனர். இது தவறு வேதம் என்பது தெய்வம் அருளும் ஒன்று, அதை மனிதர்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். வேதத்தை உருவாக்கிக் கொடுத்த தெய்வமே அதை உணர வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் சித்தர்கள் சைவ சித்தர்களே ஆவார்கள், எனவே வைணவ வேதங்களாகக் கருதப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற சமஸ்கிருத வேதங்களைக் குறிப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மூவராக இருக்கும் தெய்வம் நான்காவதாக மனிதர்களையும் அவர்களுடைய உள்ளங்களையும் தனக்கென்று தெரிந்து கொண்ட அல்லது அடையாளம் ஏற்படுத்திக்கொண்ட தெய்வம் ஆகும்.
இதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் முழுவதும் அழகாகக் கூறப் பட்டுள்ளதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
பரிசுத்த வேதாகமம்
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17
இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.
https://shaivam.org/to-practise/which-is-the-best-temple-of-god
திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்
திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
உள்ளம் ஒரு பெரிய கோவில், இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு நித்தியசீவன் கொடுப்பது YESHIVAவின் உடம்பு ஆகும். கள்ளமான புலன்கள் ஐந்துக்கும் இருட்டைப் போக்கும் விளக்கு YESHIVAவின் உடம்பு ஆகும்.
இதையே திருவள்ளுவர் அவர்கள் இல்வாழ்வான் என்ற தலைப்பின் கீழ் கூறுகிறார்
குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
இல்வாழ்வான் என்பான் = மனிதனுடைய உள்ளத்தில் அல்லது
இல்லத்தில் வாழும் சாமி ஆகும்.
இயல்புடைய மூவர்க்கும் = ஒரே குணத்தை உடைய திரியேக
தெய்வம் ( GOD of Trinity )
நல்லாற்றின் = மனிதக் குலத்துக்கு நல்ல காரியம் செய்து முடிக்க
நின்ற துணை = உறுதுணையாக நின்றவர்
( இயல்புடைய மூவர் -- விளக்கம் கீழே )
குறள் 41 விளக்கம்
இல்வாழ்பவன் என்பவன் மனிதனாக இந்த பூமிக்கு வந்து மக்களுடைய இருதயத்தில் மற்றும் அவர்களது வீட்டில் உலா வருபவர் ஆகும், அந்த இல் வாழ்வான் என்பவர் ஒரே குணத்தை உடைய மூவொரு தெய்வத்தின் ஆணை அல்லது இரட்சிப்பாகிய வேலையை ஏற்று இந்த பூமிக்கு வந்து மனிதர்களுக்குத் தனது சிலுவை மரணத்தினால் இரட்சிப்பைக் கொடுத்து, இயல்புடைய மூவருக்கும் துணை நின்ற மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே இல்வாழ்வான் ஆகும்.
விளக்கமாக அறிய இல்வாழ்வான் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
5 ) ஐந்து வென்றனன்
தன்னுடைய சிலுவை மரணத்தினால் ஐந்து காயங்கள் ஏற்றுக் கொண்டு தன்னுடைய ஐம்புலன் களையும் வென்ற தெய்வம் ஐந்து வென்றனன் ஆவார்.
இதையே திருவள்ளுவர் தனது 6 வது திருக்குறளில் பொறி வாயில் ஐந்தவித்தான் என்று குறிப்பிடுகிறார்.
திருக்குறள் 6 - Thirukkural 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.
