top of page

கார்த்திகை, மார்கழி, தை

கார்த்திகை, மார்கழி, தை என்ற தமிழ் மாதங்கள் இறைவன் வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாக நமது தமிழ் நாட்டில் கொண்டாடப்படுகிறது. பெரிய கார்த்திகை முதல் தை பூசம் வரை விரதம் இருக்கும் பழக்கம் நமது தமிழ் நாட்டில் உண்டு. பொதுவாகவே நமது தமிழ் மாதங்கள் எல்லாம் கடவுளோடு சம்பந்தம் உள்ளவைகளாகவே உள்ளன. அதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

 

பெரிய கார்த்திகை முதல் தை பூசம் வரை நாம் வழிபடும் தெய்வங்களாகிய முருகன், பிள்ளையார், ஐயப்பன் ஆகியவர்களுக்கு விரதம் இருப்பது வழக்கம்  மார்கழி மாதம் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் மார்கழி மாதம் மத்தியில் வருகிறது, அதாவது டிசம்பர் 25ம் நாள் ஆகும்.

 

முருகன்,( அழகானவர் ) பிள்ளையார் ( Son of GOD ) மற்றும் ஐயப்பன் ( ஐந்து காயங்களுக்கு அய்யன் அல்லது ஐந்து புலன்களுக்கு தகப்பன் ) ஆகிய மூவர்களுடைய பெயர்களும்  இயேசு கிறிஸ்துவின் குணங்களைக் குறிப்பதாகவே உள்ளது. அதை[ப் பற்றி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆராய்ந்து பார்க்கவும்.

 

கார்த்திகை

கார்த்திகை என்பது கார் + தீ + கை ஆகும், கார் என்றால் மேகம் என்று அர்த்தம் ஆகும். அதாவது மேகம் மற்றும் தீ ஆகக் காட்சி தரக்கூடிய தெய்வத்தின் கரம் நம்முடன் இருக்கும் மாதம் ஆகும்.

அவர்களோடு மேகஸ்தம்பமாக்வும், அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும் கூடவே சென்றார். அந்த நிகழ்வுகளைப் பரிசுத்த வேதாகமத்தின் யாத்திராகமம்  (book of Exodus ) என்ற அதிகாரம் முழுமையாகப் பார்க்க முடியும்.

 

மார்கழி

 

மார்கழி என்றால் மார் + கழிதல் ஆகும், அதாவது இருள் அல்லது துன்பம் கழிதல் ஆகும்.  அல்லது  மா = மாயை; கழி = கழிதல். அதாவது இருள். துன்பம் அல்லது மாயை கழிந்த மாதம் ஆகும்..

அறியாமையாகிய இருள் மற்றும் துன்பங்கள் நீங்கவும், நம்மை ஆட்கொள்ளும் மாயைகள் நீங்கவும்,. இம்மாதம் நமக்கு உதவுகிறது.

 

தை மாதம்

 

தை மாதம் வருடத்தின் முதல் மாதமான ஜனவரி மாதம் 14ம் தேதியில் ஆரம்பிக்கிறது. இது ஒரு அறுவடையின் மாதமாக  கொண்டாடப்படுகிறது.

 

தை மாதம் முதல் நாள் அதாவது ஜனவரி மாதம் 14 ம் தேதி அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது அதாவது பொங்கல் ஆக கொண்டாடப்படுகிறது. அதே தேதியில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில்  மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. 

இந்த தை மாதம் இஸ்ரவேல் மக்கள் கொண்டாடும் பஸ்கா பண்டிகை அல்லது கூடாரப்பண்டிகை, அல்லது புளிப்பில்லா அப்பப் பண்டிகையோடு சம்பந்தம் உள்ளது.

