top of page

குறள் 20 - kural 20    நீரின்றி அமையாது

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

 

"பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்."  Bible

 

இந்த குறள் வான் சிறப்பு என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது வான் என்பது பரலோகம் ஆகும். எனவே வான் சிறப்பு என்பது வானத்தில் இருந்து வரும் அருள் அல்லது கடவுளின் ஆவி அதாவது தூய ஆவி (HOLY SPRIT )பற்றிய சிறப்புக் கூறும் பகுதி ஆகும்

பொதுவாகப்பார்க்கும் போது நீர் மற்றும் மழையைப்பற்றிக் குறிப்பிடுவதாகத்தெரியும் ஆராய்ந்து பார்க்கும் போது வான் சிறப்பு என்பது வானிலிருந்து வரும் அமிழ்தம் அல்லது தூய ஆவியைப்பற்றிக் குறிப்பிடுவதை அறிந்துகொள்ளமுடியும்.

 

திருவள்ளுவர் தம்முடைய 11 வது குறளில் வானிலிருந்து வரும்‘ அருள்’ அல்லது ‘மாரியை’அமிழ்தம் எனகுறிப்பிடுகிறார், அமிழ்தம் என்பதற்கு தேவலோகத்தில் உள்ள பானம் அதாவது `பரிசுத்தஆவி` என்று பொருள்

 

20வது குறளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்ட போது சிலர் ஒழுக்கு என்ற வார்த்தையை மழைத்துளிக்கு ஒப்பாக எடுத்து விளக்கம் கொடுத்துள்ளனர், சிலர் ஒழுக்கு என்ற வார்த்தைக்கு ஒழுக்கம் என்று எடுத்துள்ளனர். ஒழுக்கு என்ற வார்த்தைக்கு ஒழுக்கம் என்ற அர்த்தமே சரியானது

 

குறள் 20

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

 

நீரின்றி அமையாது உலகு எனின்  = நீர் இல்லாமல் இந்த உலகம் உண்டாகவில்லை,

யார்யார்க்கும்    =   பூமியில் உள்ள எல்லா மனிதர்களுக்கும்
வானின்றி        = பரலோகத்தில் இருந்து வரும் தெய்வத்தின் பரிசுத்த ஆவியாகிய அருள் இல்லாமல்

அமையாது ஒழுக்கு = ஒழுக்கம் உண்டாகாது

 

விளக்கம்

இந்த உலகம் தெய்வத்தின் வார்த்தையினால் அமைந்து உருவாகிய போது நீரிலிருந்தும் நீராலும் நிலைபெற்றிருந்தது இந்த பூமி தண்ணீரினால் நிறைந்து இருந்தது, அதே போல் தண்ணீர்களுக்கு மேலே இந்த பூமி அமைந்துள்ளது, அதையே நீர் இன்றி அமையாது என குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனென்றால் எந்த கிரகங்களிலும் தண்ணீர் கிடையாது, நாம் வாழும் உலகமாகிய இந்த பூமியில் மட்டுமே மனிதனும் மற்ற உயிர் இனங்களும் வாழ்வதற்குத் தண்ணீர் உண்டாக்கி கொடுத்துள்ளார். எனவே நீர் இன்றி அமைந்திருக்க முடியாது இந்த உலகு. அதேபோல் வானமாகிய பரலோகத்தில் இருந்து வரும் தெய்வத்தின்  பரிசுத்த ஆவிதான் மனிதக் குலத்துக்கு ஒழுக்கத்தைக் கொடுக்கமுடியும்.

 

அதே போல் தண்ணீர்களுக்கு மேலே இந்த பூமி அமைந்துள்ளது, பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=HH_yNerv8XY

 

பரிசுத்த வேதாகமம்

பழங்காலத்திலிருந்தே கடவுளுடைய வார்த்தையால் விண்ணுலகும் மண்ணுலகும் தோன்றின. மண்ணுலகம் நீரிலிருந்தும் நீராலும் நிலைபெற்றிருந்தது என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள். 6அந்த நீராலே, வெள்ளப் பெருக்கினால் அப்போதிருந்த உலகம் அழிவுற்றது.   2 பேதுரு 3:5-6

தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.       

