top of page

திருவள்ளுவர் கூறும் எண்குணத்தான்யார் ?

(உள்ளே --- குறள் 1 முதல் குறள் 10 வரை விளக்கம்)

1. முகவுரை

திருக்குறள் ஒரு தெய்வீகப்படைப்பு, அது கடவுளைப்பற்றித்தான் பேசுகிறது, அதின் அர்த்தங்களை புரிந்து கொள்வது என்பது சற்று கடினமானது, ஏன் என்றால் அதின் அர்த்தங்களை தனக்குள்ளாகதானே மறைத்துக்கொண்ட ஒரு படைப்பு. எனவே தான் பலதமிழ் அறிஞர்கள் உரைகள் பல எழுதியிருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமாக இல்லை. வேறுபடுகிறது. கடவுள் தன்னை தான் மறைத்துக்கொண்டவர், அவரை தேடித்தான் கண்டடைய முடியும்

திருவுந்தியார் தனது முதல் பாடலில் மெய்ப்பொருளாகிய கடவுளை யாரும் அகளமாய் அறிவது அரிது அதாவது யாரும் கடவுளை அவ்வளவு சீக்கிரமாக அறிந்து கொள்ளமுடியாது எனகுறிப்பிடுகிறார்.

திருவுந்தியார் 1

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற

திருக்குறள் பெரும் பாலும் கடவுளைப்பற்றித்தான் சொல்கிறது திருக்குறளில் மறைந்திருக்கும் மெய்ப்பொருளாகிய கடவுளைத்தேடித்தான் வணங்கவேண்டும்

பரிசுத்த வேதாகமம் கடவுளைப்பற்றி சொல்லும் போது ஏசாயா 45ஆவது அதிகாரம்:15ம் வசனத்தில்  இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக் கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர் எனக்குறிப்பிடுகிறது.

 

2)திருக்குறள் ( thirukkural )

திருக்குறளிலிருந்து கடவுளைக்காண்பித்தல் வேண்டும் என்றால் கடவுள்வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் ஆகிய பகுதிகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

2.1. கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து என்பது எண்குணத்தானாகிய (எட்டுகுணத்தானாகிய)  ஒரு கடவுளைப்பற்றி வாழ்த்தும் பகுதி பொதுவாக பார்க்கும் போது ஒவ்வொரு குறளும் தனித்தனிஅர்த்தம் உள்ளதாக இருக்கும்

 

2.2)வான்சிறப்பு

வான்சிறப்பு என்பது வானத்தில் இருந்து வரும் அருள் அல்லது கடவுளின் ஆவி அதாவது தூய ஆவி (HOLY SPRIT )பற்றிய சிறப்பு கூறும் பகுதி ஆகும். பொதுவாகப்பார்க்கும் போது நீர் மற்றும் மழையைப்பற்றி குறிப்பிடுவதாகத்தெரியும் ஆராய்ந்து பார்க்கும் போது வான் சிறப்பு என்பது வானிலிருந்து வரும் அமிழ்தம் அல்லது தூய ஆவியைப்பற்றி குறிப்பிடுவதை அறிந்துகொள்ளமுடியும். திருவள்ளுவார் தம்முடைய 11 வது குறளில் வானிலிருந்து வரும்‘ அருள்’ அல்லது ‘மாரியை’அமிழ்தம் எனகுறிப்பிடுகிறார், அமிழ்தம் என்பதற்கு தேவலோகத்தில் உள்ளபானம் அதாவது`பரிசுத்தஆவி` என்று பொருள்

குறள் 11 --  kural 11

வானின்றுலகம் வழங்கி வருதலால்,

 தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

2.3)நீத்தார்பெருமை

நீத்தார்பெருமை என்பது வானம் நீத்து அதாவது வானம் விட்டு இறங்கி வந்தவருடைய பெருமை கூறும்பகுதி (AVATAR)

