
ஆறு முகம் ( ஆறு வழிகள் )
ஆறு முகம் என்றவுடனே நமது யாபகத்திற்கு வருவது அழகான தெய்வமாகிய முருகன் அவர்களுடைய தோற்றமே ஆகும். ஆறு முகம் என்பது தெய்வத்திற்கு ஆறு முகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, அதற்கு அனேக கதைகள் உள்ளன. உண்மையில் முகம் என்பது எதைக் குறிக்கும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முகம் என்ற வார்த்தைக்கு வழி என்று தான் அர்த்தம். எனவே ஆறு முகம் என்றால் ஆறு வழியாகும். இதன் விளக்கத்தைக் கீழே பார்ப்போம்.
( (பெ) முகம் = ஆங்கிலம்- 1)face, 2)countenance, 3)mouth of a river, 4)entrance to a harbor, 5)honor, 6)pride, 7) `face' )
நாம் முதலாவது ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நமது நாட்டில் தெய்வத்தின் பல்வேறு குணங்களையே தனித்தனி தெய்வங்களாக வழிபடுகிறோம். உதாரணமாகத் தெய்வம்
அழகானவர் = முருகன்
தெய்வம் வல்லமை நிறைந்தவர் = சக்தி
தெய்வம் குமாரன் ஆகிய son of GOD = குமரக்கடவுள்
தெய்வம் கன்னியின் மூலமாகப் பிறந்தவர் = ஐயப்பன்
தெய்வம் உயிர்த்தெழுந்தவர் = பிள்ளையார்
தெய்வம் ஆவியானவர் = விஷ்ணு
தெய்வம் வெண்மையானவர் = பால் வண்ண அய்யனார்
தெய்வம் பரிசுத்தமானவர் = வெண்குடை அய்யனார் ( தூய குணத்தை குடையாக பிடித்துக் கொண்டு நிற்பவர்
தெய்வம் சிருஷ்டிகர் = பிரம்மா
பூபாலன் = மனித குமாரன்
லோக பாலன் = மனித குமாரன்
சொக்கநாதன் = பரலோகத்தில் இருந்து வரப்போகிற ஆத்தும மணவாளன்
போக நாதர் = ஆத்தும மணவாளன் ( GO )
இதே போல் அனேகம் உண்டு
we are worshiping the characters of GOD
அழகான தெய்வத்தை ,முருகன் என அழைக்கிறோம். இது இரு காரணப்பெயர் ஆகும் அல்லது தெய்வத்தின் குணம் ஆகும். தெய்வம் அழகானவர் அல்லது தெய்வம் முருகு ஆனவர். அந்த தெய்வம் யார் ?
திருமூலர் அவர்கள் தனது திருமந்திரம் பாடல் 1 ஆகிய கடவுள் வாழ்த்து பாடலில் ஆறு வழி என்பதை உறுதிப்படுத்துகிறார். அவர் தெய்வத்தை ஆறு விரிந்தனன் என்று அழைக்கிறார். ஒருவனாகிய தெய்வம் ஆறு கிளைகளாகப் பிரிந்து வழிபடப்பட்டதை அழகாக எழுதியுள்ளார்.
திருமூலர் அருளிய திருமந்திரம் -- பாடல் 1 - கடவுள் வாழ்த்து
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே.”
இயேசு கிறிஸ்துவுக்குப் பின் முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்து விட்டது, அப்படி வந்த கிறிஸ்தவம் இந்தியா முழுவதும் சைவம் மற்றும் வைணவமாகப் பரவியிருந்தது. அந்த கிறிஸ்தவம் தமிழ் வழி பக்தி பார்க்கவும் அல்லது புனித தோமா வழி கிறிஸ்தவமாகும். புனித தோமா இயேசு கிறிஸ்துவின் நேரடி சீடர் ஆவார். இதை A SURVEY OF KERALA HISTORY by PROF A SREEDHARA MENON (Author) என்ற புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய தெய்வம் தமிழ் நாட்டில் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சைவ மார்க்கத்தில் ( Saivam ) தகப்பன், தாய், மகன் என்று உருவானது, பிறகு சைவ மார்க்கத்தில் இருந்து வைணவ மார்க்கம் (- Vaishnavism ) உருவானது, பிறகு சாக்தம், (Saktham) கெளமாரம், (- Gowmaram ) செளரம், (- Sowram ) காணாபத்தியம் ( Ganapathyam )எனப் பிரிந்தது. இதையே ஆறு விரிந்தனன் என அழைக்கிறோம்.