  சங்கீதம் 136:6

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.   ஆதி 1:1,2,9,10

 

ஒழுக்கு

ஒழுக்கு என்ற வார்த்தை ஒழுக்கத்தைக் குறிக்கிறது, இதை அறிந்து கொள்ளக் குறள் 148 ஐப் பார்க்க வேண்டும்.. குறள் 148 ல் ஒழுக்கு என்ற வார்த்தை ஒழுக்கம் என்ற அர்தத்தில் எழுதப்பட்டுள்ளது, குறள் 20 மற்றும் 148ன் படி ஒழுக்கு என்றால் ஒழுக்கம் என்பது அர்த்தம் ஆகும்.

கடல் 1.PNG

குறள் 148:  kural 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

 

பிறன்மனை  = அடுத்தவனுடைய வீடு, மனைவி மற்றும் யாதொன்றயும்

நோக்காத    = இச்சிக்காத அல்லது விரும்பாத

பேராண்மை  =  மானம் உள்ள செயல் ஆகும்

சான்றோர்க்கு = இரட்சிக்கப்பட்டவர்களுக்கு அல்லது நீதிமானுக்கு

அறன் என்றோ = தெய்வம் காட்டிய அறன் வழி அன்றோ

ஆன்ற வொழுக்கு = பூரணமான ஒழுக்கமாகும்

 

குறள் 148 - விளக்கம்

பிறனுடைய யாதொன்றையும் அதாவது பிறன் மனைவி மற்றும் ஆஸ்திகள் யாதொன்றையும் விரும்பாமல் அல்லது இச்சியாமல் இருப்பது  மானம் உள்ள செயல் ஆகும்.  அப்படி பிறனுடைய ஒன்றையும் இச்சியாமல் வாழ்வது, தெய்வத்தின் அறத்தினால் (இரத்தத்தினால்) மீட்கப்பட்ட அல்லது இரட்சிக்கப்பட்ட நீதிமானுக்குப் பூரணமான ஒழுக்கமாகும்.


பரிசுத்த வேதாகமம்

பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.  யாத் 20:17

என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்     பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.             எசேக்கியேல் 18:9

வான் சிறப்பு

குறள் 11 --  kural 11

வானின்றுலகம் வழங்கி வருதலால்,

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

 

வானில் இருந்து    = வானத்திலிருந்து அதாவது பரலோகத்திலிருந்து பரிசுத்தஆவி அல்லது  

                         தெய்வத்தின் அருளால்

உலகம் வழங்கி =   உலகமும் அதின் மக்கள் அனைவரும் இயங்கி

வருதலால் தான் =      வருவதால் தான்

அமிழ்தம்        =    அந்த பரிசுத்த ஆவி அமிழ்தம்

என்று உணரற்பாற்று.  = என்று உணரப்படுகிறது

 

வழங்குதல் =: இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; ...

விளக்கம்

வானத்திலிருந்து அதாவது பரலோகத்திலிருந்து  வரும்பரிசுத்த ஆவி அல்லது தெய்வத்தின் அருளால் உலகமும் அதின் மக்கள் அனைவரும் இயங்கி வருவதால் அதாவது பரிசுத்த ஆவியைப் பெற்று தேவ பிள்ளைகள் இயங்கி வருவதால் தான் அந்த பரிசுத்த ஆவி அமிழ்தம் என்று உணரப்படுகிறது. அமிழ்தம் எனப்படுவது நித்திய ஜீவனை (பரலோக வாழ்க்கை) அளிப்பது ஆகும்


பரிசுத்த வேதாகமம்

அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து, ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?  கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர்.  ஏசாயா 63:12-14

