கலியுகவரதன் யார் ?
கலியுக வரதன் என்றால் கடைசிக் காலத்தில் பூமிக்குத் திரும்பவும் வரும் தெய்வம் ஆகும். அதாவது ஏற்கனவே இந்த பூமிக்கு வந்து பரலோகம் சென்று இருக்க வேண்டும், திரும்பவும் வரவேண்டும். இதைச் சித்தர் அவர்கள் போகநாதர் ஆகிய ஆத்தும மணவாளன் திரும்ப வருவேன் என வாக்குறைத்து சென்றுள்ளதாக கூறுகிறார்.
கலியுகம் = கடைசிக் காலம்
வரதன் = வருது + அவன் ஆகும் ( வருகின்ற அவன் ஆகும் )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கடைசிக் காலம் அல்லது கலியுகம் என்றவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் எழும்புவது அவசியம் ஆகும்.
1) தற்போது நாம் இருக்கும் காலம் எது ?
2) கடைசிக் காலம் என்றால் என்ன ?
3) கடைசிக் காலத்தில் ஏன் தெய்வம் திரும்பவும் வரவேண்டும் ?
4) கடைசிக் காலத்தில் வரும் தெய்வம் யார் ?
இந்த பதிவை நன்கு ஆராய்ந்து படித்தால் அதற்குப் பதில் கிடைக்கும்.
கலியுகவரதன் என்ற வார்த்தைக்கு அனேக விளக்கங்களும், கலியுகம் ஏற்கனவே நடந்து கொண்டு இருப்பதாகவும், கலி காலத்தில் வரக்கூடிய தெய்வம் யார் என்பதற்கு அனேக விளக்கங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. அது சரி தானா என்பதையும் பார்ப்போம்.
1) தற்போது நாம் இருக்கும் காலம் எது ?
நாம் வாழும் இந்த காலம் கிருபையின் காலம் ஆகும் இது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அவர் நமக்காகவும் நமது பாவங்களுக்காகவும் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு பிறகு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரலோகம் சென்று, பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.
அவர் நமக்காகவும் நமது பாவங்களுக்காகவும் பரிந்து பேசும் காலம் முடிவடையும் போது கிருபையின் காலம் முடிவடையும். அந்த நேரத்தில் இயேசு கிறிஸ்து பூமிக்கு இரகசியமாக வந்து தன்னுடையவர்களை அதாவது தனது மணவாட்டி சபையாகி பரிசுத்த ஆத்துமாக்களை மணமுடித்து பரலோகம் செல்வார் அதன் பிறகு கலிகாலம் என்ற கடைசிக்காலம் ஆரம்பம் ஆகும்
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்குத் திரும்பவும் வரும் காலம் என்பது கலிகாலத்தின் அல்லது கடைசிக் காலத்தின் ஆரம்பத்தில் ஆகும்.
அனேகர் கலிகாலம் ஆரம்பித்துவிட்ட்தாகக் கூறுகிறார்கள் அது தவறு, நாம் இருப்பது கிருபையின் காலம் ஆகும்.
கிருபையின் காலத்தில் அனேக தவறுகளுக்கும், தப்புகளுக்கும் மன்னிப்பு கிடைக்கிறது. கடைசிக் காலத்தில் மன்னிப்பு கிடைக்காது.
கடைசிக் காலத்தில் அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். அன்பு இன்னமும் பூமியில் அனகேருடைய உள்ளத்தில் இருக்கிறது. எனவே கலிகாலம் பூமியில் ஆரம்பிக்கப் படவில்லை
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டது போலப் பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டுபோவார்கள், இதனால் பெரும் பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களிலும் ஆலயங்களிலும் தினசரி வழிபாடுகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் கிருபையின் கால முடிவு அடையும் அதன் பிறகு கடைசிக் காலம் ஆரம்பிக்கும். இதையே சித்தர் கோரக்கர் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கடைசி கால முடிவில் அவர் நியாயாதிபதியாக வந்து அந்திக்கிறிஸ்துவையும், சாத்தானையும் அவனுடைய ஆதரவாளர்களாகிய மக்களையும் நியாயம் தீர்த்து நரகத்திற்கு அனுப்புவார் அது கடைசிக் கால முடிவு ஆகும்.
