பாகம்பிரியாள் யார் ?
”நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் (பாகத்தை) தெரிந்துகொண்டாள் என்றார் " .லூக்கா 10:42
பாகம்பிரியாள் என்றால் பாகம் + பிரியாள் ஆகும்,
பாகம் என்பது பங்கு, part, portion ஆகும்.
அதாவது தனக்குக் கிடைத்த பங்கு அல்லது பாகத்தை விட்டுப் பிரியாதவள் ஆகும்.
பாகம் பிரியாதவள் என்றவுடன், பாகம் என்றால் என்ன ?, பாகத்தை விட்டுப் பிரியாதவள் யார் ? என்ற கேள்விகள் எழும்பும். இதற்கு உரிய விளக்கம் என்ன என்பதை நாம் தோடி ஆராய்ந்து தான் பார்க்கவேண்டும்.
இந்த பாகம் பிரியாதவளுக்குக் கோயில் கட்டி வழிபடும் பழக்கம் நமது தமிழ் நாட்டில் உண்டு.
பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் என்ற கோயில் உள்ளது
(பாகம் பிரியாதவளுக்கு உயிர்த்தெழுந்து மேலான நிலைக்குச் சென்ற தெய்வம் முதலில் காட்சி கொடுத்ததை நினைவூட்டும் கோயில்)
பாகம் பிரியாள் = நல்ல பங்கை விட்டுப் பிரியாதவள்
உடனுறைவன் = உடன் காட்சி கொடுத்தவன்
மீகம் =மேலான நிலை (மோட்ச நிலை)
நாதர் = இறைவன்
நல்ல பங்கை விட்டு பிரியாதவளாகிய மகத்லேனா மரியாளுக்கு உயிர்த்தெழுந்து மேலான நிலைக்குச் சென்ற இயேசு முதல் முதலாகக் காட்சி கொடுத்தார். அந்த நிகழ்வைத்தான் உடனுறைவன் மீக நாதர் என்ற பெயர் சூட்டப்பட்டு கோயில் கட்டி வணங்குகிறார்கள்.
இந்த பாகம் என்பதைப் பரிசுத்த வேதாகமத்தில் நல்ல பங்கு எனக் குறிப்பிடப் பட்டுள்ளது, திருவள்ளுவர் தனது 1092வது குறளில் செம்பாகம் என்று குறிப்பிடுகிறார்.( செம்பாகம் என்றால் தெய்வம் சிந்திய இரத்தத்தினால் உண்டான பங்கு ஆகும்.)
பாகம் என்றால் என்ன ?
ஒரு மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய சொத்து, ஆசீர்வாதம், நன்மைகள் ஆகும் ஒருவன் தெய்வத்தைத் தனது சொத்தாகவோ, ஆசீர்வாதமாகவோ அல்லது நன்மையாகவோ நினைத்து, அந்த தெய்வத்தோடு உறைந்து வாழ்வது நல்ல பாகம் ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதாகம பகுதியில் மரியாள் என்ற பெண் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்று குறிப்பிடுகிறது.
பரிசுத்த வேதாகமம்
பின்பு, அவர்கள் (இயேசுவும் சீசர்களும்) பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள் அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் .லூக்கா 10:38-42
பாகம் பிரியாள் யார் ?
பாகம் பிரியாள் யார் என்பதின் விளக்கம் ப்ரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே பார்க்கமுடியும். அந்த பாகம் பிரியாத பெண் மக்தலேனா மரியாள் ஆகும். இந்த பெண்ணைப் பற்றி பாரதியார் தனது கவிதையில் கூறும்போது அது மரியா மக்தலேனா உயிர்த்தெழுந்த இயேசுவை .கண்டாள் எனக் குறிப்பிடுகிறார்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த போது அவரை விட்டுப் பிரியாமல் எப்போதும் அவருடனே இருந்த பெண் இந்த மகதலேனா மரியாள் ஆகும். அதனால் அவர்களுக்குப் பாகம் பிரியாதவள் என்ற பெயர் வந்தது.
மகதலேனா மரியாள்: MARY MAGDALENE தெய்வத்தை விட்டுப் பிரியாத பாகம்பிரியாள் ஆவார். அவர்களின் இயேசுவை விட்டுப் பிரியாத பண்புகள் என்ன என்று பார்ப்போம்.
1) இவர் ஏழு அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பெண். இவரிடமிருந்த தீய ஆவிகளை இயேசு வெளியேற்றிய பின்னர் மகதலேனா மரியாள் இயேசுவின் இறைப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2) இயேசு தனது பணிவாழ்வின் நிறைவாக, எதிரிகளால் பிடிக்கப்பட்டு கொலை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட வேளையிலும் மகதலேனா மரியாள் இயேசுவை விட்டு விலகவில்லை.
3)சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டிருக்கையிலும் கூட மகதலேனா மரியாள் இயேசுவை விட்டு விலகாமல் உடைந்த இதயத்தோடு அவர் பாதத்தருகே நின்றிருந்தார்.
4)இயேசுவின் சீடர்களெல்லாரும் இயேசுவை விட்டு விலகி ஓடிவிட்டனர். ஆனால் இவர் ஓடவில்லை.
