அய்யனார் யார் ?
உள்ளே
1) பாத முத்து அய்யனார் 2) சொரி முத்து அய்யனார் 3) அடைக்கலம் காத்த அய்யனார் 4) ஆதி புத்திர அய்யனார் 5) வெண்குடை அய்யனார் 6) பால் வன்ன அய்யனார் 7) கரையடி காத்த அய்யனார் - கரையடி அய்யனார் 8) செந்தட்டி அய்யனார் 9) கூடமுடைய அய்யனார் 10) வழி விட்ட அய்யனார் 11) அரிகேசவ வழிவிட்ட அய்யனார் 12) ஆதீனம் காத்த அய்யனார் 13) கழுவ லிங்க அய்யனார் 14) அருஞ்சுனை காத்த அய்யனார் அல்லது நீர்காத்த அய்யனார் 15) கருக்கு வேல் அய்யனார் 16) திருவேட்டை அய்யனார் 17) திருவீதி கொண்ட அய்யனார் 18) கலியுக மெய்ய அய்யனார் 19) பொய்யா மொழி அய்யனார் 20) செருவலிங்க அய்யனார்
21) குருந்துனடய அய்யனார் -- இளம்பாளை அய்யனார் - ஓலைகொண்ட அய்யனார் 22) நீதியுடைய அய்யனார் 23) சித்தகூர் அய்யனார் 24) குன்னக்குடி அய்யனார் - திருக்கோட்டி அய்யனார் 25) ஆறுமுக அய்யனார் 26) தண்டீஸ்வர அய்யனார்
அய்யனார் என்றால் அய்யன் + யார் என்பதாகும், அய்யன் என்பது தகப்பன், அப்பா, என்பதாகும். யார் என்பது ஒரு அடைமொழியாகும். யார் என்பது மரியாதை நிமித்தம் சேர்க்கப்பட்ட வார்த்தையாகும். உதாரணமாக வாத்தி என்ற வார்த்தை வாத்தியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் பிள்ளையார் என்ற வார்த்தை பிள்ளை + யார் என்பதாகும். பிள்ளை என்பது பிள்ளை தெய்வத்தைக் குறிக்கிறது. ( Son of God ). அய்யனார் அவர்களுக்கு ஆதி புத்திர அய்யனார் என்ற பெயர் உண்டு. அதாவது ஆதியில் இருந்த பிள்ளை தெய்வம் ஆகும்;.
இயேசு கிறிஸ்துவுக்குப் பின் முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்து விட்டது, அப்படி வந்த கிறிஸ்தவம் இந்தியா முழுவதும் சைவம் மற்றும் வைணவமாகப் பரவியிருந்தது. அந்த கிறிஸ்தவம் தமிழ் வழி பக்தி பார்க்கவும் அல்லது புனித தோமா வழி கிறிஸ்தவமாகும். புனித தோமா இயேசு கிறிஸ்துவின் நேரடி சீடர் ஆவார். இதை A SURVEY OF KERALA HISTORY by PROF A SREEDHARA MENON (Author) என்ற புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நாம் முதலாவது ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நமது நாட்டில் தெய்வத்தின் பல்வேறு குணங்களையே தனித்தனி தெய்வங்களாக வழிபடுகிறோம். உதாரணமாகத் தெய்வம்
அழகானவர் = முருகன்
தெய்வம் வல்லமை நிறைந்தவர் = சக்தி
தெய்வம் குமாரன் ஆகிய son of GOD = குமரக்கடவுள்
தெய்வம் கன்னியின் மூலமாகப் பிறந்தவர் = ஐயப்பன்
தெய்வம் உயிர்த்தெழுந்தவர் = பிள்ளையார்
தெய்வம் ஆவியானவர் = விஷ்ணு
தெய்வம் வெண்மையானவர் = பால் வண்ண அய்யனார்
தெய்வம் பரிசுத்தமானவர் = வெண்குடை அய்யனார் ( தூய குணத்தைக் குடையாக
பிடித்துக் கொண்டு நிற்பவர்
தெய்வம் சிருஷ்டிகர் = பிரம்மா
பூபாலன் = மனித குமாரன்
லோக பாலன் = மனித குமாரன்
சொக்கநாதன் = பரலோகத்தில் இருந்து வரப்போகிற ஆத்தும மணவாளன்
போக நாதர் = ஆத்தும மணவாளன்
அப்படிப் பார்க்கும் போது அய்யனார் என்ற வார்த்தை நம்மைப் படைத்த தெய்வத்தை அப்பா அல்லது தகப்பனே என்று அழைக்கப்படுவதைக் குறிக்கிறது. நமது நாட்டில் இயேசு கிறிஸ்து ஒருவரை மட்டுமே அப்பா என்றும் தகப்பன் என்றும் அழைக்கும் பழக்கம் இருக்கிறது.
