top of page

குறள் 389 -- கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொண்ட தெய்வம்

 

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு

 

இந்த குறள் இறைமாட்சி என்ற 39ம் அதிகாரத்தில் கீழ் வருகிறது. இந்த அதிகாரம் இறைவனின் பெருமை கூறும் ஒரு அதிகாரம் ஆகும். இறைவனின் பெருமை கூறும் அதிகாரத்தில் இறைவனின் பெருமை பேசுவதற்குப் பதிலாக நாட்டை ஆண்ட அரசனின் பெருமை பேசுவதாக நினைத்து அர்த்தங்கள் எழுதப்பட்டுள்ளது.  நாம் தெய்வத்தை அரசன் (பதி) என்றே அழைக்கிறோம். எனவே இந்த அதிகாரத்தில் வரும் அரசன், வேந்தன், நிலன் ஆள்பவர், மற்றும் மன்னன் என்ற வார்த்தைகள் அனைத்தும் இறைவனையே குறிக்கிறது.

( உதாரணமாகத் திருப்பதி, ( திரு+ பதி ) கணபதி (கணங்கள் + பதி ) தியாகராஜன், நடராஜன், என்று பல பெயர்களில் தெய்வத்தை அழைக்கிறோம். )

 

இந்த அதிகாரத்தில் குறள் 390 இல் செங்கோல் என்ற வார்த்தை வருகிறது அந்த வார்த்தை அரசனின் செங்கோலைப் பற்றிப் பேசவில்லை அது இறைவனின் செங்கோலாகிய சிலுவை மரத்தைப் பற்றியே பேசுகிறது.

 

குறள் 389 சிலுவையில் கொலை செய்யப்படும்படி கைது செய்யப்பட்டதில் இருந்து மரணம் வரை கடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொண்டதைப் பற்றியும், அவர் சிலுவையில் தன்னையே தியாகமான பலியாக ஒப்புகொடுத்தைப் பற்றியும் பேசுகிறது.

 

குறள் 381 தெய்வத்தை நரசிம்மன் என்று கூறுகிறது.

குறள் 381 தெய்வத்தைப் படைகளை உடையவர் அதாவது தண்டீஸ்வரர் என்று கூறுகிறது  குறள் 382 தெய்வத்தை மெய்ஞ்ஞானமுடையவர் என கூறுகிறது

குறள் 383 தெய்வத்தை உறங்காமல் பாதுகாப்பவர் என கூறுகிறது.

குறள் 384 தெய்வத்தைப் பரிசுத்தம் உள்ளவர் என கூறுகிறது.

குறள் 385 தெய்வத்தை வேறுபி ரித்தவர் என கூறுகிறது.

குறள் 386 தெய்வத்தை ஏழைக்கோலம் எடுத்தவர் என கூறுகிறது.

குறள் 387 தெய்வத்தை வார்த்தையினால் இந்த உலகத்தை உண்டாக்கினவர் என கூறுகிறது.

குறள் 388 தெய்வத்தை இரட்சிப்பவர் என கூறுகிறது.

குறள் 389 தெய்வத்தைத் தியாகராஜன் (பலியானவர்) என கூறுகிறது.

குறள் 390 தெய்வத்தைச் செங்கோலில் (சிலுவையில்) மரித்தவர் என கூறுகிறது.

இந்த அதிகாரம் முழுமையாக ஆராய்ந்து பார்த்தால், இறைமாட்சி என்பது இறைவனின் பெருமை என்பதே ஆகும்.

 

குறள் 389  kural 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு

 

செவிகைப்பச்    = சிலுவை மரணத்தின் போது செவி கசக்கும் படி குறைகூறினவர்களின்

சொற்பொறுக்கும் = கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொண்ட

பண்புடை        = குணத்தை உடைய

வேந்தன் கவிகை   = தெய்வத்தின் தியாகத்தின்

கீழ் தங்கும் முலகு  = கீழே வந்து இளைப்பாறும் இந்த உலக மக்கள்

 கைத்தல், வினைச்சொல். அலங்கரித்தல் · அலைத்தல் · கசத்தல்; நைந்து வருந்துதல்; சினத்தல் · செலுத்துதல் · ஊட்டுதல் -----   கவிகை  --- வளைவு; குடை; நன்மை தீமை; ஈகம், தியாகம்.