5)அதிகாரிகள், படை வீரர்கள், மத தலைவர்கள், இயேசுவின் எதிராளிகள் எவரைப்பற்றியும் கவலைப்படாமல் மகதலேனா மரியாள் இயேசுவின் அருகே நின்றிருந்தார்.
6)இயேசு இறந்து கல்லறைக் குகையில் அடக்கப்பட்டு, குகை மூடப்பட்ட பின்னரும் அதன் எதிரே துயரத்துடன் அமர்ந்திருந்தார் அவர்.
அரசு அந்தக் குகைக்குச் சீல் வைத்து காவலரை நியமித்தது. மூன்றாவது நாள், இயேசு உயிர்த்தெழுந்தார். மகதலேனா மரியாள் அதை அறியவில்லை.
7)மகதலேனா மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று கதறி அழுதார்..
திரும்பும் போது இயேசு அவளுக்குக் காட்சியளித்தார்.முதலில் அவரை இயேசு என மகதலேனா மரியாள் அடையாளம் காணவில்லை. அவர், மரியாளே என அழைத்ததும் சட்டென இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு பரவசமடைந்தார்.
8)அவள் விரைந்து மற்றவர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார். அந்த சொற்றொடர் உலகப் புகழ் பெற்றுவிட்டது.
இயேசு உயிர்த்தெழுந்தபின்னர் காட்சி கொடுத்த முதல் நபர் மகதலேனா மரியாள் தான். இயேசு உயிர்த்தெழுந்தார் எனும் நற்செய்தியை அறிவித்த முதல் நபர் மகதலேனா மரியாள் தான்.
பரிசுத்த வேதாகமம்
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். லூக்கா 8:2-3 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். யோவான் 19:25 வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள். யோவான் 20:1 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள். யோவான் 20-13-18
பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை
பாரதியார் தனது கவிதையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், மகதலேனாவைப்பற்றியும் பாடும் போது ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் எனவும் இயேசுவுக்கு மிகவும் அன்புக்குரிய சீசி ஆகிய மரியா மகதலேனா இந்த செய்தியாகிய உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டாள் எனப்பாடுகிறார்.. அவர் ஈசனே பூமியில் மனிதனாக வந்து பிறந்து சிலுவையில் மாண்டார் என்றும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் எனக் குறிப்பிடுகிறார். உயிர்த்தெழுந்த இயேசுவை மகதலேனா மரியாள்.கண்டாள் என்றும் இந்த பாடல் வரிகள் அழகாகப் பாடப்பட்டுள்ளது அதைக் கீழே உள்ள linkல் பார்க்கவும்.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,
அன்பு காண் மரியா மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலே னா.
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
உணர்வை ஆணித் தவங் கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் – யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியா மக்தலே னா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.
https://www.youtube.com/watch?v=D7klO1HeMXU
https://www.youtube.com/watch?v=JbQesegFnGA
திருக்குறள் கூறும் செம்பாகம்
குறள் 1092:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
நமது கண் திருட்டுத் தனமான வேலைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது கைக்கொள்ளும், அல்லது நமது கண் திருட்டுத்தனமான வேலைகளைச் செய்யத் தூண்டும், அப்படி திருட்டு தனமான வேலைகளைச் செய்ய நமது கண் தூண்டும் போது நமது உள்ளத்தில் எழும்பும் சிறு நோக்கமானது நம்மைக் காமத்தில் சென்று சேர்க்கும். அப்படிப்பட்ட நேரங்களில் செம்பாகம் பெரியது.
அதாவது செம்பாகத்தை அரிந்து செயல் படும் போது கண் களவு கொள்ளும் போதும், சிறு நோக்கத்தில் தவறும் போதும் அந்த செம்பாகம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்
செம்பாகம்
செம்பாகம் என்பது தெய்வத்தின் இரத்தம் சிந்தப் பட்ட போது உண்டான பாகம் (நண்மை) அதாவது சிலுவை மரனத்தினால் உண்டான மீட்ப்பு ஆகும்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
St. Mary Magdalene Church, Moothedam
From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
This article does not cite any sources. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.
Find sources: "St. Mary Magdalene Church, Moothedam" – news · newspapers · books · scholar · JSTOR (January 2016) (Learn how and when to remove this template message)
St Mary Magdalene Church is parish of the Catholic Church established in 1833, coming under the Archdiocese of Verapoly in Moothedam, Kerala, India. Mary Magdalene is its patron saint. The church is situated just off NH47 near to Kundannor junction and situated on the adjacent side of NH49 near to P.S Mission Hospital. The church compound contains St. Mary Magdalene Church and St. Mary's UP school which also comes under Church management.
அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில்
500-1000 வருடங்களுக்கு முன்
https://www.valaitamil.com/amman-temple-arulmigu-paagampiriyal-thirukoyil-t1364.html
திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்
மீகம் என்ற பெயரின் அர்த்தம்
மீகம் அனைத்து அர்த்தங்களும்: செயலில், நட்பு, கொந்தளிப்பான, திறமையான, கவனத்துடன், நிதானமான, படைப்பு, தாராள, தீவிர, நவீன, அதிர்ஷ்டம், மகிழ்ச்சியான
மீகம், பெயர்ச்சொல்.
மேன்மை, உயர்வு, கல்விகேள்விகளில் மேலான நிலை
guru