தெய்வம் பெற்றஆனை என்ன ?
குறள் 268
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
திருக்குறள் ஒரு தெய்வீகப்படைப்பு, அது கடவுளைப்பற்றித்தான் பேசுகிறது, அதின் அர்த்தங்களைப் புரிந்து கொள்வது என்பது சற்று கடினமானது, ஏன் என்றால் திருக்குறள் அதின் அர்த்தங்களை தனக்குள்ளாகத்தானே மறைத்துக்கொண்ட ஒருபடைப்பு.
எனவேதான் பல தமிழ் அறிஞர்கள் உரைகள் பல எழுதியிருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமாக இல்லை.வேறுபடுகிறது.
இந்த குறளுக்குப் பல அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது, தன்னுயிர் தானறப் பெற்றானை என்ற வரிக்கு பெரும்பாலும், தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை அல்லது தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனை அல்லது தான் என்கிற செருக்கு கொள்ளாதவர்கள் என விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது இந்த விளக்கங்கள் சரிதானா இல்லையா என ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்
தன் + உயிர் = தன்னுயிர் தான் + அற = தானறப்
பெற்ற + ஆனை = பெற்றானை
இந்த குறளில் பெற்றானை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பெற்ற + ஆனை என்று தான் பார்க்க வேண்டும்,
பெற்றானை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பெற்ற + அவனை என எடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த குறளின் அர்த்தம் மாறி வருகிறது.
பெற்றானை என்ற வார்த்தைக்குப் பெற்றவனை என எடுத்தாலும் என்ன அர்த்தம் வருகின்றது எனப்பதை கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். (go)
ஆனை என்றால் யானை என்று எடுக்கக்கூடாது, ஏன் என்றால் சங்கம் மறுவிய காலத்தில் (கி.பி. 300 - கி.பி. 700) ஆண் யானைக்குக் களிறு என்றும் பெண் யானைக்குப் பிடி என்று தான் பெயர் வழக்கம் உண்டு உதாரணமாகச் சைவ சித்தாந்தத்தின் மெய்க்ண்ட சாத்திரங்கள் பதினாங்கினுள் ஒன்றை எழுதியவர் திருக்களிற்றுபடியார் ஆவார் அவருக்கு அந்த பெயர்க் காரணம் வர என்ன என்பதைப்பார்ப்போம்
பெயர்க் காரணம்
இந்நூலாசிரியர் தாழ்ந்த இனத்தவராதலால் முதலில் இவர் செய்த நூல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆசிரியர் திருவருளை வேண்டி, தன் நூலைத் தில்லை நடராசப் பெருமான் சந்நிதிக்குச் செல்லும் பஞ்சாக்கரப் படியில் (திருக்களிற்றுப்படி) வைக்க, படியின் இரு பக்கமுள்ள கல்யானைகள் உயிர் பெற்றுத் தம் தும்பிக்கையால் அந்நூலை எடுத்து நடராசப் பெருமானின் திருவடியில் வைக்க, அந்நூலின் சிறப்பை உணர்ந்த அடியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அதனாலேயே, அந்நூல் அப்பெயர் பெற்றது என்பது கர்ண பரம்பரையாக வழங்கும் செய்தியாகும்.[2]
இந்த பெயர் காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் யானைக்குப் பதிலாக ஆனை என சங்கம் மறுவிய காலத்தில் (கி.பி. 300 - கி.பி. 700) உபயோகிக்கப் பட்டு இருந்தால் திருக்களிற்றுப்படியார் என்பதற்குப் பதிலாக திருஆனைப்படியார் என வழங்கப்பட்டு இருக்க வேண்டும்
அதே போல் தெய்வம் தெய்வானை என்ற பெண்ணை மணந்திருக்க, தெய்வ யானை என்று எடுப்பது தவறு.
அதே போல் குறள் 268 ல் பெற்றானை என்பதை பெற்றயானை என்று எடுத்தால் குறளின் மொத்த அர்த்தமும் மாறிவிடும்
தமிழ் மொழியில் இலக்கண மாற்றங்கள் மற்றும் வார்த்தை உச்சரிப்பின் மாற்றங்கள் சங்கம் மறுவிய காலத்திற்குப் பின்பு உண்டானவை.
எனவே ஆனை என்பதை ஆணை அல்லது கட்டளை என எடுப்பது சாலச்சிறந்தது.