பொதுவாகப்பார்க்கும் போது` ஒழுக்கம்` மற்றும் `பற்றுகள்` ஆகியவற்றை விட்டு வாழ்பவரைப்பற்றி பேசுவதாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால் வானம் விட்டு இறங்கி வந்தவருடைய பெருமை கூறும் பகுதியாக அறிந்து கொள்ள முடியும். திருவுந்தியார் தமது 1ஆவது பாடலில் கடவுள் சகளமாய் வந்தார் என குறிப்பிடுகிறார் அதாவது எல்லோருக்கும் எல்லாமுமாய் இறங்கி வந்ததைக் குறிப்பிடுகிறார்

திருவுந்தியார் 1

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற

2.4 அறன்வலியுறுத்தல்

அறன்வலியுறுத்தல் என்பது உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் பகுதி அதாவது நமக்காக வானத்தை விட்டு இறங்கி வந்து மனிதனாகப்பிறந்து தன்னையத்தானாகப்பலியாக ஒப்புக்கொடுத்த கடவுளைப்பற்றி கூறும் பகுதி எனப்படும். அறன்என்றால் வேள்வி முதல்வன் அல்லது உயிர்ப்பலிக்குரியவன் ( one who sacrifice ) என அர்த்தம், அல்லது புனிதமான வேலையை செய்து முடித்தல் எனப்பொருள்படும் (Performing a sacred duty).  திருவுந்தியார்தனது 3ஆவது பாடலில் கண்டத்தைக்கொண்டு கர்மம் முடித்தவர் என குறிப்பிடுகிறார் அதாவது தன் சாவைக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட புனிதமான வேலையை செய்து முடித்தவர், புனிதமான வேலை என்பது ஆத்துமமீட்பாகும்

திருவுந்தியார் --- 3

கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்
(1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற

பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.
(1). பிண்டத்து

திருவுந்தியார்தனது 1ஆவது பாடலில் தானாகத்தந்தவர் என குறிப்பிடுகிறார் அதாவது தனது உயிரை தானாக முன் வந்து நமது ஆத்துமமீட்பிற்காக சிலுவையில் அல்லது காவுதடியில் பலியாகக்கொடுத்தவர் என குறிப்பிடுகிறார்

திருவுந்தியார் 1

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற.

 

உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் போது இயேசுவை முதற்பலன் எனகுறிப்பிடுகிறது பரிசுத்த வேதாகமம்

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.(1 கொரிந்தியர் 15-20, 23)

 3). எண்குணத்தான் -- Eight characters 

எண்குணத்தான் என்றால் எட்டு குணமுடையவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மணக்குடவர் தன் உரையில் எட்டுக்குணத்தினையுடையவன் என குறிப்பிட்டு உள்ளார்.  திருவுந்தியார்தனது 24ஆவது பாடலில் எட்டுக்கொண்டார் என்று கடவுளை பாடுகிறார்

திருவுந்தியார் - 24

எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றார்
விட்டா ருலகமென் றுந்தீபற

வீடேவீ டாகுமென் றுந்தீபற.

எண்ணூறு என்பது எட்டு நூறு எனப்பொருள்படும்

திருவள்ளுவர்தனது 9 வது குறளில் எண்குணத்தானைப்பற்றி குறிப்பிடுவது யோசிக்க வேண்டியது,  முதல் எட்டு ( ஒன்றுமுதல்எட்டு) குறள்களில் அந்த எட்டு குணங்கள் மறைந்து இருப்பதாகத்தான் அர்த்தம்.

திருக்குறள் 9 - Thirukkural 9

கோளில் பொறியின் குணமிலவேஎண்குணத்தான்

 தாளை வணங்காத் தலை.

கோள் = உலகம்          பொறியில் = புலன், உடம்பு

எண்குணத்தான்  = எட்டு குணத்தான்

முதல் குறள் முதல் எட்டாவது குறள் வரை மறைந்து இருக்கும் எட்டு குணத்தை உடைய எண்குணத்தானாகிய கடவுளை அறிந்து அவர் பாதத்தை வணங்காதவர்கள் கண்ணிருந்தும் காணாதவர்களாகவும்,  செவி இருந்தும் கேளாதவர்களாகவும்,  புலன் உணர்வற்று இருப்பார்கள்,    இந்த உலகத்திலும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்

4.) திருக்குறள்கூறும் (எட்டுகுணங்கள்)