 

விளக்கம்

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்க்காகக் கைது செய்ததில் இருந்து அவர் சிலுவையில்  மரணத்தை சந்திக்கும் வரை அவரை அனேகர் நிந்திக்கவும், பரியாசம் பண்ணவும், கடும் செற்கள் பேசவும் செய்தனர்,  அப்படி மக்கள் அவர் செவி கசக்கும் படி குறைகூறினதையும், அவர்களின் கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொண்டு தன்னை தானே சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். அப்படிப்பட்ட குணத்தை உடைய தெய்வத்தின் தியாகத்தின் கீழே உலகத்தின் மக்கள் அனைவரும் வந்து இளைப்பாறுவார்கள்.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,  அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.  மத்தேயு 27:28-30 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:  தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:  மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்    மத்தேயு 27:39-44

இளைப்பாறுதல்

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.  நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.  மத்தேயு 11: 28-29

குறள் 381: kural 381

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு

 

படை   = சேனைகள்

குடி   =   வேறு பிரிக்கப்பட்ட மக்கள்

கூழ் = தனக்கென்று ஆகாரம் உடையவர் / பிதாவின் சித்தம் செய்பவர்

அமைச்சு = தனக்கென்று தனி ராஜ்யம் உடையவர்

நட்பு  =  தோழமை / உயிர் கொடுக்கும் நட்பு

அரண் = கோட்டையாக இருப்பவர் (கோட்டை ஈஸ்வரன்)

ஆறும் உடையான்  = ஆறு குணங்களை உடையவன்

அரசருளேறு = மனித உருவில் வந்த தெய்வமாகிய நரசிம்மன் (Lion of Jodah)

 

விளக்கம்

1) தனக்கென்று சேனைகளை உடையவர் -- சேனைகளின் கர்த்தர் (lord of host,)  அல்லது தண்டீஸ்வரர் ஆவார்

( சங்கீதம் 84:12  சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான். )

தண்டீஸ்வர்ர் என்ற பக்கத்தை பார்க்கவும்   ( GO )

 

2)  குடி என்பது மக்களைக் காண்பிக்கிறது, அதாவது தெய்வம் தனக்கென்று ஒரு கூட்டம் மக்களை தெரிந்தெடுத்து வேறுபிரித்து வைத்துக் கொண்டார்.

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.  சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்  .உபாகமம் 7:6-7

 

3) கூழ்  = உணவு,  தெய்வம் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் ஆகிய இரட்சிப்பு மற்றும் மன்னிப்பு மற்றும் பிதாவின் சித்தம் செய்வது அவருக்குச் சிறந்த உணவு ஆகும்.

இதைப் பற்றி திருவள்ளுவர் கூறும் போது தனது குறள் 550இல் கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் எனக் கூறுகிறார்.

இதைப் பற்றி மேலும் அறியக் குறள் 550 -- மன்னிப்பு - சிலுவையில் முதல் வார்த்தை என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. யோவான் 4:34

 

4) அமைச்சு என்பது ராஜ்யம் ஆகும். தெய்வம் தனக்கென்று உள்ள பரலோக ராஜ்யத்திற்கு மக்களை இரட்சித்து அழைத்துச் செல்வதே ஆகும்

காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். மாற்கு 1:15

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் ......( மரணத்திற்கு ) ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடி யிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். யோவான் 18:36

 

5)  நட்பு  என்பது அன்பு மற்றும் தோழமை ஆகும். தெய்வம் மனிதர்களிட்தில் அன்பாகவே இருக்கிறார் அதே போலத் தனது சீடர்களைத் தோழமை குணத்துடனே நடத்தினார்.

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.  1யோவான் 4:16

அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். மத்தேயு 9:15

 

6) அரண் என்பது கோட்டை ஆகும் தெய்வம் நமக்குக் கோட்டையைப் போலப் பாதுகாப்பு கொடுப்பவர் எனவே தான் அவரை கோட்டை ஈஸ்வரன் என அழைக்கிறோம்.

என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.  சங்கீதம் 31:3

மேற்கூறிய ஆறு குணங்களையும் உடையவர் மனித உருவில் வந்த தெய்வமாகிய நரசிம்மன் (Lion of Jodah) ஆவார்.