இந்த பாடலின் முழு அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளத் திருமந்திரம்-பாடல்1 என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
முகம் என்றால் என்ன ?
முகம் என்பது வழியை குறிக்கிறது, இதை அறிந்து கொள்ள சில வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
1) துறைமுகம்
துறைமுகம் (port) என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடம் ஆகும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப்படுத்தலாம். துறை என்பது ஆற்றில்/கடலில் இறங்கும் இடம் ஆகும், துறைமுகம் என்பது கப்பல்கள் வந்து தங்களில் உள்ள பொருள்களை இறக்க ஏற்ற பயன்படும் ஒரு இடம் ஆகும். அதுவே தரைக்கு வழியாகும்.,
2) முகத்துவாரம்
கப்பல்கள் நிலப்பரப்பில் உள்ள இயற்கையாக உள்ள துவாரமாகிய வழியாக உள்ளே வந்து தங்குவதால் நிலப்பரப்பில் உள்ள வழி முகத்துவாரம் என்று அழைக்கப்படுகிறது.
கப்பல் முகத்துவாரம் --- அது அனைத்து பக்கங்களிலும் இருந்து பாதுகாக்கப்படுவதால் காற்று மற்றும் கடல் அலை முகத்துவாரத்துக்குள் அதிகம் இருக்காது எனவே கப்பல் துறைமுகத்திற்குள் செல்ல எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். முகத்துவாரம் ஆறு கடலுக்குள் கலக்கும் இடத்தில் அமையும்
3) கழிமுகம் என்றால் என்ன? ஆற்றின் முகத்துவாரம் ---- ஆழமாயும் புனல் வடிவமாயும் இருக்கும். இத்தகைய முகத்துவாரம் கழிமுகம் ஆகும்.
4) மனிதனின் முகம்
முகம் தலையின் முன்பகுதியில், கண், காது, மூக்கு, வாய், இருக்கும் ஒரு இடமாகும். மெய் ஆகிய உடம்புக்கு வழியாக நமது தலையின் முன்பகுதியில் கண், காது, மூக்கு, வாய், அமைந்திருப்பதால் மனித உடம்புக்கு வழியாக இருக்கும் தலையின் முன் பகுதி முகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண், காது, மூக்கு, வாய், மூலமாகத்தான் நமது உடம்பு இயங்குகிறது. எனவே மனிதனின் முகம் என்றால் மனித உடலுக்கு வழியாகும்.
5) ஆனைமுகன்
தெய்வத்தின் ஆணையை ஏற்று அதன் வழியாக (காரணமாக) இந்த உலகத்தில் வந்து அந்த ஆணையை நிறைவேற்ற மனிதனாகப் பிறந்ததால் மனித குமாரனை ஆனை முகன் என அழைக்கின்றோம்.
ஆனை என்றால் யானை என்று எடுக்கக்கூடாது, ஏன் என்றால் சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 300 - கி.பி. 700) ஆண் யானைக்குக் களிறு என்றும் பெண் யானைக்குப் பிடி என்று தான் பெயர் வழக்கம் உண்டு.
அதே போல் தெய்வம் தெய்வானை என்ற பெண்ணை மணந்திருக்க, தெய்வ யானை என்று எடுப்பது தவறு. தெய்வானை என்ற பெயரில் ஆணைக்கு பதிலாக ஆனை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தெய்வானையைத் தெய்வயானை என்றால் தெய்வத்திற்குப் பக்கத்தில் ஒரு பெண்ணை மனைவியாக உருவகப்படுத்தி இருக்க முடியாது. தெய்வாணை என்பதே சரியானது. தெய்வத்தின் ஆணையை ஏற்று அதாவது அந்த ஆணையை மணந்து இந்த பூமிக்கு வந்ததால் தான் நாம் தெய்வானையைத் தெய்வத்தின் மனைவி என அழைக்கிறோம்.
