top of page
இதிகாசங்கள்

"இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை".   "என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது". matthew 13:34-35
 
இதிகாசம் என்ற வார்த்தை ஒரு சமஸ்கிருத வார்த்தை அதன் அர்த்தத்தை  பார்க்கும் போது அது ஐதிகப்பிரமானம் அல்லது உவமை அல்லது செவிவழிச் செய்தி அல்லது ஒரு உதாரணம் ஆகும் ( Examble, Illustration or parable )
 
உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விசயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு சிறப்பிக்கப்படும் பொருளை விளக்குவதற்காகவோ அழகுபடுத்துவதற்காகவோ பயன்படுத்துவர்.
இதிகாசங்கள் என்பவைகள் ஒரு தெய்வத்தைப் பற்றி நேரடியாக கூறுபவைகள் அல்ல. இந்த உவமைகளில் வரும் நிகழ்வுகள் நடந்தவைகளும் அல்ல, அதில் கூறப்பட்ட பெயர்கள் கடவுளின் பெயர்களும் அல்ல. ஒரு மனிதன் பரலோக ராஜ்யம் செல்ல தன் ஐம்புலங்களையும், ஆத்துமாவையும், சாத்தானிடம் இருந்து பாதுகாத்து இந்த பூமியில் வாழவேண்டும். அப்படி வாழும் போது ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்கள் பற்றிக் கூறுவது தான் இந்த இதிகாசங்கள்.  இதிகாசங்களுக்குள் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருக்கும் போது தம்முடைய சீடர்களிடமும், மக்களிடமும் உவமைகளாகவே பேசினார். அவர் பரலோக ராஜ்யத்தைப் பற்றியும், மனிதனுடைய வாழ்க்கை முறைகள் பற்றியும் சுமார் 40 முறைகள் பேசியுள்ளார். அதைக் கீழே பார்க்கலாம்.

Back to Vedas by NimathiNilayam - Blog by Mishra Pushkar
இந்த back to vedas என்ற கட்டுரை ஒரு சமஸ்கிருத அறிஞரால் எழுதப்பட்டது. அதில் அவர் வேதத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம், ஒன்று சுருதி மற்றொன்று ஸ்மிருதி ஆகும் சுருதி என்பது வெளிப்படுத்தப்பட்டவைகள் ஆகும், ஸ்மிருதி என்பது உவமைகள் ஆகும் எனக் குறிப்பிடுகிறார். அந்த உவமைகளில் மஹாபாரதம், ராமாயணம் மற்றும் பகவத்கீதை ஆகியவை அடங்கும் என எழுதுகிறார். அவருடைய கட்டுரையைக் கீழ் கண்ட வலைத்தளத்தில் பார்க்கலாம்.
https://www.speakingtree.in/blog/back-to-vedas
நாம் அப்படிப்பட்ட இதிகாசங்களைப் படிக்கும் போது அதற்குள் மறைந்திருக்கும் தெய்வத்தையும் அதில் கூறப்பட்டுள்ள ஆத்தும மீட்பைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதிகாசங்கள் எல்லாம் ஒரு ஆத்துமா எப்படி கடவுளிடம் சென்று சேரவேண்டும் என்பதைத் தான் பேசுகின்றன.  

VEDAS:
Veda means, sacred scriptural knowledge. This knowledge was obtained through dedication, devotion and meditation, by several hundred Sages for years.These scriptures are divided into two parts. One in Shruti (which is revealed) and the other one is Smruti (which is believed). Shruti contains Vedas (which gives light or knowledge); Smruti contains Ithihasas (parables like Maha Bharat, Ramayana and Bhagavat Gita) and Puranas. These Ithihasas and Puranas were written at latter date to explain the morals of these Vedas
 
 தெய்வம் தன்னை மறைத்துக் கொண்ட ஒருவர் அதனால் தான் நாம் அவரை பல வழிகளில் தேடுகிறோம். தெய்வம் மனித குமரனாக இந்த பூமியில் உலாவிய போதும் அவர் தன்னுடைய சீடர்களிடம் உவமைகள்    ( இதிகாசங்கள் ) வழியாகவே பேசினார். அதைப் பரிசுத்த வேதாகமத்தில் புதிய ஏற்பாடு பகுதியில் பார்க்கமுடியும். இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருக்கும் போது தனது சீடர்களிடம் 40 முறை உவமைகள் மூலமாக பேசினார். அவை அனைத்தும் ஆத்தும மீட்பு மற்றும் பரலோகத்தைப் பற்றியதாகும்.
 
