top of page

 வெள்ளி-சனி-ஞாயிறு
 

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்ற கிழமைகள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான நாட்களாகவே உள்ளது. வெள்ளிக்கிழமை என்பது நம் நாட்டில் உள்ள மூன்று மதங்களுக்குமே முக்கியமான நாளாக உள்ளது.

கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமையைப் புனித வெள்ளி என அனுசரிக்கிறார்கள். இந்துக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் புனிதமான நாளாக அனுசரிக்கிறார்கள். அதே போல் இஸ்லாமியர்களும் வெள்ளிக்கிழமையைப் புனிதமான நாளாக அனுசரிக்கிறார்கள்.


நாம் சனிக்கிழமைகளில் முக்கியமான காரியங்களை செய்வதில்லை, ஏன் என்றால் அது சனியின் நாளாகக் கருதப்படுவதால் எந்த சுபமுகூர்த்த காரியங்களைச் செய்வதில்லை. சனி என்பது ஆங்கிலத்தில் saturn என அழைக்கப்படுகிறது. எனவே தான் சனிக்கிழமை saturday என்று அழைக்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை ஒய்வு நாளாக ( லீவு நாள் )கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்குப் புனித நாளாக அமைந்துள்ளது அன்று ஆலயத்துக்குச் சென்று படைத்த தெய்வத்தை வழிபடுவது கிறிஸ்தவர்களின் வழக்கம். வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் அவர் உயிர்த்தெழுந்தபடியால், ஞாயிற்றுக்கிழமை ஒய்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அவர் சூரியன் உதிப்பது போல கல்லறையில் இருந்து உயிர்த்து எழுந்ததினால் அவர் உயிர்த்தெழுந்த நாளுக்கு ஞாயிற்றுக்கிழமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

( இயேசு கிறிஸ்துவுக்கு முந்திய நாட்களில் சனிக்கிழமை ஒய்வு நாளாக இருந்தது, இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குப் பின்பு வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக் கிழமையில் அவர் உயிர்த்தெழுந்தபடியால், ஞாயிற்றுக்கிழமை ஒய்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. )

அதே போல் சக்திக்கு ( சத்து, சத்துவம், பெலன், வல்லமை, power) உகந்த நாளாகவும் கருதப்படுகிறது, சக்தியை வணங்குகிறவர்கள் ஞாயிறு அன்று கோவிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்


வெள்ளி, சனி, ஞாயிறு என்ற கிழமைகளின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தால் தான் நாம் அதன் அர்த்தங்களையும் முக்கியத்தையும் அரிந்து கொள்ள முடியும்.


1) வெள்ளிக்கிழமை (நட்சத்திரக்கிழமை)


வெள்ளி என்ற வார்த்தை நட்சத்திரத்தை குறிக்கிறது, எனவே அது நட்சத்திரத்தின் நாள் என அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிந்து கொள்ள வழிகாட்டியது ஒரு நட்சத்திரம்.  நட்சத்திரத்துக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் சம்பந்தம் உண்டு, எனவே இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணித்த நாளை புனித வெள்ளிக்கிழமை எனக் கூறப்பட்டுள்ளது

இயேசு கிறிஸ்துவை நினைவு கூறும் வகையில் நமது இல்லங்களில் தினமும் கோலம் போடும் போது நட்சத்திரத்தைக் கோலத்தில் வரைகிறோம். கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த மாதம் ஆன மார்கழியில் நட்சத்திரத்தை வீடுகளில் தொங்க விடுகிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமையில் சக்தி வழிபாடு செய்பவர்கள் உண்டு. சக்தி என்பது கடவுளுடைய வல்லமை மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமை ஆகும் (விளக்கம் கீழே)


1 - a ) கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமையைப் புனித வெள்ளி என அழைக்கிறார்கள், அது ஏன்
என்றால் இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமையில் தான் சிலுவையில் அறையப்பட்டார். ஒரு மரணத்தின் நாள் எப்படி புனித நாளாகும் என்ற கேள்வி எழும்பும். அதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் தான் நமக்கு அதன் முக்கியத்துவம் புரியும்.