அய்யனார் அவர்களுக்கு ( Hari Hara sudhan ) ஹரிஹர சுதன் என்ற பெயர் உண்டு, அதாவது சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த அய்யனார் ஆகும். இதே கதை ஐயப்பன் அவர்களுடைய பிறப்புக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிறப்பு ஒரு தெய்வீக பிறப்பாக காண்பிப்பதற்காக தெய்வமும் தெய்வமும் சேர்ந்து அய்யனார் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கன்னியின் மூலமாகப் பிறந்த பிள்ளை தெய்வத்தைப் பற்றி கூறுவதற்காகச் சொல்லப்பட்டது.
கன்னியின் மூலமாகப் பிறந்தவர்
இயேசு கிறிஸ்து கன்னியின் மூலமாகப் பிறந்தவர் அதாவது ஒரு ஆண் துணையில்லாமல் பிறந்தவர் ஆகும்.
தெய்வம் ஒரு கன்னியின் மூலமாகத்தான் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது தெய்வத்தின் திட்டம், இந்த கதையில் அந்த கன்னியாக இந்த பூமியில் வந்து பிள்ளை தெய்வத்தை உண்டாக்கிக் கொடுத்தவருக்கு மோகினி என்ற பெயர் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மோகினி என்றால் அழகான பெண் என அர்த்தம்
( இந்த பூமியில் பிறந்த ஒரு கன்னிப்பெண் பிள்ளை பெற்றால் அது பாவமாகக் கருதப்படும் எனவே தெய்வ நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண் துணை இல்லாமல் பிள்ளை தெய்வம் உருவானதாகக் கூறப்படுகிறது அதாவது தெய்வமே பெண்ணாக மாறி தெய்வத்தோடு சேர்ந்து அய்யனார் உருவானதாகக் கூறப்படுகிறது )
இதே நிகழ்வு பற்றி வைணவத்தில் கூறும் போது கடவுளே (விஷ்ணு) கன்னியாக (மோகினியாக) உருமாறி பிள்ளை தெய்வத்தை (அய்யனார் ) பெற்றதாகக் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் அய்யனார் ஆகும்.
இதே கதை தான் ஐயப்பன் அவர்களுக்கும் உரியது. ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், ஐயப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன.
https://www.tamilhindu.com/2010/12/ayyanar-shasta-ayyappan-divine-manifestations/
ஒரு கன்னியின் மூலமாக இயேசு பிறப்பார் எனப் பரிசுத்த வேதாகமம் நமக்கு இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே குறிப்பிடுகிறது. ஒரு கன்னியின் மூலமாகப் பிறந்த இயேசு கிறிஸ்துவே அய்யனார் மற்றும் ஐயப்பன் என்று அழைக்கப்படுகிறார். இதைப் பற்றி மேலும் அறியப் பார்வதி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/parvathy-mary-mariyam
பரிசுத்த வேதாகமம் ஏசாயா 7:14 இல் "ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்." என்று குறிப்பிடுகிறது.
எனவே அய்யனார் என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. இதை கீழ் உள்ள பெயர்கள் மூலமாக ஆராய்ந்து பார்ப்போம்.
1) பாத முத்து அய்யனார்
பாத முத்து அய்யனார் என்றால் உயிர்த்தெழுந்து தெய்வத்தின் வலதுபக்கத்தில் அவருடைய சமுகத்தில் அமர்ந்த தகப்பன் ஆவார். அதாவது உயிர்த்தெழுந்து தெய்வத்தின் வலது பாரிசத்தில் அமர்ந்த தகப்பன் ஆவார்.
பாதம் என்றால் சமூகம் ஆகும் – முத்து என்பது சிப்பியில் இருந்து வெளிவரும் முத்து போலக் கல்லறையில் இருந்து உயிர்த்து வெளிவருதலை காண்பிக்கிறது.
முத்து என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டதின் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்ப்போம்.
முத்து என்பது சிப்பிக்குள் இருந்து வெளிவரும் ஒரு விலை உயர்ந்த பொருள் அதாவது ஒரு சிப்பியானது தன்னை மூடிக்கொண்டே தான் இருக்கும், அதில் உள்ள முத்து விளையும் வரை அது சிப்பி தன் வாயைத் திறக்காது.
ஒரு முத்து மூடியிருக்கும் சிப்பிக்குள் இருந்து வெளி வருவது போல் தெய்வமும் தனது கல்லறையில் இருந்து அவருடைய நேரமாகிய மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வெளியே வந்தார். அதனால் தான் அவருக்கு முத்து என்ற ஒரு காரணப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. முத்து என்ற வார்த்தையை வைத்து தெய்வத்துக்கு அனேகப் பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளது 1) மாரி முத்து 2) முத்து மாரி 3) முத்தையா 4) முத்துவீரன் 5) முத்துகோன்.