குறள் 1 - kural 1 = எழுத்தெல்லாம்ஆதிபகவன்

வார்த்தையாகிய இறைவன் தன்னைத்தானே பகுத்து மூவரானவர்

(பிதா, பரிசுத்தஆவி, குமாரன்)

குறள் 2 - kural 2 = வாலறிவன்

பரிசுத்தமானவர்

குறள் 3 - kural 3 = மலர்மிசை ஏகினான்

மலர்ந்து அல்லது உயிர்த்து வானம் (HEAVEN)  சென்றவர்

குறள் 4 - kural 4 = வேண்டுதல் வேண்டாமை இலான்

விருப்பு, வெறுப்பு இல்லாமல் நியாயத் தீர்ப்பளிப்பவர்

குறள் 5 - kural 5 = இரு வினையும் சேராஇறைவன்

பிறப்பிலும், வளர்ப்பிலும் பாவம் இல்லாதவர்.

குறள் 6 -kural 6 = பொறி வாயில் ஐந்து அவித்தான்

பொறியாகிய கொலைக்கருவி (காவுதடி, காவடி,கோடு ஆயுதம்,சிலுவை) வழியாக ஐம்புலன்களால் ஆன தம் உடம்பை பலியாக்கினவர்

குறள் 7 - kural 7 = தனக்கு உவமை இல்லாதான்

தனக்கு நிகர்  வேறு யாரும் இல்லாதகடவுள்

குறள் 8 - kural 8 = அறவாழி அந்தணன்

நீதி நேர்மை ஆகிய அறத்தை கடலைப் போல் கொண்டு வாழ்ந்த அந்தணனாகிய (அழகிய குணமாகிய அருள்,கிருபை,இரக்கம் உடைய) கடவுள்

4.1 திருக்குறள் 1 - thirukkural 1     "The voice and word became absolute God"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்பதற்கு வார்த்தை தான் கடவுள் என அர்த்தம்.

முதற்றே உலகு என்பதற்கு உலக தோற்றத்திற்க்கு முன்பாக என அர்த்தம்.

அதாவது உலக தோற்றத்திற்கு முன்பாகவே எழுத்து (வார்த்தை) வடிவத்தில் கடவுள் இருந்தார் என அர்த்தம் கொள்ள வேண்டும்.

மாட்டு

மாட்டு என்பதற்கு வார்த்தை ( word )என அர்த்தம். திருக்குறள் 5 வது குறளில் திருவள்ளுவர் கடவுளை மாட்டு வார்த்தை (word )என குறிப்பிடுகிறார்.  பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.( குறள் 5 )

வார்த்தை ஆகிய கடவுள் உயிர்த்தெழுந்து பரலோகம் சேர்ந்து வானுலக மகிமையை மனிதனுக்கு கொடுத்தார் என்பது தான் அதின் அர்த்தம்.

4.1.1   மாட்டு பெண்

மருமகளை மாட்டுப்பெண் என கூப்பிடும் வழக்கம் நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தில் உண்டு. மாட்டுப்பெண் என்றால் வார்த்தையாகிய கடவுள் கொடுத்த பெண் என அர்த்தம்.

4.1.2  நிறைமொழிமாந்தர்

திருவள்ளுவர்தனது 28 வது குறளிள் நிறை மொழி மாந்தர் என கடவுளை குறிப்பிடுகிறார்.

குறள் 28  -  kural 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

 மறைமொழி காட்டிவிடும்.

மனிதனாக வந்து பிறந்த பிறப்பிலும் வளர்ப்பிலும் குற்றம் அற்ற வார்த்தையாகிய கடவுளின் பெருமையை மறைமொழி அதாவது வேதத்தின் வார்த்தைகள் காட்டிவிடும் என எழுதுகிறார்.

4.1.3  மாரிமாட்டு

திருவள்ளுவர்தனது 211 வது குறளில் மாரி மாட்டு என கடவுளை குறிப்பிடுகிறார்.

குறள் 211 - kural 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்

டென்னாற்றுங்கொல்லோ, உலகு.