குறள் 382:  kural 382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு

 

அஞ்சாமை = தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவை மரணத்தைப் பயம் இல்லாமல் ஏற்றுக்கொண்டது

ஈகை         = மக்களுக்காக  தன்னையே கொடையாக / பலியாக கொடுத்தல்

அறிவு     = ஞானம், அறிவு, புத்தி (Wisdom, knowledge, understanding) ஆக இருப்பவர்

ஊக்கம்       =  சகலத்தையும் செய்ய வல்லவர்

இந்நான்கும் எஞ்சாமை = இந்த நான்கும் முழுமையாக இருத்தலே

வேந்தற் கியல்பு    =  தெய்வத்தின் சுபாவம் அல்லது குணம்

 

விளக்கம்

 

1) அஞ்சாமை என்பது பயம் இல்லாமல் இருத்தல் ஆகும், இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்திற்கு அஞ்சாமல் ஏற்றுக்கொண்டார், அவர் எதிர்க்கவும் இல்லை, பின்வாங்கவும் இல்லை

பரிசுத்த வேதாகமம்

கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஏசாயா 50:5-6

.......... அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.  யோவான் 19:7-11

 

2) ஈகை என்பது கொடுத்தல் ஆகும், இயேசு கிறிஸ்து சிலுவையில் தன்னை தான் ஒப்புக்கொடுத்தார்,

பரிசுத்த வேதாகமம்

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.  யோவான் 15:13

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.   தீத்து 2:14

 

3) அறிவு என்பது ஞானம், அறிவு, புத்தி இம்மூன்றையும் குறிக்கும், இயேசு கிறிஸ்து ஞானம் என்று அழைக்கப்பட்டார், ஞானம், அறிவு புத்தியும் அவருடையது

 

பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.   நீதி 2:6

ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.  நீதி 8 : 14

 

4 ) ஊக்கம் என்பது வல்லமையாகும், இயேசு கிறிஸ்து வல்லமை நிரைந்தவராக இருந்தார், வல்லமை அவருடையது.

 

பரிசுத்த வேதாகமம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.  ஏசாயா 9:6

மேற்கூறிய நான்கு குணங்களைக் கொண்டவர் தெய்வம் (வேந்தர்) ஆவார்.

குறள் 383:  kural 383

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு

 

தூங்காமை     = உறங்காமல் பாதுகாத்தல்

கல்வி         =  பரலோக ராஜ்யத்தைப் பற்றிக் கற்பித்தார்

துணிவுடைமை =  நம்பிக்கை அல்லது விசுவாசம் உண்டாக்குகிறவர்

அம்மூன்றும் நீங்காது = அந்த மூன்றும் நீங்காது

நிலன் ஆள்பவற்கு  =  இந்த பூமியாகிய நிலப்பரப்பை ஆள்கின்ற மனித குமாரனாகிய தெய்வத்திற்கு

 

கல்வி என்ற சொல்லின் பொருள்இந்தச் சொல் ēducātiō என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த ēducātiō சொல்லானது வளர்த்தல் என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் இது கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் பொருளைத் தரும்

துணிவு  ...... தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்;

 

விளக்கம்

இந்த பூமியையும் பூமியின் மக்கள் உள்ளங்களையும் ஆள்பவரான மனித குமாரனாகிய  தெய்வம் உறங்காமலும் தூங்காமலும் மனிதர்களை பாதுகாக்கும் குணமுடையவர். அவர் உலகத்தில் உள்ள மனிதர்களுக்குப் பரலோக ராஜ்யத்தை பற்றிக் கற்பித்து பரலோகம் அழைத்துச் செல்லக் கூடியவர் ஆவார். அதே போல் அவரையே தங்கள் நம்பிக்கையாகக் கொண்டு இந்த உலகத்தில் வாழக் கற்றுக்கொடுத்தவர் ஆவார். இந்த மூன்று காரியங்களையும் விடாமல் அதாவது நீங்காமல் செய்பவரே தெய்வம் ஆவார்.

 

பரிசுத்த வேதாகமம்

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, ........(நம்மை) காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம் 121: 2-4

 

அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.  லூக்கா 4:43

 

இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். 2பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக்  கற்பித்தார்.  ----- யோவான் 8:2 திருவிவிலியம்

 

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.    நீதி 3:26

.....................விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;  எபிரெயர் 12:1

குறள் 384: kural 384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு

 

அறன்  = தெய்வத்தின் சிலுவை மரணம்

இழுக்காது =  ஒருவனை வழுவாதபடி  காக்கும்

அல்லவை நீக்கி = அறத்தினால் உண்டாகும் நன்மைகளுக்கு எதிரானவைகளை நீக்கி, அதாவது அவனது பாவத்தை நீக்கி

மறன்          = பாவத்தை கொண்டுவருபவன்

இழுக்கா = நீக்கும்

மானம் = பரிசுத்தம், கற்பு

உடையது அரசு = உடையவர் தெய்வம்

 