குறள் 12:    kural 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

 

துப்பார்க்குத்  = துப்பு கெட்டவர்களுக்கு 

துப்பாய         = துப்பு கொடுப்பதற்குத் துப்பாக உலகில் தோன்றி

துப்பாக்கித்    = துப்பு ஆக்கி

துப்பார்க்குத்  = துப்பு கெட்டவர்களுக்கு 

துப்பாய      =  துப்பு கொடுப்பதற்குத் துப்பாக உலகில் தோன்றி

தூஉம் மழை   =  பரலோகத்தில் (Heaven) இருந்து பரிசுத்த ஆவியை மழை போல் பெய்யச்செய்வார்


விளக்கம்

பரிசுத்த ஆவி மனிதனுக்குத் தூய்மை கொடுக்க உதவத் தூவும் மழையாக அழைக்கப்படுகிறது

துப்பு என்றால் தூய்மை அல்லது பரிசுத்தம் ஆகும்.

துப்புக் கெட்டவனுக்காகத் துப்பாக வந்து அவனைத் துப்பாக ஆக்கி துப்புக் கெட்டவனுக்காகத் துப்பாக வந்து  ( பரிசுத்த ஆவியை ) தூவும் மழை 

தூய்மை அற்றவர்களுக்கு  தூய்மை கொடுப்பதற்குத் தூய்மை வடிவில் உலகில் தோன்றிய கடவுள், தூய்மை அற்றவர்களை, தூய்மை ஆக்க, பரலோகத்தில் (Heaven) இருந்து பரிசுத்த ஆவியை மழை போல் பெய்யச்செய்து பரிசுத்தமாக்குகிறார். 

ஆர் இருள் (பொல்லாத இருள், கெட்ட இருள், நரக இருள்) சென்று சேரக்கூடிய தூய்மை கெட்டவர்களுக்கு அதாவது பாவ வாழ்க்கை வாழ்பவர்களுக்குத் தூய்மை கொடுப்பதற்கு ( பாவத்திலிருந்து விடுவித்து பரிசுத்தம் கொடுப்பதற்கு ) தூய்மை வடிவில், அல்லது வால் அறிபவனாக (பரிசுத்தர் ஆக) உலகில் தோன்றிய கடவுளை வணங்கும் போது தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்க உலகில் தோன்றிய பரிசுத்த கடவுள், பரலோகத்தில் (Heaven) இருந்து பரிசுத்த ஆவியை மழை போல் பெய்யச்செய்வார்.


மேலும் அறிந்து கொள்ளத் துப்பார்க்குத் துப்பாய என்ற பக்கத்தைப் பார்க்கவும்  ( GO )    

குறள் 13:  kural 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

 

விண்இன்று   =  வானத்தில் இருந்து அல்லது பரலோகத்தில் இருந்து வரும் பரிசுத்த ஆவி

பொய்ப்பின்   =      வழங்கப்படாவிட்டால்

விரிநீர்            = விரிந்து கிடக்கும் கடல் சூழ்ந்த

வியனுலகத்து  =   இந்த அகண்ட உலக மக்களின்
உள் நின்று உடற்றும் பசி = உள்ளத்துக்குள் இருக்கும் பாவமாகிய பசி வருத்தும்.

 

உடற்று. மொழி; கவனி · தொகு · தமிழ். பொருள். உடற்று, வினைச்சொல் . வருத்து · சினமூட்டு · போரில் ...


விளக்கம்

வானத்தில் இருந்து அல்லது பரலோகத்தில் இருந்து வரும் பரிசுத்த ஆவி பூமிக்கு வழங்கப்படாவிட்டால் அல்லது வழங்கப்படாமல் இருந்திருந்தால் இந்த  விரிந்து கிடக்கும் கடல் சூழ்ந்த  இந்த அகண்ட உலகத்தில் வாழும் மக்களின் உள்ளத்துக்குள் இருக்கும் பாவமாகிய பசி வருத்தும் அல்லது பாவத்தினால் உண்டாகும் கசப்பு, வைராக்கியம் பொறாமை ஆகியவைகள் தேவனுடைய ராஜ்யமாகிய பரலோகத்தைச் சென்று சேர விடாமல் வாட்டி வருத்தும்.

