முத்து யார் ?
முத்து என்பது சிப்பிக்குள் இருந்து வெளிவரும் ஒரு விலை உயர்ந்த பொருள் அதாவது ஒரு சிப்பியானது தன்னை மூடிக்கொண்டே தான் இருக்கும், அதில் உள்ள முத்து விளையும் வரை அது சிப்பி தன் வாயைத் திறக்காது.
முத்து என்பது தெய்வத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு காரணப்பெயர் ஆகும்
ஒரு முத்து மூடியிருக்கும் சிப்பிக்குள் இருந்து வெளி வருவது போல் தெய்வமும் தனது கல்லறையில் இருந்து அவருடைய நேரமாகிய மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வெளியே வந்தார். அதனால் தான் அவருக்கு முத்து என்ற ஒரு காரணப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
முத்து என்பது சிப்பியில் இருந்து வெளிவரும் முத்து போலக் கல்லறையில் இருந்து உயிர்த்து வெளிவருதலைக் காண்பிக்கிறது.
முத்து என்று பெயர் சூடப்பட்ட அனேக பெயர்கள் தெய்வத்திற்குக் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த பெயர்கள் என்ன என்பதையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம்.
முத்தையா, முத்து மாரி, மாரி முத்து, முத்துவிநாயகர், முத்துகணேசன், முத்துமலைமுருகன், சொரிமுத்துஅய்யனார், பாதமுத்துஅய்யனார், ஆணிமுத்துகருப்பர், முத்துவேல், முத்துகிருஷ்ணன், முத்துவீரன், முத்துக்கருப்பனசாமி, முத்துஇருளப்பசுவாமி, முத்துச்சாமி, மாசானமுத்து-முப்புலிமாடன்,
1) முத்தையா
அய்யா அல்லது தகப்பன் அல்லது அப்பா என்ற வார்த்தைகள் ஒரே அர்த்தம் உள்ளவை. தெய்வங்களில் இயேசு கிறிஸ்து ஒருவரே இயேசு அப்பா என்று அழைக்கப்படுகிறார்.
முத்தையா என்பது முத்து என்ற அய்யா என்பது ஆகும், அதாவது சிப்பிக்குள் முத்து இருந்து வெளிவருவது போலச் சிலுவை மரணத்தை ஏற்றுச் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் முத்து சிப்பிக்குள் இருந்து வெளியே வருவது போல் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவே முத்தையா என்று அழைக்கப்படுகிறார்.
2) முத்து மாரி
மாரி என்பது வானத்தில் இருந்து வரும் அருளாகிய மழை எனப்படும். அதையே பரிசுத்தஆவி என்று அழைக்கப்படுகிறது.
முத்து மாரி என்றால் உயிர்த்தெழுந்தவரின் ஆவி ஆகும் அதாவது உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் ஆவி என அர்த்தம் ஆகும்.
திருவள்ளுவர் தனது வான்சிறப்பு என்ற பகுதியில் வானத்தில் இருந்து வரும் பரிசுத்த ஆவியாகிய அருளைப் பற்றி முழுமையாக எழுதியுள்ளார். அதைப் பற்றி அறிய “குறள் 20 - kural 20 நீரின்றி அமையாது” என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/earth-created-by-the-water
பரிசுத்த வேதாகமம்
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. ரோமர் 8:9
3) மாரி முத்து
மாரி முத்து என்ற பெயருக்கு அர்த்தம் தெய்வத்தின் ஆவியினால் உயிர்த்தெழுந்தவர் என்பதாகும். இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உயிர்த்தெழுந்தார் அதையே மார் முத்து என்று அழைக்கிறார்கள்.
பரிசுத்த வேதாகமம்
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11
4) முத்து விநாயகர்
விநாயகர் என்பது ஒரு காரணப்பெயர் ஆகும், வினை தீர்க்கும் தெய்வம் விநாயகர் ஆவார்.
முத்து விநாயகர் என்றால் உயிர்த்தெழுந்து வினைகளை நீக்கியவர் ஆவார். அதாவது சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்து மக்களின் வினை தீர்த்தவர் ஆவார்.
பிள்ளையாருக்கு விநாயகர், விக்னேஸ்வரன் என்ற பெயர்கள் உண்டு ( கோடு ஆயுதத்தால்) சிலுவையில் மனிதர்களுடைய வினைகளை நீக்கியதால் அந்த பெயர் ஏற்பட்டது
ஔவையார்
ஔவையார் தனது விநாயகர் அகவலில் கோடாயுதத்தால் கொடுவினை களைந்த தெய்வத்தை குரு என அழைக்கிறார். அதற்கு அர்த்தம் கோடு ஆயுதத்தால் ( மரத்தால் ஆன கொலைக் கருவியில்) நமக்காகப் பலியாகி நமது கொடு வினைகளைக் களைந்த தெய்வம் ஆகும்.