விளக்கம்

தெய்வத்தின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் நன்மையாகிய இரட்சிப்பு, அல்லது ஆத்தும மீட்பு இவற்றை ஒரு மனிதனின் ஆத்துமா அடைவதைத் தடைபண்ணும் தீய சக்திகளை அழித்து அதாவது மனிதனின் பாவத்தை நீக்கி நித்திய வாழ்க்கையாகிய பரலோக வாழ்க்கை தருவதும்,

ஒரு மனிதனின் வாழ்வில் ஆத்தும மரணத்தை கொண்டுவரும் தீயவனை ( சாத்தானை ) அவனுடைய வாழ்வில் இருந்து நீக்குவதும் பரிசுத்தத்தை தன்னோடு கொண்டுள்ள தெய்வம் ஆகும்.

மறம்  maṟam   s. wrath, anger, சினம்; 2. injury, கெடுதி; 3. murder, கொலை; 4. sin, vice, evil, பாவம்; 5. Yama, நமன்;

மணக்குடவர் உரை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது, அரசன் என்ற இடத்தில் தெய்வம் என்று வரவேண்டும்.   மணக்குடவர் உரை ....   அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.   ஏசாயா 53:12

குறள் 385: kural 385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

 

இயற்றலும்     = உருவாக்குதல்

ஈட்டலும்       = சம்பத்தாக சம்பாதித்தல்

காத்தலும்       = கடைசிவரை பாதுகாத்தலும்

காத்தவகுத்தலும் = காத்து  வேறு பிரித்தல்

வல்ல தரசு      =வலிமையுள்ள தெய்வம் ஆகும்

வகுத்தல்   ...கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்;

 

விளக்கம்

மனிதனைப் படைத்து, தனக்கு சொந்த ஜனமாக உருவாக்கி, தனக்காக வேறு பிரித்து, உலக முடிவுவரை அல்லது அவனது மரணம் வரை பாவத்தில் இருந்து விளக்கி பாதுகாத்தல் வல்லமை நிறைந்த தெய்வத்தின் வேலையாகும்

 

1)  இயற்றலும் என்றால் உருவாக்குதல், உண்டாக்கினார்  என அர்த்தம் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.  மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7  

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.  ஆதியாகமம் 1:16

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.   ஆதியாகமம் 1:1

 

  2)  ஈட்டல் என்றால் சம்பத்தாக சம்பாதித்தல் அல்லது சொத்தாகச் சம்பாதித்தல் ஆகும், இயேசு கிறிஸ்து தன்னுடைய இரத்தத்தினால் மக்களை மீட்டு தனக்கு சொந்தமான சபையாக உருவாக்கினார்.     

ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.   அப்போஸ்தலர் 20:28

நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.  சங்கீதம் 74:2

 

3) கடைசிவரை பாதுகாத்தலும்  என்றால் மனிதனை இரட்சித்து அவனைப் பரலோகம் சென்று சேரும் வரை பாவத்தில் இருந்து பாதுகாப்பதுவே தெய்வத்தின் வேலையாகும். அதற்காகவே அவர் சிலுவையில் இரத்தம் சிந்தினார்.

மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க ( கடைசி வரை காப்பாற்ற ) வல்லவராயுமிருக்கிறார்.  எபிரெயர் 7:25

 

4) காத்து வகுத்தலும் என்றால் காத்து  வேறு பிரித்தல் அல்லது இரட்சித்து தனக்கென்று வேறு பிரித்தல் ஆகும்.

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.  உபாகமம் 14:2

குறள் 386: kural 386

காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

 

காட்சி கெளியன்  =  ஏழை கோலம் எடுத்து இந்த பூமிக்கு வந்த தெய்வம்

கடுஞ்சொல்லன் அல்லனேல் = அன்பான வார்த்தைகளைப் பேசுபவர் தெய்வம்
மீக்கூறும் மன்னன் நிலம் = அந்த தெய்வம் வாழும் நிலத்தை அதாவது வான் உலகத்தை உயர்த்திக் கூறுவார்கள் உலக மக்கள்

 

மணக்குடவர் உரை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது, அரசன் என்ற இடத்தில் தெய்வம் என்று வரவேண்டும்.  பரிமேலழகர் உரை  காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்பதற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் .

 

விளக்கம்

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் உள்ள மனிதர்களை இரட்சிப்பதற்காக ஏழ்மை கோலம் எடுத்துப் பிறந்தார், அவர் பார்பதற்கு எளிமையான தோற்றம் உள்ளவராக இருந்தார். அவர் வார்த்தைகள் கிருபை நிறைந்ததாகவும், அன்பு நிறந்ததாகவும் இருந்தது. அவர் சிலுவை மரணத்திற்குப் பிறகு உயிர்த்து பரலோகம் சென்றார், அந்த தெய்வம் வாழும் பரலோகத்தை உலக மக்கள் உயர்வாக நினைப்பார்கள்.

