top of page

போக நாதர்   ---   ஆத்தும மணவாளன்

"நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்" Bible

" வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்" Bible

போக நாதர் அவர்களை பற்றி சித்தர் கோரக்கர் அவர்கள் தனது “சந்திரரேகை”  நூலில் குறிப்பிட்டுள்ளார்,  போக நாதர் அவர்கள் இந்த பூமிக்குத் திரும்பவும் வருவார் என வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும், போக நாதர் வரும் நேரத்தில் சமாதியாய் இருக்கும் சித்தர் கோரக்கர் அவர்கள் சமாதியில் இருந்து அவருடைய உடல் ஆத்துமாவுடன் இனைந்து ஜோதி லிங்கமாகத் தோன்றி புறப்படுவதாகவும், போக நாதர் எந்த சந்தர்ப்பத்தில் பூமிக்குத் திரும்ப வருவார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 

"ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார்
அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி

நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"

 

( கீழே கோரக்கர் அவர்களின் முழுப் பாடல் கொடுக்கப்பட்டுள்ளது )

 

போக நாதர் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும்.

 

இயேசு கிறிஸ்து திரும்பவும் வரும் போது சித்தர் கோரக்கர் தனது சமாதியில் இருந்து ஜோதி லிங்கமாக எழும்புவதாக குறிப்பிட்டுள்ளார். நாமும் கூட சித்தர் கோரக்கர் அவர்கள் சொல்லியது போல இயேசு கிறிஸ்து வரும் போது நம் ஆத்துமா எழும்பி தெய்வத்தோடு செல்வோம். இதன் விளக்கத்தைக் கீழே பார்ப்போம்.

இந்த பூமியில் இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்து, மனித குல மீட்பிற்காகச் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரலோகம் சென்று தேவனுடைய வலது பக்கம் அமர்ந்து, நமக்காக பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

 

அவர் கடைசிக் காலம் ஆரம்பிக்கும் போது இந்த பூமிக்கு வந்து தம்முடைய மக்களை தன்னோடு கூட அழைத்து செல்வார்.

 

முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும்  நாமும் இயேசு கிறிஸ்துவுக்கு  எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.

 

போக நாதர் யார் ?

 

நாம் இயேசு நாதரைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். போக நாதர் என்பது ஒரு புது பெயராகவும் புரியாத ஒரு பெயராகவும் இருக்கிறது. சொர்க்க நாதர், பூமிநாதர் மற்றும்போக நாதர் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 

போகம் என்ற வார்த்தைக்குத் திருமண சம்பந்தம் என அர்த்தம் அதாவது மணவாட்டிக்கும் மணவாளனுக்கும் ஏற்பட்டுள்ள பந்தம் ஆகும்.

 

நாதன் என்பது மணவாளன் அல்லது கணவனைக் குறிக்கும்

போக நாதர் என்பது நமது ஆத்தும மணவாளன் ஆவார்,

 

போக நாதர்

அதாவது  இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வருவார். அப்படி தெய்வம் வரும் போது இறந்து அடக்கம் பண்ணபட்ட நம்முடைய உடலோடு  நமது ஆத்துமா சேர்ந்து மறுரூப்பட்ட சரீரமாக எழுந்திருப்போம், அவர் நமது ஆத்துமாவுக்கும் அவருக்கும் ஒரு திருமண சம்பந்தம் ஏற்படுத்தி நம்மை மறுரூபமாக்கப்பட்ட சரீரமாக அதாவது ஜோதி லிங்கமாகப் பரலோகம் அழைத்துச் செல்லும் ஆத்தும நாதர் ஆவார்

 

ஜோதி லிங்கம்.

ஜோதி லிங்கம் என்பது இறந்து போன ஒரு மனிதனின் ஆத்துமா திரும்பவும் அந்த மனிதனின் உடம்போடு கூட இனைந்து தோன்றுவது ஆகும்.

 

லிங்கம் என்பது உடம்பு ஆகும் இதை உறுதிப்படுத்தக் கழுவ லிங்கம் என்பதின் அர்த்தத்தைப் பார்க்க வேண்டும்

 

ழுவ லிங்க அய்யனார்.

கழுவ லிங்க அய்யனார் என்பதற்குக் கழுமரம் ஏற்றப்பட்ட உடம்பை (body) உடைய அய்யனார் என அர்த்தம் ஆகும். இந்த பெயரை கலு சிவலிங்க அய்யனார் என மாற்றி வைத்து உள்ளார்கள்.

 

பரிசுத்த வேதாகமம்

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல,  இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகையும் இருக்கும்.  இயேசு கிறிஸ்து  தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும்  நாமும் இயேசு கிறிஸ்துவுக்கு  எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவுடனே கூட  இருப்போம்   1 தெச 4; 16-17

 

மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்து திரும்பவும் இந்த பூமிக்கு வரும் நாளையாவது நாழிகையையாவது நாம் அறியாதிருக்கிறபடியால் விழித்திருக்கவேண்டும்.

