Sudalai - சுடலை - சுலவுஞம் சடையான்
- j rajamohan
- Feb 8, 2024
- 4 min read
Updated: Feb 27, 2024
Sudalai - சுடலை - சுலவுஞம் சடையான்
2.022 திருக்குடவாயில்-பண்-இந்தளம்- திருச்சிற்றம்பலம் பாடல்: 4
சுலவுஞம் சடையான், சுடுகாடு இடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடம்
குலவும் குழகன், குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பொருள்
சுலவுஞம் = என்றால் சூழ்ந்து என அர்த்தம் – தலையைச் சூழ்ந்து இருக்கும் சடையான், = சடை என்பது முடி ஆகும் - முள்முடியைச் சூடியவர்
சுடுகாடு இடமா = குடவாசல் ஆகிய குகை கல்லறை இருக்கும் இடத்தில் கண்டு
நலம் என் முலையாள் = இன்பம் மேலானது என்று சொன்ன மரியாள்
நகைசெய்ய நடம் = பூவைப் போல மலர்ந்து உயிர்த்தெழுந்து ஆயத்தமாக நின்று கொண்டு இருந்த தெய்வம் அவர் நாற்பது நாள் அளவும் தன்னை உயிர் உள்ளவராகக் காண்பித்து இந்த பூமியில் நடமாடிய தெய்வம் ஆவார். அதையே நடம் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. ( நடம் என்றால் நடமாடும் என்று அர்த்தம் ஆகும் )
குலவும் குழகன், = குலவும் என்றால் அன்புறுதல் அல்லது நட்புறுதல் ஆகும் - அவர் உயிர்த்தெழுந்து பிரகாசித்து அன்புடன் மரியாளே என்று அழைத்த அழகான தெய்வம் ஆவார்.
குடவா யில்தனில் = குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில் அருகில்
நிலவும் = ( வாழுகின்ற ) தன்னை உயிருடன் இருக்கிறவராக காண்பித்து சாவாமை வரம் உள்ளவராக வாழுகின்ற தெய்வம் ஆவார்.
பெருங்கோ யில்நிலா யவனே. = நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார்
விளக்கம்
தெய்வத்தின் தலையைச் சூழ்ந்து அடிக்கப்பட்டு இருக்கும் முள்முடியைச் சூடியவர் ஆவார். அல்லது ( சடை என்பது முடி என்ற முள்முடி ஆகும். கொன்றைச் சடையன் என்ற பக்கத்தைப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/post/crown-of-thorns )
முள்முடி சூடி சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை குடவாசல் என்ற குகை கல்லறை இருக்கும் இடத்தில் மரியாள் கண்டு அவரை நோக்கிப் பார்த்தாள் அப்போது இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள். இந்த நிகழ்வைக் குடவாயில் என்ற கல்லறை வாயிலில் நடைபெற்றதால் சுடுகாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதனால் தெய்வத்தைச் சுடலை எனக் கூறுகிறோம்
இப்படி உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை கண்ட இன்பம் மேலானது என்று காட்டிய மரியாள் ஆவார். இதையே நலம் என் முலையாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெய்வம் பூவைப் போல மலர்ந்து / உயிர்த்தெழுந்து ஆயத்தமாக சீடர்களையும், ஸ்திரீகளையும் சந்திக்க நின்று கொண்டு இருந்த தெய்வம் ஆவார். அவர் நாற்பது நாள் அளவும் தன்னை உயிர் உள்ளவராகக் காண்பித்து இந்த பூமியில் நடமாடிய தெய்வம் ஆவார். அதையே நடம் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது.
குலவும் என்றால் அன்புறுதல் அல்லது நட்புறுதல் ஆகும் - அவர் உயிர்த்தெழுந்து பிரகாசித்து அன்புடன் மரியாளே என்று அழைத்த அழகான தெய்வம் ஆவார்.