மேலும் குறள் 268 தவம் என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது தவம் என்ற அதிகாரம் தவத்திற் குருவைப்பற்றிய அதிகாரம். தவம் என்பது இரத்தம் சிந்தி மீட்பு உண்டாக்குதலைக் காண்பிக்கிறது. எனவே இந்த குறள், பெற்ற ஆணையின் படி தன் உயிரைத் தான் அற்றுப் போகும் வரை ஒப்புக்கொடுத்த தெய்வத்தை பற்றிக் குறிப்பிடுகிறது என்பது உறுதியாகிறது.
தவற்றின் குருவைப் பற்றிப் பார்க்க மாதா பிதா குரு
தெய்வம் என்ற பக்கத்தைப்பார்க்கவும்
விளக்கம்
தான் பெற்ற ஆனையின் படி தன் உயிரைத் தான் அற அதாவது தன் உயிரை முழுமையாகத் தானாகச் சாகக் கொடுத்தவரை மண்ணில் வாழும் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும்.
தெய்வானையை (தெய்வ + ஆனை ) மணந்து அதாவது ஏற்று இந்த பூமிக்கு மனித தெய்வமாக வந்து தன்னுயிரை தானாக முன் வந்து மனித குல மீட்பிற்காக பலியாகக் கொடுத்தவரை இந்த பூமியில் பிறந்து வாழும் எல்லா உயிர்களும் வணங்கும் என அர்த்தம் கொள்ள வேண்டும்
தெய்வத்தின் ஆனையை ஏற்று அதன் வழியாக (காரணமாக) இந்த உலகத்தில் வந்து அந்த ஆனையை நிறைவேற்ற மனிதனாக பிறந்ததால் மனித குமாரனை ஆனை முகன் என அழைக்கின்றோம்.
தெய்வத்தின் ஆனையை ஏற்று அதாவது அந்த ஆனையை மணந்து இந்த பூமிக்கு வந்ததால் தான் நாம் தெய்வானையைத் தெய்வத்தின் மனைவி என அழைக்கிறோம்.
ஆனை முகம் என்றால் என்ன ?
ஆனைமுகம் என்றால் கட்டளை + முகம் என அர்த்தம். முகம் என்றால் வழி ஆகும். (முகம் = mouth, enterence, face to face, honor ( prize ) beginning )ஆகவே தான் கப்பல் வந்து தங்கும் இடத்துக்கு துறைமுகம் என்றும் கப்பல் துறைமுகத்தில் நுழைவு வாயில் முகத்துவாரம் என அழைக்கப்படுகிறது.
தெய்வானை
தெய்வத்தின் கட்டளையயைப் பரிசாக பெற்றவர் அல்லது தெய்வத்தின் கட்டளை வழியாகப் பூமிக்கு வந்தவர் அல்லது கட்டளையை மணந்தவர்.
தான் அற என்ற வார்த்தை அறன் வலியுறுத்தல் சம்பந்தப்பட்டது அதன் படி தன் உயிரைத் தான் பலியாகக் கொடுத்த தெய்வத்தின் உயிர் பலியை குறிக்கிறது.
கவலையெனும் பிணிகொண்டு உன்கண் அருளை மிகநாடித்
தவமுயலும் தமியேனைத் தளரவிடத்
தகுங்கொல்லோ?
அவன் இவன் என்று உரையாடல்
ஆதியெனும் ஆனையின்முன்
சிவன் அயன் கண்டு ஓல்கவந்தாய்
தென்பேற்று நெடுமாலே!
ஆதியிலே உண்டான ஆணை
இந்த பூமிக்கு யார் சென்று இரத்தத்தைச் சிந்தி மனிதக்குலத்துக்கு மீட்பை உண்டாக்குவார் என்ற ஆதியிலே உண்டான ஆணயின் படி அவன் இவன் என்று ஏற்பட்ட உரையாடலின் படித் தானாக முன்வந்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்த YESHIVAவின் பெருமை கண்டு வழிபடவந்தாய் என விவரிக்கிறது இந்த பாடல்.
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா 6:8
மேற்கூறிய பாடலில் ஆதியெனும் ஆனையின் முன் என்ற வரி வருகிறது அந்த வரி ஆனை என்பதை ஆண என உருதிப்படுதுகிறது.
(விளக்கம் ஆதி மூலம் என்ற பக்கத்தில் உள்ளது)
https://www.narrowpathlight.com/who-is-aathi-moolam
எனவே ஆனை என்பதை ஆணை அல்லது கட்டளை என எடுப்பது சாலச்சிறந்தது.