இதை ஆராய்ந்து பார்த்தால் ஆணை என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஆனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன் முழு விளக்கத்தை அறியக் குறள் 268 என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
*******************************************************************
ஆறுமுகம் என்பது ஆறுவழிகள் ஆகும், ஆறு வழிகள் என்ன ?
ஆறுமுகம் என்றால் அழகான தெய்வத்தைச் சென்றடைய ஆறு வழிகள் ஆகும். ஒருவர் ஆறு வழிகளில் எந்த வழிகளில் வழிபட்டாலும் அழகான தெய்வத்தையே சென்று சேர்கிறார் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும்.
முருகன் என்றால முருகு + அவன் ஆகும். முருகு என்பது அழகு ஆகும். அழகான தெய்வத்தை முருகன் என்று அழைப்பது தெய்வத்தின் குணத்தை வைத்து அழைப்பதையே காண்பிக்கிறது.
அழகானவர் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும்.
அழகானவர் -- முருகன் அல்லது கள்ளழகர்
இயேசு கிறிஸ்து வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley என அழைக்கப்படுகிறார். எனவேதான் அவரை அழகன் அல்லது முருகன் என அழைக்கிறோம். முருகன் என்றால் அழகன் என்று அர்த்தம் ஆகும்.
அவர் சிலுவையில் அறையப்பட்ட போது இரண்டு கள்ளர்களுக்கு நடுவே உள்ள சிலுவையில் அறையப்பட்டார். அதனால் கள்ளனில் ஒருவராக என்னப்பட்டார். எனவே அவரை நாம் கள்ளழகர் என அழைக்கிறோம்.
ஆறு வழிகள் என்ன ?
சைவம் - சிவன் வழிபாடு
வைணவம் - விஷ்ணு வழிபாடு
சாக்தம் - சக்தி வழிபாடு
கொளமாரம் - முருகன் வழிபாடு
காணாபத்தியம் - கணபதி வழிபாடு
சொளரம் - சூரிய வழிபாடு அல்லது ஒளிவழிபாடு, அல்லது பிரம்மா வழிபாடு ஆகும்.
ஆறு வழிகள் தோன்றிய வரலாறு.
கிறிஸ்தவத்தில் இருந்த திரித்துவ கோட்பாடு ஆகிய பிதா, குமாரன், பரிசுத்தஆவி, தமிழ் நாட்டில் முதல் நூற்றாண்டில் பரிசுத்த தோமா அவர்களால் சொல்லி கொடுக்கப்பட்ட பக்தி மார்க்கத்தில் தந்தை, பரிசுத்த ஆவி மற்றும் மகன், என்று உருவானது.
சைவம்
சிலர் பரிசுத்த ஆவியை ஒரு பெண்ணில் உருவத்தில் கற்பனை செய்தனர். எனவே பரிசுத்த ஆவியாகிய தெய்வத்தின் வல்லமையைச் சக்தி என அழைக்கத் தொடங்கினர். பரிசுத்த ஆவியானவர் பெண் வடிவில் கற்பனை செய்யப்பட்டபோது சைவ மார்க்கம் உண்டானது.
சைவ மார்க்கத்தில் திரித்துவ தெய்வத்தைச் சிவன் - சக்தி - குமரக்கடவுள் என அழைக்கத் தொடங்கினர். சிவன் என்ற வார்த்தைக்கு அன்பு என்று பொருள், சக்தி என்ற வார்த்தை வல்லமை அல்லது சத்து என்ற வார்த்தையில் இருந்து வந்தது மற்றும் குமரக்கடவுள் என்பது கடவுளின் மகன் என அர்த்தம் ஆகும்.
.வைணவம்
சிலர் பரிசுத்த ஆவியை ஆண் வடிவில் கற்பனை செய்தனர். ஆண் வடிவத்தில் உருவகப்படுத்தப்பட்ட பரிசுத்த ஆவியானவர் விஷ்ணு என்று அழைக்கப்பட்டார், பரிசுத்த ஆவியை ஆண் உருவமாகப் பாவித்து உருவானது வைணவம் ஆகும். பரிசுத்த ஆவி வானத்தில் இருந்து வருவதால் விண்ணு என்றாகி விஷ்ணு என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். அல்லது vishumbu -- விசும்பு என்பது ஆகாயம் ஆகும். விசும்பு என்ற வார்த்தை விசுணு என்று மாறி இருக்க வேண்டும். Vishumbu may became Vishunu.
