ஆதிமூலம் யார் ?
"யார் இந்த இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கினாரோ அவரே அந்த ஆதிமூலம்."
( "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.” யோவான் 1:3 ----- "இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்". வெளி 1:8 )
ஆதியிலே தேவன் வார்த்தையாக இருந்தார் அதாவது சத்தமாக அல்லது எழுத்து வடிவில் இருந்தார். உலக தோற்றத்திற்கு முன்பாகவே கடவுள், 1) ஆவியாகவும் ,(2 கொரி 3:17), 2) உருவம் அற்றவராகவும், 3) ஒருவராய், சாவாமையுள்ளவரும், 4) சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், 5) மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், 6) காணக்கூடாத வருமாயிருக்கிறவர்; ( 1 தீமோத் 6:16 ), 7)சக்தி நிறைந்தவராகவும், (ஏசாயா 9:6), 8)ஜலத்தின் மேல் அசைவாடுகிறவராகவும், (ஆதியாகமம் 1:2), 9) அசரீரி மூலம் மனிதனிடம் பேசுகிறவராகவும் அதாவது வார்த்தைகள் மூலமாகப் பேசுகிறவராகவும், (லூக்கா 3:22), 10) I am that i am என்பவராகவும் இருந்தார் ( யாத் 3:14)
அப்படிப் பட்ட அதிகாரமுள்ள, வல்லமையுள்ள, சக்தியுள்ள கடவுளை ஆதிமூல கடவுள் என குறிப்பிடுகிறோம்.
அவர் ஆதியிலே வானத்தையும் ( Heaven ) பூமியையும் உண்டாக்கினார். அவர் பூமியை உண்டாக்கின பின்பு அஸ்திபாரப்படுதினார். அவர் உருவம் இல்லாத தேவன், அவர் ஆவியான தேவன், அவர் தண்ணீர்கள் மேல் அசைவாடிக்கொண்டு இருந்தார்
பரிசுத்த வேதாகமம் தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு சகலத்தையும் சிருஷ்டித்தார் எனக் கூறுகிறது இப்படி எல்லாவற்றையும் ஆதியிலே சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தாவே ஆதிமூலம் என அழைக்கப்படுகிறார்
பரிசுத்த வேதாகமம் ஆதியில் உண்டான படைப்பைப்பற்றி கூறும் போது சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:3) அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். ( ரோமர் 11:36)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 3:11) நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. (சங்கீதம் 102:25)
1) ஆதியாகமம்
ஆதியாகமம் என்பது ஆதி + ஆகமம் ஆகும், இந்த ஆகமம் பரிசுத்த வேதாகமத்தில் முதல் புத்தகமாய் உள்ளது.
ஆதியில் கடவுள் எப்படி இருந்தார், என்ன செய்தார், எப்படி சகல சிருஷ்டிகளும் சிருஷ்டிகப்பட்ட்து, அவருடைய குணங்கள் என்ன என்று முழுவதும் கூறுவது ஆதி ஆகமம் ஆகும்.