குருவடி வாகிக் குவலயந் தன்னில் (குரு வடிவாகி உலகம் தன்னில்)
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25
தெளிவாகப் புரிந்து கொள்ள குரு யார் ? என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
https://www.narrowpathlight.com/who-is-guru
5) முத்து கணேசன்
முத்து கணேசன் என்றால் உயிர்த்தெழுந்த ஈசாவின் பாட்டு அதாவது உயிர்த்தெழுந்த இயேசுவின் பாட்டு என்று அழைக்கப்படும் தெய்வம் ஆவார். ஈசா என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவையே குறிக்கும்
ஈசா என்றால் யார் என்பதை அறிய ஈசா யார் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/isha-isa-esha
Ganesha
Ganesha means = Gana + Isha ( ஈசாவின் பாட்டு )
Gana என்ற வார்த்தையின் அர்த்தம் பாட்டு ஆகும், Gana என்ற வார்த்தை கானம் (பாட்டு) என்ற தமிழ் வார்த்தையின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.
The name Ganesha is a Sanskrit compound, joining the words gana (gaṇa), meaning song or a 'group, multitude, or categorical system' and isha (īśa),
கணேசா என்ற பெயர் ஒரு சமஸ்கிருத கலவை ஆகும், இது கானா (gaṇa), அதாவது 'குழு, கூட்டம் அல்லது வகைப்படுத்தப்பட்ட அமைப்பு' மற்றும் ஈசா (īśa),
6) முத்து மலை முருகன்
முருகன் என்பது ஒரு காரணப்பெயர் ஆகும், முருகு என்றால் அழகு முருகன் என்றால் அழகான தெய்வம் ஆகும்.
முத்து மலை என்பது சிப்பியில் இருந்து முத்து வெளிவருவது போல் உயிர்தெழுந்த தெய்வத்துக்கு உரிய மலை ஆகும், இயேசு கிறிஸ்து அழகானவர் அவர் சிலுவையில் அறையப்பட்ட இடம் ஒரு மலை ஆகும், (கல்வாரி மலை) அதே போல் அவர் மரித்த பிறகு வைக்கப்பட்டிருந்த இடமும் இரு மலைக் குகையாகும், அவர் பூமியில் இருந்த காலங்களில் அவர் பிரசங்கம் பண்ணிய இடங்கள் எல்லாம் மலையே ஆகும். எனவே முத்து மலை என்பது இயேசு கிறிஸ்துவுக்கு உரியதாகும்
அழகானவர் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும். அழகானவர் -- முருகன் அல்லது கள்ளழகர்
இயேசு கிறிஸ்து வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley என அழைக்கப்படுகிறார். எனவேதான் அவரை அழகன் அல்லது முருகன் என அழைக்கிறோம். முருகன் என்றால் அழகன் என்று அர்த்தம் ஆகும்.
அவர் சிலுவையில் அறையப்பட்ட போது இரண்டு கள்ளர்களுக்கு நடுவே உள்ள சிலுவையில் அறையப்பட்டார். அதனால் கள்ளனில் ஒருவராக என்னப்பட்டார். எனவே அவரை நாம் கள்ளழகர் என அழைக்கிறோம்.
இதைப் பற்றி அறிய ஆறுமுகம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்
https://www.narrowpathlight.com/aaru-mugam
7) சொரி முத்து அய்யனார்
சொரி முத்து அய்யனார் என்றால் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று மக்களுக்கு ஆசீர்வாதங்களைச் சொரியும் தகப்பன் ஆவார். முத்து என்ற வார்த்தைக்கு உயிர்த்தெழுந்தவர் என அர்த்தம் சொரி என்றால் சொரிதல், கொடுத்தல், வழங்குதல் ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ( பரலோகத்தின் ) ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1:3
8) பாத முத்து அய்யனார்
பாத முத்து அய்யனார் என்றால் உயிர்த்தெழுந்து தெய்வத்தின் வலதுபக்கத்தில் அவருடைய சமுகத்தில் அமர்ந்த தகப்பன் ஆவார். அதாவது உயிர்த்தெழுந்து தெய்வத்தின் வலது பாரிசத்தில் அமர்ந்த தகப்பன் ஆவார்.
பாதம் என்றால் சமூகம் ஆகும் – முத்து என்பது சிப்பியில் இருந்து வெளிவரும் முத்து போலக் கல்லறையில் இருந்து உயிர்த்து வெளிவருதலை காண்பிக்கிறது.
பரிசுத்த வேதாகமம்
அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார் . மாற்கு 14:62
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. ரோமர் 8:33,34
9 ) ஆணிமுத்து கருப்பர்.
ஆணி முத்து கருப்பர் என்றால் சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட்டு நமக்காக கருத்து போய் கருப்பசாமி ஆகி இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் சிப்பிக்குள் இருந்து முத்து வருவது போல் உயிர்த்தெழுந்து வந்தவர் ஆவார்.