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை

மனிதன் தான் பிறக்கும் போதே பாவத்தில் பிறக்கிறான், அது ஜென்ம பாவம் ஆகும்   (ஜென்ம பாவம் என்பது மூதாதையர்களின் வழிப் பாவம் ஆகும் ) அவன் தான் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் எல்லாம் பாவம் செய்கிறவனாகவே இருக்கிறான். பாவத்திலே பிறந்து பாவத்திலே வளர்ந்த அவனுடைய பாவத்தைப் போக்கப் பல இடங்களுக்குச் செல்லுகிறான். பல பலிகளை இடுகிறான். அதனால் அவனுக்குப்   பரிகாரம் கிடைப்பது இல்லை. எனவே நம்மை உண்டாக்கின தெய்வம் மனித உருவில் இந்த பூமிக்கு வந்து நமக்காகச் சிலுவையில் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து 40 நாள் அளவும் இந்த பூமியில் உலாவி பரலோகம் சென்றார். இது மனிதகுல மீட்பிற்காகவே. இந்த காரியங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது.


1 b ) நாம் பிறப்பிலே பாவி, வளர்ப்பில் பாவி என்பதை Rig வேதமும் நமக்குக் கூறுகிறது.

Papokam, papa kanmokam, papathma papa samphava; thrahimam Pundarikaksha sarva papa hari hare…

Which means, I am born in sin, doer of sin, and a sinful self; I am the worst of all sinners, Lord save me from all my sins. Why sin is a hurdle? Because, it is an offense against God (Rig Veda 7.86.3)..

அதாவது, நான் பாவத்தில் பிறந்தவன், பாவம் செய்பவன்; பாவியாகவே இருப்பவன், நான் எல்லா பாவிகளிலும் மோசமானவன், ஆண்டவரே என் எல்லா பாவங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்று. பாவம் ஏன் தடையாக இருக்கிறது? ஏனெனில், அது கடவுளுக்கு எதிரான குற்றம் (ரிக்வேதம் 7.86.3)..

பரிசுத்த வேதாகமம்
 

1) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். I தீமோத்தேயு 1:15


2) நம் பாவம் போக்க வந்த பாவநிவாரன காரணர் இயேசுவே அவர் நமது பாவத்தை சுமந்து, அதை ஏற்றுக்கொண்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்டுக் கொண்டார். எனவே அவரது சிலுவை மரணம் புனிதமானது. எனவே அவர் மரணம் எய்திய தினம் புனிதவெள்ளி என அழைக்கப்படுகிறது.


3) ஓய்வுநாளுக்கு முந்தின நாள் (வெள்ளிக்கிழமை) ஆயத்த நாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். மாற்கு 15:42-44

1 c ) இஸ்லாமியர்கள் ஏன் வெள்ளிக்கிழமையைப் புனித நாளாகக் கருதுகிறார்கள்


பரிசுத்த வேதாகமத்தில் கூறப்படுவது போல புனித குர்-ஆனிலும் ஆதாம் முதல் மனிதானாகக் கூறப்படுகிறது,

 

தேவன் ஆதாமை ஆறாம் நாளாகிய வெள்ளிக்கிழமையிலே படைத்தார். ஆதாம் படைக்கப்பட்ட நாள் ஆன வெள்ளிக்கிழமையை இஸ்லாமியர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கிறார்கள். அதே வெள்ளிக்கிழமையில்  ஆதாம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ஆதாமை நபி என்றும் நம்புகிறார்கள் எனவே வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக அனுசரிக்கிறார்கள்.

 

புனித குர்-ஆன் இயேசு கிறிஸ்துவுக்கு பின்பு சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது. ஆதாமுடைய வரலாறு பரிசுத்த வேதாகமத்தில் இயேசுவுக்கு முன்பாக 1600வது ஆண்டுகளில் எழுதப்பட்டது, அதாவது ஆதாமைப்பற்றி வேதாகமத்தில் குறிப்பிட்ட பிறகு 2200 ஆண்டுகள் கழித்து குர்-ஆனில் எழுதப்பட்டது  அது முற்றிலும் தவறாக எழுதப்பட்டுள்ளது.


1 d ) பரிசுத்த வேதாகமத்தின் படி ஆதாம் ஆகிய முதல் மனிதன் பாவம் செய்து மரித்தான், எனவே ஆதாம் பரலோகத்திற்குத் தெய்வத்தால் எடுத்துச் சென்று இருக்க முடியாது. ஆதாம் பாவம் செய்தான் என்பதைச் சைவசித்தாந்தத்தின் முதல் நூலான திருவுந்தியார் உறுதிப்படுத்துகிறது.