வார்த்தையாகியகடவுளின்ஆவி ( மாரி ) நம்மிடம் இருந்து எந்தவித கைமாறும் எதிர்பாராமல் நமக்கு செய்த ஒப்பற்ற செயலுக்கு அதாவது நம்மை மீட்டு நமக்கு பரலோக வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்த கடவுளுக்கு நாம் பதில் செய்ய நினைத்தால் இந்த உலகம் கொள்ளாது என கூறுகிறார்.

4.1.4 

நாம் எந்த காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன் உ என போட்டு ஆரம்பம் செய்கிறோம் இது வார்த்தையாகிய கடவுளை குறிக்கிறது ( Son of GOD or கடவுளின் குமாரன்

4.1.5   The BruhatAranyaka Upanishad says, “VagyavaiBrahmma”, the word is Brahmma (creator). வாக்யா வை பிரம்மாhttps://www.speakingtree.in/blog/back-to-vedas

4.1.6    Brahmmavindu Upanishad says, “ShabdovaiBrahmma”, the voice is Brahmma

சப்தோ வை பிரம்மாhttps://www.speakingtree.in/blog/back-to-vedas

4.1.7 “ShabdaksharamParamBrahmma”, the voice and word became absolute God.

சப்தாக்ஸ்கரம் பரம் பிரம்மா

https://www.speakingtree.in/blog/back-to-vedas

4.1.8 பரிசுத்தவேதாகமம்

  1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

  2. அந்த வார்த்தை மாம்சமாகி (இயேசுவாகி), கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்

  3. ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்( இயேசுவை) குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

4.1.9  ஆதிபகவன்

பகு + அவன் = பகவன்  ( பகு = பிரி )

ஒருவராய் இருக்கும் இறைவன் தம்மை தாமே பிரித்து மூவராக ஆனார்.

4.1.10    திருவுந்தியார் தனது 5 வது பாடலில் ஏகனுமாகி அநேகனும் ஆனவன் (ஒருவர்மூவராகசெயல்படகூடியவர் ---- GOD ISTRINITY )என்று கடவுளை பாடுகிறரர்

திருவுந்தியார் 5

ஏகனு மாகி யநேகனு மானவன்

நாதனு மானானென் றுந்தீபற

நம்மையே யாண்டனென் றுந்தீபற.

4.1.11      அகத்தியர்  (agathiyar )

அகத்தியர் தனது அகத்தியர் ஞானம் 30ல்

முச்சுடரு மொன்றாகும் மும் மூர்த்தியல்ல

மூவருமே ஆளுருவமொன்றேயாகும் என்று பாடுகிறார்

அகத்தியர் பாடல்

முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தி யல்ல
மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும்
அச்சுதா யிவர்களுமே ஆண்பெண் அல்ல
அரனுமல்ல, லிங்கமல்ல, அநாதியான
சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி
எச்சரிக்கை கொண்டு நட அப்பா, அப்பா!
எண்ணில்லா முக்திவழி யெய்து வாயே!

அகஸ்தியர் ஞானம் - 30

 

4.1.12         திருக்குறள் கூறும்  Trinity God

கடவுள் (வாழ்த்து),    = எண்குணத்தானாகிய கடவுள்

வான் (சிறப்பு)        = ஆவியாகிய கடவுள்

நீத்தார் (பெருமை)     = வானம் ( HEAVEN )விட்டு இறங்கி வந்த கடவுள்

என இயல் புடைய மூவரைப்பற்றி குறிப்பிடுகிறது

 

4.1.13       பரிசுத்தவேதாகமம்

Father the God  =பிதாவாகிய கடவுள்

Spirit the God   =   பரிசுத்த ஆவியாகிய கடவுள்

Son the God    =   குமாரன் (இயேசு) ஆகிய கடவுள்

என மூன்றில் ஒன்றான கடவுளைப்பற்றி குறிப்பிடுகிறது

5. திருக்குறள் 2 Thirukkural 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள்  தொழாஅர் எனின்.

வாலறிவன் = வால் + அறி (KNOW) + அவன்

வால்       = தூய, சுத்தமான, பரிசுத்தமான

அறிஅவன்    = அறிந்துள்ள நிலையில் உள்ளவன்

பரிசுத்த நிலையை அறிந்துள்ள அல்லது பரிசுத்த நிலையில் உள்ள கடவுளின் நற்பாதங்களைத்தொழுது கொள்ளா விட்டால் என்ன தான் ஒருவர் கற்று இருந்தாலும் அதனால் என்ன பயன் வரும்?  ஒன்றுமில்லை.