 

பரிசுத்த வேதாகமம்

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் (பரிசுத்த ஆவியானவர்) உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் (பரிசுத்த ஆவியானவர்) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.  யோவான் 16:7-8  

.........பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,  பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  கலாத்தியர் 5:20-21

குறள் 14:   kural 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

 

புயல்என்னும்   =  வலிமையான காற்று எனப்படும் தெய்வ அருள்
வாரி வளம்        =   வெள்ளத்தின் நிறைவு அல்லது பரிசுத்த ஆவியின் முழுமை

குன்றிக் கால்  = குறைந்து போனால்

ஏரின் உழாஅர் உழவர் = ஏர் பிடித்து உழும் உழவர்கள் உழமாட்டார்கள் அதாவது தெய்வத்திற்காக விதைக்கும் வேலை செய்பவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்

 

பரிசுத்த ஆவி மற்றவர்களுக்கு உதவும் ஊழியம் ( விவசாயம் ) செய்ய உதவும்.

புயல்காற்றைப் போல அழைக்கப்படுகிறது

 

விளக்கம்

உழவர்கள் அல்லது வேளாளர்கள் என்பவர்கள் தெய்வத்துக்காக ஊழியம் அல்லது விதைக்கும் வேலை பார்ப்பவர்கள் ஆகும். இதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

வேளாளர் (Vellalar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடுகேரளா மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும்

https://ta.wikipedia.org/s/jyh.   

தேவேந்திரகுலம் என்பது தேவர்களுடைய தலைவன் என அர்த்தம் ஆகும். தேவர்களின் தலைவனான தெய்வத்தைப் பற்றி மனிதர்கள் மத்தியில் விதைப்பவர்கள் (preachers) தேவேந்திரகுல வேளாளர் ஆவார்கள்

 

வலிமையான காற்று எனப்படும் தெய்வ அருள் வெள்ளத்தின் நிறைவு அல்லது பரிசுத்த ஆவியின் முழுமை குறைந்து போனால் தெய்வத்திற்காக ஆத்தும ஆதாயம் என்ற வேலை பார்க்கும் தெய்வத்தின் ஊழியர்கள் அவர்களுடைய தொழிலாகிய ஆத்தும மீட்பை செய்ய மாட்டார்கள் அதாவது தெய்வத்திற்காக விதைக்கும் வேலை செய்பவர்கள் வேலை செய்யச் மாட்டார்கள்

 

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.   அப் 1:8  பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். .  மாற்கு16:15

குறள் 15:  kural 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

 

கெடுப்பதூஉம்    =  பாவத்தை இல்லாமல் செய்வதும்

கெட்டார்க்குச்     =  பாவத்தைச் செய்து கெட்டுப் போனவர்களுக்கு

சார்வாய்               =  துணை நின்று

மற்று           = மறுபடியும் பிறக்க வைத்து    

ஆங்கே                =  பரலோகத்திற்கு
எடுப்பதூஉம்     = கொண்டு செல்வதுவும்

எல்லாம் மழை = எல்லாம் அந்த மழையாகிய பரிசுத்த ஆவியாகும்.