பின்பு இயேசு கிறிஸ்து 1000 வருட காலம் இந்த பூமியில் அரசாளுவார். அதன் பிறகு புதிய வானம் புதிய பூமி உண்டாகும் நாம் அவரோடு கூட யுகா யுகமாக வாழுவோம். அதையே நாம் நித்திய வாழ்க்கை அல்லது பரலோக வாழ்க்கை எனக் கூறுகிறோம்.
இதை விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பரிசுத்த வேதாகமத்தை முழுமையாகப் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை
கிருபையின் காலம் முடிவடைந்து கலி காலம் தொடங்குவதற்கு முன்[பாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து அவருடைய தெய்வ மக்களை மருரூபப்படுத்தி அழைத்துச் செல்வார். அதையே பரிசுத்த வேதாகமம் ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாள் என அழகாகக் கூறுகிறது. அவர் வருகை மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல இருக்கும்.
பரிசுத்த வேதாகமம்
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். மத்தேயு 24:27
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். 1 தெச 4; 16-17
இயேசு கிறிஸ்து ஆத்தும மணவாளன் ஆவார் அதையே சித்தர் கோரக்கர் அவர்கள் இயேசு கிறிஸ்துவை "போக நாதர்" என்று அழைக்கிறார்.
போக நாதர் அவர்களை பற்றி சித்தர் கோரக்கர் அவர்கள் தனது “சந்திரரேகை” நூலில் குறிப்பிட்டுள்ளார், போக நாதர் அவர்கள் இந்த பூமிக்குத் திரும்பவும் வருவார் என வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும், போக நாதர் வரும் நேரத்தில் சமாதியாய் இருக்கும் சித்தர் கோரக்கர் அவர்கள் சமாதியில் இருந்து அவருடைய உடல் ஆத்துமாவுடன் இனைந்து ஜோதி லிங்கமாகத் தோன்றி புறப்படுவதாகவும், போக நாதர் எந்த சந்தர்ப்பத்தில் பூமிக்குத் திரும்ப வருவார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்
போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள் !
***********************************************
பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான கோரக்கர் தனது “சந்திரரேகை” நூலில் ”போகநாதர்” பூமிக்கு மீண்டும் வருவதாகக் கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்குத் திரும்புவார் என்ற விவரத்தினை விவரித்திருக்கிறார்.
போக நாதர் யார் ?
நாம் இயேசு நாதரைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். போக நாதர் என்பது ஒரு புது பெயராகவும் புரியாத ஒரு பெயராகவும் இருக்கிறது. போக நாதர் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
போகம் என்ற வார்த்தைக்குத் திருமண சம்பந்தம் என அர்த்தம் அதாவது மணவாட்டிக்கும் மணவாளனுக்கும் ஏற்பட்டுள்ள பந்தம் ஆகும்.
நாதன் என்பது மணவாளன் அல்லது கணவனைக் குறிக்கும்
போக நாதர் என்பது நமது ஆத்தும மணவாளன் ஆவார்,
போக நாதர்
அதாவது இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வருவார். அப்படி தெய்வம் வரும் போது இறந்து அடக்கம் பண்ணப்பட்ட நம்முடைய உடலோடு நமது ஆத்துமா சேர்ந்து மறுரூப்பட்ட சரீரமாக எழுந்திருப்போம், அவர் நமது ஆத்துமாவுக்கும் அவருக்கும் ஒரு திருமண சம்பந்தம் ஏற்படுத்தி நம்மை மறுரூபமாக்கப்பட்ட சரீரமாக அதாவது ஜோதி லிங்கமாகப் பரலோகம் அழைத்துச் செல்லும் ஆத்தும நாதர் ஆவார்
போக நாதர் யார் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளப் போக நாதர் யார் ? என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
சித்தர் கோரக்கர் அவர்கள் போக நாதரைப் பற்றி எழுதிய பாடல்
********************************************************************************************************
"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"
- சந்திர ரேகை
விளக்கம்
பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும் பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் காலகட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளிவிட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதி லிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
http://thamilsiddhas.blogspot.com/2017/03/blog-post_24.html
.2) கடைசிக் காலம் என்றால் என்ன ?