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். matthew 13:10-13
 
இயேசுவின் உவமைகள்
 
1) The Lamp - Matthew 5:14-16    நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
 
2) The Speck and The Log - Matthew 7:1-5   மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்.
 
3) New Cloth on Old Garment - Matthew 9:16-17 ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான் 
 
4) The Divided Kingdom - Matthew 12:24-30    தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
 
5) The Sower - Matthew 13:1-23  சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
 
6) The Weeds Among the Wheat - Matthew 13:24-30 மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
 
7) The Mustard Seed - Matthew 13:31-32  பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
 
8) The Leaven - Matthew 13:33-34   பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; 
 
9) Hidden Treasure - Matthew 13:44  பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது;
 
10) Pearl of Great Price - Matthew 13:45-46  பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
 
11) The Net - Matthew 13:47-50   பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
 
12) The Scribe  -  Matthew 13:52  பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் 
 
13) The Heart of Man - Matthew 15:10-20     வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

14) The Heart of Man - Matthew 15: 14 குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்

15) The Lost Sheep - Matthew 18:10-14  ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
16) The Unforgiving Servant - Matthew 18:23-35 பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
 
17) Laborers in the Vineyard - Matthew 20:1-16 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது ........  பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; 
 
18) The Two Sons - Matthew 21:28-32 இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
19) The Tenant Farmers - Matthew 21:33-45 தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
 
20) Marriage Feast or Great Banquet - Matthew 22:1-14 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
 
21)  The Thief  Matthew  24:43  திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
 
22) The Budding Fig Tree - Matthew 24:32-35  அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
 
23) The Faithful vs. The Wicked Servant - Matthew 24:45-51 ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுள்ள ஊழியக்காரன் யாவன்?
 
24) The Ten Virgins - Matthew 25:1-13  பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளை பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
 
25) Ten Talents or Gold Coins - Matthew 25:14-30 பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
 
26) The Growing Seed - Mark 4:26-29 தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்கு தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
 
27) The Good Samaritan - Luke 10:29-37 சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெய்யும்  திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனை தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்கு கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
 
28) The Friend at Midnight - Luke 11:5-13 தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்.
 
29) The Rich Fool - Luke 12:13-21  ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
 
30) The Barren Fig Tree - Luke 13:6-9 அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
 
31) The Invited Guests - Luke 14:7-14 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
 
32) The Lost Coin - Luke 15:8-10 ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
 
33) The Prodigal Son - Luke 15:11-32  இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான்.
 
34) The Rich Man and Lazarus - Luke 16:19-31 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
 
35) The Persistent Widow - Luke 18:1-8 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்  பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையை  சொன்னார்.
 
36) The Pharisee and The Tax Collector - Luke 18:9-14  அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
 
37)  Parable of the Sheep and Goats -- Matthew  25:33 செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை
 
38)  Parable of the Salt --  Matthew 5:13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதனால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
 
39) Building the tower   லூக்கா 14:30 கோபுரத்தை கட்ட நினைக்கும் போது ,கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?
 
40)  fighting with the enemy  லூக்கா 14:31 ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனை பண்ணாமலிருப்பானோ?HIS AD
 
இதிகாசம்
itikācam   * n. itihāsa. 1.Ancient epic, as the Rāmāyaṇaசரித்திரம் 2. Tradition,which the Paurāṇikas recognize as a proof;ஐதிகப்பிரமாணம். 3. Example, illustration; உதாரணம் (பிங்.)  
https://agarathi.com/word/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
ஐதிகப்பிரமாணம் என்பது செவிவழிச் செய்தி, தொன்றுதொட்டு வரும் செய்தி ஆகும்
https://www.valaitamil.com/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--tamil-dictionary74346.html
guru
bottom of page