கார்த்திகை மாதம் முதல் தை முடிய உள்ள மாதங்களை ஆராய்ந்து பார்த்தால் மூன்று மாதங்களின் மையப் பகுதியான  மார்கழி 10 ம் தேதிக்குள்ளாக இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் வருகிறது ( டிசம்பர் 25 )

இந்த மூன்று மாதங்களில் கூறப்பட்ட தெய்வங்கள் தெய்வத்தின் பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவையே குறிப்பதாக உள்ளது. நாம் தெய்வம் யார் என்று அறியாமல் அந்த தெய்வத்தின் குணங்களையே தெய்வமாக வணங்குகிறோம். ( விளக்கம் கீழே ) இதை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே புரியும்

 

கார்த்திகை மாதம்

 

கார்த்திகை மாதம் முருகனுக்கு விரதம் இருப்பது ஆகும், அதே போல் ஐயப்பன் அவர்களுக்கு கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டால் மக்கள் விரதம் இருப்பது வழக்கம்.

கார்த்திகை என்பது கார் + தீ + கை ஆகும், கார் என்றால் மேகம் என்று அர்த்தம் ஆகும். அதாவது மேகம் மற்றும் தீ ஆக காட்சி தரக்கூடிய தெய்வத்தின் கரம் நம்முடன் இருக்கும் மாதம் ஆகும்.

அதனால் தான் தெய்வத்தை கார்த்தீஸ்வரன் என்று அழைக்கிறோம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால்

 

கார்த்தீஸ்வரன் என்ற வார்த்தையை நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டும். கார்த்தீஸ்வரன் என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )

 

கார்த்தீஸ்வரன்  ---    God of fire and Cloud

கார்த்தீஸ்வரன் என்பதற்கு நாம் சரியான ஆர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். கார்த்தீஸ்வரன் என்ற வார்த்தையை கீழ்க் கண்டவாறு பிரித்துப்பார்க்கவேண்டும்.

கார்த்தீஸ்வரன் = கார் +  தீ + ஈஸ்வரன்

கார் = மேகம் ,   தீ   = அக்கினி 

 

 மேகஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் காட்சி தரக்கூடிய இறைவன் ஆகும். (ஸ்தம்பம் = தூண் ). நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நம்முடன் கூடவே மேகமாகவும் அக்கினியாகவும் இருந்து கடைசி வரை நம்மை வழி நடத்தக் கூடிய தெய்வம் என அர்த்தம் ஆகும்.

 

மேகம்  :     மேகம் என்ற வார்த்தை தெய்வத்தைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது முகில் வண்ணன், மேக வண்ணன், திருமால், மேகஸ்தம்பம், pillar of gloud,  எனத் தெய்வத்தை அழைக்கிறோம். எனவே நாம் கார் என்பதற்கு மேகம் என எடுக்க வேண்டும்..

 

பரிசுத்த வேதாகமம்                

யாத் : 13 : 21,22    அவர்கள் இரவும் பகலும் வழி நடக்கக்கூடும் படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.  பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.                                                          

தீ

தெய்வத்தை நாம் அக்கினி மயமான தெய்வம், சேரக்கூடாத ஒழியில் வாசம் பண்ணுகிறவர் என அழைக்கிறோம் எனவே தெய்வத்திற்க்குத் தழல் வண்ணன், செந்தழலோன், அக்கினி ஸ்தம்பம், pillar of fire, பட்சிக்கிற அக்கினி எனப்பெயர்கள் உண்டு

 

வேதாகமம் அக்கினி மயமான தெய்வத்தைப்பற்றிக்கூரும் வார்த்தைகள்

 

உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.                      

 For the LORD thy God is a consuming fire, even a jealous God. உபாகமம் 4:24                                                                  

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.   யாத் 19:18

 

மார்கழி மாதம்

 

மார்கழி மாதம் பிள்ளையார் வணக்கம் தொடங்குகிறது. அதே போலக் கிறிஸ்தவர்கள் மார்கழி மாதம் மையப் பகுதியில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

 

மார்கழி என்றால் மார் + கழிதல் ஆகும், அதாவது இருள் அல்லது துன்பம் கழிதல் ஆகும்.  அல்லது  மா = மாயை; கழி = கழிதல். அதாவது இருள். துன்பம் அல்லது மாயை கழிந்த மாதம் ஆகும்..

அறியாமையாகிய இருள் மற்றும் துன்பங்கள் நீங்கவும், நம்மை ஆட்கொள்ளும் மாயைகள் நீங்கவும்,. இம்மாதம் நமக்கு உதவுகிறது.