 

பரிசுத்த ஆவி கெட்டவர்களைத் தூயவர்களாக மாற்றும் மழை என்று அழைக்கப்படுகிறது

 

விளக்கம்

ஒரு மனிதனின் உள்ளத்தில் இருக்கும் பாவத்தை இல்லாமல் செய்வதும் அல்லது மன்னித்து நீக்கி அப்படி பாவம்  பாவத்தைச் செய்து கெட்டுப் போனவர்களுக்கு  துணையாய் நின்று மறுபடியும் பிறக்க வைத்து அல்லது பரிசுத்த வாழ்க்கையைக் கொடுத்து  பரலோகத்திற்குக் கொண்டு செல்வதும் எல்லாம் அந்த மழைபோல் வரும் பரிசுத்த ஆவியாகும்

 

பரிசுத்த வேதாகமம்

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.  1கொரி 6:9-11

குறள் 16:  kural 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

 

விசும்பின்   =   வானத்தின் அல்லது பரலோகத்தின்

துளிவீழின்  = இருந்து பரிசுத்த ஆவியாகிய மழைத்துளி

அல்லால்     =  வராமல்

மற்று      = மறுபடியும் பிறக்க வைத்து    

ஆங்கே      =    பரலோகத்திற்கு
பசும்புல்    =   கொண்டு செல்லும் உள்ளத்தில் பரிசுத்தமாகிய பசும்புல்லின் வளர்ச்சி

தலை காண்பது அரிது  = நிலை காண்பது கஷ்டமான காரியம் ஆகும்

 

பரிசுத்த ஆவி உள்ளான மனிதனின் (ஆத்துமா) வளர்ச்சிக்கு உதவ வானத்திலிருந்து வரும் பனித்துளியாக அழைக்கப்படுகிறது.

 

விளக்கம்

வானத்தில் அல்லது பரலோகத்தில் இருந்து பரிசுத்த ஆவியாகிய மழைத்துளி வராமல் அல்லது வழங்கப்படாமல் இருக்குமானால் ஒருவன் இந்த பூமியில் பாவத்துக்கு மரித்து தெய்வத்துக்கு என்று பரிசுத்தமாக வாழ மறுபடியும் பிறக்க முடியாது. அப்படி என்றால் ஒரு மனிதனுக்குப் பரிசுத்த ஆவியின் அருள் வழங்கப்படாமல் இருந்தால் அவன் பரலோகத்திற்கு செல்ல உதவும் பரிசுத்தம் என்ற பசும்புல்லின் வளர்ச்சியின் நிலை அவன் உள்ளத்தில் காண்பது கஷ்டமான காரியம் ஆகும்

 

பரிசுத்த வேதாகம ம்

அன்றியும், நீங்கள் மீட்கப்படும் (பரலோகம் செல்லும்)  நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:30-32

குறள் 17:  kural 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

 

நெடும்கடலும்    =    மிகுதியான கீர்த்தி அல்லது புகழ் உள்ள பெரிய மனிதர்களுடைய

தன்நீர்மை   =  தன்மை அல்லது குணம் அல்லது மேன்மை

குன்றும்       =  குறைந்து போகும்

தடிந்தெழிலி  = அழகிய வானம் அல்லது பரலோகம்
தான் நல்காது ஆகி விடின் = தன்னிடத்தில் இருந்து பரிசுத்த ஆவியை கொடுக்காவிட்டால்

 

பரிசுத்த ஆவி பரிசுத்தவான்கள், நீதிமான்கள், தங்கள் மேன்மையை இழந்து போகாதபடி பெய்யும் இடி மின்னலோடு கூடிய பெரும் மழை என அழைக்கப்படுகிறது

 

விளக்கம்

இந்த குறள் வான் சிறப்பை பற்றி கூறும் பகுதியில் வருகிறது எனவே நெடுங்கடல் என்ற வார்த்தை சமுத்திரத்தின் பெருமையைப் பற்றிப் பேச வாய்ப்பில்லை, எனவே நீதிமான்கள் அல்லது பரிசுத்தவான்கள் அவர்களுடைய மேன்மையைப் பற்றிப் பேசுகிறது என எடுக்க வேண்டும்.