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில் அருகில் தன்னை உயிருடன் இருக்கிறவராகக் காண்பித்து சாவாமை வரம் உள்ளவராக வாழுகின்ற தெய்வம் ஆவார். அதையே நிலவும் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது ( நிலவும் என்றால் existing, வாழுகின்ற என்று அர்த்தம் ஆகும் ) அவர் நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார்

தெளிவான விளக்கம்
1) சுலவுஞம் சடையான், சுடுகாடு இடமா
சுலவுஞம்-சடையான் சுலவுஞம் என்ற வார்த்தைக்குச் சூழ்ந்துள்ள என்ற அர்த்தம் ஆகும். சடை என்பது முடியாகும். முடி என்பது தலையைக் காண்பிக்கிறது, அதாவது தலையைச் சுற்றி அடிக்கப்பட்ட முள்முடியைக் காண்பிக்கிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்படும் முன் அவருக்கு முள்முடி கிரீடமாக சூடப்பட்டது. அதையே சுலவுஞம் சடையான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வம் தலையைச் சூழ்ந்து அடிக்கப்பட்டு இருக்கும் முள்முடியை கிரீடமாகச் சூடியவர் ஆவார். ( சடை என்பது முடி என்ற முள்முடி ஆகும். இதை மேலும் அறியக் கொன்றைச் சடையன் என்ற பக்கத்தைப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/post/crown-of-thorns )
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான். இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். யோவான் 19:1-5
சுடுகாடு இடமா
முள்முடி சூடி சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை குடவாசல் என்ற குகை கல்லறை இருக்கும் இடத்தில் மரியாள் கண்டு அவரை நோக்கிப் பார்த்தாள். இந்த நிகழ்வைக் குடவாயில் என்ற கல்லறை வாயிலில் நடைபெற்றதால் சுடுகாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதனால் தெய்வத்தைச் சுடலை எனக் கூறுகிறோம்
பரிசுத்த வேதாகமம்
இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். யோவான் 20:14-16
2) நலமென் முலையாள் நகைசெய் யநடம்
நலமென் முலையாள்
அப்போது இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள். இப்படி உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை கண்ட இன்பம் மேலானது என்று காட்டிய மரியாள் ஆவார். இதையே நலம் என் முலையாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம்
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். மத்தேயு 28:5-7
நகை செய்ய நடம்
நகை என்பது ஒரு பூவின் மலர்ச்சியாகும். தெய்வம் பூவைப் போல மலர்ந்து / உயிர்த்தெழுந்து ஆயத்தமாகச் சீடர்களையும், ஸ்திரீகளையும் சந்திக்க நின்று கொண்டு இருந்த தெய்வம் ஆவார். அவர் நாற்பது நாள் அளவும் தன்னை உயிர் உள்ளவராகக் காண்பித்து இந்த பூமியில் நடமாடிய தெய்வம் ஆவார். அதையே நடம் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. மலர்தல் என்பதை அறியப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/post/he-shed-his-blood-for-mankind
பரிசுத்த வேதாகமம்
அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அப்போ 1:3
3) குலவும் குழகன், குடவா யில்தனில் நிலவும்
குலவும் என்றால் அன்புறுதல் அல்லது நட்புறுதல் ஆகும் - அவர் உயிர்த்தெழுந்து பிரகாசித்து அன்புடன் மரியாளே என்று அழைத்த அழகான தெய்வம் ஆவார்.
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில் அருகில் தன்னை உயிருடன் இருக்கிறவராகக் காண்பித்து சாவாமை வரம் உள்ளவராக வாழுகின்ற தெய்வம் ஆவார். அதையே நிலவும் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது ( நிலவும் என்றால் existing, வாழுகின்ற என்று அர்த்தம் ஆகும்
பரிசுத்த வேதாகமம்
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். யோவான் 20:15-16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 தீமோ 6:16
4) பெருங்கோ யில்நிலா யவனே.
அவர் நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார்
பரிசுத்த வேதாகமம்
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17
இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.
திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்
திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அர்த்தம் பார்க்க -- http://mydictionary.in
சுலவுதல் : சுழலுதல்; சுழற்றுதல்; சூழ்தல்; சுற்றுதல்.
சடை = பின்னலாய் அமைந்த மயிர்முடி, பின்னிய கூந்தல், அடர்ந்த மயிர், வேர் விழுது இலாமிச்சை வெட்டிவேர் சடாமாஞ்சில் திருவாதிரைநாள் மிதுனராசி வேதமோதும் முறைகளுள் ஒன்று கற்றை ஆணியின் கொண்டை நெட்டி அடைப்பு
நகை : சிரிப்பு மகிழ்ச்சி இன்பம் மதிப்பு இனிப்பு இகழ்ச்சி நட்பு நயச்சொல் விளையாட்டு மலர் பூவின்மலர்ச்சி பல் பல்ல¦று முத்து முத்துமாலைஅணிகலன்
செய்ய- (1) : சிவந்த செப்பமான பாடல் வரி :அகம்.323:4.
செப்பம் : செவ்வை நடுநிலை சீர்திருத்தம் பாதுகாப்பு செவ்விய வழி தெரு நெஞ்சு மனநிறைவு ஆயத்தம்
நடம் naṭam s. dancing, கூத்து; 2. a kind of tune, ஒர்பண். நடநாடக சாலை, a dancing woman (a dramatic term). நடநாயகன், நடராசன், நடேசன், Siva, நடேச்சுரன். Other dictionary words Tamil நடத்து, நடத்துநர், நடத்தை, நடந்தேறு, நடனம் நடப்பு, நடப்புவிடு, நடமாடு, நடமாடும், நடமாட்டம் நடம் நடராஜர் நடவடிக்கை நடவு நடாத்து நடி நடிகன்
நலம் : நன்மை இன்பம் உதவி கண்ணோட்டம் அழகு அன்பு ஆசை குணம் பயன் புகழ் உயர்வு நல்வாழ்வு நிறம் செம்மைநிறம் விருச்சிகராசி எருதின் விதை சுக்கு அறம்
என் : யாது (மேலானது)
மயானம் mayāṉam com. மசானம், s. burning or burial ground, சுடலை, சுடுகாடு.
குலவு kulavu III. v. i. shine, glitter, பிரகாசி; 2. move about in state, கொண்டாடு; 3. hold friendly intercourse, நட்புறு; 4. bend, curve; 5. lie heaped as sand, குவி, குலவு, v. n. bend, curve.
Existing : நிலவும், நடப்பில் உள்ள, வாழ்கின்ற
Comments