2) ஆதியும் அந்தமும், அல்பா ஒமோகா, முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர்
மேலே கூறப்பட்ட வார்த்தைகள் மூன்றுமே ஒரே அர்த்தத்தை உடையவை, அவைகள் கூறும் அர்த்தங்கள் என்ன என்றால் நானே ஆதிமூலம், சகல சிருஷ்டியையும் சிருஷ்டித்தவர் மற்றும் உலகத்தின் ஆரம்பமும் நானே முடிவும் நானே, ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையின் ஆரம்பமும் நானே முடிவும் நானே மற்றும் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று தெய்வம் கூறுவதைக் கூறும் வார்த்தைகள்
எட்டாம் திருமுறை 76 பதிகங்கள், 1058 பாடல்கள், பாடல் எண் 9 இல் ஆசிரியர் ஒளியாய் தோன்றிய உருவமே ஆதியும், அந்தமும், நடுவும் ஆகும் எனக் குறிப்பிடுகிறார்
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
விளக்கம்
இந்த உலகத்திற்கு ஒளியாய், வெளிச்சமாய், மனித உருவில் வந்த தெய்வமே உருவம் இல்லாதவர் ( ஆவியானவர் ) ஆகும் . அப்படி உருவம் இல்லாத தெய்வம் உருவத்தில் வந்து ஜோதியாய் அதாவது மனிதர்களுக்கு ஒளியாய், வெளிச்சமாய் வாழ்ந்த அவரே சொல்லுதற்கு அரிய ஆதியும் அந்தமும் நடுவும் ஆவார். ஒரு மனிதனுக்கு இந்த உலக ஆசையாகிய பந்தம் அறுத்து, பரலோக பந்தம் ஏற்படுத்தி பெரிய கடலைப்போலப் பரலோக இன்பம் தருபவரே ( ஆனந்தம் = heavenly bliss)
பரிசுத்த வேதாகமம்
1) மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவான் 8:12
2) இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளி 22:12-13
3) .................; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5
4) இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார். வெளி 1:8
3) ஆதி வார்த்தை (ஆதிபகவன்)
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தையினால் தான் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது, வார்த்தையாகிய கடவுள் உண்டாகக் கடவது என்று சொன்னவுடன் எல்லாம் உண்டாயிற்று. அந்த வார்த்தை மாம்சமாகி (இயேசு கிறிஸ்துவாகி) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அந்த வார்த்தை தான் ஆதிபகவன் என்று திருக்குறளும் நமக்குக் கூறுகிறது
நாம் எந்த காரியத்தைத் தொடங்கும் முன்பாக உ என்று போடுவது உண்டு இது பிள்ளையார் சுழி எனக் கூறப்படுகிறது உ என்பது ஒரு உயிர் எழுத்து ஆகும் அந்த வார்த்தை அல்லது எழுத்து, வார்த்தை வடிவில் இருந்த ஆதிமூல கர்த்தரான கடவுளின் பிள்ளையாகிய இயேசுகிறிஸ்துவை குறிக்கப் பயன்படுகிறது
(தெய்வானையின் படி இந்த பூமிக்கு வந்த பிள்ளை தெய்வத்தைப் பற்றி அறியக் கீழே கொடுக்கப்பட்ட பக்கத்தைப்பார்க்கவும்)
தெய்வம் பெற்றஆனை என்ன ?
https://www.narrowpathlight.com/kural-268-what-is-the-command
The BruhatAranyaka Upanishad says, “Vagyavai Brahmma”, the word is Brahmma (creator). வாக்யா-வை பிரம்மா https://www.speakingtree.in/blog/back-to-vedas
Brahmmavindu Upanishad says, “Shabdovai Brahmma”, the voice is Brahmma
சப்தோ-வை பிரம்மா https://www.speakingtree.in/blog/back-to-vedas
“Shabdaksharam Param Brahmma”, the voice and word became absolute God. சப்தாக்ஸ்கரம் பரம் பிரம்மா https://www.speakingtree.in/blog/back-to-vedas
திருக்குறள் கூறும் எழுத்தாகிய வார்த்தை
திருக்குறள் 1 - thirukkural 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்பதற்கு வார்த்தை தான் கடவுள் என அர்த்தம்.
முதற்றே உலகு என்பதற்கு உலக தோற்றத்திற்கு முன்பாக என அர்த்தம்.
அதாவது உலக தோற்றத்திற்கு முன்பாகவே எழுத்து (வார்த்தை) வடிவத்தில் கடவுள் இருந்தார் என்பதாகும்.
திருவள்ளுவர் தனது 5வது திருக்குறளில் இறைவனை மாட்டு என்றும் தனது 28 வது குறளில் நிறைமொழி மாந்தர் என்று குறிப்பிடுகிறார்.
மாட்டு
மாட்டு என்பதற்கு வார்த்தை ( word )என அர்த்தம்
5 வது குறளில் திருவள்ளுவர் கடவுளை மாட்டு (word )எனக் குறிப்பிடுகிறார்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.( குறள் 5 )
நிறைமொழிமாந்தர்
திருவள்ளுவர் தனது 28 வது குறளிள் நிறை மொழி மாந்தர் எனக் கடவுளைக் குறிப்பிடுகிறார்.
குறள் 28 - kural 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்.