 

பரிசுத்த வேதாகமம்

வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.  மத்தேயு 25:36

எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள். லூக்கா 4:22

குறள் 387:   kural 387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

 

இன்சொலால்    =  இனிய வார்த்தையால் இந்த உலகத்தையும், மனிதர்களையும்

ஈத்து     = உருவாக்கி,

அளிக்க    =  அருள் செய்த

வல்லாற்குத் =  வல்லவனாகிய தெய்வத்திற்கு

தன்சொலால்  இவ்வுலகு  = தன்னுடைய வார்த்தையால் உண்டான இவ்வுலக மக்களை
தான் கண்டு  = தான் கண்டுபிடித்து

அனைத்து =  அனைத்துக்கொள்வது தெய்வத்தின் தன்மையாகும்

 

 

விளக்கம்

தன்னுடைய இனிமையான வார்த்தையினால் உலகத்தையும், மனிதர்களையும் (ஈத்து) படைத்து தன்னுடைய அருளை அளவில்லாமல் அளித்த வல்லவனாகிய தெய்வத்துக்கு, தன்னை விட்டு பாவத்தினால் பிரிந்து போன ( தன் வார்த்தையினால் உண்டான )  உலகத்தையும் அதில் உள்ள மனிதர்களையும் தானே கண்டுபிடித்து அனைத்துக் கொள்வது தெய்வத்தின் தன்மையாகும்

 

பரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. சங்கீதம் 33:6

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.   ஆதி 1:27

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.  யோவான் 14:3

குறள் 388: kural 388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்

 

முறைசெய்து  =  பூலோகத்திற்கும், பரலோகத்திற்கும் உலகத்திற்கு ஏற்ற நன்மைகளை மக்களுக்குச் செய்து

காப்பாற்றும் மன்னவன்   = இரட்சிக்கும் தெய்வமே

மக்கட்கு இறை      = உலக மக்களின் இறைவன்

என்று வைக்கப் படும் =  என்று மதிக்கப்படுவார் அல்லது போற்றப்படுவார்

 

விளக்கம்

தெய்வம் என்பது ஒரு மனிதனுக்குப் பாவத்தில் இருந்து விடுதலை கொடுத்து இரட்சித்து இந்த பூலோக நன்மைகளையும் பரலோக நன்மைகளையும் அளிக்க வேண்டும், அப்படிப் பட்ட தெய்வமே உலக மக்களுக்கு இறைவன் ஆவார்.

 

பரிசுத்த வேதாகமம்

அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,  இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  மாற்கு 19:29-30

குறள் 390: kural 390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

 

கொடை          = தியாகம், பலியானது, giving away

அளி                  =  அருள் என்ற பரிசுத்த ஆவியை அளித்தல்

செங்கோல்  = இரத்தம் சிந்தப்பட்ட மரமாகிய சிலுவை

குடியோம்பல் = மக்களைக் காப்பாற்றுதல் அல்லது மீட்டுக்கொள்ளுதல்

நான்கும் உடையானாம் = நான்கு குணங்களும் உடையவர்தான் தெய்வம்

வேந்தர்க் கொளி          =  அந்த தெய்வத்துக்கு மட்டுமே புகழ்

 

 (ஓம்புதல் = காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; )

 

விளக்கம்

அநாதித் தீர்மானத்தின் படி அல்லது தெய்வானையின் படி இந்த உலகத்துக்கு வந்து 3. செங்கோலாகிய சிலுவையில் தன்னைத்தான் 1. கொடையாக அல்லது பலியாகக் கொடுத்து, இரத்தம் சிந்தி மரித்து பூமியில் உள்ள மக்களுக்கு ஒரு 4. இரட்சிப்பை அல்லது மீட்பைக் கொடுத்து, தான் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று பரிசுத்த ஆவியாகிய தெய்வத்தின் 2. அருளை இந்த பூமிக்குக் கொடுத்து  இருக்கக் கூடிய நான்கு குணங்கள் உடையவராகிய தெய்வத்துக்கு மட்டுமே புகழ் உண்டாகும்.

 

பரிசுத்த வேதாகமம்

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் (செங்கோலாகிய சிலுவையில்) பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:2

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.   யோவான் 14:26

guru

bottom of page