கடைசிக் காலத்தில் அநேகர் வந்து, இயேசு கிறிஸ்து என்ற ( பெயர்) நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். அதிலும் குறிப்பாக அந்தி கிறிஸ்து என்று தன்னை அறிவித்துக் கொண்டு உலகத்தை எல்லாம் ஒரு நாடு, ஒரு ஆட்சியாளர் என்ற குறிக்கோளோடு ஆளுகை செய்யும் World Leader வரவேண்டும். அந்தி கிறிஸ்து வந்து எருசலேம் தேவாலயத்தில் அமர்ந்து இந்த பூமியை ஆளவேண்டும். பரிசுத்த வேதாகமம் அவனை பாழக்குகிற அருவருப்பு எனக் கூறுகிறது.
எருசலேம் தேவாலயம் இன்று வரை இடிக்கப்பட்ட நிலைமையில் உள்ளது. அந்த தேவாலயம் கட்டப்பட வேண்டும். அது கடைசிக் காலத்தின் ஆரம்பம். அந்தி கிறிஸ்துவின் ஆட்சி 7 ஆண்டுகள் ஆகும் அது உலக மக்களுக்கு அது இக்கட்டான காலங்கள் ஆகும். அந்த 7 வருட ஆட்சியைத் தான் நாம் 7 1/2 நாட்டுச் சனி என அழைக்கிறோம்.
கடைசிக் கால ஆரம்பத்தில் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். கிறிஸ்தவர்களாக இருப்பதின் நிமித்தம் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள் ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;......
பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 24 : 3-14 பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
II தீமோ 1 : 1-5 . மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;......
மத்தேயு 24 : 15-24 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக் கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்
3) கடைசிக் காலத்தில் ஏன் தெய்வம் திரும்பவும் வரவேண்டும் ?
கிருபையின் காலம் முடிவடைந்து கலி காலம் தொடங்குவதற்கு முன்[பாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து அவருடைய தெய்வ மக்களை மருரூபப்படுத்தி அழைத்துச் செல்வார். இயேசு கிறிஸ்து அவருடைய மக்களை அந்தி கிறிஸ்துவின் உபத்திரவ காலத்துக்குள்ளாகச் செல்லாதவாறு காப்பாற்றி பரலோகம் அழைத்து செல்வார். அதையே பரிசுத்த வேதாகமம் ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாள் என அழகாகக் கூறுகிறது. அவர் வருகை மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல இருக்கும்.
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டது போலச் சித்தர் கோரக்கர் தனது "சந்திரரேகை” யில் கூறுகிறார். போக நாதர் என்ற பக்கத்தைப் பார்க்கவும். (GO)
பரிசுத்த வேதாகமம்
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். ---- மத்தேயு 24:27
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். ----- 1 தெச 4; 16-17
4) கடைசிக் காலத்தில் வரும் தெய்வம் யார் ?
4.1 இயேசு கிறிஸ்து
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் கலியுக வரதனாக வருவார் என கூறுகிறது.
அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படு முன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். II தெச 2
4.2 போக நாதர் ( ஆத்தும மணவாளன் )
சித்தர் கோரக்கர் அவர்கள் போக நாதர் வருவார் என்றும் அவர் வரும் போது தனது சமாதியில் இருந்து த்ன்னுடைய ஜோதி லிங்கம் புறப்படும் என எழுதிய்ள்ளார். அவர் சொல்லியிருப்பது ஆத்தும மணவாளனாகிய இயேசு நாதரையே குறிக்கும்.