திருவுந்தியார்தனது 3ஆவது பாடலில் கண்டத்தைக்கொண்டு கர்மம் முடித்தவர் என குறிப்பிடுகிறார் அதாவது தன் சாவைக்கொண்டு தனக்குக் கொடுக்கப்பட்ட புனிதமான வேலையை செய்து முடித்தவர், புனிதமான வேலை என்பது ஆத்துமமீட்பாகும்
திருவுந்தியார் --- 3
கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்
(1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற
பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.
(1). பிண்டத்து
திருவுந்தியார்தனது 1ஆவது பாடலில் தானாகத்தந்தவர் என குறிப்பிடுகிறார் அதாவது தனது உயிரைத் தானாக முன் வந்து நமது ஆத்தும மீட்பிற்காக சிலுவையில் அல்லது காவுதடியில் பலியாகக்கொடுத்தவர் என குறிப்பிடுகிறார்
திருவுந்தியார் 1
அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.
இந்த குறளின் அர்த்தத்தைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழ் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தெய்வம் இட்ட கட்டளை (ஆணை) அல்லது தெய்வானை (தெய்வ+ஆனை ) அல்லது தெய்வத்தின் தீர்மானம் அல்லது தெய்வ வாக்கு என்ன ?
1 ) தெய்வம் மனிதனாக (மனித குமாரனாக) பூமியில் பிறக்க வேண்டும் என்பது முதல் ஆணை
2 ) மனித குமாரனாக வந்தவர் பூமியில் உள்ள மக்களின் பாவம் போக்கும் பலியாக வேண்டும் என்பது இரண்டாம் ஆணை
3 ) இரத்தம் சிந்தி மரித்த தேவ குமாரன் உயிர்த்தெழுந்து பிதாவாகிய தேவனின் வலது பக்கத்தில் (வலம்புரி) அமர்ந்து கிருபையின் காலம் முடியும் வரை நமக்காகவும், நமது பாவங்களுக்காகவும் பரிந்து பேச வேண்டும் என்பது மூன்றாம் ஆணை.
4 ) கிருபையின் காலம் முடிந்த உடன் ஆரம்பிக்கும் நியாயத்தீர்ப்பு காலத்தில் நியாயாதிபதியாக இந்த பூமிக்கு வந்து, சாத்தானையும், கீழ்ப்படியாமல் போன மனிதர்களையும் நியாயம் தீர்க்க வேண்டும் என்பது நான்காவது ஆணை.
கட்டளை ( ஆணை )
முதல் மனிதனாகிய ஆதாம் அவனது மனைவி ஏவாள் ஆகிய இருவரும் படைக்கப்பட்ட உடன் பாவத்துக்கு உள்ளானதினால் இந்த உலகத்தில் பாவம் வந்தது. அதன் விழைவாக பத்து கட்டளைகள் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது. மனிதன் அந்த கட்டளைகளை மீறி நடந்ததால் பலிக்கோட்பாடு உண்டானது. பலிக்கோட்பாடு கொடுக்கப்பட்ட பின்பு பாவமும், பலியும் பெருக ஆரம்பித்தது எனவே
கடவுளே மனிதனாகப் பிறந்து மனிதனுக்காகப் பலியாக வேண்டும் என்ற கட்டளை உண்டானது. அதின் அடிப்படையில் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக வந்து இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்து பரலோகம் சென்று, கடவுளின் வலது பக்கத்தில் அமர்ந்து, பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார், மீண்டும் நியாயாதிபதியாக வருவார்.
சைவ சித்தாந்தத்தின் சூத்திரமான மெய்கண்ட தேவர், எழுதிய சிவஞான போதம் முதல் சூத்திரம் பாடல் 1 அழகாக ஆண், பெண், உலகம் ஆகிய மூன்றின் படைப்பின் ரகசியத்தையும் அந்த மூவினையும் பாவத்தில் விழுந்ததைப்பற்றிப்பேசுவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் ( சிவஞான போதம் மொத்தம் - 12 சூத்திரங்கள், முதற் சூத்திரம், பாடல் எண் : 1)
அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துள தாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=1004&padhi=015+
அவன் = ஆதாம், அவள் = ஏவாள், அது = உலகம் என்ற மூன்று வினைகள் அதாவது மூன்று வகையான படைப்பின் செயல்களால் பரிசுத்தமாக படைக்கப்பட்டது. படைக்கப்பட்ட உடன் தனது பரிசுத்த நிலையில் இருந்து விழுந்து பாவத்துக்குள்ளானது ( மலத்துளதாம் )
பரிசுத்த வேதாகமத்தின் படி ஆதாரங்கள்
1 ) தெய்வம் மனிதனாக (மனித குமாரனாக) பூமியில் பிறக்க வேண்டும் என்பது முதல் ஆணை
சங்கீதம் 2:7
(இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கிமு 1500-450 ஆண்டுகளில் எழுதப்பட்டது )
King James Version (KJV)
I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.