திருவுந்தியார்-உய்யவந்ததேவநாயனார் 41வது பாடலில் பரலோகம் சென்று சேரக்கூடிய முதல் மனிதனாகிய முதலுக்கே மோகக் கொடி படர்ந்து அத்தி பழுத்தது என்று வேகமாகச் சொல்லு. அப்பழம் உண்ணாதே என்று வேகமாகச் சொல்லு எனக் கூறுகிறார்.

விளக்கம்


முதல் மனிதானாகிய் ஆதாம் பரலோகம் செல்வதற்க்காகப் படைக்கப்பட்டவன் அவன் தெய்வத்தால் அந்த பழத்தை உண்ணாதே என்று சொல்லப்பட்ட பழத்தின் மேல் மோகக் கொடி ( ஆசைக் கொடி ) படர்ந்ததினால் அத்தி பழுத்தது (பாவம் உண்டானது) என்று கூறுகிறார்.


41 வது பாடல்

முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்

தத்தி பழுத்ததென் றுந்தீபற 

அப்பழ முண்ணாதே யுந்தீபற 

முதற் கொடிக்கே

https://shaivam.org/saiva-siddhanta/thiruvundiya-uyyavandadeva-nayanar


பரிசுத்த வேதாகமம்


1) தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் ( ஆத்தும மரணம் உண்டாகும் என்றார்). ஆதியாகமம் 2:16-17


2) இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக்கியேல் 18:4


2 ) சனிக்கிழமை (saturn day- சாத்தானின் நாள் )
 

சனி என்பது சாத்தான், எனவும் சைத்தான் எனவும் அந்தி கிறிஸ்து, மற்றும் தஜ்ஜால் எனவும் பிசாசு எனவும் பேய் எனவும் அழைக்கப்படுகிறது.


நாம் கோபத்தில் மற்றவர்களை சனியனே என்றும் சனி பிடித்தவன் என்றும் வசை பாடுகிறோம்.

சனி என்ற வார்த்தை saturn என்ற வார்த்த்டியில் இருந்து வந்தது எனவே சனிக்கிழமையை saturday
(saturnday) என அழைக்கிறோம்.


சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாள் அதாவது 7வது நாள் அதற்கு அந்த பெயர் வைக்கக் காரணம் என்ன என்று பார்ப்போம்.


இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை மரணித்து, ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் சனிக்கிழமை அவர் கல்லறையில் வைக்கப்பட்டு இருந்தார். அதாவது அனைத்தையும் படைத்த தெய்வத்தைச் சாத்தான் இந்த பூமியில் அடக்கி   வைத்திருந்தான். அவர் பாதாளத்துக்கு இரங்கி அங்கு உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்து அவைகளை இரட்சித்துத் தான் உயிர்த்தெழும் போது அவைகளையும் அழைத்துச் சென்றார். அவரை 7வது நாளில் பூமிக்கு அடியில் அடக்கி வைத்தபடியால் அந்த நாள் சனியின் நாளாக அழைக்கப்படுகிறது.


1) ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உபியிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் ரசங்கித்தார். அந்த ஆவிகள் பூர்வத்திலே........ கீழ்ப்படியாமற் போனவைகள்........I பேதுரு 3:18-20

2 a ) சனி ஆகிய சாத்தானை வணங்குவது சரியா ?
 

பரிசுத்த வேதாகமம் சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்போது அவன் உங்களை விட்டு ஒடிப்போவான் என்று கூறுகிறது. ஆனால் நம் நாட்டில் சனியை வணங்கும் பழக்கம் உள்ளது. சனி பகவான் என்று அழைத்து சனிபகவானுக்கு விரதம் இருப்பதும் பரிகாரம் செய்வதும் வழக்கமாக உள்ளது. நமது நாட்டில் மட்டும் அல்ல மற்ற நாடுகளிலும் சாத்தான் சபை என்றும் வழிபடுகிறார்கள். மேலும் உலகம் முழுவதும் சாத்தானுக்கு Halloween என்ற திருவிழா கொண்டாடப் படுகிறது  இந்த பழக்க வழக்கங்கள் முற்றிலும் சரியல்ல. இந்த மாதிரியான வழிபாடுகளின் மேல் தெய்வம் பிரியப்படுவதில்லை எனவே நாம் இவைகளைத் தவிர்ப்பது நல்லது.