பொறி வாயில் = பொறியாகிய கொலைக்கருவி வழியாக என்று பொருள் கொள்ள வேண்டும், உதாரணமாக எலிப்பொறி என எலியைப் பிடிக்கும் கருவியைக் குறிப்பிடுகிறோம்
ஐம்பொறிகளின் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ) வழியாக பிறக்கும் தீய ஆசைகளை அழித்தவன் என்று உரைகள் எழுதப்பட்டுள்ளது
கொலைக்கருவியின் வாயில் வழியாக ஐம்புலன்களை அழித்தவன் என்பது தான் சரியான அர்த்தம்
கொலைக்கருவி = காவுதடி, (காவடி,) சிலுவை
ஐந்து அவித்தான் =ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கியவன்
விளக்கம்
பொறியாகிய கொலைக்கருவி (சிலுவை) வழியாக இறைவன் தம் ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கி பொய்யைத்தீர்த்து (பொய்யின் உருவமாகிய சாத்தானை காவுதடி, அல்லது சிலுவையிலே அழித்து) ஏற்படுத்திய ஒழுக்க வழியில் நிற்பவர்கள் மோட்ச வாழ்வை பெற்று நீடு வாழ்வார்கள்.
ஐம்புலத்தார், ஐம்புல வேடர், ஐம்புல விடையன், பொறி வாயில் ஐந்தவித்தான், ஐம்புலத் தடங்கான், ஐம்புலம் வென்றோன், ஐம்புல விடையன், ஐம்புலன் விழையான், இந்த வார்த்தைகள் எல்லாம் சிலுவையில் தனது ஐம்புலங்களையும் வென்ற தெய்வத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ஆகும்.
6) ஆறு விரிந்தனன்
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய தெய்வம் தமிழ் நாட்டில் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சைவ மார்க்கத்தில் ( Saivam ) தகப்பன், தாய், மகன் என்று உருவானது, பிறகு சைவ மார்க்கத்தில் இருந்து வைணவ மார்க்கம் (- Vaishnavism ) உருவானது, பிறகு சாக்தம், (Saktham) கெளமாரம், (- Gowmaram ) செளரம், (- Sowram ) காணாபத்தியம் ( Ganapathyam
)எனப் பிரிந்த்து. இதையே ஆறு விரிந்தனன் என அழைக்கிறோம்.
சிவ வழிபாடு சைவம்-சிவனியம்,
இயேசு என்ற பெயர் YESHUA என்ற பெயரில் இருந்து வந்தது YESHUA என்ற வார்த்தையில் இருந்து கடைசியில் உள்ள A என்ற வார்த்தையின் உச்சரிப்பைக் குறைத்துவிட்டால் ( A silent ) yeshu இயேசு ஆகும். அதே நேரத்தில் YESHUA என்ற வார்த்தையில் இருந்து முதலில் உள்ள YE என்ற வார்த்தையின் உச்சரிப்பைக் குறைத்துவிட்டால் ( YE silent ) SHUA சுவா என்று வரும், சுவா என்ற வார்த்தையைப் பல முறை கூறும் போது சிவா ஆக மருவும்.
மேலும் இயேசுவின் பெயர் YESHIVA என்றே அமெரிக்காவில் உள்ள யூத பல்கலைக்கழகத்தின் பெயர் உள்ளது. அதில் அந்த பெயரில் YE silent ஆனால் SHIVA மட்டுமே இருக்கும்.
இதில் இருந்து YESHUA என்ற பெயரில் இருந்து இயேசு என்ற பெயரும் சிவா என்ற பெயரும் வந்தது என்று நாம் அரிந்து கொள்ளலாம்.
சக்தி வழிபாடு சாக்தம்,
பரிசுத்த ஆவியைப் பெண் உருவமாகப் பாவித்து உருவானது சாக்தம் ஆகும்
சக்தி என்ற வார்த்தை சத்து என்ற வார்த்தையில் இருந்து வந்தது, சக்தி என்பது சத்து, வல்லமை, பெலன், சத்துவம், Power, strength, ablity ஆகும்.
கடவுளின் வல்லமை என்பது பரலோகத்தில் இருந்து வரும் கடவுளின் ஆவி அல்லது பரிசுத்த ஆவியாகும், அதுவே சக்தியாக உருவகப்படுத்தப்படுகிறது.