அழகிய வானம் என்ற பரலோகம் தன்னிடத்தில் இருந்து பரிசுத்த ஆவியைக் கொடுக்கா விட்டால்  மிகுதியான கீர்த்தி அல்லது புகழ் உள்ள பெரிய மனிதர்களாகிய நீதிமான்கள் அல்லது பரிசுத்தவான்கள் அவர்களுடைய மேன்மையை அல்லது பரிசுத்த வாழ்க்கையை இழந்து போவார்கள், அவர்கள் ஆத்துமா சீர் குழைந்து போகும் அல்லது அவர்கள் வாழ்வில் பரிசுத்தம் குறைந்து போகும்

 

பரிசுத்த வேதாகமம்

ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.   கொலோ 3:12-14

குறள் 18:  kural 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

 

சிறப்பொடு பூசனை செல்லாது  = சிறந்த முறையில் ஆராதிக்க முடியாது

வானம் வறக்கு மேல்    = பரலோகத்தில் இருந்து தெய்வத்தின் அருளாகிய பரிசுத்த ஆவி ஒரு மனிதனின் மேல் ஊற்றப்படாவிட்டால்

வான் ஓர்க்கும் = வானத்தில் இருக்கும் தெய்வம் விரும்பி கேட்கும்

ஈண்டு     =   இம்மையில்

 

பரிசுத்த ஆவி கடவுளுக்கு உகந்த பூசனை (பூஜை) சிறப்பாகச் செய்ய உதவும் வானிலிருந்து வரும் அருள் மாரியாக அழைக்கப்படுகிறது

 

விளக்கம்

பரலோகத்தில் இருந்து தெய்வத்தின் அருளாகிய பரிசுத்த ஆவி ஒரு மனிதனின் மேல் ஊற்றப்படாவிட்டால் இம்மையில் வானத்தில் இருக்கும் தெய்வம் விரும்பி கேட்கும் துதியை,  சிறந்த முறையில் துதிக்க  முடியாது அல்லது ஸ்தோத்திர பலி சிறந்த முறையில் செய்ய முடியாது அல்லது ஆராதனையைச் சிறந்த முறையில் ஆராதிக்க முடியாது

 

பரிசுத்த வேதாகமம்

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.   அப் 4:31

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை  (பூசனை).  ரோமர் 12:1

ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.  எபிரெயர் 13:15

குறள் 19:  kural 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

 

தானம்                      =  ஏழை எளிய மக்களுக்குச் செய்யும் உதவி

தவம் இரண்டும்  = தெய்வத்தின் தவமாகிய அறத்தை பின்பற்றுதல் ஆகிய இரண்டும்

தங்கா வியன் உலகம்    = இந்த பரந்த உலகத்தில் தங்காது அல்லது நடைபெறாது
வானம் வழங்காது எனின் = வானமாகிய பரலோகத்தில் இருந்து பரிசுத்த ஆவியாகிய தெய்வத்தின் அருள் வழங்கப்படா விட்டால்

 

பரிசுத்த ஆவி இவ்வுலகத்தில் தானம், தவம் ஆகிய இரண்டு நற்செயல்களும் எப்போதும் செயல் பட உதவும் மழையாக அழைக்கப்படுகிறது

 

விளக்கம்

தெய்வம் இருக்கும் வானமாகிய பரலோகத்தில் இருந்து பரிசுத்த ஆவியாகிய தெய்வத்தின் அருள் வழங்கப்படா விட்டால் ஏழை எளிய மக்களுக்குச் செய்யும் உதவி மற்றும் தெய்வம் சிலுவையில் இரத்தம் சிந்திய தவமாகிய அறத்தை பின்பற்றுதல் ஆகிய இரண்டும்  இந்த பரந்த உலகத்தில் தங்காது அல்லது நடைபெறாது  

 

பரிசுத்த வேதாகமம்

பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.  அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.   மத்தேயு 25:42-45 

அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,  உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ரோமர் 5:3-5

guru

bottom of page