கருப்பசாமி என்பதை நங்கு அரிய கருப்பசாமி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/who-is-karuppasamy
கருப்பசாமி என்று ஒரு தனி சாமி இல்லை இந்த உலகத்தில் அழகான தெய்வமாக வந்து பிறந்த வெண்மையான தெய்வம் மனிதனுடைய பாவங்களை தன் மேல் ஏற்றுக்கொண்டதனால் அவர் கருப்பான தெய்வமாக மாறினார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த நிகழ்வைப் பரிசுத்த வேதாகமம் அழகாக விளக்குகிறது.
மரணத்துக்கு மரணம், இயேசுவின் மரணம்
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் அவரை கருத்து போகச் செய்தது. அவர் வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley, அதிரூபன் ஆனவர். அவர் சிலுவையிலே நமக்காக மரணம் எய்தும் போது அவருக்கு அழகுமில்லை செளந்தரியமும் இல்லை , நாம் அவரை பார்க்கும் போது அவருக்கு விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
வெள்ளைச்சாமியாய் இருந்தவர் நமக்காகச் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு கருப்பானவரானார்.
அதைப் பரிசுத்த வேதாகமம் கீழ்க் கண்ட வசனங்களில் அழகாகக் கூறுகிறது.5
.......அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். ஏசாயா 53 : 2-3
10) முத்துவேல்...
முத்து வேல் என்பது உயிர்த்தெழுந்த தெய்வத்தின் சிலுவை ஆகும்.
வேல் என்றால் கழுமரம் ஆகும், அதையே நாம் ஈட்டி என அழைக்கிறோம்.வேல் ஒரு நெடுமரம் ஆகும் அதனோடு குறுக்கு கழி அல்லது இடைக்கழியைச் சேர்க்கும் போது தெய்வத்தைக் கழுவேற்றிய சிலுவை ( Cross ) ஆகும்.
இதைப்பற்றி அறியத் திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்
https://www.narrowpathlight.com/thirukalukundram
கழு என்றால் Washing , கழு , கழுமரம் ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி
கழு, பெயர்ச்சொல். 1. கழுமரம் 2. சிறிய ஈட்டி 3. திரிசூலம்
11) முத்து கிருஷ்ணன்
கிருஷ்ணன் என்ற வார்த்தல் ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், அந்த வார்த்தைக்கு அர்த்தம் கிறிஸ்து அல்லது இரட்சகர் அல்லது மேசியா ஆகும், இந்த பூமிக்கு இரங்கி வந்து மனிதர்களை இரட்சிக்க வந்தவர் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆவார்.
முத்து கிருஷ்ணன் என்றால் உயிர்த்தெழுந்த கிறிஸ்து என்று பொருள் ஆகும்.
12) முத்து வீரன்
முத்து வீரன் என்றால் உயிர்த்தெழுந்து சாவை ஜெயமாக விழுங்கிய வீரனாகிய இயேசு கிறிஸ்துவைக் காண்பிக்கிறது.
13) முத்துக்கருப்பனசாமி ** முத்து இருளப்ப சுவாமி
சிலுவையில் அடிக்கப்பட்டு நமக்காகக் கருத்து போய் கருப்பசாமி ஆகி இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் சிப்பிக்குள் இருந்து முத்து வருவது போல் உயிர்த்தெழுந்து வந்தவர் ஆவார்.
கருப்பசாமி என்பதை நங்கு அரிய கருப்பசாமி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/who-is-karuppasamy
கருப்பசாமி என்று ஒரு தனி சாமி இல்லை இந்த உலகத்தில் அழகான தெய்வமாக வந்து பிறந்த வெண்மையான தெய்வம் மனிதனுடைய பாவங்களை தன் மேல் ஏற்றுக்கொண்டதனால் அவர் கருப்பான தெய்வமாக மாறினார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த நிகழ்வைப் பரிசுத்த வேதாகமம் அழகாக விளக்குகிறது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் அவரை கருத்து போகச் செய்தது. அவர் வெண்மையும் சிவப்பும் ஆனவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், Rose of Sharon, Lily of the valley, அதிரூபன் ஆனவர். அவர் சிலுவையிலே நமக்காக மரணம் எய்தும் போது அவருக்கு அழகுமில்லை செளந்தரியமும் இல்லை , நாம் அவரை பார்க்கும் போது அவருக்கு விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது..
14) மாசான முத்து
மாசானம் என்பது சுடுகாடு அல்லது மயானம் ஆகும், மாசான முத்து என்பது கல்லறையில் வைக்கப்பட்டு உயிர்த்தெழுந்த தெய்வத்தை காண்பிக்கிறது.
பரிசுத்த வேதாகமம்
ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். மாற்கு 9:31
guru