பாதம் : கால் பீடம் முதலியவற்றைத் தாங்கும் கால் அடிச்சுவடு காலடியின் அளவு செய்யுளடி மலை மரம் முதலியவற்றின் அடியிடம் காற்பங்கு வட்டத்தின் காற்பகுதி நட்சத்திர பாதம் சமூகம் நீர் கடவுள் அருள் இராகு கிரகபாதம்
பரிசுத்த வேதாகமம்
அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார் . மாற்கு 14:62
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. ரோமர் 8:33,34
2) சொரி முத்து அய்யனார்
சொரி முத்து அய்யனார் என்றால் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று மக்களுக்கு ஆசீர்வாதங்களைச் சொரியும் தகப்பன் ஆவார். முத்து என்ற வார்த்தைக்கு உயிர்த்தெழுந்தவர் என அர்த்தம் அதற்குரிய விளக்கம் பாத முத்து அய்யனார் என்ற பகுதியில் உள்ளது. சொரி என்றால் சொரிதல், கொடுத்தல், வழங்குதல் ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ( பரலோகத்தின் ) ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1:3
3) அடைக்கலம் காத்த அய்யனார்
அடைக்கலம் காத்த அய்யனார் என்றால் அடைக்கலமாக வந்த ஒருவரைக் காத்து நின்ற தகப்பன் ஆவார். பரிசுத்த வேதாகமம் மனிதனுக்கு அடைக்கலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே எனக் குறிப்பிடுகிறது. கோழி தமது குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல் நமது ஆண்டவரும் அவரின் இறக்கைக்குள் நம்மை மூடி பாதுகாத்து ஒருதீங்கும் நம்மைத் தொடாதபடிக்கு அரவணைத்துக்கொள்வார். இருளில் இருந்த நம்மை ஒளியில் வரவழைத்து தமது முகத்தை நம்மேல் பிரகாசிக்கச் செய்து நம்மை அவரின் கிருபையால் தாங்கிக் கொள்வார்.
பரிசுத்த வேதாகமம்
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். உபாகமம் 33:27
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய். சங்கீதம் 91:2&4
4) ஆதி புத்திர அய்யனார்
ஆதி புத்திர அய்யனார் என்றால் ஆதிமூலமாக உள்ள பிள்ளை தெய்வமாகிய தகப்பன் ஆவார். ஆதிமூலம் என்ற பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இதைப் பற்றி மேலும் அறிய ஆதிமூலம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/who-is-aathi-moolam
பரிசுத்த வேதாகமம் தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு சகலத்தையும் சிருஷ்டித்தார் எனக் கூறுகிறது இப்படி எல்லாவற்றையும் ஆதியிலே சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தாவே ஆதிமூலம் என அழைக்கப்படுகிறார் "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.” யோவான் 1:3
பரிசுத்த வேதாகமம் ஆதியில் உண்டான படைப்பைப்பற்றிக் கூறும் போது சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:3) அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். ( ரோமர் 11:36) இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 3:11) நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. (சங்கீதம் 102:25)
5) வெண்குடை அய்யனார்
வெண்குடை அய்யனார் என்பது பரிசுத்தத்தைக் குடைபோல பிடித்து இருக்கும் தகப்பன் ஆவார். பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை பரிசுத்தர் பரிசுத்தர் என்று குறிப்பிடுகிறது. அவரிடத்தில் பாவம் கிடையாது, அவர் பிறப்பிலும் வளர்ப்பிலும் பாவம் இல்லாதவர். அதாவது அவருக்கு ஜென்ம பாவமும், கரும பாவமும் கிடையாது.
பரிசுத்தர் --- .............இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. வெளி 4:8
பாவம் அறியாதவர் --- நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2கொரி 5:21
பாவம் இல்லாதவர் -- என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? (இயேசு) .............. யோவான் 8:46
பாவம் செய்யாதவர் --- அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; 2 பேதுரு 2:22
6) பால் வன்ன அய்யனார்
பால் வன்ன அய்யனார் என்பது பாலின் நிறமாகிய வெண்மையாக இருக்கும் தகப்பன் ஆகும். இயேசு கிறிஸ்து வெண்மையும் சிவப்பும் ஆவார். அவர் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர், அவர் சாரோனின் ரோஜா, அவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். உன்னதப் 5:10
7) கரையடி காத்த அய்யனார் - கரையடி அய்யனார்
கரையடி காத்த அய்யனார் மற்றும் கறையடி அய்யனார் என்பதுவும் ஒன்றே, அதே போல கரையடி முருகனார், கரையடி மாடசாமி, கரையடி சுடலை மாடசாமி என்ற பெயர்களும் ஒரே தெய்வத்தையே குறிக்கும்.