Thiru Viviliam
ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; நீர் என் மைந்தர் இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
ஏசாயா 7:14
(இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 740-700 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது )
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ரோமர் 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
2 ) மனித குமாரனாக வந்தவர் பூமியில் உள்ள மக்களின் பாவம் போக்கும் பலியாக வேண்டும் என்பது இரண்டாம் ஆணை
பாவம் போக்கும் பலி
ஏசாயா 53;12
(இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 740-700 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது )
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;.....
II கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
ரோமர் 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்
3 ) இரத்தம் சிந்தி மரித்த தேவ குமாரன் உயிர்த்தெழுந்து பிதாவாகிய தேவனின் வலது பக்கத்தில் அமர்ந்து கிருபையின் காலம் முடியும் வரை நமக்காகவும், நமது பாவங்களுக்காகவும் பரிந்து பேச வேண்டும் என்பது மூன்றாம் ஆணை
உயிர்த்தெழுந்தவர்
ரோமர் 1:4,5
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
வலது பக்கம் (பாரிசத்தில்) அல்லது வலம்புரியில் இருப்பவர்
மத்தேயு 26:64
அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
வேண்டுதல் செய்பவர்
ரோமர் 8:34
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
வலது பாரிசத்தில் தவத்திற் குருவின் (கிறிஸ்துவின்) பணி,
இவரது குருத்துவப் பணியோ ஆணையிட்டு அளிக்கப்பட்ட ஒன்று; லேவியர் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை. எபிரெயர் 7:20
திருச்சட்டப்படி (பத்து கட்டளைகளின் படி ) வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். எபிரேயர் 7:28
4 ) கிருபையின் காலம் முடிந்த உடன் ஆரம்பிக்கும் நியாயத்தீர்ப்பு காலத்தில் நியாயதிபதியாக இந்த பூமிக்கு வந்து, சாத்தானையும், கீழ்படியாமல் போன மனிதர்களையும் நியாயம்தீர்க்க வேண்டும் என்பது நான்காவது ஆணை.
சங்கீதம் 96:13
(இந்த தெய்வ வாக்கு சுமார் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கிமு 1500-450 ஆண்டுகளில் எழுதப்பட்டது )
அவர் (இயேசு) வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
யோவான் 5:27
அவர் (இயேசு) மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
யோவான் 9:39
அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
ரோமர் 2:16
என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
II தீமோத்தேயு 4:1
நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
வெளி 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் (இயேசு) நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
பெற்றவனை
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
பெற்றானை என்ற வார்த்தையை பெற்றவனை என்று அர்த்தம் எடுத்தால் எதைப்பெற்றார் என்ற கேள்வி எழும்புகிறது.
தன்னுயிரைத் தான் இல்லாமல் போகும் வரை அதாவது தான் அற்றுப்போகும் வரை சாகக்கொடுத்தவராகிய தெய்வம் தன் உயிரைத்திரும்பவும் பெற்று உயித்தெழுந்தார் என்பது தான் சரியான அர்த்தமாகும்.
பரிசுத்த வேதாகமம்
மாற்கு 9:31
ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
தன் உயிரைச் சிலுவையில் அல்லது காவு தடியில் பலியாகக்கொடுத்து, இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயித்தெழுந்த இயேசுவையே இந்த குறள் குறிப்பிடுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அறன் வலியுறுத்தல் என்றால் என்ன ?
அறன் வலியுறுத்தல் என்பது உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் பகுதி அதாவது நமக்காக வானத்தை விட்டு இறங்கி வந்து மனிதனாகப்பிறந்து தன்னையத்தானாகப்பலியாக ஒப்புக்கொடுத்த கடவுளைப்பற்றிக் கூறும் பகுதி எனப்படும்.
அறன் என்றால் வேள்வி முதல்வன் அல்லது உயிர்ப்பலிக்குரியவன் ( one who sacrifice ) என அர்த்தம், அல்லது புனிதமான வேலையைச் செய்து முடித்தல் எனப்பொருள்படும் (Performing a sacred duty)
உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் போது இயேசுவை முதற்பலன் எனகுறிப்பிடுகிறது பரிசுத்த வேதாகமம் கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.(1 கொரிந்தியர் 15-20, 23)
guru