SAHASRANAMAVALI - சஹஸ்ரநாமவளி சஹஸ்ரநாமவளி என்றால் என்ன ?
சஹஸ்ரநாமவளி என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, இந்த வார்த்தையில் சஹஸ்ர என்ற வார்த்தைக்குப் ஆயிரம் என்று அர்த்தம், நாம என்ற வார்த்தைக்கு பெயர் என்று அர்த்தம் ஆகும். அதாவது “ஆயிரம் நாமங்கள்” என்று அர்த்தம் ஆகும் தெய்வம் என்று நாம் சொல்லும் போது அவர் “ஒருவரே” ஆகும், அவருடைய துதியை சொல்லும் போது அவருடைய ஆயிரம் ( பெயர்களை ) நாமத்தைச் சொல்லி நாம் துதிப்பது வழக்கம் ஆகும். அந்த ஆயிரம் பெயர்கள் தெய்வத்தின் குணங்களை அல்லது பண்புகளைக் குறிப்பதாகவே உள்ளது, நாம் நமது நாட்டில் தெய்வத்தின் குணங்களையே உருவம் ஏற்படுத்தி வணங்குகிறோம் அப்படி அந்த நாமங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட போது அதில் பதினொன்று வரிகள் இயேசு கிறிஸ்துவை நேரடியாகக் குறிப்பதாக உள்ளதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சஹஸ்ரநாமாவளி என்பது தெய்வத்தின் 1000 பெயர்கள் அல்லது குணங்களைப் பற்றிக் கூறுவது, அப்படிக் கூறும் போது சஹஸ்ரநாமாவளியில் சொல்லப்பட்டக் குணங்கள் இயேசு கிறிஸ்துவை பற்றியதாக உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
சஹஸ்ரநாமவளியைப் பற்றி விக்கிப்பீடியா கொடுக்கும் விளக்கம் கீழே உள்ளது
சஹஸ்ர நாமங்கள் என்பது பக்தி இலக்கியத்தின் ஒரு வகைப் புகழ் பாடல்கள்.[2] இந்த வார்த்தை சஹஸ்ர (ஆயிரம்) மற்றும் நாம ( பெயர் ) ஆகியவற்றின் கலவையாகும். ஒரு சஹஸ்ரநாமம் பெரும்பாலும் எல்லா மற்றும் புறத் தெய்வங்களின் பெயர்களை உள்ளடக்கியது,இது தெய்வீக சமத்துவம் ஆகும் அல்லது அவை தனிப்பட்ட பெயர்களைக் காட்டிலும் பண்புகளாக (attributes ) இருக்கலாம்.
Sahasra-namas are songs of praise, a type of devotional literature.[2] The word is a compound of sahasra "thousand" and nāman "name". A Sahasranāma often includes the names of other deities, suggesting henotheistic equivalence and/or that they may be attributes rather than personal names
SAHASRANAMAVALI ACKNOWLEDGES JESUS CHRIST
Ohm Shri Brahmaputraya namaha:
Ohm Shri Umathyaya namaha:
Ohm Shri kanni sudhaya namaha:
Ohm Shri tharithra narayanaya namaha:
Ohm Shri vidhiristaya namaha: Oh
Ohm Shri panchagayaya namaha:
Ohm Shri vruksha shul aruthaya namaha:
Ohm Shri mruthyam jaya namaha:
Ohm Shri shibilistaya namaha:
Ohm Shri thatchina moorthyaya namaha:
Ohm Shri maha devayaya namaha
விளக்கம்
1) Ohm Shri Brahmaputraya namaha: Oh Lord , The Son of God, we praise you.
ஓம் ஸ்ரீ பிரம்மபுத்ராய நமஹ: , ஓம் ஸ்ரீ கடவுளின் மகனே, நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்.
இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக இந்த உலகத்தில் வந்து பிறந்தார். அப்படி உலகத்தில் வந்து பிறந்த கடவுளின் மகனே உம்மைப் போற்றுகிறோம் என்பது அர்த்தம் ஆகும்
பரிசுத்த வேதாகமம்
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். ரோமர் 1:4-5
2) Ohm Shri Umathyaya namaha: Oh Lord who is born of the Spirit, we praise you.
ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ: ஓம் ஸ்ரீ பரிசுத்த ஆன்மாவினால் ( பரிசுத்த ஆவியினால் ) பிறந்த ஆண்டவரே, நாங்கள் உங்களைப் போற்றுகிறோம்.
இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் துணையோடு இந்த உலகத்தில் கடவுளின் மகனாக வந்து பிறந்தார். அப்படி உலகத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் பிறந்த கடவுளின் மகனே உம்மைப் போற்றுகிறோம் என்பது அர்த்தம் ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். லூக்கா 1:31-35
3) Ohm Shri kanni sudhaya namaha: Oh Lord, who is born of a virgin, we praise you.
ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ: ஓம் ஸ்ரீ கன்னிப் பெண்ணிடம் பிறந்த இறைவனே, உம்மைப் போற்றுகிறோம்.
இயேசு கிறிஸ்து மரியாள் என்ற கன்னிப் பெண்ணிடம் இந்த உலகத்தில் கடவுளின் மகனாக வந்து பிறந்தார். அப்படி உலகத்தில் கன்னிப் பெண்ணிடம் பிறந்த கடவுளின் மகனே உம்மைப் போற்றுகிறோம் என்பது அர்த்தம் ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:21-23
4) Ohm Shri tharithra narayanaya namaha: Oh Lord , who became poor for our sake, we praise you.