இந்த ஆறு வகையான பிரிவுகளும் சைவத்தையும், வைணவத்தையும் அடிப்படையாக கொண்டவைகள் ஆகும். இவைகள் தமிழ் நாட்டில் பக்தி மார்க்கத்தின் மூலமாக உருவானவைகள் ஆகும். தமிழ் நாட்டில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்றன என்பதற்கு அடையாளமாக சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான 12 திருமுறைகளும், வைணவ சித்தாந்தத்தின் 12 ஆழ்வார்களின் கோயில்களும் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வைணவ மார்க்கத்தில் திரித்துவ தெய்வத்தைச் சிவன், விஷ்ணு, குமரக்கடவுள் (பிரம்மா மற்றும் ஐயப்பன் ) என்பதை மும்மூர்த்திகள் என அழைக்கத் தொடங்கினர்
சைவம் மற்றும் வைணவங்கள் கடவுளாகிய தந்தையை சிவன் என்று குறிப்பிடுகின்றன. பரிசுத்த ஆவியானவராகிய கடவுள் இரண்டு வடிவங்களில் இருக்கிறார், ஒன்று பெண் வடிவத்தில் சக்தி (சைவம்) மற்றும் மற்றொன்று ஆண் வடிவத்தில் விஷ்ணு (வைஷ்ணவம்) . சிவனின் உடலின் இடது பாதி பெண் வடிவில் (சக்தி) சித்தரிக்கப்பட்டால், அது 'அர்த்தநாரீஸ்வரர்' என்றும் மற்றும் சிவனின் உடலின் அதே இடது பாதி ஆண் வடிவில் (விஷ்ணு) சித்தரிக்கப்பட்டால், அது 'அரிஹரன்' என்று அறியப்படுகிறது.
நாளடைவில் சைவம் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து சாக்தம், கொளமாரம், காணபத்தியம் என்று ஆனது. சாக்தம் என்பது சக்தி மட்டுமே தெய்வம் என்று வழிபடும் வழிபாடு ஆகும். கொளமாரம் என்பது முருகனை மட்டுமே தெய்வம் என்று வழிபடும் வழிபாடு ஆகும். காணாபத்தியம் என்பது கணபதியான பிள்ளையார் மட்டுமே தெய்வம் என வழிபடும் வழிபாடு ஆனது.
நாளடைவில் வைணவம் மேலும் ஒரு பிரிவாகப் பிரிந்து சொளரம் என ஆனது. சொளரம் என்ற வழிபாட்டைச் சிலர் சூரிய வழிபாடு என்றும், சிலர் ஒளி வழிபாடாகிய ஐயப்பன் வழிபாடு என்றும், சிலர் பிரம்மா வழிபாடு என்றும் கூறுகின்றனர்.
மேலே கூறப்பட்டவைகளை நன்கு அறிந்து கொள்ளக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தைப் பார்க்கவும்.
http://thamilarsamayam.blogspot.com/2011/06/
ஆறுமுகம் ( ஆறு வழிகள் ) என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆறு வழிகளுமே ஒரே தெய்வமாகிய அழகான தெய்வத்தையே சென்று சேரக்கூடியவைகளாகவே உள்ளன. அதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் பார்ப்போம்.
நமது நாட்டில் கடவுளுடைய குணங்களைத் தெய்வங்களாக வணங்குகிறோம். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பெயர் கொடுத்து வணங்குகிறோம். அதனால் தான் ஆறு வழிகளில் கூறப்பட்ட தெய்வங்களைத் தனித் தனியாகப் பெயர் கொடுத்து வணங்குகிறோம்.