HALLOWEEN DAY HISTORY IN TAMIL || ஹாலோவீன் திருவிழா (பேய்களுக்கான விநோத திருவிழா)

https://www.youtube.com/watch?v=KIYieglX_kU


பரிசுத்த வேதாகமம் 
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7

 

3 ) ஞாயிற்றுக்கிழமை
 

ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாளாகும், அன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால் வாரத்தின் முதல் நாளுக்கு ஞாயிற்றுக்கிழமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாரத்தின் கடைசி நாளுக்கு முந்தின நாளில் சிலுவையில் அறையப்பட்டார், வாரத்தின் கடைசி நாளான 7 வது நாளில் பாதாளத்துக்கு இரங்கினார். அடுத்த நாளான வாரத்தின் முதல் நாள் சூரியனைப்போல உதித்து, உயிர்த்தெழுந்தார். ஆகவே தெய்வம் உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித நாளாக அனுசரிக்கிறார்கள்.

அவர் சூரியன் உதிப்பது போல கல்லறையில் இருந்து உயிர்த்து எழுந்ததினால் அவர் உயிர்த்தெழுந்த நாளுக்கு ஞாயிற்றுக்கிழமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


பரிசுத்த வேதாகமம்

1) வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.................. வாலிபனைக்கண்டு பயந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். மாற்கு 16:2-6


இயேசு கிறிஸ்து தேவனுடைய வல்லமையினால் (சக்தியினால்) உயிர்த்தெழுந்தார் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குக் கூறுகிறது. வல்லமை என்ற வார்த்தை கடவுளின் சக்தியைக் குறிக்கிறது.  கடவுளின் உயிர்த்தெழுந்த வல்லமையைச் சக்தியாக வணங்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது, எனவே தான் கடவுளின் சக்தியை வழிபடுபவர்கள் ஞாயிற்றுக்கிழமையைக்  கடவுளின் சக்திக்கு உகந்த நாளாக கருதுகிறார்கள். கடவுளின் சக்தியை அல்லது வல்லமையை பெண்ணாக உருவகப்படுத்தி வழிபடும் மார்க்கத்துக்குச் சாக்தம் எனப் பெயர்.


3 a ) சக்தி

சக்தி என்ற வார்த்தை சத்து என்ற வார்த்தையில் இருந்து வந்தது, சக்தி என்பது சத்து, வல்லமை, பெலன், சத்துவம், Power, strength, ablity ஆகும்

கடவுளின் வல்லமை என்பது பரலோகத்தில் இருந்து வரும்  கடவுளின் ஆவி அல்லது பரிசுத்த ஆவியாகும், அதுவே சக்தியாக உருவகப்படுத்தப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தக் கீழே கொடுக்கப்பட்ட youtube  பாட்டைக்கேட்கவும். பரிசுத்த ஆன்மா என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.     
https://www.youtube.com/watch?v=odoPbTQsVns
https://www.youtube.com/watch?v=i1oOkHHQyIA

 

பரிசுத்த வேதாகமம் கடவுள் ( சக்தி ) வல்லமை உள்ளவர் என்றும் இயேசு கிறிஸ்து கடவுளின் சத்துவத்தால் உயிர்த்தெழுந்தார் என்றும் இயேசு கிறிஸ்துவை சக்தியுள்ள தேவன் என்றும் கூறுகிறது.


1) நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் (இயேசு) கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், (சக்தியுள்ள தேவன்), நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6


2) (தேவன்) தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் (சக்தியின்) வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே.............. எபேசியர் 1:19


3) நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் (சக்தியினாலும்) அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ் 10:38


4)   ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் (சக்தியினால்) பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் (சக்தியினால்) அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.     II கொரிந்தியர் 13;4


5) அவர் தம்முடைய வல்லமையினால் (சக்தியினால்) என்றென்றைக்கும் அரசாளுகிறார்.......
சங் 66:7


6) தேவரீர் உமது வல்லமையினால் (சக்தியினால்) சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர். ...சங் 74:13


7) அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை (சக்தியை) விளங்கப்பண்ணினீர்.    சங் 77:14


8 ) பரிசுத்த ஆவியின் பலத்தினாலே (சக்தியினால்) உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சாக்தம்   
https://ta.wikipedia.org/s/7ng

சாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.

சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து,காத்து,தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும்.

guru

bottom of page