கரையடி காத்த அய்யனார் = கரை என்பது நீர்நிலைகளின் கரை ஆகும், அடி என்பது பாதம் ஆகும். கரையடி காத்த அய்யனார் என்றால் நீர்நிலையின் கரையில் தன் பாதத்தைப்பதித்து அதாவது அந்த இடத்துக்கு வந்து இக்கட்டில் இருக்கும் தன்னுடைய ஜனங்களை காத்த தகப்பன் ஆவார்.
கரையடி முருகனார் என்றால் கரையடி காத்த அய்யனார் என்றால் நீர்நிலையின் கரையில் தன் பாதத்தைப் பதித்து அதாவது அந்த இடத்துக்கு வந்து இக்கட்டில் இருக்கும் தன்னுடைய ஜனங்களை காத்த அழகான தெய்வம் ஆவார். பார்க்கவும் https://www.narrowpathlight.com/aaru-mugam
கரையடி மாடசாமி என்றால் கரையடி காத்த அய்யனார் என்றால் நீர்நிலையின் கரையில் தன் பாதத்தைப் பதித்து அதாவது அந்த இடத்துக்கு வந்து இக்கட்டில் இருக்கும் தன்னுடைய ஜனங்களை காத்த நம் உள்ளமாகிய வீட்டில் வாழும் தெய்வம் ஆவார். பார்க்கவும் https://www.narrowpathlight.com/god-who-dwells-with-humans
கரையடி சுடலை மாடசுவாமி என்றால் கரையடி காத்த அய்யனார் என்றால் நீர்நிலையின் கரையில் தன் பாதத்தைப் பதித்து அதாவது அந்த இடத்துக்கு வந்து இக்கட்டில் இருக்கும் தன்னுடைய ஜனங்களை காத்த நம் உள்ளமாகிய வீட்டில் வாழும் இறந்து கல்லறையில் இருந்து உயிர்த்த தெய்வம் ஆவார். பார்க்கவும் https://www.narrowpathlight.com/post/sudalai
இதைப் பற்றி அறிய வேதாகம நிகழ்வுகளைப் பார்க்க .வேண்டும். இஸ்ரவேல் ஜணங்ககளை மோசே எகிப்தில் இருந்து அழைத்து கொண்டு இப்போது இருக்கும் இஸ்ரவேல் தேசத்திற்கு அழைத்துச் செல்லும் போது ஒரு சூழ்நிலையில் செங்கடலைக் கடக்க வேண்டிய நிலை வருகிறது. அப்போது செய்வதறியாது திகைத்து நின்ற ஜனங்களுக்கு தெய்வம் வந்து அந்த கடல் கரையில் வந்து ஜனங்களோடு கூட நின்று அந்த செங்கடலை இரண்டாக பிரித்து பாதை ஏற்படுத்தி அவர்கள் செங்கடலைக் கடந்து செல்ல உதவினார், அதையே கரையடி காத்த அய்யனார் என்று அழைக்கப் படுகிறார்.
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள். எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும் போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார். அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். யாத் 14:13-23
8) செந்தட்டி அய்யனார்
செந்தட்டி அய்யனார் (செந் + தட்டி )
செந்தட்டி என்றால் தெய்வம் இரத்தம் சிந்தித்திறக்கப்பட்ட கதவு அதாவது தெய்வம் சிலுவையில் இரத்தம் சிந்தப்பட்டதால் திறக்கப்பட்ட பரலோக வாசல் என அர்த்தம் எடுக்க வேண்டும்
9) கூடமுடைய அய்யனார்
கூடமுடைய அய்யனார் = கூடம் + உடைய + தகப்பன்
கூடம் என்றால் வானம், அல்லது, மேலிடம், அகண்டதளம், பெரிய இடம், என அர்த்தம் கூடமுடையவர் என்றால் வானம் சென்றவர் அல்லது பரலோகம் சென்று அதைத் தன் இருப்பிடமாக கொண்டு வாழ்பவர் என அர்த்தம்
10) வழி விட்ட அய்யனார்
தெய்வம் மனிதனுக்குக்கொடுத்த ( உயிரை ) ஆத்மாவைக்காப்பாற்ற மனிதனாகப்பிறந்து, இறந்து, உயிர்த்து, பரலோகம் சென்று, பரலோகத்தைத் திறந்து, வழி ஏற்படுத்தி, மனிதன் இறந்த பின்பு அந்த ஆத்துமாவுக்குப் பரலோகம் செல்ல வழி விட்டவர் என்பது சரியான அர்த்தம். https://www.narrowpathlight.com/the-god-who-gave-way
11) அரிகேசவ வழிவிட்ட அய்யனார்
(புராண பெயர் கழுதை வழிவிட்டனேந்தல் அய்யனார்)
https://temple.dinamalar.com/New.php?id=2189
அரி என்றால் அழகு, கேசம் என்றால் தலை முடி ஆகும், அரிகேசவ வழிவிட்ட அய்யனார் என்றால் அழகான தலைமுடியைக் கொண்ட ஏந்தும் வழிவிட்ட தெய்வம் ஆவார்.