சைவம் -- Sasivism
சைவ வழிபாடு சிவன் வழிபாடு என்று அழைக்கப் படுகிறது. சிவன் என்ற வார்த்தை இயேசுவின் பெயரான yeshuva என்ற வார்த்தையில் இருந்து வந்தது. அதே போல் தெய்வம் அன்பு உள்ளவர். அன்பு உள்ள தெய்வத்தைச் சிவன் என்று அழைப்பது வ ழக்கம் ஆகும்
தேவன் அன்பாகவே இருக்கிறார். என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
பரிசுத்த வேதாகமம்
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே (இயேசுவாலே) நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. . 1 யோவான் 4:8-9
திருமூலர் தனது திருமந்திரம் 10ம் திருமுறை முதல் தந்திரம்- 21 அன்புடைமை - பாடல் 1ல் அன்பும் சிவமும் வேறு இல்லை இவை இரண்டும் ஒன்றே எனக் குறிப்பிடுகிறார்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே [பா. 270]
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10121&padhi=
இயேசு என்ற பெயர் YESHUA என்ற பெயரில் இருந்து வந்தது YESHUA என்ற வார்த்தையில் இருந்து கடைசியில் உள்ள A என்ற வார்த்தையின் உச்சரிப்பைக் குறைத்துவிட்டால் ( A silent ) yeshu இயேசு ஆகும். அதே நேரத்தில் YESHUA என்ற வார்த்தையில் இருந்து முதலில் உள்ள YE என்ற வார்த்தையின் உச்சரிப்பைக் குறைத்துவிட்டால் ( YE silent ) SHUA சுவா என்று வரும், சுவா என்ற வார்த்தையைப் பல முறை கூறும் போது சிவா ஆக மருவும்.
மேலும் இயேசுவின் பெயர் YESHIVA என்றே அமெரிக்காவில் உள்ள யூத பல்கலைக்கழகத்தின் பெயர் உள்ளது. அதில் அந்த பெயரில் YE silent ஆனால் SHIVA மட்டுமே இருக்கும்.
இதில் இருந்து YESHUA என்ற பெயரில் இருந்து இயேசு என்ற பெயரும் சிவா என்ற பெயரும் வந்தது என்று நாம் அரிந்து கொள்ளலாம்.
Dec-2015
Yeshiva University - Wilf Campus
New York, NY ‧ Private, non-profit ‧ 4-year
YESHUA
n Luke 1, the archangel Gabriel tells Mary (or Miriam) to name her son Yeshua, meaning “salvation.” An angel also tells Joseph, “you shall call His name Jesus, for He will save His people from their sins.” (Matt 1:21-22)
சாக்தம் -- Sakthi - Saktham
சாக்தம் என்பது சக்தி வழிபாடு ஆகும். சக்தி என்ற வார்த்தை சத்து என்ற வார்த்தையில் இருந்து வந்தது, சக்தி என்பது சத்து, வல்லமை, பெலன், சத்துவம், Power, strength, ablity ஆகும்
கடவுளின் வல்லமை என்பது பரலோகத்தில் இருந்து வரும் கடவுளின் ஆவி அல்லது பரிசுத்த ஆவியாகும், அதுவே சக்தியாக உருவகப்படுத்தப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தக் கீழே கொடுக்கப்பட்ட youtube பாட்டைக்கேட்கவும். பரிசுத்த ஆன்மா என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.
https://www.youtube.com/watch?v=odoPbTQsVns
https://www.youtube.com/watch?v=i1oOkHHQyIA
பரிசுத்த வேதாகமம் கடவுள் ( சக்தி ) வல்லமை உள்ளவர் என்றும் இயேசு கிறிஸ்து கடவுளின் சத்துவத்தால் உயிர்த்தெழுந்தார் என்றும் இயேசு கிறிஸ்துவை சக்தியுள்ள தேவன் என்றும் கூறுகிறது.
1) நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் (இயேசு) கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், (சக்தியுள்ள தேவன்), நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6
2) (தேவன்) தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் (சக்தியின்) வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே.............. எபேசியர் 1:19
3) நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் (சக்தியினாலும்) அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ் 10:38
4) ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் (சக்தியினால்) பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் (சக்தியினால்) அவருடனேகூடப் பிழைத்திருப்போம். II கொரிந்தியர் 13;4
5) அவர் தம்முடைய வல்லமையினால் (சக்தியினால்) என்றென்றைக்கும் அரசாளுகிறார்....... சங் 66:7
கெளமாரம் - Murugan - Gowmaram
கெளமாரம் என்பது முருகன் வழிபாடு ஆகும், முருகன் என்பது முருகு + அவன் ஆகும், அதாவது அழகானவர் என அர்த்தம் ஆகும், முருகன் குகன் என்றும் அழைக்கப்படுகிறார். குகன் என்றால் குரு + அவன் ஆகும். கிருபாகரன், கருணாகரன், கந்தன், கார்த்திகேயன், தண்டாயுதபாணி, பூபாலன், அல்லது லோக பாலன், என அழைக்கப்படுகிறார்.