 5.1   The Yajur Veda also says,“Nathasyaprathimaasityasyanammahastha (32:3)”, God has no image and His name is Holy.

https://www.speakingtree.in/blog/back-to-vedas

5.2   பரிசுத்தவேதாகமம்

பரிசுத்த வேதாகமம் கடவுளை பரிசுத்தர் என குறிப்பிடுகிறது

Lev:11:45:: நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

Rev:4:8 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

Leaf Pattern Design

6. திருக்குறள் 3  -  Thirukkural 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார்.

மலர் = மலர்ச்சியுற்று / உயிர்த்து  (Full-blown flower, blossom)

மிசை = வானம்

micai   n. cf. மீது. 1. Eminence,elevation; உயர்ச்சி. (சூடா.) 2. Elevated place;மேலிடம்.3.mound; மேடு. 4. Sky; வானம்.

ஏகினான்= சென்று இருப்பவனாகிய

மாண் அடி =மாட்சிமிக்க பாதங்கள்

நிலமசை = நிலம் + இசை

மலர்ந்து அல்லது உயிர்த்து வானம் (HEAVEN)  சென்று இருப்பவனாகிய கடவுளின் மாண்பு மிக்க பாதங்களை சேர்ந்தவர்கள் இந்த பூமியில் இன்பமான வாழ்வையும், பரலோகவீட்டின் நித்திய பேரின்ப வாழ்வையும் பெறுவர்.

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுள் என்று உரை எழுதப்பட்டுள்ளது மிசை என்பதற்கு வானம் அல்லது மோட்சம் என்று அர்த்தம்

ஏகினான் என்பதற்கு ஏறிச்சென்றவர் என்று அர்த்தம்

6.1  அகத்தியர் ஞானம்  30 ல் 23 வது பாடல்

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின் 
குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.

 அகண்டதலஞ் சென்றவரை அண்டுவாயே என்று முடிகிறது அகண்டதலம் என்றால் வானம் அல்லது மோட்சம் என அர்த்தம்

 

6.2   குறள் 25  -  kural 25

ஐந்தவித்தான் ஆற்றல்அகல்விசும்புளார்கோமான்

இந்திரனே சாலுங்கரி.

திருவள்ளுவர் தனது 25 வது குறளில் ஐந்து அவித்தான் ஆற்றல் என குறிப்பிடுகிறார்,

 பொறியாகிய சிலுவையில் தனது ஐம் புலன்களை அழித்து உயிர்த்து எழுந்தவனின் ஆற்றல் அதாவது வல்லமையை அகல் வானத்தில் உள்ள தேவ தூதர்களின் தலைவனே சாட்சி என குறிப்பிடுகிறார்

 

6.3 பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் இயேசு பரலோகத்திற்குஏறிச்சென்றவர் என குறிப்பிடுகிறது

1Pet :3:22: அவர் ( JESUS) பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; 

 

6.4    கூடமுடைய அய்யனார்

என கடவுளை குறிப்பிடுகிறார்கள் கூடம் என்பதற்க்கு  முற்றம், பெரிய இடம், அகண்டதலம், வானம் , என்று அர்த்தம்

 

6.5     திருவுந்தியார் தனது 12 வது பாடலில் மூலையிருந்தாரை அதாவது வாழ்க்கையில் சோர்ந்து போய் துன்ப்ப்பட்டு செய்வது அறியாது மூலையில் அமர்ந்து இருப்பவரை முற்றம் அதாவது மோட்சம் சேர்த்தவர் என குறிப்பிடுகிறார்

திருவுந்தியார்  12

மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென் றுந்தீபற

தவத்திற் றலைவரென் றுந்தீபற.

 

6.6 திருவுந்தியார் தனது 35வது பாடலில் முதற்பலனாக உயிர்த்து எழுந்தவரை பெண்கள் நம்பிக்கை யோடு பற்றி பிடித்துக்கொண்டது போலவும், ஆண்மக்கள் பேய் போல கண்டதாகவும் குறிப்பிடுகிறார்

திருவுந்தியார்  35

பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்
கண்டாரே கண்டாரென் றுந்தீபற

காணாதார் காணாரென் றுந்தீபற.