 

இருள் நீங்கும் மாதம்

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி உண்டான மாதம் ஆகும். இதைப் பரிசுத்த வேதாகமம் அழகாக கூறுகிறது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து பிறந்த மார்கழி மாதத்தில் இருளில் இருக்கும் மனிதர்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று கூறுகிறது.

 

பரிசுத்த வேதாகமம்

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.    மத்தேயு 4: 15-17

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள். ஏசாயா 9:2-3

 

"யார்"

இயேசு கிறிஸ்து கடவுளின் பிள்ளையாக இந்த உலகத்தில் இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்க இந்த பூமிக்கு வந்தார். எனவே தான் அவரை பிள்ளை ( Son of GOD ) தெய்வம் என்று அழைக்கிறோம்.

யார் என்பது மரியாதைக்கு உரிய ஒரு சொல் ஆகும். உதாரணமாக வாத்தி என்பது தான் ஒரு வாத்தியாரை அழைக்கப் பயன்படும் தமிழ்ச் சொல் ஆகும்

ஆசிரியர் = வாத்தி

ஆசிரியை = வாத்திச்சி

இந்த வார்த்தைகள் கூப்பிடுவதற்குச் சற்று மரியாதைக் குறைவாக உள்ளதால் நாளடைவில் "யார்" என்ற வார்த்தை மரியாதைக்காகச் சேர்க்கப் பட்ட்து  "வாத்தியார்" அதே போல பிள்ளை என்பது பிள்ளையார் ஆனது. பிள்ளை தெய்வம் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும்.

 

இதை பற்றி அறிந்து கொள்ளத் தெய்வம் பெற்ற ஆணை என்ன ? என்ற பக்கத்தைப் பார்க்கவும்  ( GO )

 

தை மாதம்

 

தை மாதம் வருடத்தின் முதல் மாதமான ஜனவரி மாதம் 14ம் தேதியில் ஆரம்பிக்கிறது. இது ஒரு அறுவடையின் மாதமாகக்  கொண்டாடப்படுகிறது.

 

தை மாதம் முதல் நாள் அதாவது ஜனவரி மாதம் 14 ம் தேதி அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது அதாவது பொங்கல் ஆக கொண்டாடப்படுகிறது. அதே தேதியில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில்  மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது

இந்த தை மாதம் இஸ்ரவேல் மக்கள் கொண்டாடும் பஸ்கா பண்டிகை அல்லது கூடாரப்பண்டிகை, அல்லது புளிப்பில்லா அப்பப் பண்டிகையோடு சம்பந்தம் உள்ளது.

 

பரிசுத்த வேதாகமம்

"புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்"

அறுவடைத்திருநாளாகிய பொங்கலுடன் தொடர்புடைய விழாக்கள் அஸ்ஸாமில் மாக் பிஹு, பஞ்சாபில் மாகி, இமாச்சலப் பிரதேசத்தில் மாகி சாஜி, ஜம்முவில் மாகி சங்ராந்த் அல்லது உத்தரைன் (உத்தராயணம்), ஹரியானாவில் சக்ரத், ராஜஸ்தானில் சக்ராத், மத்திய இந்தியாவில் சுகரத், பொங்கல் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன. தமிழ்நாட்டில், குஜராத்தில் உத்தராயண், மற்றும் உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் குகுடி, பீகாரில் தஹி சூரா, ஒடிசாவில் மகர சங்கராந்தி, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்கம் (பௌஷ் சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது), உத்தரபிரதேசம் (கிச்சிடி சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது), உத்தரகாண்ட் (உத்ராயணி என்றும் அழைக்கப்படுகிறது) அல்லது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி, [5] [6] மாகே சங்கராந்தி (நேபாளம்), மற்றும் ஷிஷூர் சென்க்ராத் (காஷ்மீர்)

பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவின் குணங்கள்

1) அழகானவர்   --    முருகன் 

இயேசு கிறிஸ்து வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley என அழைக்கப்படுகிறார். எனவேதான் அவரை அழகன் அல்லது முருகன் என அழைக்கிறோம். முருகன் என்றால் அழகன் என்று அர்த்தம் ஆகும்.