இந்த பெயர்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவை யாபகப்படுத்துவதாக்வே உள்ளன.
குகன் (கு + அவன்) (குரு + அவன் )
பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து குருவைப் பற்றிக் குறிப்பிடும் போது கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாயிருக்கிறார். மற்றவர்களை குரு என்று அழைக்காதிருங்கள் எனக்கூறுகிறார். கிறிஸ்து என்றால் இரத்தம் சிந்தி மீட்டவர் என அர்த்தம்.
நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். மத்தேயு 23:10
கிருபாகரன்
கிருபாகரன் என்ற வார்த்தைக்குக் கிருபை நிறைந்தவர் என் அர்த்தம் ஆகும் பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை கிருபை நிறைந்தவர் எனக் குறிப்பிடுகிறது.
பரிசுத்த வேதாகமம்
பிள்ளை (இயேசு கிறிஸ்து) வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. லூக்கா 2:40
அந்த வார்த்தை ( இயேசு கிறிஸ்து ) மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்.... யோவான் 1:14;
கருணாகரன்
கருணாகரன் என்றால் கருணை உள்ளம் கொண்டவர் ஆகும். வேதாகமம் இயேசு கிறிஸ்துவை காருண்யம் உள்ளவர் எனக் குறிப்பிடுகிறது
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது?..... சகரியா 9:17
கந்தன்
கந்தன் - கன்றன்
இந்த பாடலில் கன்றன் என்ற வார்த்தை வருகின்றது, கன்றன் என்ற வார்த்தைக்குக் கன்று + அவன் ஆகும். கன்று என்பது பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. இந்த வார்த்தையாகிய கன்றன் மருவி கந்தன் என்று அழைக்கப்படுகிறது.
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்
குன்றன்; குழகன் குடவாயில்தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே
கார்த்திகேயன்
கார்த்திகேயன் என்றால் மேகமும் அக்கினியும் உடைய கருணை உள்ளவர் என அர்த்தம் ஆகும்.
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. யாத் : 13 : 21,22
இதைப் புரிந்து கொள்ள கார்த்தீஸ்வரன் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
தண்டாயுதபாணி,
தண்டாயுதபாணி என்றால் தண்டு + ஆயுதம்+ பாணி ஆகும். தண்டு என்றால் படை அல்லது படை தங்கும் இடம் ஆகும். தண்டாயுதபாணி என்பதற்கு யுத்த ஆயுதம் தரித்து இருப்பவர் என அர்த்தம். ( தண்டு + ஆயுதபாணி = தண்டாயுதபாணி ) தெய்வம் தீமையை அழிப்பதற்காகவும், தேவ மனிதர்களுக்கு உதவவும் மற்றும் மனிதனுடைய தவறுகளைத்திருத்தவும் ஆயுதம் (பட்டயம்) ஏந்தியவராக வருகிறார். தெய்வத்தின் இந்த செயல் பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இதைப் பற்றி தெரிந்து கொள்ள தண்டீஸ்வரர் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
பூபாலன், அல்லது லோக பாலன்,
பூபாலன், அல்லது லோக பாலன் என்பது மனித குமாரன் ஆகும், அதாவது மனிதனாக வந்து பிறந்த தெய்வத்தின் பிள்ளையாகும். பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை மனித குமாரன் எனக் குறிப்பிடுகிறது
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் ( இயேசு கிறிஸ்து ) பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13
அவர் ( இயேசு கிறிஸ்து ) மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். யோவான் 5:27
காணபத்தியம் - Ganapathy - Ganapathyam
காணபத்தியம் என்பது பிள்ளையார் வழிபாடு ஆகும். பிள்ளை தெய்வம் என்பது Son of GOD ஆகும். அவர் உயிர்த்தெழுந்தவர் ஆகும்.