பரிசுத்த வேதாகமம்

பெண்கள் அவரை கண்டு கொண்டனர்

  1. அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை (கல்லறையிலிருந்து) எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

  2. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

  3. இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

  4. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

  5. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்

  6. மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

ஆண்கள் அவரை பேய் போல கண்டனர்

  1. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்

  2. அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.

  3. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

  4. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

  5. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்

7. திருக்குறள் 4 - Thirukkural 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

வேண்டுதல் வேண்டாமை = விருப்பு, வெருப்பு

யாண்டும் = எக்காலத்திலும்

இடும்பை இல. = துன்பம் இல்லை

விருப்பு, வெறுப்பு இல்லாமல் நியாயத் தீர்ப்பளிப்பவராகிய கடவுளின்  திருவடி சேர்ந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

நித்திய வாழ்வை அளிக்கும் குமாரனாகிய கடவுள் நியாயாதி பதியாக வந்து ஒவ்வொருவரையும் வித்தியாசம் இல்லாமல் நியாயம் தீர்ப்பார். அவர் கோபத்திற்கு முன் ஒருவரும் நிற்க முடியாது. எனவே அவர் திருவடி சேர்ந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

7.1  திருவுந்தியார் தனது 3 வது பாடலில் கண்டத்தைக்கொண்டு கர்மம் முடித்தவர் – பிண்டத்தில் வர மாட்டார் என குறிப்பிடுகிறார்.

அதாவது தன்சாவைக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட புனிதமான வேலையை செய்து முடித்தவர், (புனிதமான வேலை என்பது ஆத்தும மீட்பாகும்) இனி மனிதனாக வர மாட்டார் அதாவது நியாயாதிபதியாக வருவார்

திருவுந்தியார் --- 3

கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்

1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற

பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.

1). பிண்டத்து

7.2     பரிசுத்தவேதாகமம்

இயேசுகிறிஸ்து கடைசி கால அவதாரமாக அதாவது நியாயாதிபதியாக வருவார் என பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுகிறது

  1. , பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

  2. அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

  3. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம்தேவனுடைய வார்த்தை என்பதே.

  4. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.

  5. Joh:9:39:  இயேசு: நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.

6. 2Co:5:10:   நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

8.  திருக்குறள் 5 - Thirukkural 5

இருள்சேர் இருவினையும் சேராஇறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இருள் சேர் = இருளாகிய நரகம்      

இரு வினை=ஜென்ம பாவம், கரும பாவம் ஆகிய இருவினை

பொருள்  =  மோட்சம்

புகழ்புரிந்தார் = வானுலக மகிமை கொடுத்தார்.    

மாட்டு = சொல் or word

ஜென்ம பாவம் = மூதாதையர் வழியுரிமையான பாவம்

கர்ம பாவம்  =  செயல் பாவம்

இருளாகிய நரகத்தில் கொண்டுசேர்க்கும் ஜென்ம பாவம் கரும பாவம் ஆகிய இரு வினைகளையும் சேராத இறைவன், வார்த்தையாகி (word of God) பூமிக்கு வந்து ஒளி உள்ள இடமாகிய மோட்சம் சென்று சேர்ந்து  நமக்கு வானுலக மகிமை கொடுத்தார். (பிறப்பிலும், வளர்ப்பிலும் பாவம் இல்லாதவர்)

இரு வினை என்பதற்கு நல்வினை தீவினை என விளக்கம் கொடுக்கப்படுகிறது நல்வினை இருளாகிய நரகத்திற்கு கொண்டு செல்லாது எனவே நமது வாழ்வில் நடக்கும் கரும பாவம் மற்றும் ஜென்ம பாவம் என்பதை இரு வினைகளாக எடுப்பது சிறந்தது
 

8.1  பரிசுத்த வேதாகமம்

Joh:8:12: (இயேசு)நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்

8.2 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

வேதவாக்கியங்களின்படி (இயேசு) நமது பாவங்களுக்காக மரித்துஅடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

9.  திருக்குறள் 6 - Thirukkural 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ்வார்.