மனிதனாக வந்து பிறந்த பிறப்பிலும் வளர்ப்பிலும் குற்றம் அற்ற வார்த்தையாகிய கடவுளின் பெருமையை மறைமொழி அதாவது வேதத்தின் வார்த்தைகள் காட்டிவிடும் என எழுதுகிறார்.
பரிசுத்த வேதாகமம்
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது அவர் ஜீவவார்த்தை என்றும், அவர் மாம்சத்தில் வந்த வார்த்தை எனவும், அவர் தேவனாக இருந்த வார்த்தை எனவும் கூறுகிறது.
1) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை யோவான் 1:1-3.
2) அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; ......யோவான் 1:14
3) ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். 1 யோவான் 1:1
4 ) ஆதிமூல கணபதி
கணபதி என்றவுடன் நமக்கு யாபகம் வருவது பிள்ளையார் ஆகும் (பிள்ளை + யார்) யார் என்பது மரியாதை நிமித்தம் சேர்க்கப்பட்ட வார்த்தையாகும். உதாரணமாக வாத்தி என்ற வார்த்தை வாத்தியார் என்று குறிப்படப்பட்டுள்ளது. பிள்ளை தெய்வம் என்றால் Son of GOD ஆகும்.
கணபதி என்பது கடவுளின் பெயர் அல்ல அது ஒரு குணம் (character) ஆகும், கணபதி என்பது ( கணங்கள் + பதி ) கணங்களின் அரசன் ஆகும், கணங்கள் என்பது ஒரு கூட்டம் ஆகும் தெய்வத்தைச் சுற்றி 18 வகையான கூட்டம் உண்டு அதில் ஒன்று பூதங்களின் கூட்டம் (பூத கணங்கள்) பூதங்கள் தேவ தூதர்களுக்கு ஒப்பனையாகக் கூறப்பட்டுள்ளது. தேவ தூதர்களின் கூட்டத்தின் அரசன், பிள்ளை தெய்வம் ஆகும், அவர் ஆதியிலே இருந்தபடியால் ஆதிமூல கணபதி என் அழைக்கப்படுகிறார்.
பூத கணங்கள் ( Angels ) என்பவை இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுகின்ற பதினெண் கணங்களில் ஒரு கணம் ஆவார். இந்த பூத கணங்கள் தெய்வத்தின் சேவகர்களாக கயிலை மலையில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பரிசுத்த வேதாகமம்
பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இது முதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 1:51
அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 1 பேதுரு 3:22
தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். வெளி 7:11-12
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பிசாசர்கள் என்ற கணங்கள் 18 வகையான கணங்களில் ஒன்று ஆகும். பிசாசுகளுக்குத் தெய்வம் எப்படி அரசனாக முடியும் என்ற கேள்வி வரும். பிசாசுகள் தெய்வம் சிலுவையில் சிந்திய இரத்தத்திற்கும் அவருடைய நாமத்திற்கும் (பெயருக்கு) மட்டுமே பயப்படும், எனவே கணங்களின் பட்டியலில் பிசாசர்களும் சேர்க்கப்பட்டுள்ளது..
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும்,பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் பிலிப்பியர் 2:10-11
கடவுளின் பூதங்கள் கூட்டத்தில் இருந்து பெருமையினால் கீழே விழுந்த பூதங்கள் (விழுந்த தேவதூதர்கள், fallen angels ) பேய்களாக இருக்கின்றன. பரிசுத்த வேதாகமம் விழுந்து போன தேவதூதர்களைப் பற்றி அழகாகக் கூறுகிறது.
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார். யூதா1:6
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். ஏசாயா 1412-15
இயேசு கிறிஸ்து ஒருவரே பிள்ளை தெய்வமாக இந்த பூமியில் வந்தவர், அவரை உருவகப்படுத்தவே ஆதிமூல கணபதி என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.