பிள்ளையார் கதை சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது
பார்வதி தனது உடலில் இருக்கும் அழுக்கையெல்லாம் தேய்த்துத் திரட்டி உருண்டையாக்கி, அந்த உருண்டை ஒரு ஆளாக உருவெடுக்க வேண்டுமென்று நினைத்தார்கள். அந்தப்படியே அந்த அழுக்கு உருண்டை உடனே ஒரு மனித உருவமாகி பிள்ளை தெய்வம் ஆகிவிட்டது. பார்வதி அந்த அழுக்கு உருண்டை மனிதனைத் தனது குளியல் அறைக்கு வெளியில் காவலாளியாய் இருக்கும்படி நியமித்தார்கள். இப்படி மற்றும் ஒரு பிள்ளை தெய்வ அவதாரக்கதை உள்ளது. எனவே தான் மார்கழி மாதம் கோலம் போடும் போது சாணியைப் பிள்ளை மாதிரி பிடித்து வைத்து அதின் மேல் பூசனிப்பூவை வைப்பது நமது தமிழ் நாட்டுப்பழக்கம். தற்போது இந்த காரியம் குறைந்து கொண்டே வருகிறது.
தலை வெட்டப்படுதல் ( இறப்பு )
இந்த கதையில் சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்காததால் கோபம் கொண்டு பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்
இரத்தம் சிந்தப்படுதல் (தலை வெட்டப்பட்டவுடன் இரத்தம் முழுவதும் தரையில் சிந்தப்படுகிறது)
தலை வெட்டப்பட்டவுடன் வெளிப்பட்ட இரத்தம் இந்த பூமியில் சிந்தப்படுகிறது. அந்த நிகழ்வு இந்தக்கதையில் மறைபொருளாக இருக்கிறது.
உயிர்தெழுந்தவர் (வேறு ஒரு தலையை ஒட்டவைத்து உயிர் பெறுதல்)
இந்த நிகழ்வு உயிரை விட்ட பின்பு திரும்பவும் பெற்றுக்கெண்டதைக் காண்பிக்கிறது. இந்த நேரத்தில் அங்கு வந்த பார்வதி தேவி கோவம் கொல்ல சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
பரலோகம் சென்று வலது பக்கத்தில் அமர்ந்தவர்
உயிர்த்தெழுந்த தெய்வம் பரலோகம் சென்று பிதாவின் வலது பக்கம் அமர்ந்து இருக்கிறார். எனவே தான் அவர் வலம்புரி பிள்ளை என அழைக்கப்படுகிறார். இந்த கதையின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தால் மறைந்து இருக்கும் உண்மைகள் தெரிய வரும்
முதலில் பிள்ளை தெய்வத்தின் தலை வெட்டப்பட்டது
இரண்டாவது தெய்வத்தின் தலை வெட்டப்பட்டதால் இரத்தம் இந்த மண்ணில் சிந்தப்பட்டது
மூன்றாவதாக இறந்து போன தெய்வம் திரும்பவும் உயிர் பெற்று உயிர்த்தெழுந்தார். அப்படி உயிர்த்தெழுந்தவர் பரலோகம் செல்வதற்கான மேனியைப் பெற்றுக்கொண்டார்.
நான்காவது உயிர்த்தெழுந்த தெய்வம் பரலோகம் சென்று பிதாவின் வலது பக்கம் அமர்ந்து இருக்கிறார். எனவே தான் அவர் வலம்புரி பிள்ளை என அழைக்கப்படுகிறார்.
தெளிவாகப் புரிந்து கொள்ளப் பார்வதி என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
பிள்ளையாருக்கு விநாயகர், விக்னேஸ்வரன் என்ற பெயர்கள் உண்டு ( கோடு ஆயுதத்தால்) சிலுவையில் மனிதர்களுடைய வினைகளை நீக்கியதால் அந்த பெயர் ஏற்பட்டது
ஔவையார்
ஔவையார் தனது விநாயகர் அகவலில் கோடாயுதத்தால் கொடுவினை களைந்த தெய்வத்தை குரு என அழைக்கிறார். அதற்கு அர்த்தம் கோடு ஆயுதத்தால் ( மரத்தால் ஆன கொலைக் கருவியில்) நமக்காகப் பலியாகி நமது கொடு வினைகளைக் களைந்த தெய்வம் ஆகும்.