ஓம் ஸ்ரீ தரித்திர நாராயணாய நமஹ: எங்களுக்காக ஏழையாகிய ஆண்டவரே, நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்.
இயேசு கிறிஸ்து மரியாள் என்ற கன்னிப் பெண்ணிடம் ஒரு ஏழையாக இந்த உலகத்தில் வந்து பிறந்தார். அப்படி உலகத்தில் கன்னிப் பெண்ணிடம் ஏழையாகப் பிறந்த கடவுளின் மகனே உம்மைப் போற்றுகிறோம் என்பது அர்த்தம் ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான் களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. 2கொரி 8:9
5) Ohm Shri vidhiristaya namaha: Oh Lord who is circumcised, we praise you.
ஓம் ஸ்ரீ விதிரிஷ்டாய நமஹ: விருத்தசேதனம் செய்யப்பட்ட ஆண்டவரே, நாங்கள் உங்களைப் போற்றுகிறோம்.
இயேசு கிறிஸ்து மரியாள் என்ற கன்னிப் பெண்ணின் மூலமாக இந்த உலகத்தில் வந்து பிறந்தார். அவர் யூத முறைமையின்படி எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்பட்டார். அப்படி உலகத்தில் கன்னிப் பெண்ணின் மூலமாக பிறந்து எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்பட்ட கடவுளின் மகனே உம்மைப் போற்றுகிறோம் என்பது அர்த்தம் ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக் கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். லூக்கா 2:21
6) Ohm Shri panchagayaya namaha: Oh Lord who bore five wounds on your body, we praise you.
ஓம் ஸ்ரீ பஞ்சகாயாய நமஹ: உன் உடலில் ஐந்து காயங்களை ஏற்றுக்கொண்ட ஆண்டவரே, நாங்கள் உங்களைப் போற்றுகிறோம்.
இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக இந்த உலகத்தில் வந்து பிறந்து தனது முப்பத்துமூன்றரை வயதில் உலக மனிதர்களுக்காகச் சிலுவையில் ஐந்து காயங்களை ஏற்று மரித்தார். அப்படி உலகத்தில் வந்து பிறந்து சிலுவையில் ஐந்து காயங்களை ஏற்று மரித்த கடவுளின் மகனே உம்மைப் போற்றுகிறோம் என்பது அர்த்தம் ஆகும்
பரிசுத்த வேதாகமம்
நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். லூக்கா 24:20
ஐந்து காயங்கள் – இரண்டு கைகள் மற்றும் கால்களில் ஆணி அடிக்கப்பட்டது. விலாவில் குத்தப்பட்டார், தலையில் முள்முடி வைத்து அடிக்கப்பட்டார்.
7) Ohm Shri vruksha shul aruthaya namaha: Oh Lord who offered yourself as a sacrifice on a trishool like tree (three headed tree ), we praise you.
ஓம் ஸ்ரீ விருக்ஷ ஷுல் அருத்தாய நமஹ: , மரத்தினால் ஆன (மூன்று முகப்பினால் ஆன மரத்தினால் செய்யப்பட்ட கொலைக் கருவி ) போன்ற திரிசூலத்தின் மீது தன்னையே பலியாகக் கொடுத்த இறைவனே, உம்மைப் போற்றுகிறோம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக பலியானார்
8) Ohm Shri mruthyam jaya namaha: Oh Lord who got victory over death, we praise you.
ஓம் ஸ்ரீ ம்ருத்யம் ஜய நமஹ: மரணத்தின் மீது வெற்றி பெற்ற ஆண்டவரே, ( உயிர்த்தெழுந்த வரே ) நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்.
பரிசுத்த வேதாகமம்
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். ஏசாயா 25:8
9) Ohm Shri shibilistaya namaha: Oh Lord who willingly offered your flesh to be eaten by your saints, we praise you.
ஓம் ஸ்ரீ ஷிபிலிஸ்டாய நமஹ: உமது மாம்சத்தை உமது துறவிகள் உண்பதற்காக மனமுவந்து வழங்கிய ஆண்டவரே, நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்.
( கிறிஸ்தவர்கள் இன்றும் திருவிருந்து அதாவது Holy Communion ஆலயத்தில் எடுக்கிறார்கள் அதில் அப்பம் பிட்குதல் என்பது இயேசு கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் கிழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து அவருடைய மாம்சத்தை உண்பதற்கு அடையாளமாகக் கொடுக்கப்படுகிறது. அவருடைய இரத்தம் சிலுவையில் முழுமையாகச் சிந்தப்பட்டது, அதற்கு அடையாளமாகத் திருவிருந்து நடக்கும் போது திராட்சை ரசம் கொடுக்கப்படுகிறது. அது அவருடைய இரத்தத்தைப் பானம் செய்வதற்கு அடையாளம் ஆகும் )
பரிசுத்த வேதாகமம்
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். யோவான் 6:53-54
10) Ohm Shri thatchina moorthyaya namaha: Oh Lord who is seated by the side of the Father, we praise you.
ஓம் ஸ்ரீ தச்சின மூர்த்யாய நமஹ: ஓம் தந்தையின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆண்டவரே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
பரிசுத்த வேதாகமம்
அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். மாற்கு 14:62
11) Ohm Shri maha devayaya namaha: Oh Lord who is Lord of lords, we praise you.
ஓம் ஸ்ரீ மஹா தேவாய நமஹ: பெரிய தேவனே ( oh supreme God ) நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்.
பரிசுத்த வேதாகமம்
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது தீத்து 2:13
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. உபாகமம் 10:17
.
Comments