அவர் சிலுவையில் அறையப்பட்ட போது இரண்டு கள்ளர்களுக்கு நடுவே உள்ள சிலுவையில் அறையப்பட்டார். அதனால் கள்ளனில் ஒருவராக என்னப்பட்டார். எனவே அவரை நாம் கள்ளழகர் என அழைக்கிறோம்.

2) உயிர்த்தெழுந்த பிள்ளையாகிய இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்த நிகழ்ச்சியை பிள்ளையார் கதை அழகாகக் கூறுகிறது.

 

அழுக்குருண்டை பிள்ளையார்

 

எல்லோருடைய பாவத்தையும் தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவை மரணத்தை அடைந்தபடியால் அவர் அழுக்குருண்டை பிள்ளையார் எனப்படுகிறார்.

 

 பார்வதி தனது உடலில் இருக்கும் அழுக்கையெல்லாம் தேய்த்துத் திரட்டி உருண்டையாக்கி, அந்த உருண்டை ஒரு ஆளாக உருவெடுக்க வேண்டுமென்று நினைத்தார்கள். அந்தப்படியே அந்த அழுக்கு உருண்டை உடனே ஒரு மனித உருவமாகி பிள்ளை தெய்வம் ஆகிவிட்டது. பார்வதி அந்த அழுக்கு உருண்டை மனிதனைத் தனது குளியல் அறைக்கு வெளியில் காவலாளியாய் இருக்கும்படி நியமித்தார்கள். இப்படி மற்றும் ஒரு பிள்ளை தெய்வ அவதாரக்கதை உள்ளது.

எனவே தான் மார்கழி மாதம் கோலம்  போடும் போது சாணியைப் பிள்ளை மாதிரி பிடித்து வைத்து அதின் மேல் பூசனிப்பூவை வைப்பது நமது தமிழ் நாட்டுப்பழக்கம். தற்போது இந்த காரியம் குறைந்து கொண்டே  வருகிறது.

 

இதைப் பற்றி அறிந்து கொள்ள பார்வதி என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )

 

​ தலை வெட்டப்படுதல் ( இறப்பு )

இந்த கதையில்  சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்காததால் கோபம் கொண்டு பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

 

இரத்தம் சிந்தப்படுதல் (தலை வெட்டப்பட்டவுடன் இரத்தம் முழுவதும் தரையில் சிந்தப்படுகிறது)

தலை வெட்டப்பட்டவுடன் வெளிப்பட்ட இரத்தம் இந்த பூமியில் சிந்தப்படுகிறது. அந்த நிகழ்வு இந்தக்கதையில் மறைபொருளாக இருக்கிறது.  இந்த நிகழ்வு சிலுவையில் இரத்தம் சிந்தப்பட்டதையே காண்பிக்கிறது.​

உயிர்தெழுந்தவர் (வேறு ஒரு தலையை ஒட்டவைத்து உயிர் பெறுதல்)

இந்த நிகழ்வு உயிரை விட்ட பின்பு திரும்பவும் தன் உயிரைப் பெற்றுக்கொண்டு உயிர்த்தெழுந்தைக்  காண்பிக்கிறது

இந்த நேரத்தில் அங்கு வந்த பார்வதி தேவி  கோவம் கொல்ல சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்

கொண்டார்.​

 

பரலோகம் சென்று வலது பக்கத்தில் அமர்ந்தவர்

உயிர்த்தெழுந்த தெய்வம் பரலோகம்  சென்று பிதாவின் வலது பக்கம் அமர்ந்து இருக்கிறார். எனவே தான் அவர் வலம்புரி பிள்ளை என அழைக்கப்படுகிறார்

இந்த கதையின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தால் மறைந்து இருக்கும்  உண்மைகள் தெரிய வரும்

முதலில் பிள்ளை தெய்வத்தின் தலை வெட்டப்பட்டது

இரண்டாவது தெய்வத்தின் தலை வெட்டப்பட்டதால் இரத்தம் இந்த மண்ணில்  சிந்தப்பட்டது

மூன்றாவதாக இறந்து போன தெய்வம் திரும்பவும் உயிர் பெற்று உயிர்த்தெழுந்தார். அப்படி உயிர்த்தெழுந்தவர் பரலோகம் செல்வதற்கான மேனியைப் பெற்றுக்கொண்டார்.