 

அதைப்பற்றித் தெளிவு படுத்த இயேசு கிறிஸ்து கூறிய உவமை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தன்னை மணவாளனாகவும் மனிதர்களைக் கன்னிகைகளுக்கு ஒப்பிட்டு சொல்லுகிறார்.

 

பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. .  புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.  நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.  பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.    மத்தேயு 25 : 1-13

 

இதுவரை போக நாதர் யார் என்பதையும் அதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் கூறுவதையும் பார்த்தோம். இனி சித்தர் கோரக்கர் அவர்கள் கூறியதைப் பார்ப்போம்.


போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள் !
***********************************************************

பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான சித்தர் கோரக்கர் அவர்கள் ”போகநாதர்” பூமிக்கு மீண்டும் வருவதாக வாக்குறுதி கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்குத் திரும்புவார் என்ற விவரத்தினை  தனது “சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார்.


"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே

ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார்
அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி

நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"
- சந்திர ரேகை

http://thamilsiddhas.blogspot.com/2017/03/blog-post_24.html

 

விளக்கம்

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும்,
போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டுபோவார்கள், இதனால் பெரும்
பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து
தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி
விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

("வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்" Bible )

 

தற்போது பரலோகத்தில் வாழும் போக நாதர்  பூமிக்கு ஏற்ற வேளையில் வருவதாக வாக்கு கொடுத்துள்ளார், வரும் அந்த நாளில் எனது சமாதி  (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதி லிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அவருடனே சேர்ந்து நாம் யுகா யுகங்களாக வாழுவோம். அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்  என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார். ( இது இயேசு கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியைக் காண்பிக்கிறது )

 

அவர் இந்த பூமிக்கு திரும்பவும் வரும் காலம் என்பது கலிகாலத்தின் அல்லது கடைசிக் காலத்தின் ஆரம்பத்தில் ஆகும்.

 

அனேகர் கலிகாலம் ஆரம்பித்துவிட்ட்தாகக் கூறுகிறார்கள் அது தவறு, நாம் இருப்பது கிருபையின் காலம் ஆகும். கிருபையின் காலத்தில் அனேக தப்புகளுக்கு மன்னிப்பு  கிடைக்கிறது. கடைசி காலத்தில் அது கிடைக்காது. பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டது போலப் பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டுபோவார்கள், இதனால் பெரும் பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களிலும் ஆலயங்களிலும் தினசரி வழிபாடுகள் குறைந்து  தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் கிருபையின் கால முடிவு அடையும் அதன் பிறகு கடைசிக் காலம் ஆரம்பிக்கும். இதையே சித்தர் கோரக்கர் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

சித்தர்கள் யார் ?

சித்தர்கள் என்பவர்கள் பரிசுத்த தோமா அவர்கள் வழி இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் ஆவார்கள்.

அகத்தியர் அவர்கள் தனது அகத்தியர் ஞானத்தில் சித்தர்கள் யார் என்பதை அழகாகக் கூறுகிறார்

 

அகத்தியர் ஞானம்  30 ல் 23 வது பாடல்

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி

மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்

குணமான மனிதரையும் படைத்த பின்

குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து

கனமான சமுசாரம் ஒன்றிலாமல்

சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி

அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு

அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே

விளக்கம்

இந்த உலகத்துக்கு ஒளியாய் வந்தவரையே வணங்குவாயாக,

( என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான்  (இயேசு) உலகத்தில் ஒளியாக வந்தேன். யோவான் 12:46 )

அவர் இந்த உலகத்தை ஒரு நொடியில் உண்டாக்கி,

இந்த மண்ணில் குணமான மனிதர்களையும் அதாவது ஆதாம் ஏவாள் அவர்களைப் படைத்து,

அதற்குப் பின்பாக இந்த உலகத்தில் தானும் வந்து பிறந்து

இருளில் இருக்கும் மனிதர்களை விடுவிக்கும் இரட்சிப்பை அளிக்கும் குருவாய் வந்து

பிறகு சன்னியாசி போல சிலுவை மரணத்தை ஏற்றுத் தவத்தைக் காட்டி ( தவம் என்பது இரத்தம் சிந்துதல் ஆகும் )

அன்பான சீசர்களை இந்த உலகத்தில் விட்டு அகண்ட தலமாகிய பரலோகம் சென்றவரையே வணங்குவாயாக என்பதாகும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube video  பார்க்கவும்

https://youtu.be/OWekkZCg2sg

 

தவம் என்பது சிலுவை மரணமே ஆகும் இதன் விளக்கத்தைத் தவம் என்ற பக்கத்தில் பார்க்கவும் (GO)

guru

bottom of page