தெய்வத்தின் தூதனுக்குக் கழுதை வழிவிட்டதை அறிய வேண்டும் என்றால் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்களைச் சபிக்க பிலேயாம் என்ற தீர்க்கதரிசி அழைக்கப்பட்டார். அவர் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். அவர் அப்படிச் செல்வது தெய்வத்துக்கு பிடிக்காத படியால் தெய்வத்துக்குக் கோபம் மூண்டது. கர்த்தருடைய தூதனானவரை அனுப்பினார். அவர் உருவிய பட்டயத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார். இதைப் பார்த்த கழுதை தூதனானவரை விட்டு விலகியது. இதையே கழுதை வழிவிட்ட அய்யனார் என்று கூறப்படுகிறது.
பரிசுத்த வேதாகமம்
பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான். அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள். கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான். கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார். கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.
12) ஆதீனம் காத்த அய்யனார்
ஆதீனம்
ātīṉam
s. [properly அதீனம்.] Proprietorship, hereditary inheritance, &c., சுதந்திரம்.
ஆதீனம் காத்த அய்யனார் என்றால் நம்மை சொந்த மக்களாக தெரிந்தெடுத்து அந்த சொந்த மக்களைக் காப்பாற்றும் தகப்பன் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம்7:6
13) கழுவ லிங்க அய்யனார்
கழுவ லிங்க அய்யனார் என்பதற்குக் கழுமரம் ஏற்றப்பட்ட உடம்பை (body) உடைய அய்யனார் என அர்த்தம் ஆகும். கழு என்பது சிலுவையைக் காண்பிக்கிறது. லிங்கம் என்பது உடம்பு ஆகும். இந்த பெயரை கலு சிவலிங்க அய்யனார் என மாற்றி வைத்து உள்ளார்கள். கழுவலிங்கம் என்ற பெயரில் இருந்து கலசலிங்கம் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். பார்க்கவும் https://www.narrowpathlight.com/thirukalukundram
14) அருஞ்சுனை காத்த அய்யனார் அல்லது நீர்காத்த அய்யனார்
அருஞ்சுனை என்றால் அருமையான ஊற்று ஆகும். அருஞ்சுனை காத்த அய்யனார் என்றால் அருமையான நீர் ஊற்றை வற்றாமல் காத்து நிற்கும் தகப்பன் ஆவார். நீர் காத்த அய்யனார், நீர் காத்த லிங்கம் என்ற பெயர்கள் அதே அர்த்தத்தை உடையவைகள் ஆகும்.
கிட்டத்தட்ட 5500 ஆண்டுகளாக ஒரு அருமையான ஊற்று வற்றாமல் தெய்வத்தால் பாதுகாக்கப்படுகிறது. பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் @ இப்ராகிம் என்பவர் தனது இரண்டாவது மனைவியை வீட்டை விட்டு அனுப்பும் போது, ஆகார் என்ற அந்த தாய் தனது மகனாகிய இஸ்மாயில் @ இஸ்மவேலுடன் வனாந்திரத்தின் வழியாகச் செல்லும் போது தண்ணீர் இல்லாமல் பிள்ளை அழுதபோது தெய்வம் ஆகார் அவர்களுக்கு முன்பாக தெய்வம் தோன்றி ஒரு ஊற்றை உண்டாக்கிக் காண்பித்தார். அந்த நீர் ஊற்று இன்று வரை வற்றாமல் வந்து கொண்டு இருக்கிறது. அந்த இடம் இப்போது சவுதி அரேபியாவில் இருக்கிறது. அந்த ஊற்றுக்கு ஜம் ஜம் தண்ணீர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அந்த இடம் ஜம் ஜம் கிணறு என்று பாதுகாக்க பட்டு வருகிறது.
இதன்படி இதற்கு உருவகமாக, தமிழ் நாட்டில் உள்ள ஊற்றுகளை மையமாக வைத்துக் கட்டப்பட்ட அய்யனார் கோயில்களை அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில்கள் என்று அழைக்கிறார்கள்.