நான்காவது உயிர்த்தெழுந்த தெய்வம் பரலோகம்  சென்று பிதாவின் வலது பக்கம் அமர்ந்து இருக்கிறார். எனவே தான் அவர் வலம்புரி பிள்ளை என அழைக்கப்படுகிறார்.
.

3) கன்னியின் மூலமாகப் பிறந்தவர். ---  ஐயப்பன்

ஐயப்பன் என்பது  இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது

ஐம்புலத்தார்,  ஐம்புல வேடர், ஐம்புல விடையன், பொறி வாயில் ஐந்தவித்தான், ஐம்புலத் தடங்கான், ஐம்புலம் வென்றோன், ஐம்புல விடையன்,  ஐம்புலன் விழையான்,  இந்த வார்த்தைகள் எல்லாம் சிலுவையில் தனது ஐம்புலங்களையும் வென்ற தெய்வத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ஆகும்.

 

இதைப் பற்றி அறிந்து கொள்ள தென்புலத்தார் யார் ? குறள்-43 என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )

 

தெய்வம் (பிள்ளை) கன்னியின் வயிற்றில் பிறந்தவர். அதாவது ஒரு உலக மனிதனின் துணையில்லாமல் அதாவது கடவுளின் வார்த்தையாலும், அவரது ஆவியினாலும் இந்த பூமியில் பிறந்தவர் தான் பிள்ளை தெய்வம். அதனால் அவரை ஐயப்பன் என்று அழைக்கிறோம்.

 

கன்னியின் மூலமாகப் பிறந்தவர்

இயேசு கிறிஸ்து கன்னியின் மூலமாக பிறந்தவர் அதாவது ஒரு ஆண் துணையில்லாமல் பிறந்தவர் ஆகும்.

தெய்வம்  ஒரு கன்னியின் மூலமாகத்தான்  மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது தெய்வத்தின் திட்டம், இந்த கதையில் அந்த கன்னியாக இந்த பூமியில் வந்து பிள்ளை தெய்வத்தை உண்டாக்கிக் கொடுத்தவருக்கு மோகினி  என்ற பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மோகினி என்றால் அழகான பெண் என்று அர்த்தம் ஆகும்.

 

( இந்த பூமியில் பிறந்த ஒரு கன்னிப்பெண் பிள்ளை பெற்றால் அது பாவமாகக் கருதப்படும் எனவே தெய்வ நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கு  ஆண் துணை இல்லாமல் பிள்ளை தெய்வம் உருவானதாகக் கூறப்படுகிறது அதாவது தெய்வமே பெண்ணாக மாறி தெய்வத்தோடு சேர்ந்து ஐயப்பன் உருவானதாகக் கூறப்படுகிறது ) .

 இதே நிகழ்வு பற்றி வைணவத்தில் கூறும் போது கடவுளே (விஷ்ணு) கன்னியாக (மோகினியாக) உருமாறி பிள்ளை தெய்வத்தை (ஐயப்பன் ) பெற்றதாகக் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயப்பன்.

 

ttps://ramanans.wordpress.com/2011/09/02/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-4/

 

இதே கதை தான் அய்யனார் அவர்களுக்கும் உரியது. ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், ஐயப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன.

 

https://www.tamilhindu.com/2010/12/ayyanar-shasta-ayyappan-divine-manifestations/

 

ஒரு கன்னியின் மூலமாக இயேசு பிறப்பார் எனப் பரிசுத்த வேதாகமம் நமக்கு இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே குறிப்பிடுகிறது.

ஏசாயா 7:14         ​"ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்."

​மேலே சொல்லப்பட்ட  தெய்வவாக்கின் படி இயேசு கிறிஸ்து கன்னியாகிய மரியாளின்  மூலமாக இந்த உலகத்தில் பிறந்தார்.

 

இயேசுவின் தாயாகிய மரியாள், பார்வதி பற்றி அறியப் பார்வதி என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )

 

லூக்கா 1:30-35     தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்.இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; ............அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

guru

.

bottom of page