பரிசுத்த வேதாகமம் கடவுள் ( சக்தி ) வல்லமை உள்ளவர் என்றும் இயேசு கிறிஸ்து கடவுளின் சத்துவத்தால் உயிர்த்தெழுந்தார் என்றும் இயேசு கிறிஸ்துவை சக்தியுள்ள தேவன் என்றும் கூறுகிறது.
விஷ்ணு வழிபாடு வைணவம்,
பரிசுத்த ஆவியை ஆண் உருவமாகப் பாவித்து உருவானது வைணவம் ஆகும். பரிசுத்த ஆவி வானத்தில் இருந்து வருவதால் விஷ்ணு என அழைக்கப் பட்டிருக்க வேண்டும்.
vishumbu -- விசும்பு என்பது ஆகாயம் ஆகும். விசும்பு என்ற வார்த்தை விஷ்ணு என்று மாறி இருக்க வேண்டும். Vishumbu may became Vishunu.
முருக வழிபாடு கௌமாரம்.
அழகானவர் என்றால் முருகன் என்று அர்த்தம் ஆகும் எனவே அழகான தெய்வத்தை வழிபடும் மார்க்கம் கெளமாரம் ஆகும். ( முருகு = அழகு முருகுஅவன் = முருகன் )
இயேசு கிறிஸ்து வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley என அழைக்கப்படுகிறார். எனவேதான் அவரை அழகன் அல்லது முருகன் என அழைக்கிறோம். முருகன் என்றால் அழகன் என்று அர்த்தம் ஆலும்.
கணபதி வழிபாடு காணாபத்தியம்,
கணபதி வழிபாடு என்பது பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுவதையே குறிக்கிறது. எல்லோருடைய பாவத்தையும் தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவை மரணத்தை அடைந்தபடியால் அவர் அழுக்குருண்டை பிள்ளையார் எனப்படுகிறார்.
பிள்ளையார் கதையில் சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்காததால் கோபம் கொண்டு பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார். தலை வெட்டப்பட்டவுடன் வெளிப்பட்ட இரத்தம் இந்த பூமியில் சிந்தப்படுகிறது. அந்த நிகழ்வு இந்தக்கதையில் மறைபொருளாக இருக்கிறது. இந்த நிகழ்வு சிலுவையில் இரத்தம் சிந்தப்பட்டதையே காண்பிக்கிறது. பிள்ளையாருக்கு வேறு ஒரு தலையை ஒட்டவைத்து உயிர் பெறுதல். இந்த நிகழ்வு உயிரை விட்ட பின்பு திரும்பவும் தன் உயிரைப் பெற்றுக்கொண்டு உயிர்த்தெழுந்தைக் காண்பிக்கிறது.
சூரிய வழிபாடு ( ஐயப்பன் வழிபாடு ) சௌரம்,
செளரம் என்பது சூரிய வழிபாடு அல்லது ஒளி வழிபாடு ஆகும். ஒளிவழிபாடு ஐயப்பன் வழிபாட்டைக் காண்பிக்கிறது. சூரியனைப் போல உதித்து உயிர்த்து எழுந்தவர் இயேசு கிறிஸ்துவே ஆகும். ஐயப்ப வழிபாடு என்பது கன்னியின் வழியாகப் பிறந்த இயேசு கிறிஸ்துவையே காண்பிக்கிறது. சிலர் செளரம் என்பது பிரம்மா வழிபாடு எனக் கூறுகின்றனர். பிரம்மா என்பது படைத்தவன் என் அர்த்தம் ஆகும். பரிசுத்த வேதாகமம் சகலமும் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டானதாகக் கூறுகிறது.