பரிசுத்த வேதாகமம்
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
15) கருக்கு வேல் அய்யனார்
கருக்கு என்பது கூர்மையான என்று அர்த்தம் ஆகும், வேல் என்பது ஒரு கொலைக் கருவியாகும், ஈட்டி என்ற பெயரும் உண்டு. தெய்வம் கழுமரத்தில் கொல்லப்பட்டார் அதையே சிலுவை என்று கூறுகிறோம். கருக்கு வேல் அய்யனார் என்றால் கூர்மையான கழுமரமாகிய சிலுவையை உடைய தகப்பன் என்று அர்த்தம் ஆகும்.
கழு என்றால் சிலுவை, கழுமரம், ஈட்டியாகிய வேல், திரிசூலம் ஆகும்.
கழு என்பதைப் பற்றி மேலும் அறிய திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும். https://www.narrowpathlight.com/thirukalukundram
ஈட்டி என்றால் கழுமரம் ஆகும், அதையே நாம் வேல் என அழைக்கிறோம். ஈட்டி ஒரு நெடுமரம் ஆகும் அதனோடு குறுக்கு கழி அல்லது இடைகழியைச் சேர்க்கும் போது தெய்வத்தைக் கழுவேற்றிய சிலுவை ( Cross ) ஆகும்.
கழு Washing , கழு , கழுமரம் ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி கழு, பெயர்ச்சொல். கழுமரம் சிறிய ஈட்டி திரிசூலம் https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81
16) திருவேட்டை அய்யனார்
திரு வேட்டை என்றால் புனிதமான வேட்டை ஆடிய தகப்பன் ஆவார். தகப்பன் ஆடிய வேட்டை மிகவும் புனிதமானது, அந்த வேட்டையினால் மனிதக் குலத்துக்கு விடுதலை கிடைத்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி சாத்தானை வேட்டையாடினார் அதையே திரு வேட்டை என்று அழைக்கப்படுகிறது.
தன்னுடைய சிலுவை மரணத்தினால் ஐந்து காயங்கள் ஏற்றுக் கொண்டு தன்னுடைய ஐம்புலன் களையும் வென்ற தெய்வம் ஐந்து வென்றனன் ஆவார்.
இதையே திருவள்ளுவர் தனது 6 வது திருக்குறளில் பொறி வாயில் ஐந்தவித்தான் என்று குறிப்பிடுகிறார்.
திருக்குறள் 6 - Thirukkural 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.
பொறி வாயில் = பொறியாகிய கொலைக்கருவி வழியாக என்று பொருள் கொள்ள வேண்டும், உதாரணமாக எலிப்பொறி என எலியைப் பிடிக்கும் கருவியைக் குறிப்பிடுகிறோம்
ஐம்பொறிகளின் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ) வழியாகப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்தவன் என்று உரைகள் எழுதப்பட்டுள்ளது
கொலைக்கருவியின் வாயில் வழியாக ஐம்புலன்களை அழித்தவன் என்பது தான் சரியான அர்த்தம்
கொலைக்கருவி = காவுதடி, (காவடி,) சிலுவை
ஐந்து அவித்தான் =ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கியவன்
விளக்கம்
பொறியாகிய கொலைக்கருவி (சிலுவை) வழியாக இறைவன் தம் ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கி பொய்யைத்தீர்த்து (பொய்யின் உருவமாகிய சாத்தானைக் காவுதடி, அல்லது சிலுவையிலே அழித்து) ஏற்படுத்திய ஒழுக்க வழியில் நிற்பவர்கள் மோட்ச வாழ்வைப் பெற்று நீடு வாழ்வார்கள்.
மேலும் அறியப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/thirumoolar-thirumanthiram-song1
17) திருவீதி கொண்ட அய்யனார்
திரு வீதி கொண்ட என்றால் புனிதமான தெருக்கள் வழியாகச் சென்றவர் ஆவார். அவர் கழுதை மீது எருசலேம் தெருக்கள் வழியாக மக்கள் மத்தியில் சுற்றி தேவாலயத்துக்கு வந்தார். அந்த நிகழ்வை இன்றும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறுவாக கடைப்பிடிக்கிறார்கள்.
மற்றொரு சமயத்தில் இயேசு கிறிஸ்து எருசலேம் தெருக்கள் வழியாகச் சிலுவை சுமந்து சென்றார் காபலஸ்தலம் என்ற இடத்தில் வைத்து சிலுவையில் அறையப்பட்டார். இதையே திருவீதி கொண்ட தகப்பன் என்று அழைக்கிறார்கள்
பரிசுத்த வேதாகமம்
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
18) கலியுக மெய்ய அய்யனார்
கலியுகம் என்றால் கடைசிக் காலம் ஆகும், மெய்ய என்றால் உண்மையான என்று அர்த்தம் ஆகும், கலியுக அய்யனார் என்றால் கடைசிக் காலத்தில் இந்த பூமிக்கு வரும் உண்மையான தகப்பன் என்று அர்த்தம், இதையே கலியுக வரதன், கலியுக கிறிஸ்ணன், கலியுக ஐயப்பன், கலியுக போகநாதர், கலியுக முருகன், என்றெல்லாம் தெய்வத்தை அழைக்கிறார்கள். இந்த தெய்வங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது.