5) ஆதி சக்தி, ஆதி பராசக்தி
ஆதியில் இந்த அண்டசராசரங்களியும் உண்டாக்கிய கடவுளின் வல்லமைக்கு அல்லது சக்திக்கு ஆதி சக்தி என்று பெயர். ஆதிபராசக்தி என்றால் ஆதியில் இருந்த கடவுளின் பெரிய வல்லமைக்கு அல்லது சக்திக்கு ஆதி பராசக்தி என்று பெயர். இந்த கடவுளின் சக்திக்குப் பெண் உருவத்தைக் கொடுத்து வணங்குபவர்கள் சாக்தம் மார்க்கத்தினர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
(சக்தியின் விளக்கம் முழுமையாக வெள்ளி - சனி - ஞாயிறு என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அதிப் பார்க்கவும்)
https://www.narrowpathlight.com/friday-saturday-sunday
6) ஆதி சிவன்,
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே (இயேசுவாலே) நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. . 1 யோவான் 4:8-9
ஆதியில் இருந்த அன்புக்கு ஆதிசிவன் எனப் பெயர் ஆகும்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே [பா. 270]
இயேசு என்ற பெயர் YESHUA என்ற பெயரில் இருந்து வந்தது YESHUA என்ற வார்த்தையில் இருந்து கடைசியில் உள்ள A என்ற வார்த்தையின் உச்சரிப்பைக் குறைத்துவிட்டால் ( A silent ) yeshu இயேசு ஆகும். அதே நேரத்தில் YESHUA என்ற வார்த்தையில் இருந்து முதலில் உள்ள YE என்ற வார்த்தையின் உச்சரிப்பைக் குறைத்துவிட்டால் ( YE silent ) SHUA சுவா என்று வரும், சுவா என்ற வார்த்தையைப் பல முறை கூறும் போது சிவா ஆக மருவும்.
மேலும் இயேசுவின் பெயர் YESHIVA என்றே அமெரிக்காவில் உள்ள யூத பல்கலைக்கழகத்தின் பெயர் உள்ளது. அதில் அந்த பெயரில் YE silent ஆனால் SHIVA மட்டுமே இருக்கும்.
இதில் இருந்து YESHUA என்ற பெயரில் இருந்து இயேசு என்ற பெயரும் சிவா என்ற பெயரும் வந்தது என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
Yeshiva University - Wilf Campus
New York, NY ‧ Private, non-profit ‧ 4-year
YESHUA
n Luke 1, the archangel Gabriel tells Mary (or Miriam) to name her son Yeshua, meaning “salvation.” An angel also tells Joseph, “you shall call His name Jesus, for He will save His people from their sins.” (Matt 1:21-22)
Much like other Hebrew names, it was His calling and destiny from the beginning.22-
7) ஆதியெனும் ஆனை
ஆதியிலே உண்டான ஆணையின் படி இந்த பூமிக்கு மனித உருவில் வந்த தெய்வமே ஆதிமூலம்.
ஆதியெனும் ஆணையை ஏற்று முன் வந்து இந்த பூமிக்கு வந்து இரத்தம் சிந்திச் சிவந்த தெய்வத்தின் பெருமை கண்டு வணங்க வந்தாய் எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
கவலையெனும் பிணிகொண்டு உன்கண்
அருளை மிகநாடித்
தவமுயலும் தமியேனைத் தளரவிடத்
அவன் இவன் என்று உரையாடல்
ஆதியெனும் ஆனையின்முன்
சிவன் அயன் கண்டு ஓல்கவந்தாய்
தென்பேற்று நெடுமாலே!
ஆதியிலே உண்டான ஆண
இந்த பூமிக்கு யார் சென்று இரத்தத்தைச் சிந்தி மனிதக்குலத்துக்கு மீட்பை உண்டாக்குவார் என்ற ஆதியிலே உண்டான ஆணயின் படி அவன் இவன் என்று ஏற்பட்ட உரையாடலின் படித் தானாக முன்வந்து இரத்தம் சிந்தி மரித்து உவித்தெழுந்த YESHIVAவின் பெருமை கண்டு வழிபடவந்தாய் என விவரிக்கிறது இந்த பாடல்.
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா 6:8
சங்கீதம் 2:7 King James Version (KJV)
I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.
Thiru Viviliam
ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; நீர் என் மைந்தர் இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
(தெய்வானையின் படி இந்த பூமிக்கு வந்த பிள்ளை தெய்வத்தைப் பற்றி அறியக் கீழே கொடுக்கப்பட்ட பக்கத்தைப்பார்க்கவும்)
தெய்வம் பெற்றஆனை என்ன ?
https://www.narrowpathlight.com/kural-268-what-is-the-command
guru