குருவடி வாகிக் குவலயந் தன்னில் (குரு வடிவாகி உலகம் தன்னில்)
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25
தெளிவாகப் புரிந்து கொள்ள குரு யார் ? என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
வைணவம் - Vishnu - Vaishnavism
சிலர் பரிசுத்த ஆவியை ஆண் வடிவில் கற்பனை செய்தனர். ஆண் வடிவத்தில் உருவகப்படுத்தப்பட்ட பரிசுத்த ஆவியானவர் விஷ்ணு என்று அழைக்கப்பட்டார்,
பரிசுத்த ஆவியை ஆண் உருவமாகப் பாவித்து உருவானது வைணவம் ஆகும்.
பரிசுத்த ஆவி வானத்தில் இருந்து வருவதால் விண்ணு என்றாகி விஷ்ணு என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். அல்லது vishumbu -- விசும்பு என்பது ஆகாயம் ஆகும். விசும்பு என்ற வார்த்தை விசுணு என்று மாறி இருக்க வேண்டும். Vishumbu may became Vishunu.
வைணவ மார்க்கத்தில் திரித்துவ தெய்வத்தைச் சிவன், விஷ்ணு, குமரக்கடவுள் (பிரம்மா மற்றும் ஐயப்பன் ) என்பதை மும்மூர்த்திகள் என அழைக்கத் தொடங்கினர்
மேலும் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படும் விஷ்ணு சமுத்திரத்தின் மேல் பாம்பு படுக்கையில் படுத்து இருப்பதாகவே உருவகப்படுத்தப்பட்டு உள்ளார் அதாவது தண்ணீரின் மேல் அசைவாடுபவராகக் காட்டப்பட்டுள்ளார். ஜலத்தின் மேல் அசைவாடுபவர் ஆவியானவர் பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியானவர் ஜலத்தின் (தண்ணீரின்) மேல் அசைவாடுவதாகக் கூறுகிறது
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ..... ஆதியாகமம் 1:1-2
சைவம் மற்றும் வைணவங்கள் கடவுளாகிய தந்தையை சிவன் என்று குறிப்பிடுகின்றன. பரிசுத்த ஆவியானவராகிய கடவுள் இரண்டு வடிவங்களில் இருக்கிறார், ஒன்று பெண் வடிவத்தில் சக்தி (சைவம்) மற்றும் மற்றொன்று ஆண் வடிவத்தில் விஷ்ணு (வைஷ்ணவம்) . சிவனின் உடலின் இடது பாதி பெண் வடிவில் (சக்தி) சித்தரிக்கப்பட்டால், அது 'அர்த்தநாரீஸ்வரர்' என்றும் மற்றும் சிவனின் உடலின் அதே இடது பாதி ஆண் வடிவில் (விஷ்ணு) சித்தரிக்கப்பட்டால், அது 'அரிஹரன்' என்று அறியப்படுகிறது
சொளரம்- Ayyappan - Sowram
செளரம் என்பது சூரிய வழிபாடு அல்லது ஒளி வழிபாடு ஆகும். ஒளிவழிபாடு ஐயப்பன் வழிபாட்டைக் காண்பிக்கிறது.
ஒளிவழிபாடு - சூரியனைப் போல உதித்து உயிர்த்து எழுந்தவர் இயேசு கிறிஸ்துவே ஆகும்.
ஐயப்ப வழிபாடு என்பது கன்னியின் வழியாகப் பிறந்த இயேசு கிறிஸ்துவையே காண்பிக்கிறது.
சிலர் செளரம் என்பது பிரம்மா வழிபாடு எனக் கூறுகின்றனர். பிரம்மா என்பது படைத்தவன் என அர்த்தம் ஆகும். பரிசுத்த வேதாகமம் சகலமும் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டானதாகக் கூறுகிறது.
"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை". யோவான் 1:3
ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோ 1:16
guru