கலிகாலத்தில் வரப்போகிற கலியுக மெய்ய அய்யனார் இயேசு கிறிஸ்துவே ஆவார். இதைப் பரிசுத்த குர்-ஆன் உறுதிப்படுத்துகிறது ஈஸா (இயேசு) அவர்கள் கலியுகத்தில் வந்து தஜ்ஜாலை அழிப்பார்கள் என்று குர்-ஆன் கூறுகிறது. இதைப்பற்றி அறிந்து கொள்ளப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/comeing-of-jesus-in-last-days
கடைசிக் காலத்தில் அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். அன்பு இன்னமும் பூமியில் அனகேருடைய உள்ளத்தில் இருக்கிறது. எனவே கலிகாலம் பூமியில் ஆரம்பிக்கப் படவில்லை
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டது போலப் பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டுபோவார்கள், இதனால் பெரும் பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களிலும் ஆலயங்களிலும் தினசரி வழிபாடுகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் கிருபையின் கால முடிவு அடையும் அதன் பிறகு கடைசிக் காலம் ஆரம்பிக்கும். இதையே சித்தர் கோரக்கர் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கடைசி கால முடிவில் அவர் நியாயாதிபதியாக வந்து அந்திக்கிறிஸ்துவையும், சாத்தானையும் அவனுடைய ஆதரவாளர்களாகிய மக்களையும் நியாயம் தீர்த்து நரகத்திற்கு அனுப்புவார் அது கடைசிக் கால முடிவு ஆகும்.
19) பொய்யா மொழி அய்யனார்
பொய்யா மொழி என்றால் பொய் சொல்லாத தகப்பன் ஆவார். தெய்வம் விளம்பினதை (சொன்னதை) மாற்ற மாட்டார். அவர் அவருடைய உடன்படிக்கையை மீறமாட்டார். அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? இப்படிப் பட்ட தெய்வத்தைப் பொய்யா மொழி அய்யனார் என்று அழைக்கிறார்கள்.
பரிசுத்த வேதாகமம்
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன். ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன். சங்கீதம் 89:34-35
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? எண்ணாகமம் 23:19
20) செருவலிங்க அய்யனார்
போர் செய்த உடம்பை உடைய அய்யனார் ஆகும். செரு என்றால் போர் ஆகும். லிங்கம் என்பது உடம்பைக் காண்பிக்கிறது. சிலுவையில் தன்னுடைய உடம்பை அறையக்கொடுத்து, இரத்தம் சிந்தி மரித்து சாத்தானை ஜெயித்தார் அதையே செருவலிங்க தகப்பன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செரு ceru s. battle, war, போர். செருக்களம், a battle-field.
21) குருந்துனடய அய்யனார் -- இளம்பாளை அய்யனார் - ஓலைகொண்ட அய்யனார்
குருந்து என்பது குருத்து ஆகும் (white tender leaf, tender shoots.பெருங்குருந்து, a large kind of குருந்து.) இயேசு கிறிஸ்து கழுதை மீது எருசலேம் தெருக்கள் வழியாக மக்கள் மத்தியில் சுற்றி தேவாலயத்துக்கு வந்தார். அந்த நிகழ்வை இன்றும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறுவாக கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிகழ்வை இன்றும் அந்த குருத்தை முளைப்பாரியாக தூக்கிச் செல்கிறோம்.
இளம்பாளை என்பது பனைக்குருத்தைக் காண்பிக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு அன்று தூக்கிச் செல்வதுவும் பனங்குருத்தையே.
பாளை pāḷai s. Flower-sheath, or spatha of a palm- ree, பனைமுதலியவற்றின்பாளை. (c.)