4.3 கிறிஸ்ணன்
கிறிஸ்ணா அவர்கள் கலி காலத்தில் வந்து பொல்லாதவர்களை அழிப்பதாக எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்ணா என்பது கிறிஸ்து என்ற வார்த்தைக்குச் சமஸ்கிருத வார்த்தையாகும். ஆராய்ந்து பார்த்தால் அதுவும் இயேசு கிறிஸ்துவே ஆகும்
4.4 முருகன்
சிலர் முருகன் கலியுகவரதனாக வருவார் எனக் குறிப்பிடுகின்றனர். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தன் எனவும் குறிப்பிடுகின்றனர்.
கந்தன் என்பது கன்றன் என்ற வார்த்தையில் இருந்து வந்தது ஆகும். கந்தன் என்றால் கன்று + அவன் ஆகும்.
கந்தன் - கன்றன்
இந்த பாடலில் கன்றன் என்ற வார்த்தை வருகின்றது, கன்றன் என்ற வார்த்தைக்குக் கன்று + அவன் ஆகும். கன்று என்பது பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. இந்த வார்த்தையாகிய கன்றன் மருவி கந்தன் என்று அழைக்கப்படுகிறது.
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்
குன்றன்; குழகன் குடவாயில்தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே
இயேசு கிறிஸ்து வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley என அழைக்கப்படுகிறார். எனவேதான் அவரை அழகன் அல்லது முருகன் என அழைக்கிறோம். முருகன் என்றால் அழகன் என்று அர்த்தம் ஆகும்.
அவர் சிலுவையில் அறையப்பட்ட போது இரண்டு கள்ளர்களுக்கு நடுவே உள்ள சிலுவையில் அறையப்பட்டார். அதனால் கள்ளனில் ஒருவராக என்னப்பட்டார். எனவே அவரை நாம் கள்ளழகர் என அழைக்கிறோம்.
4.5 ஐயப்பன்
சிலர் ஐயப்பன் கலியுகவரதனாக வருவார் எனக் குறிப்பிடுகின்றனர்.
ஐயப்பன் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது
தெய்வம் கன்னியின் வயிற்றில் பிறந்தவர். அதாவது ஒரு உலக மனிதனின் துணையில்லாமல் அதாவது கடவுளின் வார்த்தையாலும், அவரது ஆவியினாலும் இந்த பூமியில் பிறந்தவர் தான் பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்து.
இயேசு கிறிஸ்து கன்னியின் மூலமாகப் பிறந்தவர் அதாவது ஒரு ஆண் துணையில்லாமல் பிறந்தவர் ஆகும்.
தெய்வம் ஒரு கன்னியின் மூலமாகத்தான் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது தெய்வத்தின் திட்டம்,
ஐயப்பன் கதையில் அந்த கன்னியாக இந்த பூமியில் வந்து பிள்ளை தெய்வத்தை உண்டாக்கிக் கொடுத்தவருக்கு மோகினி என்ற பெயர் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மோகினி என்றால் அழகான பெண் என அர்த்தம்
( இந்த பூமியில் பிறந்த ஒரு கன்னிப்பெண் பிள்ளை பெற்றால் அது பாவமாகக் கருதப்படும் எனவே தெய்வ நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண் துணை இல்லாமல் பிள்ளை தெய்வம் உருவானதாகக் கூறப்படுகிறது அதாவது தெய்வமே பெண்ணாக மாறி தெய்வத்தோடு சேர்ந்து ஐயப்பன் உருவானதாக கூறப்படுகிறது )
மேலே கூறப்பட்ட வகைகளை ஆராய்ந்து அறிந்து கொள்வோம்
guru