பொறி வாயில்  = பொறியாகிய கொலைக்கருவி வழியாக என்று பொருள் கொள்ள வேண்டும்,  உதாரணமாக எலிப்பொறி என எலியை பிடிக்கும்  கருவியை குறிப்பிடுகிறோம்

ஐம் பொறிகளின் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ) வழியாக பிறக்கும் தீய ஆசைகளை அழித்தவன் என்று உரைகள் எழுதப்பட்டுள்ளது

கொலைக்கருவியின் வாயில் வழியாக ஐம் புலன்களை  அழித்தவன் என்பது தான் சரியான அர்த்தம்

கொலைக்கருவி = காவுதடி, (காவடி,) சிலுவை

ஐந்து அவித்தான் =ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கியவன்

பொறியாகிய கொலைக்கருவி (காவுதடி, காவடி, சிலுவை) வழியாகஇறைவன் தம் ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கி பொய்யைத்தீர்த்து (பொய்யின் உருவமாகிய சாத்தானைகாவுதடி, அல்லது சிலுவையிலே அழித்து) ஏற்படுத்திய ஒழுக்க வழியில் நிற்பவர்கள் மோட்சவாழ்வை பெற்று நீடு வாழ்வார்கள்

9.1    குறள் 25 - kural 25

ஐந்தவித்தான் ஆற்றல்அகல்விசும்புளார்கோமான்

இந்திரனே சாலுங்கரி.

திருவள்ளுவர் தனது 25 வது குறளில் ஜந்து அவித்தான் ஆற்றல் என குறிப்பிடுகிறார்,

 பொறியாகிய சிலுவையில் தனது ஐம் புலன்களை அழித்து உயிர்த்து எழுந்தவனின் ஆற்றல் அதாவது வல்லமையை அகல் வானத்தில் உள்ள தேவ தூதர்களின் தலைவனே சாட்சி என குறிப்பிடுகிறார்

9.2 தானாகத்தந்தவர்----  திருவுந்தியார்—1

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற

(தானாக முன் வந்து தமது உயிரை சிலுவையில் பலியாகக்கொடுத்தவர் இயேசு இதை தான் திருவுந்தியார் தமது  1வது பாடலில் தன்னையத்தானாகப்பலியாக ஒப்புக்கொடுத்தவர் என குறிப்பிடுகிறார்

 

 9.3 கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்----  திருவுந்தியார்—3

கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்
(1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற

பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.

தன் சாவைக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட புனிதமான வேலையை செய்து முடித்தவர், (புனிதமான வேலை என்பது ஆத்தும மீட்பாகும்) இனி மனிதனாக வர மாட்டார் அதாவது நியாயாதிபதியாக வருவார்

 

9.4      விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

கோடாயுதம் என்றால் மரத்தால் ஆன ஆயுதம் என அர்த்தம்

மரத்தால் ஆன ஆயுதத்தால் கொடிய வினை களைந்தே என பாடுகிறார்,  அது நமது வினைகளை தீர்க்க கடவுள் சிலுவையில் அடிக்கப்பட்டதை காண்பிக்கிறது

(குவலயம் = உலகம்      ---- கோடா யுதம் = மரத்தால் ஆன காவுதடி அல்லது சிலுவை )

9.5   பரிசுத்த வேதாகமம்

 எபிரேயர் 2.14

இயேசுவும் நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது (சிலுவை) மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,   ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

Citrus

10. திருக்குறள் 7 Thirukkural 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்,

மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு உவமை இல்லாதான் = தன்னிகரற்றவன்

தனக்கு நிகர்  வேறு யாரும் இல்லாதகடவுளுடைய (நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.என்று  கூறிய கடவுளுடைய ) திருப்பாதம் சேர்ந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக் கவலை மாற்றல் அரிது.

10.1     பரிசுத்த வேதாகமம்

யாத்திராகம்ம் :3:14;  I AM THAT I AM (இருக்கிறவராக இருக்கிறேன் )

யாத்திராகம்ம் 20.2 

நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

யாத்திராகம்ம்20.3

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

Joh:14:6:

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;

I am the way, I am the truth, and I am the life:

Digital art exhibit

11.  திருக்குறள் 8 - Thirukkural 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்,

 பிறவாழி நீந்தல் அரிது.