22) நீதியுடைய அய்யனார்
நீதிபதியாக வரும் அய்யனார் ஆவார். இயேசு கிறிஸ்து கடைசி காலத்தில் நியாயாதிபதியாக இந்த பூமிக்கு வருவார் அதையே நீதியுடைய தகப்பன் என்று கூறப்பட்டுள்ளது. கடைசிக் கால முடிவில் இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாக வந்து அந்திக்கிறிஸ்துவையும், சாத்தானையும் அவனுடைய ஆதரவாளர்களாகிய மக்களையும் நியாயம் தீர்த்து நரகத்திற்கு அனுப்புவார் அது கடைசிக் கால முடிவு ஆகும். பின்பு இயேசு கிறிஸ்து 1000 வருட காலம் இந்த பூமியில் அரசாளுவார். அதன் பிறகு புதிய வானம் புதிய பூமி உண்டாகும் நாம் அவரோடு கூட யுகா யுகமாக வாழுவோம். அதையே நாம் நித்திய வாழ்க்கை அல்லது பரலோக வாழ்க்கை எனக் கூறுகிறோம். இதைப் பற்றி அறிய கலியுகவரதன் என்ற பக்கத்தைப் பார்க்கவும். https://www.narrowpathlight.com/comeing-of-jesus-in-last-days
23) சித்தகூர் அய்யனார்
சித்தா ("சரியானவர்") என்பது இந்திய மதங்களிலும் கலாச்சாரத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதன் பொருள் "முடிந்தவர்". கூர் என்பது மிகுதி ஆகும். சித்தகூர் என்றால் எல்லாவற்றையும் செய்து முடித்த தகப்பன் ஆவார். இயேசு கிறிஸ்து நமக்காக எல்லாவற்றையும் சிலுவையிலே செய்து முடித்தார். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/who-is-karuppasamy
பரிசுத்த வேதாகமம்
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்க தாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். யோவான் 19:28-30
24) குன்னக்குடி அய்யனார் - திருக்கோட்டி அய்யனார்
குன்னம் என்பது அவமானம், குடி என்பது வீடு அல்லது குடும்பம் ஆகும், குன்னக்குடி அவமானத்தைத் தாங்கிய குடும்பத்தில் வந்து பிறந்த தகப்பன் ஆவார்.
இயசு கிறிஸ்து கன்னியாகிய மரியாளிடம் தெய்வத்தின் வார்த்தையினாலும், ஆவியினாலும் பிறந்தார். அவருடைய தாயார் கன்னியாக இருந்ததினால் அவர்கள் பல அவமானம் அடைந்தார்கள். அப்படிப்பட்ட வீட்டில் பிறந்த தகப்பன் குன்னக்குடி அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.
கோட்டி என்றால் நிந்தை என்று அர்த்தம். திருக்கோட்டி அய்யனார் என்றால் மனிதர்களுக்காக நிந்தை, அவமானம் சுமந்த தகப்பன் ஆவார். அவர் பிறப்பிலும், சாவிலும் நிந்தை சுமந்தவர்.
பரிசுத்த வேதாகமம்
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். மத்தேயு 1:18-19
தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். லூக்கா 1:27-35
குன்னம் : அவமானம் பழி ----------- குடி : பருகுகை மதுபானம் மதுவுண்ட மயக்கம் புருவம் குடியானவன் குடியிருப்போன் ஆட்சிக்குட்பட்ட குடிகள் குடும்பம் குலம் வீடு ஊர் வாழிடம்
25) ஆறுமுக அய்யனார்
ஆறுமுகம் என்றால் முருகன் என்பதை யாவரும் அரிவர். ஆறுமுகம் ஆகிய முருகனும் ஆறுமுக அய்யனார் என்பதுவும் ஒன்றே ஆகும். ஆறு வழிகளை உடைய தகப்பன் ஆவார். முகம் என்றால் வழியாகும்.
ஆறு விரிந்தனன்
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய தெய்வம் தமிழ் நாட்டில் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சைவ மார்க்கத்தில் ( Saivam ) தகப்பன், தாய், மகன் என்று உருவானது, பிறகு சைவ மார்க்கத்தில் இருந்து வைணவ மார்க்கம் (- Vaishnavism ) உருவானது, பிறகு சாக்தம், (Saktham) கெளமாரம், (- Gowmaram ) செளரம், (- Sowram ) காணாபத்தியம் ( Ganapathyam )எனப் பிரிந்தது. இதையே ஆறு விரிந்தனன் என அழைக்கிறோம்.
திருமூலர்-திருமந்திரம்
“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே.”
இதைப் பற்றி அறிய ஆறு முகம் அல்லது திருமூலர் - திருமந்திரம் பாடல் 1 என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/thirumoolar-thirumanthiram-song1
https://www.narrowpathlight.com/aaru-mugam
26) தண்டீஸ்வர அய்யனார்
தண்டீஸ்வர அய்யனார், தண்டீஸ்வரர், தண்டாயுதபாணி என்பது எல்லாம் ஒன்றே, இந்த பெயர்கள் எல்லாம் Lord of Host – படைகளின் கடவுள் என்று பரிசுத்த வேதாகமம் கூறும் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. இதைப் பற்றி அறிய தண்டீஸ்வரர் என்ற பக்கத்தை பார்க்கவும். https://www.narrowpathlight.com/lord-of-hosts
guru