"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை". யோவான் 1:3
பரிசுத்த வேதாகமம்
பிதா குமாரன் பரிசுத்த ஆவி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உருவம் அற்றவர் - உருவத்தில் வந்தவர் - ஆவியானவர்
அருவம் உருவம் அருஉருவம்
சைவம்
தகப்பன் பிள்ளை தாய்
சிவன் முருகன் சக்தி
சிவன் பிள்ளையார் சக்தி
வைணவம்
Formless with Form Semi Form
பரம் அமரம் பராபரம்
பரசொருபம் அந்தர்யாமி சொருபம் விபசொருபம்
வியூகசொருபம்
அர்ச்சவதாரம்
சிவன் ஜய்யப்பன் விஷ்ணு
சிவன் [பிரம்மா விஷ்ணு
இந்த அட்டவணையில் உள்ளபடி பார்த்தால், நாம் வழிபடும் அனைத்து தெய்வங்களும் இதற்குள் அடங்கும்
பரம் அர்ச்சம் வியூஹம் விபவம் அந்தர்யாமி ஆகியவற்றின் அர்த்தம் பார்க்கக் கீழே உள்ள பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.facebook.com/AnmikamarintatumAriyatatum/photos/a.747299215324263/876426645744852/?type=3
7) ஏழும்பர்ச் சென்றனன் ( ஏழு உம்பர் சென்றவன் )
உம்பர் என்றால் சொர்க்கம் என அர்த்தம் ஆகும்
ஏழாவதாக எழுந்து அதாவது உயிர்த்து சொர்க்கம் சென்றவன் என் அர்த்தம் ஆகும்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
பரிசுத்த வேதாகமம்
ரோமர் 1:4,5
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பக்கம் (பாரிசத்தில்) அமர்ந்து இருப்பதால் அவரை வலம்புரி பிள்ளை என அழைக்கிறோம்.
8) தானிருந் தானுணர்ந் தெட்டே. ( தான் இருந்து தான் உணர்ந்தது எட்டே )
எட்டு குணங்களை உடையவனாகத் தன்னைத் தான் உணர்ந்து இருந்தவன் ஆகும். அந்த எட்டு குணங்கள் என்ன என்பதை திருவள்ளுவர் குறளின் பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் குறிப்பிடுகிறார்.
திருக்குறள்கூறும் (எட்டுகுணங்கள்)
குறள் 1 - kural 1 = எழுத்தெல்லாம்ஆதிபகவன்
வார்த்தையாகிய இறைவன் தன்னைத்தானே பகுத்து மூவரானவர்
(பிதா, பரிசுத்த ஆவி, குமாரன்)
குறள் 2 - kural 2 = வாலறிவன்
பரிசுத்தமானவர்
குறள் 3 - kural 3 = மலர்மிசை ஏகினான்
மலர்ந்து அல்லது உயிர்த்து வானம் (HEAVEN) சென்றவர்
குறள் 4 - kural 4 = வேண்டுதல் வேண்டாமை இலான்
விருப்பு, வெறுப்பு இல்லாமல் நியாயத் தீர்ப்பளிப்பவர்
குறள் 5 - kural 5 = இரு வினையும் சேராஇறைவன்
பிறப்பிலும், வளர்ப்பிலும் பாவம் இல்லாதவர்.
குறள் 6 -kural 6 = பொறி வாயில் ஐந்து அவித்தான்
பொறியாகிய கொலைக்கருவி (காவுதடி, காவடி,கோடு ஆயுதம்,சிலுவை) வழியாக ஐம்புலன்களால் ஆன தம் உடம்பை பலியாக்கினவர்
குறள் 7 - kural 7 = தனக்கு உவமை இல்லாதான்
தனக்கு நிகர் வேறு யாரும் இல்லாதகடவுள்
குறள் 8 - kural 8 = அறவாழி அந்தணன்
நீதி நேர்மை ஆகிய அறத்தை கடலைப் போல் கொண்டு வாழ்ந்த அந்தணனாகிய (அழகிய குணமாகிய அருள்,கிருபை,இரக்கம்
எட்டு குணங்களைப் பற்றி முழு விளக்கம் எண்குணத்தான் யார் ? என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அதை அறிந்து கொள்ள பார்க்கவும் ( GO )
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உம்பர் --- விண்ணவர், தேவர்கள், சொர்க்கம், மேற்கூறப்படவை, மேலுள்ளவை
guru