அறம் = நீதி, நேர்மை, உயிரை பலியாக கொடுத்தவன் ( தியாகராஜன் )

ஆழி = கடல்

அந்தணன் = அழகிய குணமாகிய அருள்,கிருபை,இரக்கம் உடையவன்

தாள்  =  பாதம்,

பிற ஆழி  = அறம் அல்லாத கடல் (பாவக்கடல்)

நீதி நேர்மை ஆகிய அறத்தை, கடலைப் போல் கொண்டு வாழ்ந்து தனது உயிரை சிலுவையில் பலியாகக் கொடுத்த அந்தணனாகிய கடவுளின்பாதம் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் பிறவாழியாகியஅறம் அல்லாத கடலாகிய பாவ வாழ்க்கையை நீந்திக் கடக்க முடியாது.            

பரிசுத்த வேதாகமம்   john 16.8  அவர் (இயேசு) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

Psalms:48:10: உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.(thy(his)right hand is full of righteousness.)

                                               

திருக்குறள் 9 - Thirukkural 9

கோளில் பொறியின் குணமிலவேஎண்குணத்தான்

 தாளை வணங்காத் தலை.

கோள் = உலகம்          பொறியில் = புலன், உடம்பு

எண்குணத்தான்  = எட்டு குணத்தான்

முதல் குறள் முதல் எட்டாவது குறள் வரை மறைந்து இருக்கும் எட்டு குணத்தை உடைய எண்குணத்தானாகிய கடவுளை அறிந்து அவர் பாதத்தை வணங்காதவர்கள் கண்ணிருந்தும் காணாதவர்களாகவும்,  செவி இருந்தும் கேளாதவர்களாகவும்,  புலன் உணர்வற்று இருப்பார்கள்,    இந்த உலகத்திலும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்

Ping Pong

 

 

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

 

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒரு பெரிய கடல் போன்றது, நமக்கு இரு பாவங்கள் உண்டு,

1) நாம் வாழும் வாழ்க்கையின் போது செய்யும் பாவங்கள் ( கர்ம பாவம் ). இந்த பாவம் செய்கையால் வருவது

 2) நம்முடைய மூதாதையர்கள் வழி பாவம் ( ஜென்மபாவம் ) இந்த பாவம் இரத்தத்தில் உள்ளது.

எனவே இந்த பெரிய கடல் போன்ற வாழ்க்கையைத் தெய்வத்தின் அடி சேர்ந்து பக்தியோடும், பரிசுத்தத்தோடும் வாழ்ந்தால் கடந்து பரலோகத்திற்குச் செல்லமுடியும். அப்படி தெய்வத்தின் அடிசேராதார் இந்த வாழ்க்கையாகிய பெருங்கடலைக் கடக்க முடியாமல் நரக வாழ்க்கை சென்று சேர்வார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

References

1. டாக்டர்மு. தெய்வநாயகம் M.A., Ph.Dஅவர்கள்எழுதியமெய்கண்டார்அருளியசிவஞானபோதம்

2.  திருக்குறள் – அடிப்படைகிறிஸ்தவமே by கிறிஸ்டோபர் M

3.  சைவசித்தாந்தத்தின்முதல்சாத்திரமானதிருவுந்தியார்இன்அடிப்படைகிறித்தவமா? byசீர்காழிசிவ.சந்திரசேகரன்

4.வேதஞானவித்தகர், மறைதிரு, அமரர் N.J.S சிவசுந்தரம்எழுதியமுக்திவழி

5.NarsanrorInstitue of Leadership Training (NILT)

niltindia.asia ›

6.  Back to Vedas by NimathiNilayam

https://www.speakingtree.in/blog/back-to-vedas

7. சைவசித்தாந்தநூல்கள் – VI        

https://shaivam.org/saiva-siddhanta/thiruvundiya-uyyavandadeva-nayanar

8. what is in the veda ? byhonShadhuChellappa

http://www.agniministries.org/ading 2
guru

bottom of page